விந்தையடி நீ எனக்கு...5

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..



விந்தையடி நீ எனக்கு...5



சென்னையில் இன்னுமொரு மூளையில் உள்ள வீட்டின் படுக்கை அறையில் இரவு விளக்கினை போடுவதும் அனைப்பதுமாக இருந்தாள் வனிதா.அவளது தொந்தரவு பொறுக்க முடியாமல்,

"ஏய் வனி ஒழுங்க படு இல்ல அடி வாங்குவ..."என்று போர்வையால் முகத்தை மூடியபடிக் கூறினாள் நித்திலா.

"ப்ச் நித்தி நீ ஏன்டி இப்படி இருக்க...ஒரு தடவையாவது அந்த போட்டோவை பாரேன்...ப்ளீஸ்..."என்று நூறாவது தடவையாக கேட்டாள் வனிதா.

அவளது தொந்திரவு தாங்க முடியாமல்,

"இப்ப என்னதான் வனி வேணும் உனக்கு..."என்று சலிப்பாக கேட்டாள் நித்திலா.பின்னே அவளும் என்ன தான் செய்வாள் அவளே இறுதி வருட படிப்பு பாதியில் கெடுகிறதே என்று கவலையில் உள்ளாள் இதில் இவள் வேறு புரியாமல் படுத்துகிறாளே என்ற நினைப்பினால் வந்த சலிப்பு தான் இது.நித்திலாவின் சலிப்பைக் கண்ட வனிதா,

"என்னடி ஏன் இப்படி சலிச்சுக்கிற…"என்றாள் வனிதா.

"ஏய் தினமும் இதே கேள்வி தானா போடி..."என்றாள் நித்திலா.

"பின்ன மாபிள்ளை போட்டோ கூட பார்க்காம ஓகே சொன்ன ஒரே ஆள் நீ தான் டீ...."என்று வனிதா கூற நித்திலாவோ,

"ஏய் போட்டோ பார்த்தாலும் இத தான் சொல்ல போறேன் அதனால பார்க்கல...இப்ப எனக்கு பரிட்சை நடக்குது அதனால மைன்ட டைவர்ட் பண்ண வேணாம்னு பார்க்கல..போதுமா இப்ப தூங்கு..."என்றவள் போர்வை முகம் வரை மூடி கண் மூட அவளது நினைவுகளோ பின்னோக்கி சென்றது.

.நித்திலாவின் தாய்,தந்தை ஒரு விபத்தில் இறந்துவிட தனது ஐந்தாவது வயதில் இருந்து அவளது சித்தப்பா சீனிவாசனும்,சித்தி பவானியும் தான் தாய்,தந்தையானார்கள்.

சீனிவாசனும்,பவானியும் ஆசிரியர்கள் அரச பள்ளியில் பணிபுரிகின்றனர்.அவர்களின் ஒரே மகள் தான் வனிதா.நித்திலாவை விட ஒரு வயது இளையவள்.அதனாலே சகதோரிகள் என்ற பிணைப்பைவிட நல்ல நண்பர்கள் என்றே கூறலாம்.சீனிவாசன் கண்டிப்பும்,அன்பும் நிறைந்த நல்ல தந்தை.பவானி அதிகம் நித்திலாவிடம் ஒட்டவும் மாட்டார்,அதே சமயம் எதற்கும் ஒதுக்கவும் மாட்டார்.மொத்ததில் நீ சரியாக இருந்தால் நானும் அப்படியே என்று கூறும் ரகம்.அதனலே நித்திலா தன் சித்தியிடம் சற்று கவனமாக இருப்பாள்.பவானி நித்திலாவிடம் மட்டும் அல்ல வனிதாவிடமும் அவ்வாறே நடந்துகொள்வார் ஆனால் அதில் ஒருவித அன்பும்,பாசமும் ஒளிந்திருக்கும் என்றே நித்திலாவிற்கு தோன்றும்.ஆனால் சீனிவாசன் அவ்வாறு இல்லை அவர் வனிதாவும்,நித்திலாவும் ஒன்றே என்று கருதுபவர்.

படிப்பு முதல் உடுத்தும் உடை வரை இருவருக்கும் சமம்.பவானியும் நித்திலாவுக்கு செய்வதை தடுக்கமாட்டார்.நித்திலா இடத்திற்கு ஏற்ப தன்னை பொறுத்திக்கொள்வாள் அந்த சுபாவமே பவானியை கவரும் ஒன்று.அதனால் தான் அவர் நித்திலாவிடம் அன்பை பொழியவில்லை என்றாலும் ஒதுக்காமல் இருப்பார்.நித்திலாவும்,வனிதாவும் படிப்பில் கெட்டி.நித்திலா இறுதி வருட பி.எஸ்சி கணணி படித்துக்கொண்டு இருக்கிறாள்.வனிதா இரண்டாம் வருடம் பி.இ கணணி படித்துக்கொண்டு இருக்கிறாள்.

தாய்,தந்தை இல்லை என்ற குறையை தவிர நித்திலாவின் வாழ்க்கையில் வேறு எந்த இடையூறும் இருந்ததில்லை.அனைத்தும் நல்லமுறையில் தான் சென்றது இருமாதங்கள் முன்பு வரை.நித்திலா மாலை தனது கணணி சிறப்பு வகுப்பு முடித்து வரும் போது தன் வீட்டின் முன்பு நின்றிருந்த விலையுயர்ந்த காரைக் கண்டு புருவம் சுருக்கியவாரே வீட்டின் உள்ளே வர ஹாலில் சித்தப்பா யாருடனோ பேசிக்கொண்டிருக்க இவள் உள்ளே போகலாமா வேண்டாமா என்று யோசனை ஓடும்போதே அதை தடுத்தது சித்தியின் குரல்,

"இதோ அவளே வந்துட்டா...உள்ள வா நித்தி..."என்று அழைக்க அங்கே அமர்ந்திருந்த அகிலாவிற்கு மரியாதை நிமித்தமாக ஒரு வணக்கம் சொன்னவள் தன் சித்தியுடன் நின்றாள்.நித்திலா வந்தவுடன் அகிலாவின் பேச்சு சீனிவாசனிடம் இருந்தாலும் பார்வை முழுவதும் நித்திலாவிடமே.இதை நித்திலாவும் உணர்ந்தே இருந்தாளே தவிர எதுவும் கேட்கவில்லை. சீனிவாசனிடம் அகிலா,

"நீங்க உங்க பொண்ண ஒருவார்த்தைக் கேட்டுட்டு சொல்லுங்க நான் கிளம்புறேன்..."என்றவர் பவானியிடம் கூறிவிட்டு கடைசியாக நித்திலாவிடம் வந்தவர்,

"வரேன் மா..."என்று கூறி செல்ல இவளோ தலையை பலமாக உருட்டி வைத்தாள்.

அகிலா சென்றவுடன் நித்திலாவின் மனதில் வனிதாவை பெண் கேட்கிறார்கள் என்றே நினைத்தாள்.கூடவே வனி இன்னும் படிப்பைக் கூட முடிக்கவில்லையே என்ற நினைப்பு எழுந்தாலும் எதுவும் கேட்கவில்லை.பின் தங்கள் அறைக்குள் புகுந்தவள் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு சித்திக்கு இரவு உணவிற்கு உதவ சமையல் அறை நோக்கி செல்ல பொழுது,

"நித்திக்குட்டி...இங்க வா டா..."என்று வாஞ்சையாக அழைத்தார் சீனிவாசன்.மிகுவும் உணர்ச்சிவசப்படும் நேரங்களில் இவ்வாறு தான் அழைப்பார்.அதுவும் தன் தந்தையின் நினைவு வரும் பொழுது எல்லாம் அவரது கண்கள் குலம் கட்டிவிடும்.தன்னை தாயாய்,தகப்பனாய் வளர்த்த அண்ணனின் வாழ்வு இவ்வளவு சீக்கிரம் முடியும் என்று அவர் கனவிலும் நினைத்ததில்லை.அதிலும் ஐந்து வயதே ஆன நித்திலா தாய்,தந்தை சடலத்தின் முன் நின்ற அந்த நிலை இன்று நினைத்தாலும் உள்ளம் கனக்கும் அவருக்கு.பழைய நினைவுகளின் தாக்கத்தில் இருந்தவரை மீட்டது நித்தியின் குரல்,

"சித்தப்பா....என்ன இது சின்ன குழந்தையாட்டம் அழுதுகிட்டு...என்ன ஆச்சு வந்தவங்க அப்பா வை பத்திக் கேட்டாங்களா...சொல்லுங்க..."என்று அவள் படபடக்க.லேசாக சிரித்தவர்,

"நீ இன்னும் மாறவேயில்லை டா..."என்றார் சீனிவாசன்.சிறுவயதில் இருந்தே சீனிவாசன் சற்று ஒய்ந்தார் போல இருந்தாலே எங்கே தன் சித்தப்பாவிற்கும் ஏதாவது ஆகிவிடுமோ என்று பயந்து வீட்டையே அமர்க்களபடுத்திவிடுவாள்.பவானி கூட இவளது பயத்தில் சற்று கோபம் வந்தாலும் எதுவும் கூறமாட்டார்.

"ஏன்டீ இப்படி படுத்துற..."என்று கூறுவதோடு சரி.

இன்றும் தன் சித்தப்பாவின் ஓய்ந்த தோற்றத்தைக் கண்டு நித்திலா பதற சமையல் அறையில் கையில் தட்டுடன் வந்த பவானி,

"ஏய்...அவருக்கு ஒண்ணுமில்லடி...அவர் ரொம்ப சந்தோஷமா இருக்கார் அதனால தான் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுறார்...நீ அதுக்குள்ள டென்ஷன் ஆகி என்னையும் ஆக்காத..."என்றவர் சீனிவானிடம்,

"அவ சொல்ரது போல தான் நீங்களும் இருக்கீங்க...மொதல்ல என்ன விஷயம்னு அவகிட்ட சொல்லுங்க..."என்றார்.

நித்திலாவோ "என்னனு சொல்லுங்க சித்தப்பா..."என்று கேட்க அவளது தலையை வாஞ்சையாக தடவியவர்,

"என் நித்திக்குட்டிக்கு கல்யாணம்...அதுவும் பெரிய இடத்துல...அதான் உங்க சித்தி ஸ்வீட்டெல்லாம் செஞ்சிருக்கா எங்க ஆஆ காட்டு...."என்று ஊட்ட நித்திக்கு தான் அந்த விஷயம் இனிக்கவில்லை.

"கல்யாணமா எனக்கா..."என்று மனதில் புலம்புவதாக நினைத்து வெளியில் கூற சீனிவாசனோ,

"என்னடா உன்ன கேட்காம பேசிட்டேனு உனக்கு கோபமா...நான் சொல்லியிருக்கேன்டா என் பொண்ணுக்கு பிடிச்சிருந்தான் மத்தெல்லாம்னு...இந்த போட்டோவை பாரு..."என்று ஒரு கவரை நீட்ட அவளோ அதிர்ச்சியுடன் அதை வாங்க,

"நீ பார்த்துட்டு ஒரு நல்ல முடிவா சொல்லு..."என்றவர் வெளியே வேலை இருப்பதாக சென்றுவிட நித்திலா கவருடன் தன் அறைக்கு வந்தாள்.அவளது முகத்தில் வந்து போன உணர்வுகளை கண்ட பவானி அவளிடம் பேச எண்ணி வந்தவர்,

"நித்தி..இங்க வாம்மா..."என்று அழைத்தார்.அவளும் ஒருவித குழப்பத்துடன் வர அவளை தனது அருகில் அமர சொன்னவர்,

"நித்தி...நீ யாரையாவது விரும்பிரியா..."என்று கேட்க அவரது கேள்வியில் அதிர்ந்தவள்,

"அப்படியெல்லாம் இல்ல சித்தி..."என்றாள் அவசரமாக அவளது தலையை செல்லமாக தட்டியவர்,

"மண்டு ஏன் பயப்படுற...நான் சாதாரணமா தான் கேட்டேன்...இதே உங்க அம்மானா நீயா சொல்லிருப்ப...சரி ஏன் கல்யாணம்னு உங்க சித்தப்பா சொன்ன உடனே ஏன் இவ்வளவு அதிர்ச்சியாகுற...எதுவா இருந்தாலும் சொல்லு..."பவானி கேட்க நித்தலாவோ அவரிடம் பேச தயங்குவது புரிய அவரே,

"இங்க பாருமா நான் உன்கூட ரொம்ப ஒட்டுதல் கிடையாது தான் அதுக்காக உன்ன எந்தவிதத்திலேயும் நான் விட்டுக்கொடுக்க மாட்டேனு உனக்கு தெரியும் அதனால உன் மனசுல என்ன இருக்குனு என்கிட்ட சொல்லு..."என்றார் பொறுமையாக நித்திலாவிற்கே சித்தியின் இந்த பொறுமையான பேச்சு புதிதாக இருந்தது அவளுக்கு தெரிந்தவரை அவர் இவ்வளவு பேசுவார் என்று இதோ இப்போது அவர் அவளிடம் பேசும் போது தான் தெரியும்.நித்தலவிடம் பதில் வராமல் இருக்க பவானியோ அவளது தோளை,

"நித்தி...ஏய்..நித்தி..."என்று உலுக்கினார்.

"ஆங்...சித்தி..."என்று திணர பவானியோ திரும்பியும் முதலேந்தா என்பது போல பார்க்க நித்திலாவோ,

"கல்யாணம் பண்ணிக்கிறது பிரச்சனையில்லை சித்தி...ஆனா இப்பதான் நான் காலேஜ் முடிக்கவே போறேன் அதுக்குள்ள ஏன் தான் யோசிக்கிறேன்...அதுமட்டுமில்லாம எனக்கு உங்கள மாதிரி வேலைக்கு போகனும்...அதனால தான் யோசிக்கிறேன்..."என்று மனதில் உள்ளதை மறையாமல் கூறினாள்.அவளது மனதை அறிந்த பின் பவானிக்கு மனது சற்று லேசானது சீனிவாசன் பேசும் பொழுது நித்திலாவின் முகத்தையே பார்த்தவருக்கு அவளது அதிர்ச்சி சற்று கலக்கத்தை கொடுத்த என்னமோ உண்மை.அதனால் தான் உடனே அவளிடம் கேட்டதும் கூட இப்போது அவளின் பதிலில் மனதிற்கு நிம்மதி இருந்தும் அவளிடம் இன்னும் சிலது தெளிவுபடுத்த எண்ணி,

"நீ நினைக்கிறது தப்பில்லை நித்தி...ஆனா இந்த சம்பந்தம் தானா வந்து கேட்கிறாங்க...அதுவும் நல்ல பாரம்பரியமான குடும்பம்...அதான் உங்க சித்தப்பாவும் முடிக்கலாம்னு நினைக்கிறார்...ஆனா நீ நல்ல யோசிச்சு முடிவ சொல்லு..."என்றுவிட்டு சென்றுவிட்டார்.

பவானி சென்ற பிறகும் ஏதோ யோசனையில் இருந்தவள் பின் தன் தலையை உலுக்கிவிட்டு "நித்தி இது வேலைக்காது கொஞ்ச நேரம் இதெல்லாம் ஒதுக்கி வை..."என்று தனக்குள் கூறிக்கொண்டாள்.அதற்கு பின் அந்த விஷயத்தை அவள் மறந்திருக்க பின் நினைவு கூர்ந்தது வனிதா தான்.

சித்தியின் மூலம் அனைத்தையும் கேட்டிருந்தவள் தன் தமக்கை கட்டிக்கொண்டவள்,

"ஐ என் நித்தி கல்யாணம் ஜாலி..."என்று ஆர்பரிக்க நித்திக்கு அப்போது தான் சித்தப்பாவும்,சித்தியும் தன் முகத்தை பார்த்ததன் காரணம் பிடிபட தன் தலையை தட்டியவள் தன் சித்தப்பா கொடுத்த கவரை தேடி எடுக்க அதற்குள் வனி அதை பிடுங்கி போக்கு காட்ட ஆரம்பித்தாள்,

"ஓ...அத்தான் போட்டோவா...நான் தான் முதல்ல பார்ப்பேன்.." என்று கூற நித்திலாவோ,

"போடி நீயே பாரு.."என்றுவிட்டு சென்றுவிட்டாள்.

இரவு தன் அறைக்கு தண்ணீர் எடுக்க வந்த நித்திலா சித்தப்பா,சித்தியின் அறையை கடக்கும் போது சீனிவாசன் பவானியிடம்,

"எனக்கு இன்னைக்கு தான் பவி மனசு லேசா இருக்கு...எவ்வளவு பெரிய இடம் அவங்களே வந்து கேட்டாங்க...இந்த கல்யாணம் மட்டும் நல்லபடியா நடந்தா எங்க அண்ணன் ஆத்மா சாந்தி அடைஞ்சிடும்..."என்று கூறிக்கொண்டிருக்க பவானியோ,

"பெரிய இடம் அதான் கொஞ்சம் பயமா இருக்குங்க...ஏன் இங்க வராங்க...நீங்க நல்லா விசாரிச்சிங்களா..."என்று கலக்கமாக கேட்க சீனிவாசனோ,

"என்ன பவி நான் விசாரிக்காம இருப்பேனா...அவங்களோட பையன் ஜாதகமும் நம்ம பொண்ணு ஜாதகமும் பத்து பொருத்தமும் இருக்காம் அதனால தான் தரகர் சொன்னார்...நீ கேட்ட அதே கேள்வியை நானும் அந்த அகிலா அம்மாகிட்ட நேரிடையா கேட்டேன் அவங்க எனக்கு உங்க பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு நீங்களும் எங்கள பத்தி விசாரிச்சு பாருங்கனு சொன்னாங்க..நானும் நல்ல விசாரிச்சிட்டேன் பையன் தங்கம் அகிலா அம்மாவும் நல்ல மாதிரி தான் எல்லாரும் சொல்ராங்க..."என்று அவர் நீண்ட விளக்கம் தர பவானியின் முகம் இன்னும் யோசனையில் இருப்பதைக் கண்டு,

"என்ன பவி இன்னும் யோசனை..."

"நம்ம நினைக்கிறது சரி...ஆனா நித்தி அவ இன்னும் ஒண்ணும் சொல்லயே..."என்றவர் மாலை நித்திலா தன்னிடம் பகிர்ந்தவற்றைக் கூற சீனிவாசனோ,

"ம்ம் சரி அவளா சொல்லட்டும் பவி...நீ எதுவும் அவள வற்புற்தாத...என்ன நல்ல இடமா இருக்கேனு யோசிச்சேன்..."எனறவர் குரலே உள்ளே சென்றுவிட பவானியோ,

"நீங்க தேவையில்லாம மனச உழட்டாம படுங்க...இது அவ வாழ்ககை அவ தான் முடிவு எடுக்கனும் நாம இல்லை..."என்றவர் படுத்துவிட சீனிவாசனோ கடவுளிடம் நல்லதே நடக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் படுத்தார்.

தன் அறைக்கு வந்த நித்திலாவிற்கு மனது ஒரு நிலையில் இல்லை தனக்காக சிந்திக்கும் சித்தி,சித்தப்பாவையும் நினைத்து கண்கள் குலம் கட்டியது அப்போது

"ஏன்டீ உனக்கு எப்படி இருந்தாலும் கல்யாணம் செய்துக்க தான் போற அதை ஏன் இப்ப செய்யக் கூடாது..."என்று அவளது மனசாட்சி குரல் எழுப்ப ஒரு முடிவுடன் படுத்தாள்.காலை எப்போதும் போல எழுந்தவள் தன் சம்மதத்தை தெரிவிக்க சீனிவாசனை கையில் பிடிக்கமுடியவில்லை.அவருக்கு அவ்வளவு சந்தோஷம் பவானி கூட அவளை அணைத்து தன் வாழ்த்தை சொல்ல வீடே உற்சாகமாக மாறியது.இவ்வாறு ஆஷிக்கின் படத்தை பார்க்கமலே அவள் கூறிவிட அன்றிலிருந்து இதோ இன்று வரை இரவு வந்தால் போதும் வனிதா நித்திலாவை படுத்தி எடுத்துவிடுவாள்.

"ஏய்...நித்தீ...ஏய்..."என்று வனிதா உலுக்க நிகழ்வுக்கு வந்த நித்திலா,

"போடி எனக்கு தூக்கம் வருது...குட் நைட்..."என்று விட்டு தன் தூக்கத்தை தொடர்ந்தவளுக்கு தெரியவில்லை விரைவில் அவளது இந்த நிம்மதி கெட போகிறது என்று. போட்டோவை பார்க்கக்கூடாது என்றில்லை பார்க்க தோனவில்லை நித்திலாவிற்கு அது ஏன் என்று கேட்டால் விடையில்லை அவளிடம்.ஆனால் தன் வீட்டினர் சந்தோஷ முகங்களைக் கண்டு அவளுக்கும் தன் கல்யாணத்தை ஆவலாக எதிர்நோக்கினாள்.ஆனால் இவர்களது சந்தோஷம் நிலைக்குமா...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

சீனிவாசன் பவானி தம்பதி நல்லவங்களா இருக்காங்களே
அண்ணன் பொண்ணுன்னாலும் தன் பொண்ணு மாதிரியே பாசமா பார்த்துக்கிறாங்க

அகிலாதான் தேடி வந்து சம்பந்தம் பேசியிருக்கிறாள்
நித்திலா வீட்டினரிடம் ஒரு தவறும் இல்லை

ஆணவக்காரி மஞ்சரியினால் கல்யாணக் கனவுடன் இருக்கும் அப்பாவி நித்திலாவுக்கு ஒரு துன்பமும் வரக் கூடாது காயத்ரி டியர்
 
Last edited:

Ambal

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

சீனிவாசன் பவானி தம்பதி நல்லவங்களா இருக்காங்களே
அண்ணன் பொண்ணுன்னாலும் தன் பொண்ணு மாதிரியே பாசமா பார்த்துக்கிறாங்க

அகிலாதான் தேடி வந்து சம்பந்தம் பேசியிருக்கிறாள்
நித்திலா வீட்டினரிடம் ஒரு தவறும் இல்லை

ஆணவக்காரி மஞ்சரியினால் கல்யாணக் கனவுடன் இருக்கும் அப்பாவி நித்திலாவுக்கு ஒரு துன்பமும் வரக் கூடாது காயத்ரி டியர்
நன்றி தோழி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top