வாழைப்பழ பர்ஃபி

Bhuvana

Well-Known Member
#1
#வாழைப்பழ_பர்ஃபி

#தேவையான_பொருட்கள்:

பழுத்த வாழைப்பழம் - 4
கோதுமை மாவு - 100கிராம்
பொடித்த வெல்லம் - 100கிராம்
ஏலக்காய் தூள் - 1சிட்டிகை
முந்திரி பருப்பு - 10
நெய் - தேவைக்கு ஏற்ப

#செய்முறை:

வாழைப்பழத்தை நன்றாக மிக்ஸியில் மசித்து விட்டு எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் கொஞ்சம் நெய் விட்டு சூடானதும் முந்திரி பருப்பை வறுத்து தனியே வைக்கவும்.

அதே கடாயில் சிறிது நெய் விட்டு கோதுமை மாவை நல்ல வாசம் வரும் வரை வறுத்து அரைத்த வாழைப்பழத்தை சேர்த்து சுருள கிளறவும்.

சிறிது நெய் விட்டு பொடித்த வெல்லம் சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

நல்ல அல்வா பதத்திற்கு கிண்டி வறுத்த முந்திரி பருப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறி விட்டு இறக்கவும்.

ஒரு தட்டில் நெய் தடவி அதில் இதை பரப்பிவிட்டு ஆற விடவும். ஆறிய பிறகு கத்தி வைத்து துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும்.

#குறிப்பு : எந்த வாழைப்பழத்திலும் செய்யலாம். செவ்வாழை கூட பயன்படுத்தலாம்.
 
Attachments

Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement