வானவில் வாழ்க்கை 10

Advertisement

அனைவருக்கும் இந்துமதியின் வணக்கமும் மன்னிப்பும். குடும்பத்தில் கொஞ்சம் பிரச்சனை. அடுத்து ஒரு கதை எழுதி பேஸ் புக்கில் போட ஒரு பெண் இங்கே போடுங்கக்கா என்றாள். அது தான் லேட் ஆயிடுச்சு. இனி ஒரு நாள் விட்டு ஒரு நாள் உங்களுக்கு அப்டேட் வரும். தொடர்ந்து ஆதரவு தரும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

விஜயன் கையில் இருந்த கடிதத்தைப் பிரித்துப் பார்த்தவனுக்கு பிரமிப்பாக இருந்தது. அதனால் அவன் அதிர்ச்சியாகி நின்றான். "என்ன விஜய், இப்படி அதிர்ச்சியாகி நிற்கிறே ", என்று கமிசனர் கேட்டவுடன் தான் அவனுக்கு உயிர்ப்பே வந்தது. எப்படி சார் " உள்துறை அமைச்சர்" எப்படி ஒத்துக் கொண்டார்?, என்று கேட்டான். என்னப்பா செய்வது காலம் அப்படி. " தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் போது, அவர்களைக் கொல்ல இறைவனே வருவான்", என்று தானே பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள்.

" தெய்வம் மனுச ரூபாய " என்று தானே இருக்கு. தெய்வம் நேரில் வராது. நாம தான் கடவுள். அதனால் நாமே இந்தக் காரியத்தைச் செய்வோம் என்று அமைச்சர் கூறினார் என்று முடித்தார். உன்னுடன் எத்தனை கேர்ல்ஸ் பாய்ஸ் சேருராங்கனு லிஸ்ட் எடு. அனைவருக்கும் பார்மலிட்டிக்காக ஒரு தேர்வு நடைபெறும்.

அதில் கலந்து கொள்ள இந்த அப்ளிக்கேசனைப் பில் பண்ணிக் கொடுங்க. உடற்பயிற்சித் தேர்வும் நடைபெறும். அதுவும் பார்மாலிட்டிக்காகத் தான் நடைபெறும். இந்த வார சனி ஞாயிறு இரண்டு நாள்களிலும் முடிந்து உங்களுக்கான பணி ஆர்டர் வரும் என்று கூறி முடித்தார். அப்போ அவரையே தலைமை தாங்கக் கூப்பிடுவோம் என்று கூறினான்.

அவனே ஒரு பேப்பரில் ஒரு லிஸ்ட் தயாரித்துக் கொடுத்தான். இதில் எந்தவித மாற்றமும் இருக்காதே என்றார். இல்லை சார், கண்டிப்பா இருக்காது என்றான். ஓகே அப்போ சனிக் கிழமை காலையிலே என் ஆபிஸ்க்கு வந்துடுங்க என்று கூறி அனைவரிடமும் விடை பெற்றுச் சென்றார். ஆனால் நிர்வாகியும், பிரின்சிப்பாலும் நெர்வஸாக இருப்பதைப் பார்த்து, சார் நீங்க கவலைப்படாம இருங்க. நான் பார்த்துக்கிறேன் என்று கூறினான்.

இல்லை விஜய் அந்த அரக்கன் இங்கே வருகிறானு தெரிஞ்சவுடனே எப்படி கவலைப்படாமல் இருக்க முடியும். அதுக்குத் தான் நீங்க. சீப்கெஸ்ட்டா
"உள்துறை அமைச்சரைக் ", கூப்பிடப் போவதாகக் கூறிவிட்டீர்களே சார். அதிலேயே பாதிப் பிரச்சனை முடிஞ்சுடுச்சு. இப்போவே போன் பண்ணி அப்பாயின்ட்மென்ட் வாங்குங்க சார் என்றான். அவர் யோசிக்க பிரின்ஸிப்பல் போன் பண்ணி விட்டார்.

முதல் ரிங்கிலேயே போன் எடுக்கப்பட்டு ஹலோ " நான் உள்துறை அமைச்சர் செகரட்டரி பேசுறேன்" என்றார். உடனே நிர்வாகி வாங்கி நான் ******-இந்த காலேஜ் நிர்வாகி பேசுறேன். சாரோட அப்பாயிண்ட்மென்ட் வேண்டும் சார். எப்போ பார்க்கலாம்னு சொன்னுங்கனா நேரில் வந்து பார்த்து இன்விட்டேசன் கொடுக்கலாம்னு பார்க்கிறேன் என்று சொன்னார்.

அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே " யார் மூர்த்தி போனில்", என்று அமைச்சரே கேட்டார். சார் ****** அந்தக் காலேஜில் இருந்து போன் என்றவுடன், அவரே போனை வாங்கிப் பேசினார். நிர்வாகி " ஐயா வணக்கம்." எங்க காலேஜில் இந்த வருடம் மாநில அளவிலான போட்டி நடக்கிறது. அதற்கு " நீங்கள் தான் தலைமை தாங்க வேண்டும்", என்று கூறினார்.

மேலும் நாங்கள் நேரே வந்து தங்களை அழைக்க இன்விட்டேசன் கொடுக்க எப்போது வரலாம் என்று தான் பேசிக் கொண்டிருந்தோம். அதற்குள் " நீங்களே போன் எடுத்து பேசிவிட்டீர்கள் ", என்று கூறினார். ம்ம் நாளைக்குக் காலை பத்து மணிக்கு வர முடியுமா என்று கேட்டார். கண்டிப்பா " ஐயா! நாங்கள் நாளைக்குக் கரெக்டாக பத்து மணிக்கு அங்கே இருப்போம் என்று கூறினார்.

உங்க காலேஜ் ஸ்டூடன்ட் தலைவர் யார்? கமிசனர் ஏதோ பேர் சொன்னாரே என்று இழுக்க " செக்கரட்டரி அதற்குள் இடையே புகுந்து " விஜயன்", என்று சொன்னார். ம்ம் அந்தப் பையனையும், அவன் நண்பர்களையும் நான் பார்க்க வேண்டுமே என்று சொன்னார். நாளைக்கு " அவர்களையும் கூட்டிட்டு வருகிறேன் " ஐயா என்று சொன்னார். ஓகே நாளைக்குப் பார்க்கலாம் என்று கூறி வைத்தார். அவர்கள் பேசிக் கொண்டதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கும் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.

நிர்வாகி, " பிரின்ஸ்ப்பலிடம் நாளைக்கு, நாம இரண்டு பேர், கருணாகரன், விஜய் நீயும் மற்ற டிப்பார்ட்மென்ட்டில் இருந்து சில ஸ்டூடன்ட்ஸைக் கூட்டிட்டு ரெடியா இரு என்றார். சார் இன்னும் நாம இன்விட்டேசன் பிரிண்ட் பண்ணலை. எப்படி கொண்டு போய்க் கொடுப்பது என்றான். சார் அதுலாம் ஒரு பெரிய பிரச்சனை இல்லைனு சொன்னார் ஹெச் ஓடி திருநாவுக்கரசு. அவரே கம்ப்யூட்டரில் பிரிண்ட் பண்ணி "என்ன எழுத வேண்டுமோ ", அதை டைப் பண்ணி எடுத்தார். இதோ இன்விட்டேசன் ரெடி என்றார்.

அதற்கப்புறம் யார் யார் கூட அழைத்துப் போவது என்று முடிவு செய்தார்கள். மறு நாள் காலை முத்துவிடம் பெரிய காரை எடுக்கச் சொன்னான். அவனும் வந்து காரை எடுத்தான். காலேஜுக்குள் கார் போய் நின்றது. போகும் போதே ஒவ்வொருத்தருக்கும் கட்டளை போட்டுக் கொண்டே சென்றான். அப்போது அருண் வந்து மச்சி அவன் இன்னிக்கு வருகிறானாம் என்றான். அதைக் கேட்ட விஜயின் முகம் இருகியது. உடனே முகத்தை சாதாரண நிலைக்குக் கொண்டு வந்து சரி வரட்டும் என்று கூறினான். யார் யாரைப் பெண்களை நிற்க வைப்பது முடிவு செய்து, உடனே அந்த செய்தி காற்றாகப் பரவியது. உடனே அந்தந்த இடத்தில் மாணவர்கள் நின்றனர்.

ராணியிடம்," ஜான்ஸி, உமா,திவ்யாவை கூட்டிக் கொண்டு காரில் இருங்கள் என்று கூறினான். பிறகு நிர்வாகி, பிரின்சிப்பல், பேராசிரியர் என அனைவரையும் அழைத்துக் கொண்டு காரில் ஏறினர்.போகும் போதே பொக்கே, சால் எல்லாம் வாங்கிக் கொண்டு சென்றார்கள்.

திவ்யா அண்ணா நான் தான் போலீஸ் ஆக விருப்பம் இல்லைனு சொன்னேனே. அப்புறம் எதுக்கு என்னையும் கூட்டிட்டுப் போறீங்க என்றாள். ம்ம் நீ அங்கே இருந்தா ஏதாவது ஒரண்டை இழுப்பேனு தான் எங்களோட கூட்டிட்டுப் போறோம் என்று அமீர் சொல்ல அனைவரும் சிரித்தனர். ஏய் நான் என்ன சண்டைக்காரியா. கொன்னுடுவேன் உன்னை என்று கொதித்தாள். அதை வேறே நாங்க எல்லாரும் எங்க வாயாலே சொல்லனுமா என்று டேவிட் கேட்டான்.

அவன் சொல்லி முடிக்கவும் அவன் தலையில் நங்கென்று ஒரு கொட்டு வைத்தாள். ஆ ஏன்டி என்னைக் குட்டினே பிசாசேனு டேவிட் சொன்னான். யார் நான் பிசாசா. நீ தான்டா நெட்டைக் கொக்கு என்றாள். ஏய் போடி சாப்பாட்டு மூட்டை. ஆமா இவர் பெரிய அன்னதான பிரபு. அப்படியே வகை வகையா கொண்டு வந்து தருராரு. நாங்க அதைச் சாப்பிடுறோம். போடா கருப்பா. ஆமா இவுக பெரிய செக்கச் செவேல்னு ஐஸ்வர்யாராய் மாதிரி இருக்காங்க. என்னைக் கருப்பானு சொல்றாங்க என்று டேவிட் கொந்தளித்தான்.

திவ்யா தலையில் ஜான்ஸி ஓங்கி ஒரு குட்டு வைத்து, அடங்குறியா கொஞ்சமாவது. அங்கே இருந்தால் எதாவது ஒரண்டை இழுப்பேனு தான் உன்னை எங்களோடு கூட்டி வந்தது. இங்கேயும் வந்து வாயாடிக்கிட்டு இருக்கே. இப்போ அமைதியா வரலை உன்னை அப்படியே காரிலிருந்து கீழே தள்ளிடுவேன் என்று மிரட்டி வைத்தாள்.

அண்ணா பாருண்ணா இவங்க எல்லாம் எப்படி பேசுறாங்கனு என்று சலுகை கொண்டாடினாள். திவ்யா இப்போ சொல்றது தான் உனக்கு. இன்னிக்கு அந்த அமைச்சரோட பையன் வருவதாக செய்தி வந்ததால் தான் உன்னை எங்களோட கூட்டிட்டுப் போறேன். இந்த விழா முடியுற வரைக்கும் அமைதியா இருக்கனும். யார் கூடவும் வம்பு இழுக்கக் கூடாது. நான் அருண் சங்கர் டேவிட் அமீர் ராணி ஜான்ஸி ரம்யா இவங்களோடு தான் இருக்கனும் புரியுதா.அடுத்து இப்போ போறது அமைச்சர் வீடு. அங்கே வந்து ஏதாவது ஏடாகூடமா பேசினே அவ்வளவு தான்.

உன்னைக் கொன்றே போட்டு விடுவேன் என்று கூறினான். சரிண்ணா நான் அமைதியாவே இருக்கேன் என்றாள். டேய் மச்சான் கேட்டுக்கோங்கடா இவள் மட்டும் அங்கே அமைதியா இருந்தால் " அது உலக மகா அதிசயம்டா", என்று அருண் கூற அனைவரும் சிரித்து விட்டனர். டேய் சும்மா இருங்கடா. நீங்களே அவளை உசுப்பேத்தியே அவளைப் பேச வைச்சுடுவீங்க போல என்று விஜய் அதட்டினான்.

மச்சான் டேவிட், சொல்லுடா," இவள் அங்கே அமைதியா இருப்பானு நினைக்கிறே" என்று கேட்டான் அமீர். ம்ம் எனக்கு சுத்தமா நம்பிக்கையில்லை. ஆனால், விஜய்க்காக இருந்தாலும் இருக்கலாம்டா என்று கூறினான். அதற்குள் அமைச்சர் வீடு வர, அனைவரும் இறங்கி உள்ளே சென்றனர். செக்கரட்டரி வந்து உள்ளே அழைத்துப் போனார். அமைச்சர் ஹாலிலேயே அமர்ந்திருந்தார். நிர்வாகி பிரின்சிப்பல் இருவரும் அவருக்கு பூங்கொத்து கொடுத்து சாலைப் போர்த்திவிட்டு ஒரு தட்டில் ஸ்வீட் பழங்கள் எல்லாம் வைத்து பத்திரிக்கையை மேலே வைத்து கொடுத்தனர்.

அவரும் வாங்கிப் பார்த்து விட்டு கண்டிப்பாக வருகிறேன் என்று கூறினார். இங்கே ஸ்டூடன்ட் தலைவன் யார்? என்று கேட்டார். நான் தான் சார் என்று கூறி அவர் பாதம் தொட்டுப் பணிந்தான். பரவாயில்லை " கமிசனர் சொன்னப்போ நான் நம்பலை", ஆனால், " இப்போ கன்பார்ம் ஆகிடுச்சு", என்றார். பின் நிர்வாகியிடம் " உங்க ஸ்டூடன்ட்சிடம் தனியாப் பேசலாமா", என்று அனுமதி கேட்டார். தாராளமா சார் என்று கூறி மாணவர்கள் தவிர அனைவரும் வெளியே சென்றனர். இப்போ நீங்க எடுத்துருக்கிற பொருப்பு ரொம்ப பெரியது. " அமைச்சர் என்ற பதவியை வைத்துக் கொண்டு, எல்லா விதமான தவறுகளையும் செய்யும் பொறுக்கி", அவனிடம் கவனமாக நடந்து கொள்ளுங்கள் என்று கூறினார். பின்னர் சில விசயங்களைப் பற்றிப் பேசி அலசி ஒரு தீர்மானத்துக்கு வந்தனர்.

அதற்குப் பிறகு அனைவரும் விடை பெற்றுச் சென்றனர். அவர்கள் காரில் ஏறிக் காலேஜுக்கு வந்தனர். நடந்தது அனைத்தையும் பார்த்த முத்துக்கு பிரமிப்பாக இருந்தது. அனைவரும் கேன்டீனுக்குச் சென்றனர். விஜயன் ஒவ்வொரு இடத்திலும் போய் அமைச்சர் மகன் வந்தானா? எதுவும் பிரச்சனை நடந்ததா எனக் கேட்டு விட்டு வந்தான். இன்னும் இல்லை என்று சொன்னவுடன் கேன்டீனுக்குச் சாப்பிடச் சென்றான்.

அந்த நேரம் தான் அந்த அரக்கன் தன் வானரப் பட்டாளத்துடன் வந்து சேர்ந்தான். இது விஜயனுக்குத் தெரியாமல் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தான். வந்த அரக்கனோ ஒவ்வொரு இடத்திலும் பெண்கள் மேல் மோகப் பார்வை பார்த்துக் கொண்டே வந்தான். ஆனால் யாரும் தலையை நிமிர்த்தாமலேயே கேள்வி கேட்டு பதிவு செய்து கொண்டிருந்தனர்.

ஒரு இடத்தில் பெண்கள் மட்டுமே இருக்க, அது இவனுக்கு வசதியாகிப் பேனது. அவர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவர்களைத் தொட்டுத் தொட்டுப் பேசிக் கொண்டு இருந்தான். அதைப் பல்லைக் கடித்துக் கொண்டு சகித்துக் கொண்டு தங்கள் வேலையில் கவனமாக இருந்தனர். இவனுக்கு அது அவமானமாகத் தெரிய " ஒரு பெண்ணின் மேல் கை வைத்து இழுத்து அணைக்க முயன்றான்",. பக்கத்தில் இருந்த பெண் விசில் எடுத்து ஊத, அந்த சத்தம் தொடர்ந்து ஒலிக்க ஒரு சில மாணவர்கள் அவன் பிடியிலிருந்து விலக்க முற்பட, அவர்களை அறைந்து தள்ளினான். அதற்குள் அங்கு வந்து சேர்ந்த விஜய் " அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான்".

அந்தப் பெண்ணைத் தொட்ட கையை பிடித்து பின்னால் கொண்டு வந்து முறுக்கினான். கூட வந்தவர்கள் சண்டைக்கு வர, மற்ற பசங்கள் அவர்களை அடித்தனர். இது நிர்வாகிக்கு எட்ட அவர் ஓடி வந்தார். இதை அந்தக் கல்லூரி மாணவன் படம் எடுத்து பத்திரிக்கைக்கு அனுப்ப, பத்திரிக்கை காரர்கள் அங்கு குழுமிவிட்டனர். அங்கு நடந்தது லைவ்வாக தொலைக் காட்சியில் தெரிய, உடனே போலீஸ் வந்தது. அங்கு நடந்ததைப் பற்றிக் கமிசனரே விசாரிக்க நடந்தது எல்லாம் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. அந்தப் பெண்ணோ பயந்து நடுங்கிப் போய் இருந்தவள் கண்ணீரோடு ஓடிப் போய் லேப்புக்கு சென்று ஆசிடைக் குடித்து விட்டாள். அது தெரிந்தவுடன் அவளைத் தூக்கிப் போட்டுக் கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு எடுத்துச் செல்ல, அவளோ விஜய் மடியிலேயே உயிரை விட்டாள்.

இனி தர்மயுத்தம் ஆரம்பம்.
 

banumathi jayaraman

Well-Known Member
என்னப்பா ஒரே அப்டேட்டையே இரண்டு தடவை போட்டிருக்கீங்க
இந்த அப்டேட்டில் ஸ்டோரி பெயரை மாத்திட்டீங்க, இந்துமதி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top