வாடி என் ராசாத்தி

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
ஆர்த்திரவி சிறுகதை போட்டிக்கு அனுப்பிய கதை.

வாடி என் ராசாத்தி

இரவு நேரம், அது ஒரு தனியார் மருத்துவமனை. பணிக்கு வந்தாள் நர்ஸ் நந்தினி. வார்டில் உள்ள நோயாளிகளை செக் பண்ணிக்கொண்டு வந்தாள். ஒரு இடத்தில் பத்மா அமர்ந்து இருப்பதை பார்த்தாள். அவர், பிரசவத்துக்கு வந்த மருமகளுக்கு துணையாக கிராமத்தில் இருந்து வந்துள்ளார். கடந்த இருநாளில் நல்ல பழக்கம் நந்தினிக்கு. அவர் முகம் வாட்டத்துடன் இருந்தது. அருகில் சென்று, “என்னமா” என்றாள். “மருமகளை ஆபரேஷன் தியேட்டருக்கு கூட்டிக்கொண்டு போய் இருக்காங்க மா”.என்றார். “அதற்கா சோகமாக இருக்கீங்க, சுகபிரசவம் ஆகும். கவலைபடதீங்க மா”. என்றாள். “இல்லைப்பா, பையன் சாயங்காலம் வந்தான். மூத்தது தான் இந்த பிள்ளை போச்சு, இப்போ பொறக்குறதும் இதே இருந்தால், அப்புறம் என் முடிவை யாரும் எதிர்க்ககூடாது. என் முடிவுப்படி நடப்பேன், அப்படினு சொல்கிறான் மா” என்றார். நந்தினிக்கு மனது கணமானது. எவ்வளவு பார்த்து இருக்கிறாள் இங்கே. பெண்பிள்ளை பிறந்தவுடன், மாமியார் திட்டுவது, கணவன் கரிச்சிக்கொட்டுவது என்று. பத்மாவுடன் அவளும் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தாள். பிறந்தது பெண்பிள்ளை, பத்மாவின் மருமகள் பொழில்அரசிக்கு.

விடியல்வேளை, பொழிலின் கணவன் கதிரவன் வேகவேகமாக உள்ளே வருவதை பார்த்தாள் நந்தினி. அய்யோ என்றது அவள் மனது. பொழிலின் கட்டில் அருகே வந்த கதிரவன், முகம்கொள்ள சிரிப்புடன், “ வாடி என் ராசாத்தி” என்று கூறிக்கொண்டே, தெய்வம் தந்த அந்த சிறுமலரை தூக்கி கொஞ்சினான். ஒன்றும்புரியவில்லை நந்தினிக்கு. பத்மாவை நெருங்கினாள். அவர் சிரிப்புடன், “ அவனுக்கு பெண்பிள்ளை என்றால் உயிர் மா, தலைச்சன் ஆண் ஆனது, அவனுக்கு கஷ்டமாக போச்சி, இப்போ அவன் மூஞ்சியை பாரேன். எவ்வளவு சந்தோசம் “ என்றார். மனது நிறைந்தது நந்தினிக்கு. கதிர் அருகே சென்றாள். “ சார், எல்லோருக்கும் ஆண்பிள்ளை தான் பிடிக்கும், நீங்க மட்டும் தான் சார், பெண் பிறந்ததுக்கு இவ்வளவு சந்தோஷப்படுறீங்க “ என்றாள். கதிரவன் அவளை பார்த்து, “ பிள்ளையில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்று என்னம்மா இருக்கு. எனக்கு முதலில் ஆண் பிள்ளை. இப்போ, பெண்பிள்ளை வேணும் என்று நினைத்தேன். கடவுள் தந்துவிட்டார் மா “ என்றான். உடனே நந்தினி, “ பிள்ளைகள் எல்லாம் ஒன்னு என்று சொல்கிறீங்க. அப்போ ஏன் சார் நேற்று உங்க அம்மாவிடம் என் முடிவுப்படி தான் நடப்பேன் என்று கடுமையாக சொன்னீங்க “ என்றாள். “ நீங்க என்னை தப்பா புரிஞ்சிடீங்க, நான் என் அம்மா, என் பொண்டாட்டிகிட்ட, இந்த பிள்ளையும் ஆண்பிள்ளையானால், நாம ஒரு பெண்பிள்ளையை தத்து எடுத்துக்கொள்வோம் என்று சொன்னேன். அதில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை, அதான் கொஞ்சம் கடுமையாக நேத்து சொன்னேன்மா “ என்றான் புன்னகையுடன் கதிரவன்.

நந்தினியும் சிரிப்புடன், “ அப்படி என்னணா பெண்பிள்ளை மேல் இவ்வளவு ஆசை “ என்று கேட்டாள். “ அம்மா, நான் வேலை விஷயமாக இங்கே டவுனில் இருக்கேன். என் அம்மா கிராமத்தில் இருக்கிறார். நான் என்னதான் பணம் அனுப்பினாலும், என் அம்மாவுக்கு ஒரு நல்லது, கெட்டதுனா அக்கம்பக்கம் உள்ளவங்கதான் பார்க்கிறாங்க, நான் அப்புறம் தான் போகிறேன். அப்படி இருக்கிற நான் எப்படிமா என் பையன் மட்டும் என்னை காப்பாற்றுவான் என்று எதிர்பார்க்கமுடியும். நான் என்ன விதைக்கிறனோ, அதை தானே அறுக்க முடியும். என் பையன் மேல் எவ்வளவுதான் பாசம் வைத்தாலும், என் மேல் பாசம் வைப்பது என் மகள் தானேமா. கடைசி காலத்தில் என் மகள் வந்து அப்பா என்று சொன்னாலே என் உடலில் புத்துணர்ச்சி வருமே மா. ஒவ்வொரு அப்பனுக்கும் பெண்பிள்ளைகள் இரண்டாம் தாய் தானே மா.” என்றான் கதிரவன். நந்தினியின் கண்களும், மனமும் நிறைந்து. அவள் அப்பாவை நினைத்து பார்த்தாள்.

மண் படைத்து, பொன் படைத்து சலித்த பின் பெண் படைத்து தன்னை தானே உயர்த்திக்கொண்டான் பரம்பொருள்.
கவியரசு கண்ணதாசன்
 
Neela mani

Writers Team
Tamil Novel Writer

bro unga ezhuthu thiramaiku intha kathai oru sirantha eduthukaatu. niraya ezhuthunga.
 
Saroja

Well-Known Member
சின்ன கதை
பெரிய சந்தோஷம்
கண்ணதாசன் வரிகள் கடவுளேக்கே
பிடித்து இருக்கும்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top