வந்தேன் உனக்காக EP - 9

Advertisement

Vinotha Thirumoorthy

Well-Known Member
விடியற்காலை, நடுராத்திரியாக மாறியது, நம் சனாயாவிற்கு… அதன் விளைவாக கல்லூரிக்கு தாமதமாக கிளம்பினாள்...

"அடடா… இவ்வளவு நேரமாகியதே, எப்படியும் முதல் கிளாஸிற்கு செல்ல முடியாது, கட்டடித்து தான் ஆகவேண்டும்" என்று, தனது காரை எடுக்க பார்க்கிங் ஏரியா சென்றாள்.

"இன்று ஏன் இவ்வளவு லேட்?", என்றவரின் குரலில், அசையாமல் நின்றவள், "ஒருவேளை பிரதாபாக இருக்குமோ", என்று ஆசையாக திரும்பினாள்.

"என்ன மேடம்… இப்படி பார்க்கிறீர்கள்…" என்றான், அவள் அப்பார்ட்மென்ட வாட்ச்மென்.

"இல்லை அண்ணா … நான்… ", என்று இழுத்தாள் சனாயா.

"சரி, சரி,... நீங்கள் கிளம்புங்கள்... நேரமாகிவிட்டது" என அவர் நகர,

"படத்திலும், கதையிலும், வருவதுபோல் நிஜ வாழ்க்கையிலும் நடக்குமா… இங்கு எப்படி, அவர் வர முடியும். அப்படியே வந்தாலும் எதற்காக வருவார்", என்று நினைத்துக்கொண்டே கல்லூரிக்குள் நுழைந்தாள் சனாயா.

"ஹலோ சனா!!!..." என்று கூறியவாறு, அவளது, கார் கதவை திறந்தவன் மித்ரன்.

அவள் வெளியே வந்ததும் "இரவு சரியான தூக்கம் இல்லை போலும்" என்று அந்த கதவை மூடினான். அப்போது அவள் அருகில் அவன் வரவும், சட்டென அந்த இடத்தில் இருந்து விலகி, அவனை முறைத்தாள் சனாயா.

"நீங்கள் என்னை விரும்புவதாக பூங்காவில் கூறினீர்களே, இப்போது நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள், என் மனதில், ஒரு நாளும் உங்களுக்கு இடம் கிடையாது"....

"என்னால் உங்களை நண்பனாக கூட எண்ண இயலாது. தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள். இனி என்னை தொல்லை செய்தால் கண்டிப்பாக பிரதாபிடம் சொல்லி விடுவேன்", என்றாள் சனா.

"இது என்னடா புது கதையாக உள்ளது... நீ எப்போதும், ஆதி அல்லது கார்த்திக்கிடம் தானே செல்வாய்??, இப்போது எங்கிருந்து வந்தான், அந்த பிரதாப்"...

"ஆதி உன் நண்பன், கார்த்திக் உன் அண்ணன், பிரதாப் யார்" என்றான் சந்தேகமாக.

"அது உங்களுக்கு தேவை இல்லாதது" என்று கூறிவிட்டு, வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள் சனாயா.

'நாம் ஏன் பிரதாப் பெயரை சொன்னோம்?', என்று குழம்பினாள்.

'அதுமட்டுமின்றி... எப்போதிருந்து, நம்மை காத்துக்கொள்ள, வேறொருவரை நாட துவங்கினோம்' என எரிச்சலுற்றாள்.

"மௌனமாய் இருந்த உனது மனம், கலவரமானது போல தெரிகிறதே" என்று வினவினான் பிரதாப்.

"பிரதாப்… நீங்கள் எப்படி இங்கே, எப்போது வந்தீர்கள்" என்று, அவனை பார்த்தும் படபடத்தாள் சனாயா.

ஒரு அழகான புன்னகையோடு, "இப்போதுதான்… நான் வருவது கூட தெரியாமல், எதையோ சிந்தித்துக் கொண்டிருப்பாய் போல"...

"ஆம் பிரதாப், நீங்கள் கூறுயது போல், மௌனமாய் இருந்த எனது மனம் கலவரமானது. ஆனால் இன்னும் விடைதான் வரவில்லை", என்றாள்.

"அப்படியா செய்தி... அந்தக் கலவரத்துக்கான காரணம் யார்" என கைகட்டி, புருவத்தை உயர்த்தி, வினவினான் பிரதாப்.

"அந்தக் கள்வனை, உங்களுக்கு நன்றாகவே தெரியும்" என்றாள், தலை குணிந்து, நிலத்தை பார்த்தவாறு.

அவன் சிரித்தபடி, "தெரியும் என்றுதான் நினைக்கிறேன்", என்றான்.

"ஆனால் என் மனம், இன்னும் விடை அளிக்கவில்லை"...

"இரண்டே நாட்களில், மௌனமாய் இருந்த மனம், கலவரமானதே மிகப்பெரிய விஷயம். இதில் விடையும் உடனடியாக கிடைக்க வேண்டுமென்றால், அது பேராசை" என்றான்.

"அப்போது அதுவரை"...

"அதுவரை பொறுமை வேண்டும், நீயே சின்ன பாப்பா"...

"நான் ஒன்றும் பாப்பா இல்லை"...

"நீ பாப்பா தான், நான் நான்காம் வகுப்பு படிக்கும் சனாயாவை தான், இப்போதும் பார்க்கிறேன். அதனால் இன்னும் சில வருடங்கள் பொறுமையாக இரு. அதற்குள் எத்தனையோ மாறும். சில காலம் கழிந்தபின், உன் கலவரம் சிறிதும் மாறாமல் அப்படியே இருந்தால், அது சரி தானா, என்று நன்கு ஆராய்ந்து முடிவெடு, முடிவெடுக்கும் உரிமை உனக்கு மட்டும் தான் உள்ளது", என்றான்.

அவள் தலையை ஆட்டினாள்...

"சரி.... அடுத்த வகுப்பிற்காவது செல், இந்த கலவரத்தில் இலட்சியத்தை இழந்து விடாதே. உன் மனக் கலவரத்துக்கு காரணமானவன், உன்மீது நம்பிக்கையோடு, எவ்வளவு ஆண்டுகளானாலும் காத்திருப்பான்" என்று அவன் கூற,

உள்ளூர மகிழ்ந்த சனாயா, தனது பேச்சை திசை மாற்றினாள் "சரிங்க பிரதாப், எப்போது எலக்சன்" என்றாள்.

"நாளை தான், நாளையே எலக்சன் முடிவும் வெளிவரும்", என்றான்.

"ஆல் தி பெஸ்ட் பிரதாப், நீங்கள்தான் சேர்மன். அதில் சந்தேகமே இல்லை" என்றாள் புன்னகையுடன்.

"நீங்கள் சொன்னால் சரிதான் மேடம்" என்று கையை கட்டி அவன் கூற, இருவரும் சிரித்த முகமாய், அவளது வகுப்பு வரை ஒன்றாக சென்றனர்.

மற்ற மாணவர்கள், அங்கு முன்பே அமர்ந்திருக்க, சிறிது புன்னகையுடன் விடைபெற்று, தனது வகுப்புக்கு சென்றான்.

மருநாள் எலக்சன் நடந்தது, அனைவரின் விருப்பப்படி பிரதாப் சேர்மேன் ஆனான்.

அந்த மகிழ்ச்சியில், அவனுக்கு வாழ்த்து சொல்ல, பிரதாப், கார்த்திக், பிரபா, சனாயா நால்வரும்... மாலை கல்லூரி முடிந்த பின், ஹோட்டலுக்கு சென்றனர்.

ஆதியோ பூங்காவில் தனியே அமர்ந்திருந்தான்….

அன்றிரவு ஆதிக்கு கால் செய்தாள், சனாயா.

"சாரி ஆதி, உன்னிடம் சொல்லாமல் அவர்களுடம் சென்று விட்டேன்", என்று ஹோட்டலில் நடந்தவற்றை கூற,

"மன்னிப்பு வேண்டுமானால், இன்று இரவு உணவுக்கு, என்னுடன் வெளியே வரவேண்டும்" என்றான்.

"நாளை மாலை சந்திப்போம் ஆதி, ப்ளீஸ்"...என அவள் கூற,

"முடியாது… நீ இப்போது வந்தே தீரவேண்டும், நான் ஹோட்டல் சோழாவில் காத்திருக்கிறேன். நீ வரும் வரை இங்கேயே தான் இருப்பேன்", என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்தான்.

அவனது பிடிவாதத்தை நன்கு அறிந்த சனாயா, வேக வேகமாக ஆடை மாற்றிக் கொண்டு கிளம்பினாள்.

காரின் அருகே சென்றவுடன், பிரதாப் கூறியது நினைவு வர, அவனது மொபைலுக்கு அழைத்து, அவள் ஆதியுடன் ஹோட்டல் செல்வதை கூறினாள்.

"ஒரு பத்து நிமிடம் கழித்து செல். உன் காரில் செல்லாதே, நானே கார் அனுப்புகிறேன், வண்டி ஓட்டுனர் பெயர் ரவி, அதில் செல்… வரும் போதும், அந்த காரிலேயே வந்து விடு", என்று இறுக்கமான குரலில் கூறினான்.

"இரவு ஒன்பது மணிக்கு, வெளியே செல்வதை தவறாக சொல்லாமல். அவள் பாதுகாப்புக்காக வண்டி அனுப்புகிறேன் என்று அவன் கூறியது, அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது"...

அவன் கூறியது போலவே, அவன் அனுப்பிய வண்டியில் சென்று, ஆதி இருந்த மேஜையில் அமர்ந்து, ஆதியை முறைத்தாள் சனாயா.

"நீ வரமாட்டாய் என்று நினைத்தேன்"...

"உண்மையில், நான் வந்திருக்கவே கூடாது தான், ஆனால் என்ன செய்வது... நான் வராவிட்டால், நீ இங்கேயே இருப்பாய் என்று தான் வந்தேன்", என்று மீண்டும் வெறுப்பாய் முறைத்தாள்.

"என் மீது அவ்வளவு அக்கறையா"...

"நீ எனது நண்பன், உன்னை வருத்தி பார்ப்பதை நான் விரும்ப மாட்டேன்"....

"ஆனால் அன்று, நான் உன்னை விட்டுவிட்டு சென்றேனே, செபாஸ்டியன் எஸ்டேட்டிர்க்கு"...

"அப்போது என்னுடன் பிரதாப் இருந்தார், இப்போது நான் வரவில்லை என்றால், யார் வருவார் என்று எனக்கு தெரியாது. நீதான் உன்னை பற்றிய விஷயம் எதையும் என்னிடம் கூறியது இல்லையே"... என்றாள் சனா

"உண்மையில் உனக்கு தான் என் மீது அக்கறை இல்லை, அப்படி இருந்திருந்தால் ஒரு பெண்ணாகிய என்னை, இந்த நேரத்திற்கு வந்தே ஆகவேண்டும், என்று அடம்பிடித்து இருப்பாயா", என்று அழுத்தமாக வினவினாள்….

"உன்னை பார்க்கும் வரை, எனக்கு எந்த பெண்களிடமும் நட்பு கிடையாது. எல்லாவற்றிற்கும் மேலாக, பெண்கள் மேல் சுத்தமாக நம்பிக்கை கிடையாது. பெண்கள் என்றாலே அலர்ஜி, அப்படியிருக்கையில் பெண்களின் பாதுகாப்பு பற்றி எப்படி சிந்திக்க தோன்றும். அதற்காக, உன் மீது அக்கறை இல்லை என்று கூறாதே"....

"இங்கே பாரு ஆதி, பெண்களையும், குருவையும், மதிக்காதவர்களால், இந்த உலகில் எதையும் சாதிக்க இயலாது. உன்னை பெற்ற அன்னையும் ஒரு பெண்தானே, அதை மறந்து விடாதே", என்றாள்.

"அதுதான் என் பிரச்சனை, என்னை ஏன் பெற்றார்கள்... வேண்டாவெறுப்பாக என்னை பெற்று, வளர்த்திய, அவரால்தான்... எனக்கு பெண்கள் மீது ஒரு நம்பிக்கையும், மரியாதையும், வரவில்லை. நான் மதிக்கும், நட்பாக பழகும், ஒரே பெண் நீதான் சனா"...

"ஆனால் நீ இப்படி நடந்து கொள்வதால், மற்ற பெண்கள் உன்னை தவறாக நினைக்கின்றார்கள், அதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை", என்றாள் சனாயா.

"சரி… நான் என்ன செய்ய வேண்டும் என்று நீயே சொல்"...

"மனிதர்களில் நல்லவர்களும் உள்ளனர், தீயவர்களும் உள்ளனர், அதேபோல்தான் பெண்களும்... ஒருவரை வைத்து, மற்றவர்களும் அப்படியே, என்று நினைப்பது மிகவும் தவறு. அதை புரிந்து கொள்" என்றாள் நிதானமாக.

"அப்படியானால், என் அன்னை தீயவர் தான்... அதனால் தான், நான் பெண்களை மதிப்பதில்லை. இனி உனக்காக மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறேன்" என்றான் முறுக்கிக்கொண்டு.

"அப்படி தவறாக எடுத்துக் கொள்ளாதே. ஒருவரின் சூழ்நிலை அவர்களை வேறு விதமாக நடந்து கொள்ளச் செய்கிறது, உன் அன்னை சூழ்நிலை காரணமாக அப்படி இருந்திருக்கலாம். நீ சிறு பிள்ளையாய், அப்போது இருந்ததால், அதை புரிந்துகொள்ள முடியாமல் போயிருக்கும். இப்போதுதான் நீ வளர்ந்து விட்டாயே, இனி அவர்களிடம் அன்பாக பேசி, அவரை புரிந்து கொள்ள முயற்சி செய்தால், எல்லாமே சரியாகிவிடும்" என்றாள், பொறுமையாக.

"கேட்கவெல்லாம் நன்றாகத்தான் உள்ளது. வேண்டுமானால் உனக்காக முயற்சிக்கிறேன்", என்று அவன் கூறினாலும், மனதில், ஏதோ ஒரு மூலையில் அவள் கூறியது சரி எனப்பட்டது.

"எப்போதும் குரங்கு போல இருப்பாயே, இன்று அழகாய் உள்ளாய்", என்று சகஜமாக பேச்சை மாற்ற முயற்சித்தான் ஆதி.

"நான் எப்போதும் அழகு தான்", என்று விளையாட்டாக இருவரும் பேசிக் கொண்டிருக்க, நேரமாவதை உணர்ந்து இருவரும் உணவுகளை ருசித்து விட்டு வீட்டிற்கு கிளம்பினர்.

'நம்மீது அக்கறை கொள்ளவும் ஒருத்தி உள்ளாள்', என்ற மகிழ்ச்சியில் ஆதி கிளம்பினான்.

சனாயாவும், அவள் வந்த காரில் ஏறி உள்ளே பார்த்தாள்….,

அதில் ரவிக்கு பதிலாக பிரதாப் இருந்தான்.

அவனை பார்த்த மகிழ்ச்சியில், "நீங்கள் எப்போது வந்தீர்கள்" என்று ஆனந்தமாய், சனா வினவ,

"சரியாக ஒரு மணி நேரம், நீ உள்ளே செல்லும்போதே வந்து விட்டேன்", என்று வேகமாக காரை ஓட்டினான் பிரதாப்.

"எனக்காகவா வந்தீர்கள்"...

"பின் யாருக்காக, இதுவே கடைசியாக இருக்கட்டும். இப்போது மணி பத்து, பதினெட்டு வயது பெண், இந்த நேரத்துக்கு வீடு திரும்பினால் உலகம் என்ன பேசும்"....

"அவர்களை விடு, நீ உன் வீட்டில் தனியாக உள்ளாய், கேட்க ஆளில்லை என்று எவரேனும் எதையாவது செய்து வைத்தால், என்ன செய்வது. கொஞ்சமாவது பொறுப்பாக நடந்து கொள். முடியவில்லை என்றால், பிரபாவுடன் ஹாஸ்டலில் இருந்து கல்லூரிக்கு செல். இதுபோன்று செய்து என் உயிரை வாங்காதே", என்று கடுமையாக பேசினான் பிரதாப்.

இதை கொஞ்சம் கூட எதிர்பாராத சனாயாவின் கண்களிலிருந்து, அருவி போல் தாரைதாரையாக கண்ணீர் சிந்தியது.

அதனை கண்டுகொள்ளாதது போல், "நான் திட்டுகிறேன் என்பதற்காக, என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல், வெளியே செல்லாதே. புரிந்து நடந்து கொண்டால் சரிதான்", என்றான்.

''நான் அப்படியெல்லாம் ஏமாத்த மாட்டேன்", என்று அழுதுகொண்டே கூறினாள் சனாயா.

சில நிமிடங்கல் அமைதியாக இருந்தவன், காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு, அவள் புறம் திரும்பினான்.

அவள் இன்னும் அழுது கொண்டிருப்பதைக் கண்டு வருத்தத்துடன், "உனக்காகத் தான் சனா, உன் நன்மைக்காகத்தான். உன்னை அழ வைத்ததற்கு மிகவும் சாரி", என்று கூறி, அவளது கையை அழுத்தமாக பிடித்தான்.

எப்போதும்போல இதையும் அவள் எதிர்பார்க்கவில்லை. சட்டென அவளது கைகளை, அவன் கைகளிலிருந்து விடுவித்துக் கொண்டு, "வீட்டிற்கு செல்வோம்" என்றாள்.

தொடரும்…..
 

banumathi jayaraman

Well-Known Member
போடா டேய் பிரதாப் போடா
ஹோட்டலுக்கு போறேன்னு சனா சொன்னால் போகாதேன்னு நீ சொல்லியிருக்கணும்
டிரைவருடன் காரையும் கொடுத்து அனுப்பி விட்டுட்டு அவளை திட்டுவாயா, நீயி?
அப்புறம் ஸாரி கேட்டால் ஆச்சா?
போடா டேய்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top