வண்ணங்களின் வசந்தம் -5

Advertisement

சுதிஷா

Well-Known Member
வண்ணம் 5 :


அபி “ஹேய் லூசு கண்டதை யோசிக்காதே அந்த ஓணான் ஒரு ஆளுன்னு அவ சொல்றதுக்கு நீ பீல் பண்ணிக்கிட்டு இருப்பியா ? ”.
சூரியா “ அவ சொன்னானு இல்ல டா, எனக்கு தீடிரென அவன் அப்படி சொல்லவும் என்ன பண்றதுனு தெரியாமல் அழுகை வந்துவிட்டது, நான் அழுவதை பார்த்து தான் மிஸ் அங்கு வந்து அதனால பிரச்சினை ஆகிடுச்சோனு ஒரு குற்ற உணர்ச்சியா இருக்கு”.
சூரியா “இதுல உன்னோட மிஸ்டேக் எதுவும் இல்ல,ரொம்ப உன்ன நீயே கன்பியூஸ் பண்ணிக்காத, இப்போ வா கிளாஸ் போகலாம்” என்று சொல்லி,வகுப்பிற்கு கிளம்பினர்.
பிரீத்தி சூரியாவின் கையை ஆதரவாக பற்றி கொண்டு முன்னே செல்ல, மற்ற மூவரும் அவர்களை பின்தொடர்ந்தனர்.
கிளாஸிற்க்கு வந்த ஆசிரியை “நாளை ஈவினிங் டூர் கிளம்பப் போகிறோம் இல்லையா சோ நாளைக்கு உங்களுக்கு ஸ்கூல் கிடையாது,அதனால ஈவினிங் நேரா ஸ்கூலுக்கே வந்திடுங்க. நான் ஆல்ரெடி உங்களுக்கு லிஸ்ட் கொடுத்தபடி தேவையான திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துருங்க எதையும் மறந்துடாதீங்க கிளைமேட் கூலா இருக்கும். சோ பி பிரிப்பேர்ட்” என்று கூறி சென்றுவிட்டார்.

நேற்று நடந்த கலேபரத்தில் டூர் விஷயத்தையே மறந்தவர்களுக்கு ஆசிரியர் சொல்லவும்தான் அதன் நினைவு வந்தது இருந்தாலும் அனைவரும் அமைதியாகவே இருந்தனர். அன்று மதியம் உணவு இடைவேளையில் கேன்டீனில் அமர்ந்திருந்தவர்கள் உணவை அலைந்து கொண்டிருந்தார்களே தவிர சாப்பிடவுமில்லை, எதுவும் பேசவுமில்லை………

அங்குள்ள அமைதியைக் கலைக்கும் பொருட்டு, பிரீத்தி “நாளைக்கு என்னென்ன திங்ஸ் எடுத்துட்டு வரணும் எல்லாம் எடுத்து வச்சுட்டீங்களா” என்று கேட்டாள்.அவளின் கேள்விக்கு அப்போதும் பதில் அளிக்காமல் அனைவரும் யோசனையுடன் அமர்ந்திருந்தனர்.
சூர்யாவோ “இல்ல நான் டூர் வரல” என்று கூற அனைவரும் அவளை அதிர்ந்து பார்த்தனர்.
அபிதான் முதலில் தன்னை சமாளித்து கொண்டு “என்ன சொல்ற இது ஏற்கனவே பிளான் பண்ணது தானே இப்போ என்னாச்சு” என்று கேட்க, அவளோ “இல்ல எனக்கு மனசு சரியா அதனால நான் இந்த டூருக்கு வரல”என்று பிடிவாதமாக மறுத்தால்.

சூர்யாவின் பேச்சில் கோபமுற்ற பூஜா “ஓகே நீ வரலலல்ல சரி நாங்களும் போகல” என்று கூற மற்றவர்களும் “ஆமா நாங்களும் போகமாட்டோம். நீயே போகலனும் போது நாங்க மட்டும் ஏன் போக வேண்டும். உன்னை தனியாக விட்டுட்டு போக எங்களுக்கு விருப்பம் இல்லை” என்று கூறியவர்கள் குரலே சொன்னது நாங்கள் சொன்னதை செய்வோம் என்று.

சூர்யாவோ “ஏன்டி இப்புடி பண்றீங்க சீரியஸாவே எனக்கு மனசு சரியில்லை. ஒரு மாதிரி கில்டி பீலிங்கா இருக்கு. ஐ குடின்ட் கம் அவுட் ஆப் தட் இன்சிடென்ட். பாவம் அந்தப் பையன் என்னால ஸ்கூல விட்டு போய் இருக்கான் அது அவனுக்கு பிளாக் மார்க் தானே” என்று வருத்தத்தோடு கூறினாள்.

சூர்யா சொல்வதை கேட்டு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை ஏற்பட்டது என்னவோ உண்மை. ஏதோ ஒரு ஆர்வ கோளாறில் செய்திருந்தாலும் இது போல் நடக்கும் என்று அவர்களும் எதிர் பார்க்காவில்லை அல்லவா. விளையாட்டு வினையானது இவர்கள் விஷயத்தில்.

பூஜா முதலில் தெளிந்தவளாக “லிசன் சூர்யா ஃபர்ஸ்ட் அந்த பையன் பண்ணது தப்பு ஸ்கூல் படிக்கிற டைம்ல லவ், ப்ரொபோஸ் இதெல்லாம் ஓவர். நம்ம பேரன்ட்ஸ் எவ்வளவு ஹோப் நம்ம மேல வச்சு இருப்பாங்க.அது மட்டும் இல்லாம ஸ்கூல் டைம் நம்ம என்ஜோய் பண்ற டைம்மே தவிர நம்ம லைப்ப நாமளே டிசைட் பண்ற வயசும் இல்லை, நமக்கு அந்த அளவுக்கு மெட்ச்சூரும் இல்லை. “ சி” நானும் சைட் அடிப்பேன் தான் ஆனாலும் இதுவரைக்கும் ப்ரோபோசல் லவ்வுன்னு பின்னாடி போய் இருக்கேனா” என்று கூற நடுவில் பூஜா பேச்சை இடைமறித்த மது “இல்ல நம்ம தான் அவளைப் போகவிட்டு இருக்கோமா” என்று சொல்ல அவளை முறைத்துப் பார்த்த பூஜா வாயை மூடு என்று சைகையில் செய்ய இது வழக்கம்தான் என்பது போல் அவளும் ஒரு தோள் குலுக்கலில் ஒதுக்கினாள்.

சூர்யாவின் முகம் அப்போதும் குழப்பத்திலேயே இருக்க, அபியை பார்த்த பூஜா 'நீ சொல்லு 'என்பது போல் கண்களாலேயே சைகை செய்ய,அதை புரிந்து கொண்ட அபியும் கண் மூடி திறந்து தனது சம்மதத்தை சொன்னவள் சூர்யாவிடம் “அவ சொல்வது சரிதானே சூர்யா இந்த வயசுல அவர் பண்ணதும் தப்புதானே. பனிஷ்மென்ட் கொஞ்சம் அதிகம்தான் அதுக்காக நீ பீல் பண்ண ஒன்னும் இல்லை.இன்னும் சொல்ல போனால் தவறு உன் மேல் இல்லை என்றுதான் சொல்லணும் அப்புறம் எதுக்கு கில்ட்டி பீலிங்.நீ யோசிக்கற மாதிரி யோசிச்சா தப்பு எங்க மேலதான் இருக்கு நாங்க என்னமோ நெனச்சு பண்ண போய் அங்க என்னென்னமோ நடந்து போச்சு. நாங்கள்தான் கில்ட்டி பீலில் இருக்கணும்” என்றால் வாட்டமான முகத்துடன்.

அபியின் பேச்சை கேட்ட சூர்யா “ஹேய் என்னடி சொல்ற எல்லோருமே சின்ன புள்ளைங்க,அவன் வருவதைப் பார்த்து ஏதோ ஒரு ஆர்வத்தில் பேச போனா ,அதை தப்பா பயன்படுத்தி கிட்டதனால தான் அவனுக்கு பிரச்சனை” என்று தோழிகளுக்காக அவர்களிடமே மல்லுக்கு நின்றாள்.

சூர்யாவின் பேச்சை கேட்ட ப்ரீத்தி “இப்போ புரியுதா நம்ம மேல எந்த தப்பும் இல்லை அதனால தேவையில்லாமல் யோசித்து உன்னுடைய குட்டி மூளை உருகும் முன்னாடி இப்போ எதுவும் நடக்கல ஜஸ்ட் ரிலாக்ஸ் என்று அதனிடம் சொல்லிவிடு” என்றாள் கிண்டலாக. அவளை முறைத்த சூர்யா “எப்பவும் விளையாட்டுதானாடி உனக்கு” என்று பல்லை கடிக்க, அவளோ “ஈஈஈ…….” என்று அசடு வழிந்தால்.

அப்போதும் சூர்யா ப்ரீத்தியை முறைத்து கொண்டு இருக்க இருவருக்கும் இடையில் வந்த பூஜா “அவளைபற்றி நமக்கு தெரிந்ததுதானே உன் டென்ஷனை டைவர்ட் பன்றளாம் அவளை விடுடி இப்போ டூர் விஷயத்துக்கு வா. , நம்ம ஸ்கூல்ல இப்போதான் நம்மல ஃபர்ஸ்ட் டைம் வெளியில கூட்டிட்டு போறாங்க. நம்ம ஏன் அதை மிஸ் பண்ணனும். எவ்வளவு ஹாப்பியா என்ஜாய் பண்ணனும்னு முதலில் பிளான் பண்ணுனமோ அவ்வளவு ஹாப்பியா என்ஜாய் பண்ணிட்டு வருவோம். இங்க வீடு ஸ்கூல் அந்த சர்க்கிள் குள்ள இருக்கிறது விட்டுட்டு லெட்ஸ் கோ அவுட் அண்ட் என்ஜாய்” என்று கூறி பட்டாம்பூச்சியாய் துள்ளி குதித்தாள்.

சூர்யாவை பாவமாக பார்த்த மதுவும் “ஆமாடி எங்க வீட்டிலேயே இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் வெளியில போக அலவ் பண்ணிருக்காங்க. ப்ளீஸ் டி நீ வரலைன்னா நான் கண்டிப்பா போக மாட்டேன்” என்று கூற மற்றவர்களும் அதையே அவளிடம் வலியுறுத்தினார்.

பின் சமாதானம் அடைந்த சூர்யா தனது நண்பர்களுக்காக “சரி போகலாம்” என்று கூறிவிட அவர்கள் அனைவரும் “ஹே” என்று கத்தினர். இவர்களின் கத்தலில் மொத்த கேன்டீனும் அவர்களை திரும்பி பார்க்க அதை எல்லாம் அவர்கள் கணக்கில் எடுத்துக்கொண்டால்தானே, ஆனால் அதே கேன்டீனில் இவர்களின் சந்தோஷத்தை பொறாமையுடன் பார்த்து கொண்டு இருந்தாள் யமுனா. “சிரிக்கறீங்களா சிரிங்க சிரிங்க எனக்கு ரொம்ப பிடித்த அண்ணாவை ஸ்கூல் விட்டு போக வச்சதுக்கு டூர்ல உங்களை நல்லா வச்சு செய்யறேன் வாங்க” என்று மனதுக்குள் கருவியவள் வேகமாக அங்கிருந்து சென்றிருந்தாள்.

மற்ற எதை பற்றியும் கவனிக்காத நம் பஞ்ச பாண்டாவிகள் குழு டூர்க்கான பிளானை ஆரம்பித்தது. முதலில் ப்ரீத்தி “அப்போ நாம நிறைய சாக்லேட்ஸ் வாங்கலாம், நான் அதை வச்சு வச்சு சாப்பிடுவேன்” என்று கூற மற்றவர்கள் அவளை முறைத்துப் பார்த்தனர். அவர்களின் பார்வையை அலட்சியம் செய்தவள் “அதுதான் போறதுன்னு முடிவாச்சு இல்ல அப்ப என்ன பொருள் எங்ககெங்க கிடைக்கும்னுதான் நாம யோசிக்கணும்” என்று கூற மது கூட “ஆமாம் செல்லம் என் இனமடா நீ என்று கூறி ஹைபை கொடுத்துக் கொண்டார்கள் .

அடுத்ததாக பூஜா “அப்பாடா ஒரு வழியா அடுத்த பிளான்க்கு வந்தாச்சு நாளைக்கு நான் அந்த எல்லோ டிஷர்ட் போட போறேன்” என்று சொல்ல மதுவோ “ஹே என்கிட்ட அந்த கலர் இல்லை” என்று ஆரம்பிக்க அடுத்த அரை மணி நேரமும் அவர்களின் உடை தேர்வு பற்றிய அலசலில் முடிந்தது. , அதன் பிறகு அன்றைய தினம் அவர்களுக்கு டூர் பிளானோடு முடிந்தது..

அடுத்த நாள் மாலை அனைவரும் பள்ளி வளாகத்திற்கு வந்திருக்க தோழிகள் நால்வரும் மது வருகைக்காக காத்திருந்தனர்.

அபி ப்ரீத்தியிடம் “என்னடி இன்னும் மதுவை காணோம்” என்று கேட்டுக்கொண்டிருக்க அவளோ “அவங்க வீடுதான் பெரிய குடும்பம் ஆச்சே போருக்கு போற மாதிரி எல்லோர் காலிலும் விழுந்து எழுந்து வீர திலகம் வச்சுட்டு, ஒவ்வொருத்தர் கிட்டயும் சொல்லிட்டு கிளம்பனும்ல அதுதான் லேட்டா இருக்கும் " என்று கூறினாள்.

அபியும் சிறு சிரிப்புடன் “ஆமா ஆமா இதுல அவயென்னவோ சின்ன குழந்தை மாதிரியும் எங்கேயாவது தொலைந்து போறமாதிரியும் கவனமாக இரு என்று சின்னத்தம்பி பிரதர்ஸ் அட்வைஸ் வேற பண்ணுவாங்க அது எல்லாத்தையும் கேட்டுட்டு பொறுமையா வருவா” என்று பேசிக் கொண்டிருக்கும்போது மது வீட்டு வேன் அந்த வளாகத்துக்குள் நுழைந்தது.

முதலில் வண்டியிலிருந்து இறங்கிய மதுவை கண்டு “ஹாய்” என கையை துக்கி நெருங்கியவர்கள், அவளின் பின்னால் இறங்கிய மொத்த குடும்பத்தையும் கண்டு அதிர்ந்து நின்றனர். இறங்கிய மொத்த குடும்பமும் மதுவை சூழ்ந்து கொண்டு மினி விக்ரமனின் படத்தையே ஓட்டிக் கொண்டிருந்தனர்.
அதை பார்த்த அபி ஆரம்பிச்சிட்டாங்கடா என்று சொல்ல அவள் அருகில் நின்ற பூஜா நாம இன்னைக்கு டூர் போகனும் என்று இன்னைக்கு என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்தாள். அதை கேட்ட பிரீத்தி “இங்கே நடக்கிறத பார்த்தால் வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை இன்னைக்கு நாம டூர் போறதுக்கு வாய்ப்பில்லை” என புலம்பினால்.
ஒரு வழியாக பாசை மழை பொழிந்து சின்னத்தம்பி பிரதர்ஸ் தங்கள் குடும்பத்தார்களை அழைத்துக் கொண்டு கிளம்ப, மது தன் தோழிகளை நோக்கி கையில் இரண்டு பேகுகளுடன் வந்தாள்.
மதுவின் கையில் இருந்த பைகளை குழப்பமாக பார்த்த சூர்யா “என்னடி இவ மூணு நாள் டூர்க்கு ரெண்டு பேக் எடுத்துட்டு வர்றா அதுவும் இவ்ளோ பெரிய பேக்” என்று யோசனையாக கேட்க அந்தப் பை எதற்கு என்று புரிந்துகொண்ட ப்ரீத்தி “எனக்கு புரிஞ்சு போச்சு எனக்கு புரிஞ்சு போச்சு” என்று குதுகல பட்டாள்.

ப்ரீத்தியின் குதுகலம் ஏன் என்று புரியாத மற்றவர்கள் குழப்பமாக பார்க்க அதற்குள் அவர்கள் அருகில் வந்து விட்ட மது “வாங்க வாங்க பஸ்ல ஏறலாம்” என்று கூறினாள். அவளைத் அடுத்த சூர்யா “எதுக்கு இந்த எக்ஸ்ட்ரா பேக்” என்று கேட்க அவளோ “எல்லாம் உன்னால தான் நீ மட்டும் முன்னாடியே நார்மலா இருந்திருந்தா நான் இன்னும் நிறைய வாங்கி இருப்பேன் இப்போ ப்ச்ச்ச்ச்…… எல்லாம் உன்னால தான்” என்று கூற சூர்யா என்னவென்று புரியாமல் விழித்தாள்.

மதுவின் பேச்சில் கடுப்பான அபி “அடியே எதுவா இருந்தாலும் கிளியரா சொல்லுடி குழப்பாதே” என்றாள். மதுவோ “ இல்லடி சூர்யா அப்செட்டா இருந்தாள் இல்லையா அதனால் டூருக்கு நான் அதிகம் ரெடி பண்ணலை. இவ ஓகே சொன்னதுக்கு அப்புறம் தான் நான் போயி கடை கடையாய் ஏறி ஸ்னாக்ஸ் வாங்கினேன் தெரியுமா அப்பவும் கூட இவ்வளவு தான் வாங்க முடிஞ்சது” என்று கையில் இருந்த பையை காட்ட அனைவருக்கும் அப்பொழுதுதான் ப்ரீத்தி ஏன் குதூகலப் பட்டாள் என்று புரிந்தது. தலையில் அடித்துக் கொண்டவர்கள் வந்து சேர் என்று கூறிவிட்டு பஸ்ஸில் ஏறினர்.

ப்ரீத்தி மதுவிடம் எல்லாத்தையும் வாங்கி இருக்கியா என்று கேட்க அவளும் எல்லாம் வாங்கி விட்டேன் என்று கூற இருவரும் சந்தோஷத்தோடு பஸ்ஸில் ஏறினார்.
மாலை சென்னையில் இருந்து கிளம்பியவர்கள் ஆட்டமும், பாட்டுமாகவே அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு மேட்டுப்பாளையம் வந்து சேர்ந்தனர்.அவர்களிடம் வந்த டூர் ஒருங்கிணைப்பாளர் “ஸ்டுடென்ட்ஸ் மேல ஊட்டிக்கு ஏற ஒன்பது பத்து மணி ஆகும்.யாருக்கும் பசியா இருந்தா போகும்போது சாப்பிட இங்க இருக்க ஹோட்டல்ல டிபன் வாங்கி வச்சுக்குங்க. இல்லை சாப்பிடுவதாக இருந்தாலும் சீக்கிரம் சாப்பிட்டு வந்துவிடுங்கள்” என்று கூறியவர் அனைவரையும் அங்கிருந்த ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்றார்.
சூர்யா மற்றும் பூஜா இருவரும் தங்களுக்கு புரோட்டா பார்சல் வாங்கி வாங்க என்க, அவர்களை பார்த்து ப்ரீத்தியும் மதுவும் “நைட் புல்லா டான்ஸ் ஆடிட்டு வந்தது பசிக்குது எங்களால் பசி தாங்க முடியாது நாங்கள் இப்போ சாப்பிடுறோம் அப்புறம் நீங்க சாப்பிடும்போது உங்களுக்கு கம்பெனி குடுக்க வேணா கொஞ்சம் சாப்பிடறோம்” என்று பெருந்தன்மையாக சொல்ல அவர்களைப் பார்த்து சிரித்த அபி “சரி எனக்கும் டீ குடிக்கணும் போல இருக்கு வாங்க போய் சாப்பிட்டு அவளுங்களுக்கும் வாங்கிட்டு வருவோம்” என்று மூவரும் பஸ்சைவிட்டு இறங்கி சென்றார்கள் .

ப்ரீத்தி , மது இருவரும் சாப்பிட இடம் பார்த்து அமர்ந்து கொண்டு அபியிடம் பூரி வாங்கி வர சொல்ல.அவளும் சரி என்றவள் தனக்கு டீயும் மற்ற இருவருக்கும் அவர்கள் கேட்டதையும் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்து தானும் அமர்ந்து டீ குடிக்க ஆரம்பித்தாள். அப்பொழுது அவர்கள் அருகில் அமர்ந்து காபி குடித்து கொண்டிருந்த யமுனா அவளது தோழிகளிடம் “சிலபேருக்கு எல்லாம் எப்படி தான் காலங்காத்தாலேயே சாப்பிட தோணுதோ அதுவும் ஆயில் ஃபுட் என்ன ஜென்மங்களோ” என்று இவர்களை ஜாடை பேச அபியோ மதுவிடம் “நல்லவங்களுக்கு தான் கல்லு கூட ஜீரணமாகும்னு உங்க பாட்டி ஒரு தடவை சொன்னாங்க இல்ல அது உண்மைதான். சில பேர் தண்ணி குடிச்சா கூட ஜீரணமாகாது. அதனாலதான் அது எல்லாம் ஓணான் மாதிரி சுத்திக்கிட்டு இருக்கு இதுல அடுத்தவங்களை கலாய்க்க வந்திடுது” என்று அபியும் திரும்பப் பதிலடி கொடுத்தால். .

அபியின் பேச்சில் கடுப்பான யமுனா “யாரப்பாத்து ஓணான்னு சொல்ற” என எகிறி கொண்டு வர, அவளை நக்கலாக பார்த்த அபி “நான் உன்னை ஒன்னும் சொல்லலையே ஏன் உனக்கு கோபம் வருது. ஒருவேளை நீ ஓணான் மாதிரி இருக்கேன்னு உனக்கே தெரியுது போல அதனாலதான் இப்படி வாலண்டியராக வந்து குதிச்சுட்டு இருக்க” என்று கேட்டவள் மதுவை பார்க்க அவளும் நக்கலாக யமுனாவை பார்த்து அதுதானே என்று கூறினாள்.அடுத்து வந்த ப்ரீத்தி அபியின் தோளில் கை போட்டு "வாடி தேவை இல்லாம பேசறவங்க கூட நமக்கு என்ன வேலை சூர்யாவும், பூஜாவும் நம்மல காணாம பஸ்ச விட்டு இறங்கி நிக்கறாளுங்க பாரு வாங்க பார்சல் வாங்கிட்டு போவோம் " என்று சொல்ல மற்ற இருவரும் வேறு எதுவும் பேசாமல் உணவை வாங்கிக் கொண்டு பஸ்ஸை நோக்கி சென்றனர்.

யமுனா கோபமாக அவர்கள் போவதையே பார்த்து கொண்டு இருக்க, அவளது தோழிகள் “விடுடி அவளுங்கள மேல போய் பாத்துக்கலாம் ரொம்ப ஓவராத்தான் ஆடுறாளுங்க” என்று சமாதானம் செய்ய யமுனாவும் “இந்த டூர் முடியறதுக்குள்ள இவங்கள ஏதாவது செய்யணும்” என்று மனதுக்குள்ளே வெஞ்சினம் கொண்டாள்.
ஊட்டி வந்து சேர்ந்தவர்களுக்கு பெரிய ஹோட்டல் ஒன்றை மாணவர்கள் தங்க ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆசிரியர்கள் அவர்கள் தங்குவதற்கான அறையை பிரித்து கொண்டு இருந்தனர். அப்போது நம் ஐவர் குழு தங்கள் அனைவருக்கும் ஒரே அறையை கேட்க ஆசிரியரும் அவர்கள் அனைவருக்கும் ஒரே அறையை ஒதுக்கினார்.ஐவரும் மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்து கொண்டு ஓடினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு.

அறைக்குள் வந்தவர்கள் தங்களது உடமைகளை பத்திர படுத்திவிட்டு அப்படியே அங்கிருந்த படுக்கையில் “தொப்பென்று” விழுந்திருந்தனர்.

அவரவர் அறைக்கு சென்ற மற்ற மாணவர்கள் அனைவரும் தங்களை சுத்தம் செய்து கொண்டு ஆசிரியர்கள் சொன்ன நேரத்திற்கு பேருந்து அருகில் வந்தனர் . ஆனால் நமது ஐவர் குழு மட்டும் அங்கு ஆஜராகவில்லை..

அவர்களது அறையில் சூர்யா மற்ற நால்வர் இடமும் கிளம்ப சொல்லி போராடி கொண்டு இருந்தாள். “அடியே சீக்கிரம் கிளம்புங்க எல்லாரும் அங்கு வந்து இருப்பாங்க” என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தாள். அப்பொழுதுதான் உறக்கம் கலைந்து அமர்ந்த பூஜா “அதுக்குள்ள கிளம்பனுமா” என்று புலம்பியவள் படுக்கையை விட்டு எழ மனம் இல்லாதவளாக மறுபடியும் குப்புறக் கவிழ்ந்து தூங்கப் போக அவளது இடுப்பில் எட்டி உதைத்தாள் சூர்யா.

கட்டிலிலிருந்து கீழே விழுந்த பூஜா “அடியே எதுக்குடி என்னை உதைச்ச” என்று கோபமாக கத்த சூர்யாவோ அவளை பார்த்து முறைத்துக்கொண்டே “இங்க ஒரு மனுஷி லேட்டாயிடுச்சுனு கத்திகிட்டு இருக்கேன் நீ தூங்க போறியா ஒழுங்கா எந்திரிச்சு போய் குளிச்சிட்டு வா என்று மிரட்ட பூஜாவோ “ஊட்டி குளிரில் யாராவது குளிப்பார்களா பத்து நிமிஷம். மேக்கப் மட்டும் போட்டு கிளம்பி வரேன் ” என்றவள் வேகமாக எழுந்து கிளம்ப சென்றுவிட அபி தயாராகி வந்து சூர்யா அருகில் அமர்ந்தாள்.

மது மற்றும் ப்ரீத்தி இருவரும் போகும் வழியில் தேவைப்படும் என்று தின்பண்டங்களை எடுத்து அடுக்கிக் கொண்டிருக்க ஒரு வழியாக அனைவரையும் சமாளித்து இழுத்துக்கொண்டு ஆசிரியர் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தாள் சூர்யா.

வண்ணங்கள் தொடரும்....
 

சுதிஷா

Well-Known Member
ஸ்கூல் டூர் மறக்க முடியாத
அனுபவம்
அருமையான பதிவு
ஆமாம் சிஸ் ஸ்கூல் லைப் மறக்க முடியாத லைப்தான். அதை எங்கள் படைப்பு உங்களுக்கு நினைவு படுத்தினால் அதுதான் எங்களின் வெற்றி. நன்றி சிஸ் :love::love:
 

சுதிஷா

Well-Known Member
அருமையான பதிவு..பள்ளி காலத்திற்கே அழைத்து சென்று விட்டனர் பஞ்ச பாண்டவிகள்...
நன்றி சிஸ். பஞ்ச பண்டாவிகளை தொடர்ந்து தட்டி கொடுங்கள் :love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top