வண்ணங்களின் வசந்தம்-29

Advertisement

சுதிஷா

Well-Known Member
received_319215106450367.jpeg

அத்தியாயம்-29

தோழிகள் ஐவரின் வாழ்க்கையும் எப்போதும் போல் எந்த சலனமும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. ஆனால் மதுதான் பிரபாவிடம் சிக்கி முழி பிதுங்கி போய் சுற்றி கொண்டிருந்தாள்.

ஆம், ஒவ்வொரு நாளும் பிரபா அவள் படிப்பில் முழு கவனம் செலுத்த வைத்தான்.தன் வீட்டில் படிப்பிற்கு முக்கியத்துவம் இல்லாமல் செல்லம் கொடுப்பத்தால் ஏதோ தோழிகளோடு இருக்க ஆசைப்பட்டு கல்லூரியில் சேர்ந்தவளுக்கு அவர்களை ஏமாற்றுவதும் எளிதாகவே இருந்தது.

ஆனால் பிரபா தினமும் மாலை ஹோட்டலில் இருந்து வருபவன் குடும்பத்தினரிடம் எப்போதும் போல் சிறிது நேரம் செலவழித்துவிட்டு, மதுவிடம் கல்லூரியில் நடந்த விஷயங்களை கேட்டு தெரிந்து கொண்டு படிக்க வைப்பது அசைமென்ட் எழுத வைப்பது என்று அவள் தோழிகளுக்கு வாக்களித்தது போல் பொறுப்பான கணவனாக நடந்து கொண்டான்.

மதுவோ “அட பாவி கொடுமைபடுத்தறானே, எழுது, படினு எவ்வளவு நேரம் நானும் இந்த புக் கூட போராடறது. இவனால யாரும் முகம் குடுத்து என்கூட பேசமாட்டிக்கிறாங்க, அங்கயாவது பாட்டி இருப்பாங்க ஏதாவது பேசி வாம்பிழுத்துக்கிட்டு சுத்துவேன் இங்க அதுவும் முடியாது, மாமியார் என்னடானா என்னை வில்லி மாதிரி பாக்குது மாமா கண்டுக்கரதே இல்லை அந்த பாட்டி மூஞ்ச திருப்பிக்கிட்டு போகுது” என்று பெரு மூச்சு விட்டாள்.
ஆம்,கல்யாணத்துக்கு பிறகும் பொம்பள புள்ளைக்கு எதுக்கு படிப்பு என்று முணுமுணுத்த தாயையும் குடும்பத்தினரையும் சமாளித்து தான் மதுவை கல்லூரிக்கு அனுப்பிக்கொண்டு இருக்கிறான் அவள் கணவன்.இதனாலேயே கோபம் கொண்ட அவன் தாய் பிரபா இல்லாத சமயம் அவளை திட்டி கொண்டும் ஜாடை பேசி கொண்டும் சுற்றுவார்.

இதுபோன்ற நிலைமையில் தான் ஒரு ஞாயிறு அன்று பிரபா தூங்குவதை கண்டு “ஹப்பாடா” என்ற உணர்வோடு டிவி பார்த்துக் கொண்டிருந்தாள் அப்போது அங்கு வந்த பிரபாவை பார்த்தவள் “ஹயையோ எழுந்துட்டாரா வந்தவுடனே பல்லு கூட விலக்காம அசைமென்ட்பத்தி கேப்பாறே அடியே மது அவரு பாக்கறதுக்கு முன்னாடி அப்படியே அலுங்காம ஓடிரு அதுதான் உனக்கு சேப்” என்று நினைத்தவள் எழுந்து ஓட முயற்சித்தாள்.

அப்போது அவளை நிறுத்திய பிரபா “எங்க போற போய் கிளம்பி வா வெளிய போகணும்” என்றான்.உடனே மது ஆர்வமாக “வெளியேவாங்க எங்க போறோம்”என்று கேட்க, அவளை முறைத்தவன் “எங்கன்னு சொன்னாதான் கிளம்பி வருவியா போ போய் சீக்கிரம் கிளம்பற வழிய பாரு நானும் ரெடி ஆகாறேன்”என்று சொல்லி சென்றுவிட்டான்.

மதுவோ “சரி எங்க போனா என்ன வெளிய போறோம் ஹையா ஜாலி” என்று குதித்து கொண்டு சென்றவள் புடவை கட்டி புல் மேக்கப்பில் வெளியே வர, அங்கு பிரபாவோ சாதாரண டி ஷர்ட், நைட் பேண்ட்டுடன் நின்றிருந்தான்.

மது, “என்னங்க வெளிய போலாம்னு சொல்லிட்டு இப்படி நிக்கிறீங்க. நானே கிளம்பிட்டேன் பாருங்க போங்க போய் கிளம்பிட்டு வாங்க” என்க, அவளை மேலும் கீழுமாக பார்த்த பிரபா “என்ன இது இப்போ நாம கல்யாணத்துக்கா போறோம் புல் மேக்கப்ல வந்துருக்க, போய் நார்மலா டிரஸ்பண்ணிட்டு வா இங்க பக்கத்துலதான் போறோம்”என்றான்.
மது, “என்னது பக்கத்துலயே இதை முன்னாடியே சொல்றதுக்கு என்ன கெளம்பி வானா இப்படிதான் கிளம்பி வருவாங்க” என்று முணுமுணுத்து கொண்டே சென்றவளின் குரலை கேட்ட பிரபாவின் இதழ்கள் சிரிப்பில் விரிந்தது.

சற்று நேரம் கடந்து ஜீன்ஸ் டாப் அணிந்து வந்தவளின் கண்களை மூடியவாறே வெளியே அழைத்து செல்ல, இவளோ “என்னங்க இது கண்ணை மூடினா நான் எப்படி நடக்கறது” என்க, அவனோ “நான் இருக்கேன்ல கூட்டி போறேன் வா” என்று வழி சொல்லி அழைத்து சென்றவனின் கரங்களின் மேல் தன் கரங்களை வைத்தவள் “ஏங்க அத்த பார்த்தா எதுவும் சொல்ல போறாங்கங்க நானே வரேன் விடுங்க” என்றாள் தயக்கத்தோடு.

பிரபா, “அவங்க எல்லாம் ஒன்னும் சொல்லமாட்டாங்க, அப்படியே சொன்னாலும் நான் பார்த்துக்கறேன் நீ வா” என்று அழைத்து சென்றவன் வாசலிற்கு அழைத்து சென்ற பின்பே கையை எடுத்தான்.
அங்கு வாசலில் புத்தம் புது ஸ்கூட்டி நின்றிருப்பதை கண்டவுடன் அவளுக்கு இன்ப அதிர்ச்சி ஆகிவிட்டது. முகம் விகசிக்க அந்த வண்டியை சுற்றி வந்தவள், தன் புகுந்த வீட்டு மக்கள் அனைவரும் அங்கு இருப்பதை மறந்து சந்தோஷமிகுதியில் கணவனை அணைத்துக் கொண்டவளின் இதழ்கள் “ரொம்ப தேங்க்ஸ்ங்க”என்ற வார்த்தையையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தது.

பிரபா மாடியில் இருந்து வருவதைக் கண்ட ஹாலில் குழுமியிருந்த அவன் குடும்பத்தினர் அனைவருமே அவர்கள் பின்னோடு வெளியில் வந்திருந்தனர். குடும்பத்தினரின் பார்வை தங்களில் இருப்பதை உணர்ந்த பிரபா அவளைத் தள்ளி நிறுத்தி “காலேஜ்க்கு தனியா ஸ்கூட்டில போக ஆசைனு சொன்னல, இது உன்னோட வண்டி இந்தா சாவி” என்று சாவியை பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தவன் “சந்தோஷம்தானே வா வந்து ஓட்டு” என்று கூற அவள் மாமியாரோ “பொம்பள பிள்ளைக்கு எதுக்கு இப்ப இதெல்லாம் நம்ம வீட்ல இல்லாத காரா அதுல போயிட்டு வந்தா ஆகாதா”என்று சொல்ல, மதுவின் முகம் வாடி போனது. அதை கண்டவன் அவள் கைகளை ஆறுதலாக பற்றி சமாதானமாக கண்களை மூடி திறந்தவன் தாயின் புறம் திரும்பினான்.

பிரபா, “என்னம்மா இப்படி சொல்றீங்க இதெல்லாம் தெரிஞ்சுகிறது ஒரு அவசரத்துக்கு நல்லதுதானே அதுவுமில்லாம இது அவளுக்கு புடிச்சிருக்கு விடுங்க” என்று மனைவிக்கு சாதகமாக பேசியவன் “நீ வண்டிய ஓட்டு” என்று கூற அவளோ கைகளை பிசைந்தவாறு திருதிருவென விழித்தபடி நின்றாள்.

பிரபா, “என்ன முழிக்கிற போய் வண்டியை ஓட்டு” என்று மறுபடியும் கூற அவளோ தயங்கியபடியே “இல்லங்க எனக்கு வண்டி ஓட்ட தெரியாது” என்க,அங்கிருந்த அனைவரும் அவனை நக்கலாக பார்த்து “இதுக்குதான் புது வண்டியா” என்பதுபோல் நிற்க, அவனோ “சரி பரவால்ல பழகிக்கலாம் வா நான் உனக்கு சொல்லி தரேன்” என்று கூறியவன் அவளை அவர்கள் வீட்டின் பின்னால் இருந்த ஒரு பெரிய கிரவுண்டுக்கு அழைத்து சென்றான்.

பிரபா, “ஓகே நான் சொல்றதை கவனமா கேட்டுக்கோ,கையை ஆட்டாம, பயப்படாம ஒட்டு ” என்றவன் வண்டியில் அவளை உட்கார வைத்து பின் புறம் அவளை நெருங்கி அமர்ந்து சொல்லி தர, மதுதான் அவன் நெருங்கி அமர்ந்ததிலும், சூடானா மூச்சு காற்று தோளில் படவும் படபடப்பாக உணர்ந்து தடுமாறி போனாள்.

இதனால் கவனம் சிதறி சரியாக ஒட்டாமல் கீழே விழ போக உடனே பேலன்ஸ் செய்து வண்டியை தாங்கி பிடித்தவன் மதுவை பார்க்க அவளோ முகம் சிவந்து, கண்ணில் படபடப்புடன் நின்றிருந்தாள்.

அவள் முக சிவப்பை குழப்பமாக பார்த்தவன் “என்ன ஆச்சு”என்று கேட்க, அவளோ எதுவும் சொல்லாமல் கண்களில் அலைப்புறுதலுடன் நின்றிருக்க, விழி மொழியில் அவளின் தடுமாற்றத்தை கண்டு கொண்டவனிற்கு ஏனோ அவள் மீது கோபம்தான் வந்தது.

பிரபா, “என்ன மது இது வண்டி ஓட்டணும்னு ஆசை இருந்தால் மட்டும் போதாது கத்துக்கணும்ங்கற ஆர்வமும் இருக்கணும், அப்படி ஆர்வம் இருந்தால்தான் மற்ற எதுலயும் கவனம் போகாது” என்று கடிய.

மது, “டேய் ஓவர் பொறுப்பானவனே இப்படி பக்கத்துல வந்து ஒட்டி ஒரசிட்டு இருந்தா நான் எப்படிடா வண்டி ஓட்டறதுல கவனம் வைக்க முடியும் பண்றதையும் பண்ணிட்டு, பச்ச புள்ளைய எப்படி திட்டறான் பாரு” என்று மனதில் திட்டினாலும் வெளியில் அப்பாவி பிள்ளையாக முகத்தை வைத்திருக்க,அதை கவனித்த பிரபா “சரி சரி வா ஒழுங்கா வண்டி ஓட்டு யாரையும் எப்பவும் எதிர் பார்த்து இருக்கணும்னு நினைக்க கூடாது சரியா”என்றுவிட்டு மீண்டும் சொல்லி தர ஆரம்பிக்க மதுவும் “ஓகே கவனம் மது கவனம், ஒழுங்கா ஓட்டு. இவனை……” என்று பல்லை கடித்தவள் “கவலைபடாத மது ஒரு நாள் இல்லை ஒரு நாள் அவன் உன்கிட்ட சிக்குவான்ல அப்போ வச்சி செஞ்சுரு”என்று தனக்கு தானே சொல்லி கொண்டவள் அவனிடம் நல்ல பிள்ளையாக “சரி” என்று தலையாட்டினாள்.

அதன்பின் பிரபா சொல்லி தர தட்டுத்தடுமாறி ஓட்டியவளை தினமும் மாலை பொழுது ஒரு மணி நேரம், அல்லது ஞாயிற்று கிழமை அழைத்து சென்று சொல்லி தர போக போக ஓரளவு நன்றாக ஓட்ட கற்றுக்கொண்டார். அதைப்போல் அவன் உடனடியாக காரும் ஓட்ட கற்று தர வர, “ஹையையோ.. “ என்று அலறியவள் “என்னால் எல்லாம் இது ஓட்ட முடியாது” என்க,

அவள் கணவனோ “அது எல்லாம் முடியாது நீ ஓட்டிதான் ஆகணும்” என்று கட்டாயப்படுத்தி அவனுக்கும் அன்று விடுமுறை தினம் என்பதால் நாள் முழுக்க சொல்லி தர அவளும் முடிந்த அளவு அவன் கூறியவற்றை சரியாக கேட்டு கற்றுக் கொண்டவள் தனியாக ஓட்டும் அளவிற்கு முன்னேறி இருந்தாள்.

அவள் கார் ஓட்டி பழகிய பிறகு அவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் மதுவே காரை ஓட்டி சென்றாள்.இது அவளுள் பல நாட்களாக இருந்த ஏக்கத்தை சரி செய்தது போல் இருக்க மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தவள் கணவனை அணைத்து “ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ங்க”என்று விடுவிக்க, அவனோ மென்மையாக சிரித்து “பிராப்ளம் இல்ல வா” என்று வீட்டிற்கு அழைத்து வர அங்கு அவரது வீட்டினர் கோபமாக அமர்ந்து இருந்தனர்.

பிரபா, மது வீட்டிற்குள் வர குடும்பத்தினரின் முகத்தில் இருந்த கோபத்தை உணர்ந்தாலும் அதை சற்றும் கண்டு கொள்ளாமல் அறைக்கு செல்ல முயன்றவனை தடுத்த அவனது தாய் “என்னடா இது நீங்க பாட்டுக்கு போறீங்க வரீங்க இங்க என்ன தான் நடக்குது.அவ வீட்ல இருக்கறதே இல்ல பகல்ல படிக்கறேன்னு காலேஜ்க்கு போய்டறா, சாயந்தரம் ஆனா ரெண்டு பேரும் ஜோடி போட்டுக்கிட்டு போய் ஊர் சுத்திட்டு வர்றீங்க இப்படி இருந்தா அவ எப்போ நம்ம குடும்ப பழக்க வழக்கத்தை கத்துக்கறது” என்று கேட்க,அவனோ “என்னமா நீங்க அது எல்லாம் இப்போவே சொல்லி கொடுத்தாதானா அதை எல்லாம் எப்போவேணா கத்துக்கலாம், எது முதல்ல அவசியமோ அதைதான் சீக்கிரம் கத்துக்கணும், பாருங்க தினமும் யாரவது ஒருத்தர் மதுவை காலேஜ்ல கொண்டு போய் விட்டுட்டு வர வேண்டி இருக்கு ஆனா இப்போ அவளே தனியா போய்டுவா அது மட்டும் இல்லாம ஏதாவது அவசரம்னா வீட்ல இருக்க ஒருத்தற்கு கார் ஓட்ட தெரியறது அவசியம் இல்லையா அதான் அவளுக்கு கார் ஓட்ட சொல்லித்தர போயிருந்தேன் இதுல என்ன பிரச்சனை” என்று கேட்க,

அவன் தாயோ “இதுல என்ன பிரச்சனையா வீட்டு மருமக ஞாயிற்றுக்கிழமை கூட எந்த வேலையும் பாக்காம புருஷன் கூட ஊர் சுத்திக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்” என்றார் கோபமாக.

பிரபா, “என் கூட தானே சுத்துனா இதுல என்ன உங்களுக்கு பிராப்ளம் அவளுக்கு பிடிச்ச விஷயத்தை செய்யறது கணவனா என்னோட கடமை அதைதான் நான் செய்யறேன் இதுல உங்களுக்கு என்ன கஷ்டமா இருக்கு” என்று எதிர்க்கேள்வி கேட்டான்.

மகனின் பதிலை கேட்டு அதிர்ச்சியான அவன் தாய்,இதுவரை தன்னை எதிர்த்து பேசாத தன் மகன் இவ்வாறு பேசவும் கோபம் வர பெற்றவராய் அவன் அருகில் சென்றவர் “உன் பொண்டாட்டி வந்ததுக்கப்புறம் நீ ரொம்ப மாறிட்டடா”என்று கூற,

அவனோ “நான் மாறலம்மா, என்னோட பொண்டாட்டியோட விருப்பத்தை நிறைவேத்தி வைக்கறேன்.அவளோட சந்தோஷமும் எனக்கு முக்கியம். யாரும் என்னை மாத்த முடியாது அப்படி மாத்த நான் ஒன்னும் சின்ன குழந்தையும் இல்லை.இவ்வளவு பெரிய பிசினஸ் பண்றேன் எது எப்ப பண்ணனும்னு எனக்கு தெரியாதா, மத்தவங்க சொல்லிதான் அதை நான் செய்வேனா அவள முதல்ல மருமகளா பார்க்கறத விட்டுட்டு உங்க மகள் மாதிரி பாருங்க அப்ப இதெல்லாம் தப்பா தெரியாது” என்று கூறியவன் அங்கு திகைத்து நின்று கொண்டிருந்த தன் மனைவியை இழுத்துக் கொண்டு தன் அறைக்கு செல்ல அவளோ அவன் இழுத்த இழுப்பில் சுயம் பெற்றவள் அவன் பின்னாலேயே சென்றாள்.

அறைக்குள் வந்தவன் அவளிடம் “சாரி மதுமா அவங்க கொஞ்சம் அப்படித்தான் வயசானவங்க இல்லையா”என்று கூற அவனை தாவி அணைத்துக் கொண்டவள் “சாரி எல்லாம் சொல்லாதீங்க பரவால்லை அத்தைதானே அவங்ககிட்ட எனக்கு பதிலா நீங்கதான் பதில் சொல்லிடீங்களே” என்றவள் மேலும் “ரொம்ப தேங்க்ஸ்ங்க எனக்காக உங்க வீட்ல இருக்கவங்ககிட்ட பேசி இருக்கீங்க”என்று கூற, அவள் பேச்சை இடை நிறுத்தியவன் “உங்க வீடு இல்ல,நம்ம வீடுனு சொல்லிப் பழகு,அவங்களுக்கு சொன்னதுதான் உனக்கும் நம்ம வீடுன்ற எண்ணம் உனக்கும் இருக்கணும் அப்புறம் என்னோட அம்மாவ உன்னோட அம்மாவா பார்க்கணும்” என்று சொல்ல அவளும் தலையை ஆட்டி கேட்டு கொண்டாள்.அதன்பின் மது தன் ஸ்கூட்டியிலேயே தனியாக கல்லூரிக்கு செல்ல துவங்க தோழிகள் அனைவருக்குமே அது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில்தான் ஜனா திருனேஷ் படிப்பை முடித்த உடனேயே கல்லூரியின் பொறுப்பை எடுத்துக் கொள்வான் என்று அறிந்தவராக,அவன் படிப்பு முடிவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே மற்ற ஷேர் ஹோல்டர்களை சந்தித்து தன் பெயரில் அவர்களுடைய ஷேரை வாங்கும் வேலையில் இறங்கினான்.

ஜனாவின் செயல்களை அவன் அறியாமல் தன் கண் பார்வையிலேயே வைத்திருந்த திருனேஷ் அர்ஜுனுடன் சேர்ந்து தங்களது படிப்பு முடிவதற்கு முன்பாகவே அனைத்து ஷேர்களையும் தன் பெயருக்கு மாற்றும் முயற்சியில் இறங்கினர்.

இங்கு மதுவை அவளது மாமியார் இருவரையும் கோவிலுக்கு சென்று வர சொல்ல அவளும் “சரி” என்று தலை ஆட்டியவள் பிரபாவிற்கு அழைத்து கூற அவனோ வேலை இருப்பதாக கூறி அவளை கிளம்பி ஹோட்டலுக்கு வருமாரும் அங்கிருந்து இருவரும் கோவிலுக்கு செல்லலாம் என்றும் கூற,

அவளும் தன் மாமியாரிடம் இதை தெரிவித்தவள் வண்டியை எடுத்துக் கொண்டு ஹோட்டலை நோக்கி வண்டியை செலுத்தினாள்.

ஹோட்டலுக்கு வந்தவளை வரவேற்ற பிரபா “கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு வேலை இருக்கு அதை முடிச்சுட்டு போகலாம்” என்று சொல்ல அவளும் “சரி” என்றுவிட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க அப்போது அவள் முன்னாள் வந்து வைக்கப்பட்டது ஒரு ஐஸ்கிரீம். அதை எடுத்து ரசித்தவள் உண்டவள் மேலும் நேரம் ஆகவும் போர் அடிப்பது போல் உணர்ந்தவள் பிரபாவை பார்க்க அவனோ தீவிரமாக லேப்பை பார்த்து ஏதோ செய்து கொண்டு இருந்தான்.

அவனை டிஸ்டப் செய்ய விரும்பாதவள்,ஹோட்டலை சுற்றி பார்த்துவிட்டு வரலாம் என்று வெளியே வந்து அப்படியே ஒரு சுற்று சுற்றிவிட்டு கடைசியில் கிச்சனுக்கு வந்து சேர்ந்தாள்.அங்கு உணவுகள் தயாரிப்பதை பார்த்துக் கொண்டிருந்தவளின் மனதில் புதிதாக ஒரு டிஸ் தோன்ற அதை செய்ய நினைத்தவள் அங்கிருந்த ஷெப்பிடம் தான் ஒரு புது டிஸ் செய்வதற்கான அனுமதியைக் கேட்க அவரும் முதலாளி கேட்டு மறுப்பதா என்று விலகி நின்றார்.

எளிமையாகவும் சுவையாகவும் முட்டையை வைத்து மசாலா எல்லாம் சேர்த்து வித்தியாசமா சுவையில் செய்து அங்கிருந்தவர்களிடம் டேஸ்ட் செய்ய கொடுக்க அவர்கள் அனைவரும் அதை சாப்பிட்டு பார்த்து பிரமாதமாக வந்திருப்பதாக பாராட்டி கொண்டிருக்க, அது மனைவியை தேடி வந்த பிரபாவின் காதிலும் விழுந்தது.

மனைவியின் திறமையை அறிந்து கொண்டவன் அவளை மனதிலேயே மெச்சி கொண்டு “சோ மேடமுக்கு புட் லைன்லதான் இன்ட்ரஸ்ட் அதிகமா இருக்கு”என்று மனதில் குறித்து கொண்டவன், பின் எதுவும் அறியாதவன் போல் உள்ளே சென்று அவளை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் கிளம்பினான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top