வடை விரும்பிகள்

Advertisement

SahiMahi

Well-Known Member
வடை


இது படுத்தும் பாடு இருக்கே..
அப்பப்பா!
உணவுகளில் இது வட்ட வடிவ அரக்கியே
பார்த்தவுடன் உணர்வுகளை தூண்டி விடும் அரைக்கியே

எப்படி இருந்தாலும் எல்லோரையும் ஜொள்ளு விட வைப்பாள் தன் பொன்னிற மேனியால்
வடை என்றழைக்கும் மொறு மொறு மேனியாள்

வெறும் வடை விற்றே வீடு கட்டியவர் பலருண்டு
வடை மட்டுமே காலை சிற்றுண்டி ஆகிறது பலர் உண்டு

தேநீர்க் கடைகளின் இன்றியமையாத சகோதரி
வடை எனும் போண்டா மற்றும் பஜ்ஜி போன்ற பலகாரங்களின் சக உதிரி

இட்லிக்கு இசைந்த இணையாள்
பொங்கலுக்கு பொருத்தமான இல்லாள்

அப்போதுதான் எண்ணைக் குளியல் எடுத்திருக்கும் வடைக்கு ஒரு ரசிகர் மன்றமே உண்டு
ஒரு செய்தித்தாளில் அவளை மடித்து எண்ணையை வடித்து அவளை சுவைப்போர் இங்கு லட்சம் பேர் உண்டு

அரைத்த உளுத்தம் பருப்புடன் கொஞ்சம் மிளகாயும், கொத்து மல்லியும் சேர்ந்து நடுவில் சிறு ஓட்டையுடன் வெந்து வெளியே வரும் அதிசய விஷ்ணு சக்கரம்
வடை எனும் தின்ன தின்ன திகட்டாத
ஏகாந்த பலகாரம்

தனி ஆளாகவும் ஜொலிப்பாள்
கூட்டு சேர்ந்தும் கெலிப்பாள்
ஒரு சட்னி போதும் இவளை ருசிக்க
ஒரு சாம்பார் போதும் இவள் ரசிக்க

மெத்தென இருக்கும் மெதுவடை
மசாலா சேர்த்தால் மசால் வடை
ரசத்தில் இட்டால் ரசவடை
சாம்பாரில் குளித்தால் சாம்பார் வடை
கீரை சேர்க்க கீரவடை
வாழை பூவுடன் வாழைப்பூ வடை..
அப்பப்பா இன்னும் எவ்வளவோ !

வடைதான் உலகின் எந்த மூலையிலும் அதிகம் உண்ணப்படும் உணவாம்
சொல்கிறது The Food and Recipes எனும் பத்திரிக்கை..

வேறென்ன வேண்டும் இவளுக்கு இதைவி(வ)ட..

நாங்கள் வடை விரும்பிகள்.. நீங்கள்
 

Ivna

Active Member
அப்பப்பப்பா ...
உண்மை தான்....
வாசிக்கும் போதே நாவில் எச்சில் ஊறுகிறது....
நானும் வடை பிரியர் தான் ....அதுவும் நானே ரசித்து வடை செய்து ருசித்து உண்பேன். ..
நேற்று தான் வாழைப்பூ வடை செய்தேன்...இதை போது மறுபடியும் வடை சாப்பிட ஆசை வந்துவிட்டதே!!!
 

Geetha sen

Well-Known Member
நானும் தான் நீங்க சொன்னதை பார்த்ததும் இன்று மாலை சிற்றுண்டிக்கு வடைதான்:love::love::love:
 

Saroja

Well-Known Member
அந்த வடையில கொஞ்சம்
வெங்காயம் சேர்த்து
அடடா
வெண்பொங்கல் செய்யும்
போது வடை இல்லைனா
வரும் பாருங்க ஒரு கோபம்
 

SahiMahi

Well-Known Member
இதுவரை கேள்விப்பட்டதில்லை..முடிந்தால் செய்முறை விளக்கம் அளியுங்கள்..நானும் ட்ரை செய்து பார்க்கிறேன்
 
மரவள்ளி கிழங்கு வடை அருமையாக இருக்கும். வடைகளின் ராணி இவள்
இதுவரை கேள்விப்பட்டதில்லை..முடிந்தால் செய்முறை விளக்கம் அளியுங்கள்..நானும் ட்ரை செய்து பார்க்கிறேன்
மரவள்ளி கிழங்கு - 1/2கிலோ
பட்டாணி பருப்பு - 100கிராம்
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 6 பல்
வரமிளகாய் - 2
பச்சமளகய் - 2
சோம்பு - 1ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1கப்
நறுக்கிய கொத்தமல்லி இழை
எண்ணெய் - பொரிப்பதற்கு

பட்டாணி பருப்பை ஊற வைத்து கொள்ளவும். மரவள்ளி கிழங்கை தோல் நீக்கி சுத்தம் செய்து கேரட் துருவியில் துருவி கொள்ளனும்.(கொஞ்சம் கஷ்டமான வேலை தான் பொறுமை தேவை) கிழங்கை தண்ணீர் விடாமல் அரைத்து தனியாக வைக்கவும். பட்டாணி பருப்பு இஞ்சி பூண்டு வரமிளகாய் ப.மிளகாய் (ப.மிளகாய் வேண்டாம் எனில் கூட இரண்டு வரமிளகாய் கூட சேர்த்து கொள்ளலாம்) சோம்பு உப்பு எல்லாம்சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்து அரைத்த கிழங்கு நறுக்கிய வெங்காயம் மல்லி இழை எல்லாம் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து விட்டு வடைகளாக தட்டி எண்ணெய்யில் போட்டு எடுக்கவும். மேலே மொறுமொறுப்பாகவும் உள்ளே சாப்டாகவும் சுவையாக இருக்கும். இதற்கு ரோசாப்பூ சட்னி காம்பினேஷன் சூப்பரா இருக்கும்.


ரோசாப்பூ சட்னி

கால் கிலோ உரித்த சி. வெங்காயம் இரண்டு தக்காளி நறுக்கியது நாலு பல் பூண்டு வரமிளகாய் நான்கு புளி சிறிது உப்பு எல்லாம் போட்டு மிக்ஸியில் அரைத்து எண்ணெய் இரண்டு ஸ்பூன் விட்டு கடுகு க.பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த சட்னியையும் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால் ரோசாப்பூ சட்னி
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top