ராதையின் கண்ணன் இவன்-22

Advertisement

Meera kartik

Well-Known Member
nice

கோல்ட் பாடி அண்ட் ப்ளாக்கிளவுட் அருமை

சண்முகம் இத்தனை நாள் எதிரிய பாக்கல

இப்போ நம்ம கோல்ட் பாடி பொங்கல் வைப்பாரு ன்னு நம்பறேன்
 

Chittijayaram

Well-Known Member
Deiva, sanmugam, swetha ivamgaluku dandanai kuduthe aganum, en da sanmugam pondatti ya sandega padala sari petha ponnu Ava Ella nu avalai odhukitiye da, deiva nee yavadu avanuku kuzhandai kitta pasama erukalame, ungalala avaluku pethavamga pasam kidaikamale pochi, avaluku arumaiyana thatha paatti, arumaiyana Annan, azhagana Oru friend ah erukura lover kidaichamga super, nice update ruthra dear thanks.
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
தெய்வா விசயத்துல நியாயம் இருக்கா தெரியல ஆனா தெய்வா கூட ராதா சகஜமா பேசுறத என்னால ஏத்துக்க முடியாது.

சண்முகம் மேல வச்ச அன்ப அவங்க எப்பவும் ராதா மேல வைக்கல. இப்பவும் அவளுக்கு அது தேவை இல்ல.
 

Lakshmimurugan

Well-Known Member
பெண்களுக்கு குழந்தைகள் பிறந்தால் கணவர் இரண்டாம் பட்சம் ஆகி விடுவார்கள், ராதிகா மட்டும் விதிவிலக்கு போலவே.
 

Hema Guru

Well-Known Member
"சந்தேகம்" இப்படி ஒரு விதை விழும் போது தான், ஒரு வேளை அப்படி இருக்குமோ, இல்லை இப்படி இருக்குமோ, என நாம் இதுவரை கண்மூடி தனமாக உண்மை என்று நம்பிய எல்லாவற்றையும் அக்கு வேறா, ஆணி வேறாக அலச தோணும், ஒரு வேளை சந்தேகமே இல்லை என்றால்?, சண்முகத்தின் நிலை அது தான் அவருடைய மனம் முழுதாக ராதிகா அவர்களுடைய குழந்தை இல்லை என ஐயம் திரிபுர நம்ப, அந்த முடிவு அவருக்கு இதமானதாகவே வேற இருக்க அவர் அந்த விஷயத்தை ஆராயவே விரும்பவில்லை. ஒரு வேளை சண்முகம் எந்த உடல் குறையும் இல்லாமல் இருந்து, அவர்களுக்கு இப்படி ஒரு குழந்தை பிறந்து இருந்து இருந்தால் தெளிவான சிந்தனையோடு குழந்தையிடம் குடும்பத்தில் உள்ளவரின் சாயலை தேடி இருக்க கூடும், இந்திராணி அம்மையாரே மீண்டும் வந்து பிறந்ததாக கொண்டாடி இருக்க கூடும், ஆனால் தன்னிறகத்தில் உழன்று, நண்பனின் நயவஞ்சக பேச்சால் குழம்பி போன சண்முகத்திடம் வேற எந்த மாதிரியான எதிர்வினையை எதிர் பார்க்க முடியும்.

சண்முகம் முற்றிலும் பழைய நிலைக்கு திரும்பிய மாதிரி இருந்தாலும், திடிரென இரவில் தெய்வாவை எழுப்பி, "எனக்கு குறை இருக்குன்னு என்ன வெறுத்திட மாட்ட இல்ல, என்ன விட்டுவிட்டு போய்ட மாட்ட இல்ல" என கேட்கும் போது எல்லாம் தெய்வா தான் தவித்து போவார். ஒவ்வொரு முறையும் அவரை சமாதானப்படுத்தி உறங்க வைக்கும் தெய்வாக்கு தான் தூங்கா இரவாகவே விடியும். இதற்கு ஒரு தீர்வு அவசியம் என உணர்ந்த தெய்வா அவரை மீண்டும் ஒரு முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்து சென்றார், முன்னர் உண்ட மருந்துகளிலே அவரின் குறைகள் நிவர்த்தி ஆகிவிட்டது என்பதற்கு சான்று புதுவையில் வளருவதால் துணிந்தே அழைத்து சென்றார்.

அப்போதும் சண்முகம் பதட்டத்திலே இருக்க, தெய்வா தான் முடிவு தெரியும் என்பதால் இயல்பாக இருந்தார். மருத்துவ முடிவுகளும் சண்முகத்துக்கு ஒரு குறையும் இல்லை என சொல்லும் போது தான் சண்முகம் இயல்பாக ஆனார்." எனக்கு ஒரு குறையும் இல்லை, எனக்கு ஒரு குறையும் இல்லை" என பலமுறை தனக்கு தானே சொல்லிகொண்டு, ஒரு வளர்ந்த ஆண் மகன் என்றும் பாராமல் கண்ணீர் சிந்த அதையே திரும்ப திரும்ப சொல்லி தன் மனதில் பதிய வைக்க முயற்சி செய்ய, எந்த அளவுக்கு அந்த குறை அவரை பாதித்து இருக்கிறது என நேரில்
பார்த்த தெய்வாவின் மனது தான் கனத்து போனது.

இந்த நிலையில் தான் தெய்வா மீண்டும் கருவுற்றார். இம்முறை இதை சண்முகம் எப்படி எடுத்துக்கொள்வாரோ என பயந்து, பயந்து தான் விஷயத்தை அவரிடம் சொன்னார் தெய்வா, மருத்துவ முடிவுகள் அவரின் மனதில் அவரை பற்றிய நம்பிக்கையை விதைத்து இருக்க, இப்போது தான் முதல் முறை தந்தை ஆகப்போவது போல் உலகை வென்ற மகிழ்ச்சியில் இருந்தார் சண்முகம். தன் மனைவியை தானே கவனித்து கொண்டார், யாரையும் உதவிக்கு அழைக்கவும் இல்லை, தெய்வாவை புதுவைக்கு அனுப்பவும் இல்லை. அங்கு ஒரு குழந்தை இருப்பதால் சிவகாமி அம்மையார் வர முடியாமல் போக, தில்லை தான் வந்து தன் மகளையும், மருமகனையும் பார்த்து விட்டு, அந்த சிறிய வீட்டில் வசதிகள் குறைவாக இருக்க, இப்போது அவர்கள் இருக்கும் வீட்டை வாங்கி "தெய்வானை இல்லம்" என பெயர் வைத்து அவர்கள் அங்கு தங்க எல்லா ஏற்பாட்டையும் செய்து விட்டு வந்தார்.

தெய்வாவின் பொழுதுகள் எல்லாம் தன் கணவனின் முகத்திலே தான். முன்னர் மாதிரி எந்த விதத்திலும் அவரை வருத்தபட வைக்க கூடாது என்று அவரின் முக மாற்றத்தில் அதிக கவனம் செலுத்தினார். இப்போது எல்லாம் எப்போதும் சிரிப்புடன் வலம் வரும் சண்முகம் ஒரு நம்பிக்கையை தெய்வாவிற்கு தர, ஒரு நாள் பேசி கொண்டு இருக்கும் போது, சண்முகம்
" உனக்கு ஏதாவது ஆசை இருந்தா சொல்லு தெய்வா, நான் செஞ்சி தரேன்" என கேட்க, தெய்வாவோ,

"எனக்கு ராதிகாவை பார்க்கணும் போல இருக்குங்க" என,

"யாரு ராதிகா" என சண்முகம் கேட்க தெய்வாக்கு தான் பெரும் அதிர்ச்சி,

"நம்ப குழந்தைங்க" என குரல் அடைக்க கூற,

"அது நம்ப குழந்தை இல்லை தெய்வா, இப்போ உன் வயித்துல இருக்குறது மட்டும் தான் நம்ப குழந்தை" என முன்னர் இருந்த வெறி இல்லை என்றாலும் குரலில் கடினத்துடன் சொல்ல, இன்னும் ஒரு முறை இதை பற்றி பேசினால் மீண்டும் தன்னிலை இழந்துவிடுவேன் எனும் தோற்றத்தில் அவர் பேச, அவரின் வார்த்தைகளில் தெய்வா தன் சிலையென உறைந்து போனார். இதற்கு என்ன அர்த்தம், அப்போ இவர் ராதிகாவை இவரோட பொண்ண ஏத்துக்கவே மாட்டாரா?, என் பொண்ண என்னால வளர்க்கவே முடியாதா, என மனம் தீவிரமாக யோசிக்க, ராதிகாவை பார்த்து கொள்ள ,அவளோட தாத்தா, பாட்டி இருக்காங்க, அங்க வளர்ந்தாலும் எங்க பொண்ணா தானே வளர போறா, ஆனா இவர் இருக்குற நிலையில் இவர் கிட்ட ராதிகாவை இங்கேயே வளர்க்க கேட்டா நா இவரையே இழந்தாலும், இழந்துடுவேன், இவருக்கு என்னை விட்டா வேற யார் இருக்கா, வேண்டாம் ராதிகா அங்கவே வளரட்டும் என தீர்மானமாக முடிவு எடுத்தார். எத்தனை பேர் இருந்தாலும் தாயின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பது ஏனோ அவருக்கு புரியவில்லை, தன் கணவனையும், தன் வாழ்க்கையையும் காப்பாற்ற தன் குழந்தையை தள்ளி வைத்தார் தெய்வா.

பிரசவ நாள் நெருங்க நெருங்க தெய்வா தான் மிகவும் பதட்டமாக இருந்தார். ஒருவேளை இந்த குழந்தையும் கருப்பாக பிறந்தால் என்ன செய்து இது அவரின் குழந்தை என நிருபிக்க முடியும், மரபணு சோதனைகள் மக்களிடம் பிரபலம் ஆகாத காலகட்டம் அது. இவரின் பதட்டத்தால் ரத்த அழுத்தம் அதிகமாக அறுவை சிகிச்சை செய்து தான் குழந்தையை எடுக்க வேண்டிய நிலமை, கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை என்பது சாதாரணமான விஷயம் இல்லை, பயந்து போய் அப்போது தான் தில்லைக்கு தகவல் கொடுத்தார் சண்முகம். அவரும் பயத்துடனே கிளம்பி வர, தெய்வாவின் பதட்டத்திற்கு அவசியமே இல்லாமல் சண்முகத்தை உரித்த வைத்த மாதிரி அழகான பெண் குழந்தையையே பெற்றெடுத்தார் தெய்வா.

இப்போது தெய்வாவை நிச்சயம் சண்முகத்தால் தனியே பார்த்துக்கொள்ள முடியாது என தில்லை வலுக்கட்டாயமாக தன் மகளையும், பேத்தியையும் புதுவை அழைத்து வந்தார், சண்முகத்திற்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை என்றாலும் தெய்வாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அங்கு செல்ல அனுமதித்தார், இருந்தும் தெய்வா அங்கு இருந்த ஆறு மாதங்களில் ஒரு முறை கூட இவர் புதுவை செல்லவில்லை தன் மனைவியும், குழந்தையையும் பார்க்க கூட. முதல் பிரசவம் சிக்கலானது, அதை தொடர்ந்த அனர்த்தங்கள், இப்போது அறுவை சிகிச்சை என மொத்தமும் சேர்ந்து தெய்வாவை இன்னும் பலகீனமாக்க புதுவையில் இருந்த நாட்கள் முழுதும் அவருக்கு ஓய்விலே செல்ல, தன் அறைக்கு வெளியில் விளையாடும் ராதிகாவின் குரலை மட்டுமே அவரால் கேட்க முடிந்தது.

சண்முகம் இங்கு தன்னையும் தன் மகளையும் பார்க்க வருவார் என எதிர்பார்த்த மனது, அவர் வரமாட்டார் என நிதர்சனத்தை உணர, மருத்துவமனையில் இருந்த ஒரு வாரமும் குழந்தையை கையிலே வைத்து இருந்தவர், இவளோ நாள் ஆகியும் பார்க்க வரவில்லை என்றால், இங்கு நடந்த நிகழ்வுகள் அவரை எந்த அளவுக்கு பாதித்து உள்ளது என்பதையும், இங்கு யாரையும், யாரையும் அவர் பார்க்க விரும்பவில்லை என்பதும் அப்பட்டமாக தெரிய, எங்கே அவரை அங்கே மீண்டும் தனியே விட்டால் இன்னும் என்ன என்ன பிரச்சனைகள் எல்லாம் வருமோ என கலங்கி தவித்து, தன் உடல் நிலை தேறவும் மீண்டும் சென்னை செல்ல நினைக்க, அதை பற்றி பேச தன் அப்பாவையும், அம்மாவையும் தன் அறைக்கே அழைத்தார் தெய்வா. இருவரும் வரவும், பொதுவாக,

"நானும், பாப்பாவும் சென்னைக்கே அவர்கிட்ட போகலாம்னு இருக்கேன்" என, தில்லை தான்

"அப்போ ராதிகா"

"அவ எங்க இருந்தாலும், எங்க பொண்ணு தானே, உங்க கிட்டயே வளரட்டும்" என இது தான் தன் முடிவு என உறுதியுடன் சொல்ல, அங்கு ஒரு கனமான அமைதி நிலவ, அதை கலைக்கும் விதமாக தில்லை,

"அப்படினா ராதிகா எங்க பேத்தியா மட்டும் வளரட்டும், உனக்கும் உன் புருஷனுக்கும் தான் அவ தேவை இல்லாதவளா போயிட்டாலே, ஆனாலும் உன் கிட்ட இருந்து இதை நா எதிர்பார்க்கல தெய்வா" என இத்தனை நாட்களில் ஒரு தடவை கூட இங்கு வராதவன், தெய்வா சென்னை சென்றாலும் இங்கு அனுப்புவது என்பது குதிரை கொம்பு தான், இந்த நிலையில் ராதிகாவிடம் அவர்களை பெற்றோர் என அறிமுகம் செய்தால், அவர்கள் தன்னை ஒதுக்கி விட்டனர் என அந்த பிஞ்சு ஏங்கி போய்விட கூடும், ஆதற்கு பெற்றோர் என்ற உறவே அறிமுகபடுத்த படாமல் தங்கள் பேத்தியாகவே வளரட்டும் என்று அந்த நிலையிலும் எல்லாவற்றையும் யோசித்து, ராதிகாவிற்கு இவர்கள் செய்வது அப்பட்டமான அநியாயம், அதை தடுக்க முடியாத ஆதங்கம் என எல்லாம் சேர கோபத்தில் தில்லை பேசிவிட்டு, அங்கிருந்து எழுந்து செல்ல, சிவகாமியும் "தன் கணவனின் எண்ணம் தான் எனக்கும்" என சொல்லாமல் சொல்வது போல அமைதியாய் அவரை பின்தொடர, பெற்றோரின் கூற்று வருத்தம் தந்தாலும் தன் வாழ்க்கையை காப்பாற்ற சென்னை செல்லும் தன் முடிவில் உறுதியாக இருந்தார் தெய்வா. மகள் மேல் கோவம் இருந்த போதிலும், அவருக்கு துணையாக கமலாவை அனுப்பி, எல்லா விதத்திலும் ஒரு நல்ல பெற்றோராகவே நடந்து கொண்டனர் தில்லை-சிவா தம்பதியர்.

ராதிகா பள்ளி செல்லும் வரை எந்த பிரச்சனையும் வர வில்லை, அங்கு எல்லா பிள்ளைகளுக்கும் பெற்றோர் இருக்க, அதுபோக அவள் கருப்பாக இருப்பதாக வேற கேலி செய்ய, வீட்டிற்கு வந்த ராதிகா சிவாவிடம், "எனக்கு மட்டும் ஏன் அப்பா, அம்மா, இல்லை, என் கூட படிக்கிற பசங்க எல்லாம் சொல்றாங்க, நா கருப்பா இருக்கேன்னு தான் என்ன பிடிக்காம விட்டுட்டு போய்டாங்களாம், அப்படியா சிவா" என கேட்டு அழ, அவளின் நிலையை நினைத்து சிவகாமி அம்மையார் உடல் நிலை சரி இல்லாமல் படுக்கையில் விழ, அதற்கு பிறகு தன் பெற்றோரை பற்றி அவள் கேட்டதே இல்லை. இயல்பிலே சூட்டிகையான ராதிகா தன் வட்டத்தை தில்லை, சிவா பின்னாளில் கிறிஸ் என சுருக்கி கொண்டாள். எப்போதாவது வருகை தரும் தெய்வாவையும், அவரின் மடி இறங்காத ஸ்வேதாவும் இன்னதென்று விளங்காத ஒரு ஏக்கத்தை விளைவிக்க, தெய்வாவே வந்து பேச, முயற்சி செய்தாலும் அவரிடம் ஒதுங்க ஆரம்பித்தாள். இரண்டு தலைமுறை இடைவெளி என்னும் பள்ளம் இடையில் இருக்க, தில்லையாலும், சிவகாமியாலும் ராதிகாவின் எண்ணவோட்டததை புரிந்து கொள்ள முடியாமல் போக, கிறிஸ் தான் அவளின் ஏக்கத்தை சரியா புரிந்து கொண்டான். அதில் இருந்து கிறிஸ் தான் தெய்வா வருகிறதார் என தெரிந்தாலே, காலையில் சீக்கிரமாக வந்து அவனின் டாலியை வெளியே அழைத்து சென்று விடுவான். இரவும், அவனின் டாலியிடம் பல கதைகள் பேசி அவளை உறங்க வைத்த பிறகு தன் இல்லம் செல்வான்.

ராதிகாவின் பதினைந்தாவது வயதில் தில்லை அவளிடம், அவளின் நீண்ட நாள் கேள்விகளான விடையாக அவளின் பெற்றோரை பற்றி சொல்ல, குறைந்த பட்சம் கண்ணீராவது சிந்துவாள், என்னை ஏன் அவர்களுக்கு பிடிக்கவில்லை, நான் அவர்களிடம் நாலு கேள்வியாவது கேட்கணும் என சொல்வாள் என தில்லை எதிர்பார்க்க, அவளோ "முடிந்ததா, இன்னும் வேற ஏதும் இருக்கா" என்ற ரீதியில் பார்த்துவிட்டு சென்றுவிட்டாள். அவளுக்கும் சேர்ந்து கிறிஸ் தான் அவர்களிடம் நியாயம் கேட்க போவதாக கிளம்ப," என்னை வேண்டாம் என்று சொன்னவங்க யாரும் எனக்கு வேண்டாம் கிறிஸ், சண்டை போட, கோவம் பட கூட நமக்கும் அவங்களுக்கும் நடுவுல ஏதாவது இருக்கனும், எனக்கு தெரிஞ்சி அப்படி ஏதும் இல்லை, பின்ன நீ அவங்க கிட்ட போய் என்ன பேச போற" என கேட்க, கிறிஸ் அவள் சொல்வது சரிதானே என அமைதியாகிவிட, தில்லையோ அவளின் கூற்றில், ராதிகா அவர்களை மொத்தமாக ஒதுக்கி விட்டது புரிய ஒரு பெருமூச்சுடன் அமைதியானார்.

பெற்றோர் பற்றிய தகவல் சொல்ல பட்டதும், ராதிகா தன்னிடம் பேச விரும்புவாள் என தெய்வா எதிர்பார்க்க அப்படி ஒரு நிகழ்வு நடக்கவே இல்லை. ஒரு நல்ல மனைவியாக மட்டுமே நடந்து கொண்ட தன்னை அவள் புரிந்து கொண்டு, அவளை பிரிய தான் எடுத்த முடிவை அவள் ஆதரிக்க வேண்டும் என எதிர் பார்ப்பது அவரின் சுயநலத்தின் உட்சம் அன்றோ, ஆனால் தெய்வா அதை தான் எதிர்பார்த்தார். ராதிகாவிடம் சொன்னது போல, ஸ்வேதாவிடமும் அவளின் பதினைந்தாவது வயதில் ராதிகா பற்றி சொல்லபட, இத்தனை வருடம் ஒரே பிள்ளையாக, அவர்களின் பாசத்திற்கு ஏகபோக வாரிசாக வளர்ந்துவிட்டு, இப்போது அதை பங்கு போட ஒருத்தி இருக்கிறாள் என்பதை அவளால் ஏற்றுகொள்ளவே முடியவில்லை, எப்போதாவது புதுவை செல்லும் போது , சரியாக கூட பார்த்தே இராத அவளை தனது எதிரியாகவே நினைக்க ஆரம்பித்தாள் ஸ்வேதா. தனக்கு சாதகமாக தனது தந்தை அப்படி ஒரு குழந்தை தனக்கு இருப்பதாகவே ஏற்க தயாராக இல்லை எனும் போது, தானும் அவளை தனது சகோதரியாக ஏற்க முடியாது என திட்டவட்டமாக சொல்லிவிட, சண்முகத்தை மீறி தெய்வாவால் ஸ்வேதாவை கண்டிக்க முடியவில்லை. அதன்பிறகும், தன்னை ராதிகா புரிந்து கொள்வாள், அவளே தன்னிடம் பேசுவாள் என அமைதியாக இருக்காமல் தெய்வா அவளிடம் பேச முயற்சி செய்ய, அவரால் அவளிடம் நெருங்க கூட முடியவில்லை. தன் தந்தையிடம் தன்னை அவளிடம் புரியவைக்க ஒரே ஒரு வாய்ப்பாவது தருமாறு கேட்க, ஏற்கனவே தங்களுக்கு பிறகு ராதிகாவின் எதிர்காலத்தை நினைத்து மறுகி கொண்டு இருந்த தில்லை, நூறில் ஒரு வாய்ப்பாக ஒரு வேளை ராதிகா அவளின் குடும்பத்தோடு இணைந்து விட்டால் அதுவே போதும் என தான் ராதிகாவை கெஞ்சி, கொஞ்சி தெய்வா வீட்டில் தங்கி படிக்க வைத்தார்.

ராதிகா எல்லாவற்றையும் சொல்லி முடிக்க, நடுமண்டையில் சுளீரென அடிக்கும் வெயில் எல்லாம் உரைக்கவே இல்லை பொன்னிற மேனியனுக்கு, அவனின் கார்மேகம் எந்த தப்புமே செய்யாமல் மிக மோசமாக தண்டிக்கப்பட்டது மட்டுமே மனதில் நிற்க, யாருமில்லாமல் தனியாக மிரண்டு விழிக்கும் ஒரு சிறுமியின் தோற்றம் மனதை பிசைய, அதை காண சகிக்காதவன் போல, எதுமே பேச தோன்றாமல் தன் தோளில் சாய்ந்து இருந்த தன் கார்மேகத்தின் மீது தன் கையை போட்டு இறுக்கி அணைத்தான், எதிலோ இருந்து அவளை காப்பவன் போல.

இவன் ராதையின் கண்ணன்…………………………

Shanmugam mattum bad boy illa, deivavum bad girl thaan

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
தந்தை இருந்தும் தாயும் இருந்தும்
சொந்தம் எதுவும் இல்ல அத சொல்ல தெரியவில்ல
இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ
இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ
விதியோடு நான் ஆடும் வெளையாட்ட பாரு
வெளையாத காட்டுக்கு வெத போட்டதாரு
பாடு படிச்சா சங்கதி உண்டு
என் பாடுக்குள்ளையும் சங்கதி உண்டு கண்டு பிடி
பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை
இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ
இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ
விதியோடு நான் ஆடும் வெளையாட்ட பாரு
வெளையாத காட்டுக்கு வெத போட்டதாரு
பாடு படிச்சா சங்கதி உண்டு
என் பாடுக்குள்ளையும் சங்கதி உண்டு கண்டு பிடி

பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top