ராதையின் கண்ணன் இவன்-13

Advertisement

E.Ruthra

Well-Known Member
"என்ன தம்பி, கிளம்பியாச்சா" இயல்பாக வந்தது போல சண்முகம் பேச்சை ஆரம்பிக்க,

"ஆமா " பொன்னிற மேனியனோ ரத்ன சுருக்கம்,

"ஏதோ வேலை விசயசமாக வந்ததா சொன்னிங்க இல்லை, முடிஞ்சதா" , என்ன வேலை என தெரிந்து கொள்ளும் ஆர்வம், விடமாட்டார் போலவே என்ற எண்ணத்துடன் பொன்னிற மேனியனோ பட்டும் படாமல்,

"முடிஞ்சிடுச்சி"

"நீங்க ஏதோ கம்பனில பார்ட் டைம் வேலை பார்க்குறத பாப்பா சொல்லுச்சி, எந்த கம்பனி" என கேட்க, ஏன் இதை எல்லாம் சொன்ன உங்க பாப்பா எந்த கம்பனினு சொல்லலையா என கேட்க நினைத்தாலும், எதுக்கு வீணா வார்த்தையை வளர்க்கணும் என்ற எண்ணத்தில்,

"கிருஷ்ணா சாப்ட்வார் சொலுஷன்ஸ்"

"அடடே, அங்க நமக்கு நிறைய ஆளு இருக்கு, ஏதாவதுனா சொல்லுங்க பார்த்துக்கலாம்"

"சரிங்க" என வாய் சொன்னாலும், கண்கள் அவனின் கார்மேகத்தை தேடியது, ஏனோ இவரிடம் ஒரு ஒவ்வாமை, சீக்கிரம் பேசி முடித்து இடத்தை காலி செய்தால் தேவலாம் என்பது போல ஒரு எண்ணம், இவனின் எண்ணத்தை சற்றும் கணக்கில் கொல்லாமல், இவனை பேசியே ஒரு வழி ஆக்கும் எண்ணத்தில் சண்முகம்,

"என்ன தம்பி ரொம்ப கூச்ச சுபவமா, வாங்க, போங்கன்னு, எங்க பாப்பா காலேஜ் தானே சும்மா அங்கிள்னு கூப்பிடுங்க, பாப்பா பிரின்ட்ஸ் எல்லாம் அப்படி தான் கூப்பிடுவாங்க, எம்.பி.ஏ படிக்கிறீங்க இல்ல, நல்லா படிங்க, படிச்சி முடிச்சிட்டு வேலை வேணும்னா சொல்லுங்க நா ஏற்பாடு பண்றேன்" ஒதுக்கத்துக்கும், கூச்சத்துக்கும் இவருக்கு வித்யாசம் தெரியலையா, இல்ல புரிஞ்சும் புரியாத மாதிரி இருக்காரா, வேலை வாங்கி தருவதாக சொன்ன அவர் கூற்றில் சிரிப்பு வந்தாலும், வழக்கமாக அமைதியான முகத்தோடு சமத்தாக,

"சரிங்க சர், தேவைப்பட்ட கேட்கிறேன்", சர் என்ற ஒரு வார்த்தையில், உங்களுடன் உறவாட விருப்பம் இல்லை என மிக நாசுக்காக இவன் தெரிவிக்க, அவரோ சொன்னா கேட்டுக்கொள்வான் என நினைத்தால் அந்த ரகம் இல்லை போலவே எனும் யோசனையில், நேரடியாக,

"நமக்கு சொந்தமா ஒரு பத்து ஜவுளிக்கடை இருக்கு தம்பி தமிழ் நாட்டின் முக்கியமான ஊர்ல எல்லாம், ஊருல நிலம், மில்லு அது இதுன்னு நிறைய இருக்கு, இந்த வீடு, என் சொத்து எல்லாமே என் பொண்ண கல்யாணம் பண்ண போற பையனுக்கு தான், அதான் நாங்க பையன் பணக்காரனா இருக்கணும் கூட எதிர் பார்க்கல, எங்க பாப்பாக்கு பிடிச்சவனா இருந்தா போதும்னு நினைக்கிறேன், என்ன தம்பி நா சொல்றது" அவர் பேச பேச பொன்னிற மேனியனின் புருவங்கள் உயர்ந்தன, அவரின் கடையை இவனும் கேள்விப்பட்டு இருக்கான், மக்களால் கை ராசியான கடை என அழைக்கப்படும் மிக பெரிய கடை தான், ஆனால் இவருடைய சொத்து கணக்கு எல்லாம் ஏன் என்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்காரு, அது போக பொண்ணு ஆசைப்படுற பையனா என யோசிக்கும் போது தான் மண்டையில் மணியடிக்க, இவருக்கு எந்த அளவுக்கு தெரியும் என யோசனையாய் அவரை பார்க்க, இவனின் அமைதியை தன் சொத்து மதிப்பை கணக்கு போடுகிறானோ என சரியாக தப்பாக கணித்து, இவனை பேசியே கரைக்கும் முயற்சியில் தொடர்ந்தார்.

"உங்க அழகுக்கு, நீங்க எதுக்கு தம்பி அந்த புள்ள கிட்ட எல்லாம் பேசுறீங்க, உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா நம்ப ஸ்வேதாகிட்ட சொல்லுங்க, பாப்பா சொன்னா நா பண்ணி தர போறேன்" என ஏதோ காரியதுக்காக தான் பொன்னிற மேனியன், அவனின் கார்மேகத்திடம் பழகுவது போல பேசி வைக்க, உள்ளே ஒரு எரிமலையே வெடித்தாலும் அதை கொஞ்சம் கூட முகத்தில் காட்டாமல், மிக அலட்சியமாக,

"உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்கொடுக்க உங்களுக்கு இன்னும் கூட நிறைய சொத்து தேவைப்படும், ஆனா பாருங்க ராதாவுக்கு அது எல்லாம் தேவையே இல்லை" என நக்கல் முக்கியெடுத்த குரலில், "உன்னோட பொண்ணை எல்லாம் ஒருத்தவன் கல்யாணம் பண்ணா அது சொத்துகாக தான் இருக்கும், ஆனா ரதிகாவை அவளுக்காகவே கல்யாணம் பண்ணிப்பாங்க" என்ற ரீதியில் பேச சண்முகத்தின் பீபி எகிற, பணத்தால் அவனை வளைக்க நினைத்ததால் தான் அவன் தன் பெண்ணை பற்றி இழிவாக பேச காரணம் என்ற உண்மையை உணராமல் வார்த்தைகளை சிதற விட்டார்.

"என் பொண்ணு யூஸ் பண்ற கார் என்ன விலைன்னு தெரியுமா உனக்கு, ஏதோ என்னோட பொண்ணு ஆசைப்பட்டாலேனு பேசுனா, என்ன வேணா பேசுவியா நீ, உன்னால எல்லாம் இந்த மாதிரி ஒரு வாழ்க்கையை யோசிச்சியாவது பார்க்க முடியுமா, சோத்துக்கு வழி இல்லாம வேலைக்கு போயிட்டு படிக்கும் போதே உனக்கு இவ்ளோ திமிர், என் பொண்ணு இந்த வீட்டோட இளவரசி, அவளை போய் அந்த பெண்ணுக்காக தூக்கி போடுற நீ, ஏதோ ஊருல இல்லாத உலக அழகி மாதிரி சீன் வேற, இதுக்கு தான் தகுதி,தராதரம் தெரிஞ்சி பேசனும்னு சொல்றது, அவ கூட பழகும் போதே தெரியலை உன்னோட லெவெல் என்னனு " என அவர் பேச பேச அவனுக்கு வந்த கோவத்திற்கு கை முஷ்டி எல்லாம் இறுக, அவரை அறைய துடித்த கையை அவரின் வயசுக்கு மட்டுமே மரியாதை கொடுத்து தன்னை கட்டுப்படுத்தி கொண்டான், ஆனால் கையை கட்டுப்படுத்த முடிந்த அவனால், என்ன முயற்சி செய்தும் கோவத்தை கட்டுப்படுத்த முடியாமல் செந்நிற மேனியனாக மாறி தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து,

"என் தகுதி, தராதரத்தை நிர்ணயிக்க நீங்க யாரு, என்னோட லெவெல் என்னன்னு நா ஏன் உங்களுக்கு நிருபிக்கணும், ஆனா உங்களுக்கே சீக்கிரமா புரியும், பொய் சொல்லல, திருடல, நா செய்யுற வேலைல அசிங்க பட என்ன இருக்கு, என் கண்ணுக்கு அவ உலக அழகியா தான் தெரியுறா, நீங்க பேசுன ஒவ்வொரு, மார்க் மை வர்ட்ஸ் ஒவ்வொரு வார்த்தைக்கும் நீங்க பதில் சொல்ல வேண்டி இருக்கும், வருத்த பட வேண்டி இருக்கும் மிஸ்டர், சண்முகம், நியாபகம் வச்சிக்கோங்க, எல்லாத்தையும் சந்திக்க ரெடியா இருங்க" என உரும அவரோ அரண்டு போய் பார்த்து வைக்க, முத்துவுடன் ராதிகா அங்கு வந்தாள். பொன்னிற மேனியன் தன் முகத்தை சாதாரணமாக மாற்றி கொண்டு அவனின் காரம்கேத்தை நோக்கி திரும்ப, எப்போதும் போல் அவனை உணரும் இவள், இவனின் முகத்தை பார்த்து " என்ன ஆச்சி ராகி" என சந்தேகத்துடன் அருகில் இருந்த சண்முகத்தை பார்க்க, அவரோ யாரையும் பார்க்காமல் விருட்டென உள்ளே சென்றார். அவனை சீண்டிட்டமோ என ஒரு நிமிடம் யோசித்தவர் இவனால என்ன பண்ண முடியும் என மிதப்பாக அந்த எண்ணத்தை ஒதுக்கினார்.

"ஒன்னும் இல்ல ராதா" என்றவாறே முத்துவிடம் சென்று பேச, ராதிகா அவனை அமைதியாக பார்த்திருந்தாள். இவளின் பார்வை அவனை துளைக்க, ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல் இவளிடம் வந்த பொன்னிற மேனியன்

"படிச்சி முடிஞ்சதும் வேலை வாங்கி தரேன்னு சொன்னாரு" என இவள் நம்பாமல் பார்க்க "நிஜமா அதான் சொன்னாரு, சாரி நான் போறேன், மன் டே பார்ப்போம்" என்றவாறே காரில் விடை பெற கார் கண்ணில் இருந்து மறையும்வரை பார்த்துக்கொண்டு இருந்த ராதா, சண்முகம் எதோ விரும்பத்தகாத வகையில் பேசி இருக்கிறார், இவன் எதுமே சொல்லாத போது என்னவென்று சண்முகத்திடம் கேட்பது, இதற்கு பிறகு சந்திக்க வேண்டிய சூழல் வந்தால் கிறிஸ்யிடம் சொல்லிவிட்டு வெளியே சந்திக்க வேண்டியது தான். ஒரு முடிவுக்கு வந்த பிறகே அவளால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

அதற்கு பிறகான வாரம், கல்லூரி, வகுப்புகள் என ஜெட் வேகத்தில் செல்ல, கண்ணை மூடி திறப்பதற்குள் அடுத்த சனிக்கிழமை வந்து இருந்தது. பொன்னிற மேனியன் இவளிடம் எப்போதும் போலவே பேச, சண்முகம் பேசியதற்கான எந்த எதிர்வினையும் அவனிடம் இல்லை. ஆனால் அவன் சத்தமில்லாமல் என்ன திட்டம் போட்டிருக்கானோ யார் அறிவர். வீட்டிலே இருப்பது ஒரு மாதிரியாக இருக்க எங்கேனும் செல்லலாம் என நினைத்த ராதிகா கிளம்பி வெளியே சென்ற இடம் திருவான்மியூர் சிவன் கோவில்.

பணம், நிறம், அழகு என எந்த வித பாகுபாடும் இன்றி எல்லாரையும் ஒன்று போல் அன்பு செய்யும் அந்த தாயுமானவன் முன் அகம் ஒருவித அமைதியில் திளைக்க, அவனிடம் எதுமே கேட்க தோன்றாமல் ஒரு வித மோனநிலையில் அந்த லிங்க வடிவானவனை கண்ணில் நிரப்ப, ஐயர் தீபாரதனைக்கு பிறகு விபூதி தர தன் கையில் வாங்கி கொண்டாள். சில நிமிடங்களிலே பக்கத்தில் யாரோ நிற்கும் ஓசை கேட்க திரும்பி பார்க்க ஒரு ஐம்பது வயது மதிக்க தக்க பெண்மணி அருகில் இருந்தார்.

ஐயர் ஏதோ வேலையாக வெளியே சென்றிருக்க, அந்த அம்மா விபூதி பிரசாதத்துக்காக காத்திருப்பது புரிந்தது. அவர் வருவதற்கு எந்த அறிகுறியும் இல்லாமல் போக ராதிகா ஒரு தயக்கத்துடனே, "அம்மா, விபூதி" என தர, இவளை நிமிர்ந்து பார்த்த அவரின் முகத்தின் ஒரு ஆனந்த அதிர்ச்சி, இவள் அதை ஊன்றி கவனிக்கும் முன்பே முகம் நிர்மலாக இருக்க, இவள் தான் தான் கண்டது பொய்யோ என ஐயம்கொண்டாள்.

விபூதியை வாங்கி கொண்டவர் ஒரு விரிந்த புன்னைகையுடன், "நன்றிமா" என இவள் பிரகாரத்தை வலம் வர ஆரம்பிக்க அவரும் இவளுடன் இணைந்து கொண்டார். சாமி தரிசனத்திற்கு பிறகு கோவில் மண்டபத்தில் இருவரும் அமர்ந்தனர். அந்த அம்மாவே பேச ஆரம்பித்தார்.

"என் பேரு ராஜேஸ்வரி, உன்னோட பேரு என்ன"

"ராதிகா"

"என்ன பண்ற படிக்கிறியா"

"ஆமா" இவள் கேட்ட கேள்விக்கு பதில் பேச,அவர் எதையோ தேட ஆரம்பிக்க, ராதிகா ஒன்றும் புரியாமல்,

"என்னமா தேடுறீங்க"

"இல்ல நீ தான் அளந்து அளந்து பேசுறியே, அதான் எதை வச்சி அளக்குறனு தேடுறேன்" என மீண்டும் முன்னினும் தீவிரமாக தேட ஆரம்பிக்க, அவர் தன்னை கிண்டல் செய்வதை புரிந்துகொண்டு ராதிகாவும்,

"அம்மா" என சிரிக்க, கூட சேர்ந்து அவரும் சிரிக்க,
திடீரென அந்த அம்மா பரபரப்பானர். என்ன என்னும் விதமாக இவள் பார்க்க, அவரோ

"பிரசாதம் தராங்க, சீக்கிரம் வா போய் வாங்கலாம், இல்லனா காலி ஆகிடும் வா, வா" என, இவள் அவரை ஒரு மாதிரியாக பார்த்துவைக்க, அதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் கிட்டத்தட்ட இவளை இழுத்துக்கொண்டு சென்று பொங்கல் வாங்கி வந்தார். வாங்கி வந்ததோடு மட்டும் இல்லாமல் அதை சப்புகொட்டி சாப்பிட வேற செய்தார். இவளின் பார்வை உணர்ந்த அவர்,

"என்ன தான் நாம வீட்டுல கிலோ கணக்குல நெய் விட்டு செஞ்சாலும், இந்த டேஸ்ட் வராது, கோவில் பிரசாதம், பிரசாதம் தான்" என சிலாகிக்க, ஏனோ இந்த வயதிலும் குழந்தை தனம் மாறாமல் இருக்கும் அவரை பிடித்து தான் போனது ராதிகாவுக்கு, அதைவிட இவரை இந்த குழந்தை தனம் இழக்காமல் பார்த்துக்கொள்ளும் அவரின் வீட்டினர் மீது மரியாதையும் வந்தது.

ஒரு வழியாக உண்டு முடித்தவர், "ஆமா, நா இந்த கோவிலுக்கு அடிக்கடி வருவேன், ஆனா நா இதுக்கு முன்னாடி இந்த கோவில்ல உன்னை பார்த்ததே இல்லையே" என கேட்க,

"ஆமாமா, இன்னைக்கு தான் முதல் தடவை வரேன், ஆனா இனிமே அடிக்கடி வரணும், இந்த அமைதி அவ்ளோ நிறைவா இருக்கு" இவள் பேச, இப்போது அவர் அவளை ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தார்.

"என்னமா" என ராதிகா கேட்க,

"உன்னை எந்த மியூசியம்ல வைக்கலாம்னு யோசிக்கிறேன், இந்த காலத்து பிள்ளைங்க எல்லாம் சினிமா, பீச்னு, சுத்துறாங்க, நீ என்னடானா கோவில் வரணும்னு சொல்லுற, ஏன் உனக்கு ஆள் இல்லையா" என கண்ணடித்து கேட்க, பளிச்சென ஒரு முகம் மின்னி மறைய ராதிகா அவருக்கு ஒரு சிரிப்பையே பதிலாக தர,

"அட இதுக்கும் சிரிப்பா, சரி வா ஒரு செல்பி
எடுத்துக்கலாம், இந்த மாதிரி ஒரு பிரின்ட் எனக்கு கிடைச்சி இருக்கானு சொன்னா என் பையன் நம்பவே மாட்டான்" என கை பேசியை எடுக்க, பாசமாக கேட்பவரிடம் எப்படி மாட்டேன் என சொல்வது என திருதிருக்க, அவர் அதற்குள் அவர் எங்கே எடுத்தால் நல்ல இருக்கும் என ஆராட்சியில் இறங்கி ஒரு வழியாக இவளையும் அழைத்தார். வேற வழி இல்லாமல் இவளும் செல்ல ஒரு அழகான புகைப்படம் எடுத்தார்.

"உன்னோட போன் நம்பர் கொடு, போட்டோ எவ்ளோ அழகா வந்து இருக்கு பாரு உனக்கும் அனுப்பி வைக்கிறேன்" என அவர் சுற்றிவளைத்து இவளின் எண்ணை கேட்பது புரிய, இவரால் அவளுக்கு ஆபத்து வரும் என நினைக்க வழியே இல்லாததால் ஒரு புன்னகையுடனே எண்களை பகிர்ந்து கொண்டனர்.

அவரே தொடர்ந்து, "சனிக்கிழமை, சனிக்கிழமை இதே நேரத்துக்கு வா, எனக்கும் ஒரு பிரின்ட் கிடைச்ச மாதிரி இருக்கும்,இல்லனா தனியா வந்து தனியா தான் போகணும்" என வீட்டில் யாரும் துணை வர மாட்டார்களா என கேட்க நினைத்தாலும், அமைதியாக சரி என்பதாய் தலை அசைத்தாள். இருவரும் பேசிப்படியே வாசல் வரை வந்து இருக்க அவரிடம் ஒரு புன்னகையுடன் விடை பெற, அவர் குதூகலத்துடன் ஒரு எண்ணிற்கு அழைத்தார். அந்த பக்கம் அழைப்பை ஏற்றவுடன்,

"டேய் நல்லவனே, உனக்கு நான் ஒரு போட்டோ அனுப்பி இருக்கேன் பாரு, நா லைன்ல வெய்ட் பண்றேன்" என அங்கு அந்த புகைப்படத்தை பார்த்தவனோ

"ராஜமாதா என்ன பண்ணி வச்சி இருக்கீங்க" என அலற, இங்கு இவரோ ஒரு கோவிலில் இருக்கும் அம்மனே நேரில் வந்ததை போல ஒரு தெய்வீக சிரிப்பை சிந்தினார்.

இவன் ராதையின் கண்ணன்…..
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
அவனோட கம்பெனியில அவன் வேலை? பார்க்கிறான்
ஆர் கே வின் லெவல் தெரியாமல் பேசிட்டாய்
உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வீண் வேலை, சண்முகம்?
சண்முகத்திற்கு எதிராக ராகி என்ன செஞ்சான்?
ஓ பொன்னிற மேனியனின் அம்மாவை கோவிலில் கார்மேகம் சந்தித்து விட்டாளா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top