ராஜ பறவை கழுகுவின் அறிவுரைகள்

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வாழ்வில் வெற்றியடைய கழுகு போதிக்கும் போதனைகள்:

1) வானில் பறக்கும் கழுகினை தாக்கும் ஒரே பறவை காகம் மட்டுமே.
அது கழுகின் மேல் அமர்ந்து கொண்டு கழுத்தில் அலகால் கொத்தும்.
ஆனால் மறுபுறம் கழுகோ, தனது நேரம் மற்றும் ஆற்றலை வீணடிக்காமல் பதில் தாக்குதல் நடத்தாமல் இருக்கும்.
கழுகு எளிமையாக தன் இறகுகளை விரித்து கொண்டு வானத்தை நோக்கி உயர பறக்கத் துவங்கும்.
உயரம் கூட கூட காகம் சுவாசிக்க கடும் சிரமம் ஏற்பட்டு ஆக்ஸிஜன் குறைந்து சுவாசிக்க முடியாமல் கீழே விழுந்து விடும்.

உங்கள் பொன்னான நேரத்தை காகங்களோடு வீணாக்குவதை நிறுத்துங்கள்.
மாறாக உங்கள் உயரத்திற்கு அவர்களை இழுத்துச் செல்லுங்கள்
ஒரு நாள் தானாகவே அவர்கள் காணாமல் போய் விடுவார்கள்..

2) கழுகு எப்போதும் இறந்த உயிரினத்தின் மாமிசத்தை உண்ணாது.
மாறாக அவை தன் இரையை ஓரிரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து துல்லியமாக கணக்கிட கூரான பார்வை உடையது.
தன் இரையை உயிருடன் எடுத்து சென்று உண்ணும்..

3) கடும் புயல், தொடர் மழை, இடி, மின்னல் என எச்சுழலிலும் தன் வாழ்க்கைமுறையை மாற்றி துணிவுடன் எதிர்நீச்சல் அடித்து வெல்லும்.

இது போன்று நீங்களும் வாழ்க்கையில் எவ்வித இடர்பாடுகள் வந்தாலும், எதிர்நீச்சலடித்தால் வாழ்வில் வெல்லலாம்..

4) வியூகம் :
கழுகின் எதிரி பாம்புதான்..
பாம்பிடம் நேரடியாக தரையில் போரிடாமல், தன்னுடைய அலகால் பாம்பை தூக்கிக் கொண்டு மேலே உயரமான மேகக் கூட்டங்களுக்கு மேல் பறந்து சென்று பாம்பிற்கு பயம் வர வைத்து, சோர்வு மற்றும் பலவீனப்படுத்தி மேலிருந்து கீழே பாம்பை போட்டு விடும்.

இதுபோன்று உங்கள் எதிரிகளை அவர்களுக்கு பிடித்தமான, பழக்கப்பட்ட இடத்தில் மோதுவதை தவிர்த்து உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்காமல் புது வியூகம் வகுத்து உங்கள் எதிரிகளை வீழ்த்த வேண்டும்
உங்கள் வியூகம் வலுவானதாக இருந்தால், உங்கள் எதிரிகள் தானாகவே தோல்வியை ஒப்புக்கொண்டு ஓடி விலகி விடுவார்கள்..

5) *சுய உருமாற்றம் பரிணாம வளர்ச்சி* :

பொதுவாக நம் எல்லோருக்கும் கழுகு ஒரு கம்பீரமான பறவை என்று மட்டும் தெரியும்.
ஆனால் அது எவ்வளவு விடாமுயற்சியுடன் செயலாற்றுகிறது என்பது மிகவும் ஆச்சரியப்பட வைக்கக்கூடிய விஷயம்.
கழுகுகள் சுமாராக எழுபது ஆண்டுகள் வாழக் கூடியவை.
ஆனால், அவற்றிற்கு சுமார் நாற்பது ஆண்டுகள் ஆகும் போது உடலில் பலவித மாற்றங்கள் நிகழ்கின்றன.
நீண்ட கூரிய நகங்கள் பலமிழந்து போய், இரையைப் பிடித்துக் கொள்ள இயலாமல் போய் விடும்.
பலம் பொருந்திய அலகு இரையைக் கிழித்து உண்ணும் திறனை இழந்து விடும்.
அதற்கும் மேலாக பரந்து விரிந்திருக்கும் இறக்கைகள் மிகவும் தடித்துப் போய், உடம்போடு ஒட்டிக் கொண்டு எங்கும் பறந்து போய் இரை தேட முடியாமல் போய் விடும்.

இப்போது கழுகிற்கு இருப்பது இரண்டு வழிகள்
ஒன்று, இந்த வேதனைகள் பொறுக்க முடியாமல் இறந்து போவது;
இரண்டாவது முடிந்த வரையில் முயன்று பார்த்து உடம்பின் மாற்றங்களுக்கு ஏற்பத் தன்னைத் தயார் படுத்திக்கொண்டு, வாழ்வதற்காகப் போராடுவது....

வாழ வேண்டுமென்ற உந்துதல் ஏற்பட்டதும், என்ன செய்யும் தெரியுமா?
உயர்ந்த மலைப் பகுதிக்குச் சென்று பாறையின் மீது தனது அலகை மோதி மோதி அதை மெதுவாக வெளியே இழுத்துப் போட்டு விடும்.
பொறுமையுடன் புது அலகு வரும் வரையில் அங்கேயே காத்திருக்கும்.
பலம் பொருந்திய, புதிய அலகு வந்ததும் அதன் உதவி கொண்டு தனது கால் நகங்களைப் பிய்த்து எறியும்.
திரும்பவும் புது நகங்கள் முளைக்கும் வரையில் பொறுமையோடு காத்திருக்கும்.
அடுத்ததாக புதிய கூரிய வளைந்த நகங்கள் வளர்ந்தவுடன் நகங்களாலும் அலகாலும் உடம்புடன் ஒட்டிக் கொண்ட இறகுகளைப் பிய்த்து எறியும்.
அடர்ந்த, கறுத்த பெரிய இறக்கைகள் முளைக்கும் வரையில் திரும்பவும் பொறுமையோடு காத்திருக்கும்.
புது அலகு, புது நகங்கள், புது இறக்கைகள் என்று மறுபிறவி எடுத்த கழுகு வாழும் உத்வேகம் உருவாகிய மகிழ்ச்சியில் மேலே உயரே உயரே பறக்க ஆரம்பிக்கும்…

இது போன்று நீங்கள் வாழ்க்கையில் பல துயரமான சிக்கல்கள் நிறைந்து வாழ்க்கையில் மீள முடியாத சூழ்நிலை ஒருவேளை வந்து உங்களை எதிர்கொண்டால் கீழ்க்கண்ட கேள்விகளை உங்களை நீங்கள் ஒருமுறை கேட்டுப் பாருங்கள்

"இந்த உலகில் மழை தொடர்ந்து பொய்யப்போவதுமில்லை
இருள் முழுதும் உலகை கட்டிப் போடப் போவதுமில்லை
அனைவரும் நல்லவர்களாக இருக்கப் போவதுமில்லை
பசியில்லா உடலும் இல்லை
வலியில்லா மனிதனும் இல்லை
என்று நீங்களே உங்களை கேள்வி கேட்டு
நீங்கள் துவண்டு விடாமல் சோர்ந்து விடாமல் நிதானமாக உங்கள் மனநிலையை திடமாக்கி உங்களது அன்றாட சிறு சிறு வேலைகளை தொய்வில்லாமல் செய்து கொண்டே உங்கள் இலக்கை நோக்கி செயல்பட்டு வந்தால் உங்கள் பெரும் பிரச்சினைகள் சில நாட்கள் கழித்து உங்களுக்கு சிறியதாக தோன்றும்.
உங்கள் மனம் பலமாகியிருக்கும்
பிரச்சினைகளை கையாளும் விதம் மாறியிருக்கும்
உங்கள் மனது ஒருமுகப்படுத்தப்பட்டு உங்கள் தன்னம்பிக்கை என்ற சிறகால் நீங்கள் வாழ்வில் உயரே பறந்து மற்றவர்களுக்கும் உங்களை ஏளனமாக பேசியவர்களுக்கும் உங்களை ஒரு எடுத்துக்காட்டாக பேசுமளவிற்கு வாழ்வில் உயர்வீர்கள்...

இவையணைத்தும் கழுகிடமிருந்து
நாம் கற்க வேண்டியவையாகும்..

படைப்பு :
கி. முத்துராமலிங்கம்

அனுப்பியவர் :
எழுத்தாளர் திருமதி மகேஸ்வரி ரவி
 
Last edited:

Hema Guru

கழுகு பார்வை அபாரம்... தொலைநோக்கு பார்வை... தொல்லை நீக்கும் பார்வை... மலையில் அதன் மறுபிறவி மலைக்க வைக்கிறது
 
D.Deepa

Well-Known Member
அருமையான பதிவு பானும்மா முயற்சி திருவினையாக்கும் கடின உழைப்பு ஒரு போதும் வீணாகது
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top