யாழியின் ருத்ர கிரீசன் - 20

#1
cover (18).jpg

யாழியின் ருத்ர கிரீசன் - 20

உயிரற்ற கருவை கையில் ஏந்தியிருந்த தமிழ் முழுதும் தோற்றிருந்தான். மிகப் பெரிய தவறு இழைத்து விட்ட குற்ற உணர்ச்சியோடு பார்த்தான் தமிழ், பிரகாஷை.

தமிழ் : நான் கைராசி இல்லாதவன் மச்சான். பாரு இந்த குழந்தையும் செத்துருச்சி. ரீத்தா மாதிரியே. நீ சொன்ன மாதிரியே நான் ஒரு சைக்கோட ! எனக்கு அவ்ளோ கோவம்டா இவ மேல பிரவீனானாலா ! ஆனா, சத்தியமா எனக்கு தெரியாதுடா இவ மாசமா இருக்கறது ! நான் யோசிக்கவே இல்லே ! நீ காச்சல்னு சொன்னியா, அதனால தான் வாந்தின்னு நினைச்சிட்டேன். இவ எழும்ப இருந்ததனால வயிறு கூட தெரியால. அவ்ளோ அடிச்சேனே அப்போ கூட இவ சொல்லலடா ! நான் உறுப்படியே இல்லடா ! மச்சான் ! நான் உருப்படியே இல்லே ! நான் சரி இல்லே ! I'm sick !

பேலஸ் : மச்சான் அதுலாம் ஒன்னும் இல்லடா ! you perfectly alright !

தமிழ் : No ! I'm not ! I'm sick !

கையில் ஏந்திய கருவை அப்படியே திரும்பி சமியிடம் கொடுத்தான் தமிழ். கையுறைகளை கழட்டி போட்டு அங்கிருந்த அத்தனை பொருட்களையும் தள்ளி விட்டு கீழே விழுந்த போனை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறி ஓடினான்.

நீரோடை பக்கம் சென்றவன் பாறையின் மேல் நின்று போனில் அவனின் ரவா புட்டிற்கு விடாமல் அழைக்க அவளின் போனுக்கு லைனே போகவில்லை.

தமிழ் : கடவுளே ! புட்டு பிளீஸ் புட்டு ! I need you புட்டு !

பல முறை அழைத்தும் லைன் கிடைக்காத காரணத்தால் போனை தூக்கி விசியடித்தவன் தலையை பிடித்துக் கொண்டு காடே அதிரும்படி கத்தி நேராய் அந்த நீரோடையின் உள்ளே குதித்தான்.

பிரகாஷுக்கு அந்த சிசு கருவை என்ன செய்வதென்றே தெரியவில்லை. நெஞ்சில் சாய்ந்திருந்த மித்திராவை கட்டிலில் கிடத்தி கீழிறங்கி வந்தவன் சமியின் கையிலிருந்து அந்த குழந்தை வாங்கி கொண்டான்.

தொப்பென்று ஒரு சத்தம். திரும்பி பார்த்தான் பிரகாஷ். மேஜைக்கு கீழே மித்ராவின் கால்களுக்கு நடுவினில் விழுந்து கிடந்தது வயிற்றிலிருந்து வெளியாகிருந்த பிளாசெந்தா (placenta).

முதலில் மயக்கமாகி கிடந்த மித்ராவை சுத்தப்படுத்தி நிகிலாவையும் சமியையும் அவளுக்கு ஆடை மாற்றி விட சொன்னான் பிரகாஷ். மித்ரா எழுந்து குழந்தையை கேட்டாள் என்ன சொல்வது என்று யோசித்தான். அவளிடம் என்ன சொல்லி தமிழுக்காக மன்னிப்பு கேட்பது என்று தீவிரமாக யோசித்தான்.

இழப்பு மித்ராவிற்குத்தான். அது மறுக்கப்படாத உண்மை. இருந்தும் நண்பன் இழைந்த தவறை தான் சுமப்பதும் ஒன்றும் அவனுக்கு புதிதில்லை.

காட்டு வழி பாதையில் வாங்கி வந்த பொருட்கள் பையில் இருக்க அதை கையில் பிடித்துக் கொண்டு பாப்பு சுற்றும் முற்றும் பார்த்தவாறே நடந்தாள்.முதுகில் பேக்பெக் வேறு மாட்டியிருந்தாள். அதில் அவளின் குட்டி விநாயகாவும் இருந்தான்.

மனதில் ஒரு வித பயம் இருந்தாலும் அது அவள் உட்சாகத்தை குறைத்து விட கூடாது என்பதற்காக மனதில் ஓம் நமச்சிவாய சொல்லிக் கொண்டே சென்றாள். அடர்ந்த காட்டில் பறவைகளின் கீச்சு, பூச்சிக்களின் ரீங்கார ஓசை கேட்க இதன் ஊடே பாப்புவின் மிஞ்சி சத்தமும் கேட்டது.

பாதி தூரம் போனவள் அப்போதுதான் யோசிக்காவே ஆரம்பித்தாள். அந்த பாட்டி சொன்னவுடன் காராக் காட்டுக்கு வந்தாகி விட்டது. ஆனால், எந்த திசையில் கோவில் இருக்கிறது என்று கேட்காமலே தாமும் கால் போன போக்கில் இப்படி இந்த நடு காட்டில் வந்து நின்றிருக்கிறோமே என்ற கேள்வி தான் அது.

பின்னால் அவளின் தோளை யாரோ தட்டுவது உணர்ந்து திடுக்கிட்டு திரும்பினாள் பாப்பு.

அவள் எதிரே காவி உடை அணிந்த வயதான கிழம் ஒன்று நின்றிருந்தது.

பாப்பு : யாரு தாத்தா நீங்க ?

தாத்தா : அது நான் கேட்கணும். நீ யாரு ? இந்த காட்டுக்குள்ள உனக்கென்ன வேலை ?

பாப்பு : அதேதான் நானும் கேட்கறேன் ? நீங்க யாரு ? உங்களுக்கு இங்க என்னே வேலைன்னு ?

தாத்தா கையிலிருந்த தடியை தூக்கி பாப்புவை அடிக்க போனார்.

தாத்தா : என் காட்டுக்கு வந்து என்னையே யாருன்னு கேட்கறியா ?

பாப்பு : உங்க காடா ? பட்டா போட்டே மாதிரி சொல்றிங்க ?

தாத்தா : ரொம்ப வாய் பேசறே நீ. இங்க அதுலாம் பண்ண கூடாது. இங்க என்ன பேசினாலும் பொறுமையா நிதானமா யோசிச்சி பேசணும். எல்லாம் நம்ப பேசறதே கேட்க்கும். புரியுதா. நீ தேடி வந்த கோவில் இன்னும் இருவது மைல் நடக்கணும். காலார நடந்து போ. இருட்டரத்துக்குள்ள போய் சேர்ந்துடுவே.

பாப்பு : ஆமா, நான் கோவிலுக்கு போற விசியம் உங்களுக்கு எப்படி ? நான் சொல்லவே இல்லையே ?

தாத்தா : அனைத்தும் யான் அறிவேன். அந்த கோவில் கிழக்காலே ஒரு பெரிய அரச மரம் இருக்கு. அதுல நிறைய சிவப்பு துணியும் கருப்பு துணியும் இருக்கும். உன் கையால ரெண்டு துணிய உறுவி கருப்பு துணியால உன் கண்ணே கட்டிக்கோ.

பாப்பு : ஏன் ?

தாத்தா : ஷ்.... சொல்றத மட்டும் கேட்கணும். கண்ண கட்டின பிறகு மேற்காலே ரெண்டு அடி போயி வலது நாலடி போயி மண்ணை அஞ்சி தடவ கையால தோண்டு. ஆறாவது முறை வந்ததும் உன் கையில நீலமான ஒரு பொருள் வழுவழுன்னு தட்டுப்படும். உன் கையில இருக்கற சிவப்பு துணியால அந்த பொருளை எடுத்து அப்படியே சுருட்டி மடிச்சு வெச்சிக்கோ. அதை நீ எக்காரணத்தைக் கொண்டும் கண்ணே திறந்து பார்க்கவே கூடாது. புரியுதா ?!

பாப்பு : அது என்னது தாத்தா ?

தாத்தா : நாளைக்கி அந்த பொருள் நீ எடுத்த பிறகு நாளையிலிருந்து தொடங்கி இருபத்தி அஞ்சி நாளைக்கி அந்த பொருள் உன்கிட்ட பத்திரமா இருக்கனும். என்ன நடந்தாலும் சரி அந்த பொருள் உன் கைய விட்டு மட்டும் போயிடவே கூடாது.

பாப்பு : தாத்தா, நிஜமாவே நீங்க யாரு ? என்னென்னமோ சொல்றிங்க ? குழப்பமா இருக்கு. பயமா வேறே இருக்கு. நானே என் தமிழுக்காகத்தான் இங்கே வந்தேன். வயித்துல வேற பாப்பா இருக்கு.

தாத்தா : வினை விளைவு தாயே ! வினை விளைவு !

பாப்பு : அப்படினா ?

தாத்தா : ஒன்றின் காரணமாக (வினை) இன்னொரு நேரடி நிகழ்வு (விளைவு) நிகழும் என்பதே வினை விளைவு. மகராசியா இரு !

தாத்தா, பாப்புவிடமிருந்து விடை பெற்று சென்றார். பாப்பு தாத்தா சொன்னதை போல் கோவில் தெரியும் வரை நடக்க ஆரம்பித்தாள். யாருக்காக எல்லாம், அவளின் காரமுறுக்குக்காக.

கால் வலிக்க நடந்தவள். கொஞ்சம் நின்று தண்ணீர் குடித்து முன்னமே வாங்கி வைத்திருந்த டூனா போட்ட ரொட்டித் துண்டுகளை சாப்பிட்டாள் ஒரு மரத்தடியின் கீழ் அமர்ந்து.

காராக் காட்டில் பாதி பாதுகாக்க பட்ட காடாகும். மீதி பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்ட பகுதியாகும். பாப்பு தேடி போகும் வீரபத்திரன் கோவில் தடைவிதிக்கப்பட்ட பகுதியிலேயே இருந்தது.

களைப்பு பாப்புவை துவண்டு விட செய்தாலும் அதற்கு கொஞ்சமும் அசைந்துக் கொடுக்காமல் தன் பயணத்தை தொடர்ந்தாள் பாப்பு.

நெஞ்சம் பதைபதைக்கும் சம்பவங்கள் காலையிலே நடந்து இன்றைய பொழுதை அனைவருக்கும் ஒரு கருப்பு தினமாக மாற்றியிருந்தது.

மித்ரா கால் இடறி கீழே விழுந்த போது அவள் கையிலிருந்து பறந்த வரைப்பட மேப் பாறைகளின் இடுக்கில் காற்றடித்து சிக்கிக் கொண்டிருக்க பிரகாஷ் அதை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தான் ஓடை நீரில் கால் நனைத்தப்படி.

சம்யுக்தா அவனை தேடி வந்தாள்.

சமி : ஹாய்....

அவன் அருகில் வந்தமர்ந்தாள். கால்களை அவளும் தண்ணீருக்குள் விட்டுக் கொண்டாள்.

சமி : சோரி, இந்த மாதிரி நேரத்துல உங்ககூட இருக்க முடியல. அடுத்த வாரம் ஷூட் ஸ்டார்ட் பண்ணியாகணும். அதான்,லொகேஷன் பார்க்க போக வேண்டியதாச்சி. தப்பா எடுத்துக்காதீங்க. மித்ரா....

பிரகாஷ் : சோரி சமி. மித்ரா பத்தி அப்பறம் பேசலாமா.

சமி : ஓகே....

பிரகாஷ் : காலையிலே புதுசா வந்திருந்த அந்த ஆள் யாரு ?

சமி : அவரு மிஸ்டர் விருசபர்வன். இந்த படத்தோட தயாரிப்பாளர்.

பிரகாஷ் : ஓ...

சமி : தமிழ் வந்தாச்சா ?

பிரகாஷ் : வந்துடுவான்....

சாமி : ஓகே, If you don't mind , நம்பல பத்தி கொஞ்சம் பேசுவோமா ?

உண்மையை சொல்லப் போனால் பிரகாஷுக்கு இப்போதைக்கு பேசவே மூட் இல்லை. மனம் மிகவும் வேதனையோடு இருப்பதாய் உணர்ந்தான்.

காலையில் கூடாரத்திலிருந்து ஓடிய தமிழையும் இன்னும் காணோம். இறுதியாக அடித்து பிடித்து வந்து சேர்ந்த மெடிக்கல் கிட்ஸ் மூலியமாக ட்ரிப்ஸ் ஏற்றி படுக்க வைக்கப்பட்ட மித்ராவும் கண் விழிக்கவில்லை.

சாகாமல் திரும்பிய சந்தோசத்தை ரீனாவிடம் சொல்லி கொண்டாட கூட நேரமில்லை. அடிக்கடி தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருக்கும் சமிக்கு அவளின் நிலையை எப்படி சொல்லி புரிய வைப்பது. இந்த மேப் எதை குறிக்கிறது என்று இப்படியான பல கேள்விகளும் எண்ணங்களும் அவனின் சிந்தனையை போட்டு துவைத்து எடுத்தன.

சமி : கொஞ்சம் பேசணும். நம்மல பத்தி.

பிரகாஷ், சமியை திரும்பி பார்த்தான்.

சமி : எனக்கு சின்ன வயசுலர்ந்து ஒரு வித்தியாசமான கனவு வரும். நான் ஒரு பெரிய ராஜ குடும்பத்து பொண்ணு மாதிரி. நிறைய நகைகள், அந்தப்புரம். ஒரு இளவரசன். நான். இப்படி ரொம்ப அழகா இருக்கும் அந்த கனவு. நான் எப்படி டைரக்டர் ஆனேன்னு கூட எனக்கு தெரியல. தனிமையில நிறைய யோசிப்பேன். எழுதுவேன். எனக்கு கனவா தோன்ற அத்தனையையும் எழுதுவேன். என்னோடு முதல் படம் கூட எனக்கு கனவா வந்த ஹிஸ்டரி ஸ்டோரி தான். பகலதியும் அப்படித்தான். இளவரசன் கிரீசனும் அப்படித்தான். நான் எதிர்பார்க்கவே இல்லே, நிஜமாவே யாழி கண்டம். சுரதி கண்டம். வெறும் கனவுனு நினைச்சேன். ஆனா, அது எல்லாத்தையும் தாண்டி எதோ ஒன்னு இருக்கு. என்ன நான் பகலதியா பார்த்தேன். உங்கள நான்....

சமி, பகலதியாக மாறி பிரகாஷை முத்தமிட்ட காட்சியை அவளின் கூடாரத்தில் இருந்த கேமிரா பதிவின் மூலம் தெரிந்துக் கொண்டாள். அதை சொல்ல முடியாமல் திக்கி திணறிய போது,

பிரகாஷ் : சமி, எனக்கு ஒரு பொண்ண தெரியும். அவ கூட நான் நாலு நாள் ஒண்ணா இருந்திருக்கேன். இங்கே. இதே காட்டுல. ஒரு பிரச்சனையில என்னால அந்த பொண்ண காப்பாத்த முடியல. என் மேல எனக்கே கோவம். அவ்ளோ கோவம். அந்த கோவம் ஏன் வந்ததுன்னு எனக்கு அப்போ தெரியல. அந்த பொண்ண தேடி போனேன். செத்தாலும் அவளுக்காக சகனும்னு தோணுச்சு. அதுவும் ஏன்னு தெரியல. இதுலாம் ஏன்னு தெரியும் போது அவ ஒரு டிவோர்சி தெரிய வந்துச்சி. அவளுக்கு ஒரு பையன் இருக்கான்னு அதுக்கு அப்பறம் தான் தெரிஞ்சிச்சி. கடைசியா அவ என் பிரெண்டோட முன்னால் மனைவின்னு தெரிஞ்சப்போ, என் மனசு என்ன சொன்னுச்சி தெரியுமா அப்பையும் அவ தான் வேணும்னு சொன்னுச்சி. அந்த பொண்ணு பேரு ரீனா.

சமி : சோரி, உங்களுக்கு கேர்ள் பிரெண்ட் இருக்கறது எனக்கு தெரியாது.

பிரகாஷ் : சமி, முத்தங்கரது யார் யாருக்கு வேணும்னாலும் கொடுக்கலாம். சினிமா மாதிரி. உனக்கு சொல்ல வேண்டியது இல்லே. அதே மாதிரி, நீ பகலதியா மாறும் போது கொடுக்கற முத்தம் பிரகாஷுக்கு இல்லே. இளவரசன் கிரீசனுக்கு. அது நான் இல்லே. நான் பிரகாஷ். இது தான் நிஜம். சூர்யா பத்தாயிரம் பொண்ணு கூட டான்ஸ் ஆடலாம் கிஸ் பண்ணலாம். கிளர்ச்சியில ரசாயன மாற்றங்கள் உடம்புல ஏற்படும். அது இயற்கை. தவிர்க்க முடியாது. மனித இயல்பு அது. ஆனா, என்னைக்குமே சூர்யா மைண்டுல ஜோ வேறே லெவல் தான். முத்தம் கொடுக்கறதுனால எல்லா நடிகைகளும் ஜோ ஆயிட மாட்டாங்களே ! அதே மாதிரி தான், நம்பலோட கிஸ்ஸும். சமி, சமிதான். ரீனா ரீனாதான். சமி ரீனாவா ஆக முடியாது.

சமி தலையை ஆட்டினாள் அவன் சொன்னது புரிந்ததனாள்.

யாழியின் ருத்ர கிரீசன் வருவானா ! யாழியை மீட்டிடுவானா !
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement