யாழியின் ருத்ர கிரீசன் - 19

#1
cover (17).jpg

யாழியின் ருத்ர கிரீசன் - 19

தமிழுக்கும் பிரகாஷுக்குமான காரசார பேச்சு வார்த்தைகளின் நடுவில் சமி கூடாரத்திலிருந்து பிரகாஷை அழைத்தாள்.

சமி : பிரகாஷ், சீக்கிரம் வாங்க ! ரொம்ப ப்ளீட் ஆகுது !

பிரகாஷ் : தொ ! வரேன் !

என்று சமியிடம் சொல்லி, தமிழின் முகம் கூட பார்க்காமல்,

பிரகாஷ் : அவளுக்கு மிஸ்கேரேஜ் ஆயிருச்சுடா ! ரீத்தாவே நினைச்சி பாருடா !

என்றவன் கூடாரத்தை நோக்கி வேகமாய் ஓடினான்.

நிகிலா சமி மட்டும் இருக்க மற்றவர்களை வெளியேற்றினான் பிரகாஷ்.

மயக்க வலியில் பிதற்றிக் கொண்டிருந்த மித்ராவின் முகத்தில் தண்ணீர் தெளித்தவன் கேட்டான்.

பிரகாஷ் : சமி, மெடிக்கல் கிட்ஸ் எப்போ வரும் ?

சமி : வர வழியிலே காட்டு யானைங்க ஜிப்பே இடிச்சி பெரிய கதையாயிருச்சி பிரகாஷ். கொண்டு வந்த கிட்.....

பிரகாஷ் : நமக்கு டைம் இல்லே, மருந்தும் இல்லே ! இன்ஜெக் பண்ணி அடுத்த வாரம் கிளீன் பண்ணி எடுக்க. இப்பையே ஏதாவது பண்ணனும் இல்லே மித்ரா போய்டுவா !

நிகிலா : இப்போ என்ன பண்றது ?

சமி : மருத்துவச்சி யாரையாவது கூட்டிட்டு வர சொல்லவா ?

நிகிலா : impossible ! இங்கிருந்து ஊர்குள்ள போகவே ஒரு மணி நேரமாகும்.

பிரகாஷ் : சோரி ! எனக்கு வேறே வழி தெரியலை. வயிறே வெட்டித்தான் ஆகணும். எத்தனை வாரம் நிகி ?

நிகிலா : 22 weeks

தமிழ் டக்கென்று கூடாரத்துக்குள் நுழைய, பிரகாஷ் கோவத்தோடு அவனை பார்த்து சொன்னான்.

பிரகாஷ் : வெளிய போடா ! வெளியே போன்னு சொல்றேன்லே !

தமிழ் : மச்சான் !

பிரகாஷ் : நான் உன் மச்சான் இல்லே ! டாக்டர் பிரகாஷ் ! வெளியே போ ! இல்லே நான் என்னே பண்ணுவேன்னு எனக்கே தெரியாது ! போயிரு !

தமிழ் : நான் பண்றேன் மச்சான் !

தமிழிடம் முகங் கொடுக்காத பிரகாஷ்,

பிரகாஷ் : நிகி, மிஸ்கேரேஜ் வீடியோ பிளேய் பண்ணு !

தமிழ் : மச்சான் நான் பண்றேன்டா.

பிரகாஷ் : நீ ஒரு மயிரும் கிழிக்க வேணாம் ! நீ பண்ணதெல்லாம் போதும் ! நானும் டாக்டர் தான். எனக்கு தெரியும் ! என் கண்ணு முன்னுக்கு நிக்காதே ! போயிடு !

தமிழ் : இல்லே, மச்சான் நான் !

அந்நேரம் கூட மித்ராவின் வாயில் இருந்து வந்த வார்த்தை தமிழ் தான்.

என்ன செய்வது என இவர்கள் பேசி கொண்டிருக்கையிலேயே, திடீரென மித்ராவுக்கு உயிரே போய்விடுவது போல் வலி ஒன்று அடிவயிற்றில் வந்ததது.

எப்படி விவரிப்பது அவ்வலியை.

கோடாரி கொண்டு நடு உச்சியில் அடித்தது போல, கத்தியால் பலமுறை குத்துவது போல, அரிவாளால் கழுத்தை அறுப்பதை போல, கூர்முனை கத்திக் கொண்ட பிளெண்டரை அடி வயிற்றில் சுழல விட்டதை போல.

இப்படி எல்லாம் விவரித்தாலும் வலியின் தாக்கத்தை சம்பந்தப்பட்ட மித்ராவால் மட்டுமே உணர முடிந்தது.

மா ! என உயிர் போகின்ற வலியில் அலறினாள் மித்ரா.

பிரகாஷை தள்ளி விட்டு தமிழ் முன்னோக்கி மித்ராவிடம் சென்றான்.

மித்ராவின் பாவாடையையும் பெண்டியையும் கழட்டி தூக்கி வீசினான். அவளின் கால்களை அகட்ட பெண்ணுறுப்பிலிருந்து ரத்தம் நிற்காமல் வழிந்தது. பெண்ணவள் வலியில் துடிதுடித்து நெளிந்தாள்.

எதிரே கிடந்த நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தவன் மித்ராவின் இருக் கால்களையும் தூக்கி அவனின் தோள் மேல் போட்டு கொண்டான்.

தமிழ் : Get me hot or warm water, scissors, towels and any disinfectant !

தமிழ் நவீன முறையில் மட்டுமின்றி பாரம்பரிய முறையிலும் எப்படி பிரசவம் பார்ப்பது என்று கற்று தேர்ந்தவன்.

பிரகாஷ் ஏக வசனத்துக்கு பேசி அவனை திட்டிய போது கரையாத தமிழின் மனம் பிரகாஷ் இறுதியாக சொன்ன ரீத்தாவே நினைச்சி பாருடா என்ற வார்த்தை மிருகமாகி போயிருந்தவனை கொஞ்ச நேரத்துக்கு டாக்டராக மாற்றி இருந்தது.

தமிழ் : பிரகாஷ், மித்ராவே உன் மேலே சாய்ச்சி ஒக்கார வை. செர்விக்ஸ் ஓபன் பண்ணனும்.

தமிழ் கேட்ட அத்தனை பொருட்களையும் சமி கொண்டு வந்து கொடுத்தாள். தமிழ் டெட்டோலில் கை கழுவி, துண்டில் கை துடைத்து, கையுறைகளை மாட்டிக் கொண்டான்.

தமிழ் : நிகிலா நீ இங்க வா. சமி நீ இங்க வா. நல்லா கேட்டுக்கோங்க. இது கொர பிரசவம். மித்ரா புஷ் பண்ற நிலைமையில இல்லே. சோ, நாமதான் மெனுவலா பேபியே வெளிய கொண்டு வரணும். பிரகாஷ் இப்படி பிடிச்சிருக்கு போது எனக்கு பேபி வெளிய கொண்டு வர ஈஸியா இருக்கும். ஆனா, அதுக்கு செர்விக்ஸ் திறக்கணும். எத்தனை மாசம் பிரகாஷ் ?

பிரகாஷ் : 22 weeks !

தமிழ் : 4 to 5 cm dilated பண்ணா போதும். பிரகாஷ் அவளை awakening வெச்சிரு !

தமிழ் நாற்காலியிலிருந்து எழுந்தான். ஒரு கையின் கையுறையை மட்டும் கழட்டி மித்ராவின் முகத்திற்கு நேராய் சென்று அவளின் தலையை கோதி, நெற்றியில் முத்தம் வைத்தான் தமிழ்.

வலி உயிர் போக, கண்களை கூட திறக்க முடியாமல் தவித்து போய் கிடந்த மித்ரா மங்கலான பார்வையை லேசாய் அவன் பக்கம் திருப்ப,

தமிழ் : சோரி !

கண்களை துடைத்துக் கொண்டான். அதோடு நிறுத்தவில்லை மித்ராவின் உதட்டோடு அவன் உதட்டை ஒன்றாக்கி முத்தமிட்டான்.இரண்டு நிமிடங்களுக்கு இடைவிடாது.

சமியும் நிகியும் அதிர்ச்சியாக இந்த நேரத்தில் இது தேவையா என்பது போல் பிரகாஷை பார்க்க, அவன் கண்களால் ஒன்றும் இல்லை என்று செய்கை செய்தான்.

இருந்தும் நிகிலாவுக்கு கோவம் வந்தது.

நிகிலா : Tamil can you stop this nonsense !

பிரகாஷ் : நிகி, அவன் என்ன செய்றான்னு எனக்கு தெரியும். Just leave him !

முத்தமாகட்டும், காதலாகட்டும் ஏன் மகப்பேறு ஆகட்டும். இதுபோன்ற எல்லா வேளைகளிலும் நமக்குள் ஏற்படும் ரசாயன மாற்றத்திற்கான ஹோர்மோன் பெயர் ஆக்சிடோசின் (Oxytocin).

அதிக ரத்த போக்கில் வலுவிழந்து கிடக்கின்றவளுக்கு ரசாயன கிளர்ச்சியை ஏற்படுத்த வேறு வழி இல்லை இதை விட்டால் தமிழுக்கு. யார் கொடுத்தாலும் முத்தம், முத்தம் தான்.

ஆனால், ஹோர்மோன் தாக்கம் எல்லாம் மனதுக்கு பிடித்தமானவர் தரும் அந்த ஒரு முத்தத்தில் மொத்தத்தையும் அடக்கும்.

மித்ராவுக்கு தன் மேல் காதல் என்று தமிழுக்கு நன்றாக தெரியும். இந்த காதலை கொண்டே உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அவளை காப்பாற்ற துணிந்திருந்தான் தமிழ்.

அவன் தந்த முத்தம் அவள் உதட்டில் ஓரமாய் பூத்தது. அவள் நெற்றில் இவன் நெற்றி வைத்து இடித்து,

தமிழ் : இப்போ, சொல்றேன். நான் இனி உன்ன கஷ்டப்படுத்த மாட்டேன். என் புட்டு மேல சத்தியம் !

தமிழ் மீண்டும் நாற்காலியில் அமர்ந்து அவனின் ருத்ராச்சத்தை கைகளில் பற்றி சிறிது நேரத்தில் கையுறையை கையில் மாட்டினான்.

பிரகாஷை பார்த்து தமிழ் தலையசைக்க, பிரகாஷ் மித்திராவின் இடுப்பை கொஞ்சம் மேல் நோக்கி தூக்க, சமியும் நிகியும் தமிழின் தோள் மேல் இருக்கின்ற கால்களை இன்னும் அகட்டி மேல் தூக்க மித்ராவின் இடுப்பு விலா எலும்பு கடாக் என்று சத்தமிட்டது.

மித்ரா : மா !

செத்து பிழைத்த வலியில் அலறினாள் மித்ரா.

தமிழ் அவனின் கையுறை கையை மித்ராவின் பெண்ணுறுப்பின் உள்ளே விட, அவள் வலி தாங்காது மீண்டும் அலறினாள்.

மித்ரா : முடியல ! முடியல ! முடியல தமிழ் !

பிரகாஷ் : கொஞ்சம் பொறுத்துக்கோ மித்ரா ! கொஞ்சம் ! கொஞ்சம் !

அவளை அப்படியே நெஞ்சில் சாய்த்துக் கொண்டு தாலாட்டுவதை போல் ஆட்டினான் பிரகாஷ் அவள் வலி குறைய.

அப்போதும் மித்ராவின் வலி குறையவில்லை. கதறிக் கொண்டே இருந்தாள்.

தமிழின் கை அவளின் பெண்ணுறுப்பில் மெல்லமாய் துழாவிய போதும் சொல்ல முடியா வலி அவளை கொல்ல, அவன் எழுந்து மித்ராவின் முகத்திற்கு நேராய் சென்று அவளிடம் பேசிக் கொண்டே இருந்தான்.

தமிழ் : மித்ரா என்ன பாரு ! மித்ரா ! உன் தமிழ் பாரு ! நான் உனக்கு வேணாவா ?! என்ன பாரு ! பாரு மித்ரா ! என் கூட நீ வாழ வேணாமா ? பாரு மித்ரா !

அவள் கண்கள் சொருக சொருக அவளை துவண்டு விடாமல் முத்தமிட்டு கொண்டே பனிக்குட நீர் பையை மெதுவாய் வெளியே நகர்த்தி கொண்டு வந்தான் தமிழ்.

பனிக் குடத்தை ஒரேடியாக வெளியாக்கிடும் முன், அந்த மரண வேதனையை கட்டு படுத்திட தமிழ், மித்ரா ஐ லவ் யூ என்று சொல்லி அவளை முத்தமிட்டான்.

கண்கள் அகல விரிந்து தன்னால் முடிந்த மட்டும் பலங்கொண்டு தமிழை தள்ளியவள் அலறினாள் மா ! என்று சமியும் நிகியும் கிடுகிடுத்து போகின்ற அளவுக்கு.

அவளின் உயிர் பிரியும் அலறலில் தமிழ் கையில் விழுந்திருந்தது இருபத்தி இரண்டு வார கரு பனிக்குடத்தின் உள்ளே இருந்தப்படியே.

கண்கள் சொருக அப்படியே பிரகாஷின் நெஞ்சிலே சரிந்து விழுந்தாள் மித்ரா.

தமிழ் கையில் தாங்கி பிடித்திருந்த அந்த கரு அசைவற்று இருந்தது.

தமிழுக்கு திடிரென்று ரீத்தாவின் பிரசவம் ஞாபகத்திற்கு வந்தது. அபப்டியே ஸ்தம்பித்து விட்டான்.

பிரகாஷுக்கு தெரியாத தமிழை பற்றி,

பிரகாஷ் : மச்சான் ! இட்ஸ் ஓகே ! ஜஸ்ட் டூ இட் !

பிரகாஷை ஏறெடுத்து பார்த்தான் தமிழ்.

பிரகாஷ் : இட்ஸ் ஓகே டா ! come on !

தமிழ் தயங்கி தயங்கி பனிக்குடத்தை ப்ளேட் கத்தியால் லேசாய் கீறினான்.

நெஞ்சம் கனத்து போய் பிரகாஷை பார்த்தான் தமிழ்.

அந்த கருவிற்கு கை கால்கள் இருந்தன. கண்கள் இன்னும் சரியாக அமையவில்லை போலும். உதடு வாயெல்லாம் ஒவ்வொன்றாய் உருவாகிக் கொண்டு இருந்திருக்கிறது.

பிரவீனாவின் சாவுக்கு மித்ராதான் காரணம் என்று அவளை எவ்வளவு துன்புறுத்தினானோ அதே போல், இன்று மித்ரா குழந்தையின் இறப்பிற்கு தமிழே காரணமாகி விட்டான்.

இதைத்தான் விதி என்பது.

யாழியின் ருத்ர கிரீசன் வருவானா ! யாழியை மீட்டிடுவானா !
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement