யாழியின் ருத்ர கிரீசன் - 17

#1
cover (15).jpg

யாழியின் ருத்ர கிரீசன் - 17

இவ்வளவு குழப்பம் தாங்காது ஐயோகோ ! என்று தனக்குத்தானே பேசிக் கொண்டு தமிழின் பின்னால் பிரகாஷ் போக சும்மா இருந்தால் அது பிரகாஷே இல்லையே அதனால் போகிறவனை நிறுத்தினான் பிரகாஷ்.

பிரகாஷ் : டேய் ! நில்லுடா ! என்னடா நடக்குது இங்கே ? யார்டா அவன் ? அவன் கிட்ட ஏன்டா முறைச்சிகிட்டு நிக்கிறே ! அவனும் சும்மா சொல்லக் கூடாது நல்ல ஜிம் பாடியாத்தான் இருக்கான். உனக்கேத்த மாதிரி ! அடிச்சிக்கிட்டு சாவுங்கடா ரெண்டு பேரும் !

தமிழ் : உன் புலம்பல கேட்க எனக்கு நேரம் இல்லே. பசிக்குது சாப்பிட எதாவது கொண்டு வா. போ !

தமிழ் பசிக்குது என்று சொன்னது எப்படித்தான் நிகிலாவின் காதில் விழுந்ததோ தெரியவில்லை. கையில் உணவுடன் அவர்களிடம் வந்தாள். வந்தவள் உணவு தட்டை தமிழிடம் நீட்டிடாமல் பிரகாஷிடம் நீட்ட அவனுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.

நிகிலாவிடம் உணவு தட்டை வாங்கி அவள் போக பார்த்தவன், தமிழ் பக்கம் திரும்பினான்.

பிரகாஷ் : மச்சான் ஆயிரம் சரக்கு வெச்சிக்கறது முக்கியம் இல்லே. அதுல ஒன்னாவது இப்படி பசிச்சே வயித்துக்கு சோறு போடணும் ! பார்த்தியா நம்ப ஆளே ! இந்தா புடி !

நீட்டிய தட்டிலிருந்து உணவை எடுத்த தமிழ் வாந்தி சத்தம் கேட்க திரும்பி பார்த்தான். பிரகாஷும் தான்.

பிரகாஷ் : வந்ததுலர்ந்து நானும் பார்க்கறேன் வாந்தியா எடுத்துக்கிட்டு இருக்கா ! உடம்பு சரி இல்லாத பிள்ளியே நீ வேறே போட்டு அந்த சாத்து சாத்தரே ! செத்து கித்து போய்ட்டா உன் கூட சேர்ந்த பாவத்துக்கு நானும் ஜெயில கம்பி எண்ணனும் போல !

பிரகாஷ் சொன்னது தமிழ் காதில் விழுந்தாலும் அவன் பார்வை என்னவோ வாந்தி எடுக்கும் மித்ரா மீதே இருந்தது. தட்டில் இருந்த கரிப்பாப்பை எடுத்தவன், அதை மீண்டும் அப்படியே வைத்தான்.

பிரகாஷ் : டேய், ஏன்டா வெச்சிட்டே ? ரோஷம் வந்துருச்சா ? மீசையில மண்ணு ஒட்டாத பரம்பரையே ? ஹீரோ சாப்டே மாட்டிங்களோ ?! வேணானா போ ! மிச்சம் !

தமிழ் : கண்டதையும் சாப்பிடாம நிறைய தண்ணீ குடிக்க சொல்லு.

பிரகாஷ் : டேய் நீ நல்லவனா கெட்டவனாடா ? என்னால முடியலடா !

தமிழ் : சொல்லு ! சொல்லு ! இங்கிருந்தே சொல்லு !

பிரகாஷ், அவன் சொன்னது போல் நின்ற இடத்திலிருந்தே நிகிலாவை அழைத்து தமிழ் சொன்னதை சொன்னான்.

தமிழ் : அப்படியே இதையும் சொல்லு ! நிறைய தண்ணீ குடிச்சி வயிறு வெடிச்சி செத்துறே சொல்லு !

தமிழ் அப்படி சொன்னானே தவிர தட்டில் இருந்த கரிபாப்பில் மீண்டும் கை வைக்கவே இல்லை.

பிரகாஷ் : அடேய் ! உன்னே நல்லவனா காட்டிக்கே என்ன ஏன்டா வில்லனாக்கறே ? இப்போ தெரியுதுடா நீ ஏன் ஹீரோன்னு ! எக்கச்சக்கமான கேர்ள் பிரெண்ட்ஸ். கோவம், அடி தடி, அழகு, அறிவு, பணம். அக்மார்க் ஒரு மட்டமான ஹை கிளாஸ் ஹீரோக்கு இருக்க வேண்டிய அத்தனை குவாலிட்டிசும் உன்கிட்ட இருக்கு ! நல்லா வருவே மச்சான் நீ !

சம்யுக்தா அவளின் கூடாரத்திலிருந்து கீழே ஓடம் இருக்கும் பாறைகளில் நடந்து இவர்களை நோக்கி வந்தாள்.

தமிழ் முகம் கழுவி வேப்பங் குச்சியில் பல் துலக்க கொண்டு வந்திருந்த துண்டை அவனிடத்தில் தந்தாள். ஆறு கரிபாப்புகளையும் தனியாக ஆசை தீர உண்டு கொண்டிருந்த பிரகாஷ் இதை பார்த்த மாத்திரத்தில் வாயில் வைத்த கரிப்பாப்பை கீழே நழுவ விட்டான்.

பிரகாஷ் : போச்சி ! இதுவும் போச்சா ? அது பொண்டாட்டினுச்சி இது புள்ளைக்கி அப்பான்னு சொல்லாம இருந்தா சரி !

சம்யுக்தா கையிலிருந்து துண்டை வாங்கி முகம் துடைத்தவன்,

தமிழ் : இப்போ, பரவலையா ?

சமி : ஹ்ம்ம்... feel better now. உங்க எல்லாருக்கும் வேண்டிய திங்ஸ் கொண்டு வர சொல்லிருக்கேன். இன்னிக்கி ஈவினிங் குள்ள வந்திடும்.

தமிழ் : தேங்கியூ.

சமி : ஆமா, எங்கிருந்து கண்டுபிடிச்சீங்க இந்த வேப்பங் குச்சியே ?

தமிழ் பாறை மீது சென்றமர்ந்தான்.

தமிழ் : அதுக்கு கொஞ்சம் உடம்பு வளையனும். எந்நேரமும் பொதி மாடு மாதிரி ஒக்காந்து கொட்டிக்கிட்டே இருக்க கூடாது.

பிரகாஷ் தட்டை மடியில் வைத்து ஒரு கையால் தமிழின் முதுகை பிடித்து இழுத்து அவன் முகத்தை முன்னே காட்டி,

பிரகாஷ் : டேய் ! என் மூஞ்சிய பார்த்து சொல்லுடா ! என் மூஞ்சியே பார்த்து சொல்லு !

தமிழ் : நான் உன்னே சொல்லலையே ! ஆமா தானே சமி ?!

சமியும் ஆமாம் என்று சிரித்தாள் தலையாட்டி.

பிரகாஷ் : நல்ல ஜால்ரா அடிங்க சமி !

தமிழ் தட்டில் கை வைத்து துழாவினான். தட்டு காலியாக இருந்தது.

தமிழ் : எங்கடா ?

பிரகாஷ் ஏப்பம் ஒன்றை விட்டு வயிற்றை தடவி காட்டினான் தமிழிடம். தமிழ் அவன் கையிலிருந்த துண்டால் பிரகாஷை அடித்தான்.

தமிழ் : பல்லு கூட தேய்க்காம எப்படித்தான் உனக்கு சாப்பாடு எறங்குதோ போ !

பிரகாஷ் ஒளித்து வைத்திருந்த ஒரு கரிபாப்பை வாயில் போட்டு மென்று,

பிரகாஷ் : தொ ! இப்படித்தான் !

சம்யுக்தாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

சம்யுக்தா : நீங்க ரெண்டு பேரும் எப்போதுமே இப்படித்தானா ?

பிரகாஷ் : நாங்க இப்படித்தான். நீங்க எப்படி ? பகலதியா இல்ல சமியா ?

சமி : பகலதி பத்தி உங்களுக்கு எப்படி தெரியும் ?

பிரகாஷ் : அது வந்து... நேத்து... நானு....

தமிழ் : உங்க டேபிள்ள பார்த்தோம். எதோ எழுதி வெச்சிருந்திங்க. அதை சொல்றான்.

பிரகாஷ் சிரித்தவாறே மழுப்பினான்.

பிரகாஷ் : ரொம்ப தேங்கியூ மச்சான்.

தமிழ் : பகலதி பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் ?

சமி : பகலதியோட முழு பேர் அதி ரூப பகலதி. தருமதேவதைன்னு அர்த்தம். பேருக்கு ஏத்த மாதிரி ஆள் ரொம்ப அமைதி. பயம். சாந்தம். பகலதி அப்பா பேர் தனஞ்சயன். ராஜாக்கு அக்கினி மாதிரி கோவம் வருமாம்.

பிரகாஷ் : பாவம் அவரு தமிழுக்கு கோவம் வந்து பார்த்ததில்லே !

தமிழ் : டேய் ! சும்மா இருக்க மாட்டே. நீங்க சொல்லுங்க ?

சமி : ராணி பேரு முகிலினி. இவுங்க ஊர் பேர் சுரதி கண்டம்.

பிரகாஷ் : அந்த பகலதிக்கு லவ்வர் இருக்கானா ?

சமி : நான் படிச்சே கதை வரைக்கும் இருக்கான். இளவரசன்.

பிரகாஷ் : யாரு ? நம்ப கிரீசனா ?

அவசரப்பட்டு சொல்லி விட்ட பிரகாஷ் அப்படியே தமிழை பார்த்து பல்லை காட்ட தமிழ் சமாளித்தான்.

தமிழ் : சோரி, நாங்களும் படிச்சோம். நீங்க எழுதி வெச்சதா.

சமி : இட்ஸ் ஓகே.

பிரகாஷ் : சொல்லுங்க அந்த கிரீசனே பத்தி.

சமி : அவன் ஒரு பயங்கரமான ஆளு.

பிரகாஷ் : ஏன் ? என்ன பண்ணான் ?

சமி : என்ன பணணல ?! அவ்ளோ கேர்ள் பிரெண்ட்ஸ். பொண்ணு இல்லாமா இருக்கவே முடியாது அவனால. ஆனா, அவ்ளோ அமைதியா இருப்பான். வீரன். அழகன். இந்த கண்ணு, இந்த மூக்கு...

சமி, பிரகாஷை கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்கி வந்தாள்.

தமிழ் நமட்டு சிரிப்புடன் அங்கிருந்து நகர, பிரகாஷ் போகிறவனை பார்த்து ;

தமிழ் : டேய் ! ஏண்டா கழட்டி விட்டுடுட்டு போற ?! மச்சான் ! கரிபாப் தரலனு பழிவாங்காதடா ! டேய் ! இருடா ! நான் ஒத்துக்கறேண்டா ! உன்ன மாதிரிலாம் என்னால முடியாதுடா மச்சான் ! நீ நிஜமாவே ஹீரோ தாண்டா பொண்ணுங்க விசயத்துல ! நான் ஜீரோ தாண்டா ! மச்சான் !

தமிழ் அவனுக்கு டாடா காட்டி அங்கிருந்து சென்று விட்டான். சமி பாறை மீது அமர்ந்திருந்த பிரகாஷை நோக்கி முட்டி போட்டு பூனை போல் அவனை சென்றடைந்தாள்.

சமி : ஆயிரம் பெண்கள் சுத்தி வந்தாலும் இந்த கிரீசன் தவமாய் கிடந்தது என்னவோ இந்த பகலதிக்காகவே.

பிரகாஷின் உதட்டில் சமி அவளின் விரல்களை படர விட்டாள்.

சமி : ஒவ்வொரு முறையும் இந்த அதரங்கள் பகலதியை தீண்டிட புணராமலே சுகம் கண்டேனடா உன் காதல் பைங்கிளி பகலதி நான் !

சமி, பகலதியாய் பிரகாஷை நெருங்கிட எப்போதும் லொடலொடக்கும் பிரகாஷ் இப்போது பேச்சின்றி சிலையாகி போனான். பிரகாஷின் வலது கையை சமி அவளின் கையால் தேய்த்து தேகம் சூடேற அவன் கழுத்து வரை கொண்டு போய் நிறுத்தினாள்.

பிரகாஷ் காலையிலேயே தமிழோடு மித்ராவை காப்பாற்ற போராடி நனைந்து போனது அவனின் ஒரே ஒரு டி-ஷர்ட். அதை கழட்டி பாறை மீது போட்டிருந்தான். அடிக்கும் சூரிய வெளிச்சத்திற்கு சட்டை நல்ல மொறு மொறுவென காய்ந்திடும் என நினைத்திருந்தான்.

அதனால் இப்போது சட்டையின்றி வெற்றுடலில் இருக்கும் அவன் மேல் சமியின் கை விரல்கள் பட உடல் சிலிர்த்தான் பிரகாஷ். அவளின் வாசம், அவளின் தீண்டல் எல்லாம் பிரகாஷை கிறங்கடிக்க அவனின் இதயம் உள்ளே சங்கீதம் வசித்தது.

பிரகாஷ் அப்படியே வசதியாக பின்னால் இருந்த பாறையில் தலைசாய்த்துக் கொண்டான். வெடவெடக்கும் உடலை சாமாளித்தான். சமி அவனை இன்னும் நெருங்கினாள். முட்டி போட்டு வந்தவள் முட்டி காலுடனே அவன் முன் நிற்க பிரகாஷுக்கு உடலெல்லாம் வியர்த்து கொட்டியது.

சமி ஆண்களை போல் நடுவில் பொத்தான் வைத்த லைட்டான நீல வர்ண முழு நீளக்கை சட்டை அணிந்து அதை பாதி கை வரை மடித்து விட்டிருந்தாள்.

அதில் முதல் இரண்டு பொத்தான்கள் போடவேயில்லை. உள்ளே போட்டிருந்த வெள்ளை ஸ்லீவ் கூட தெரிந்தது. லோங் ஜீன்ஸ் பேண்ட் கருநீல வர்ணத்தில் அவளின் அழகான கால்களை மறைத்திருந்தன.

பிரகாஷின் முகத்தை நின்றுக் கொண்டிருந்த சமி அவளின் இரு கைகளால் அழுத்தமாக பற்றினாள். அவளின் கூந்தலால் இருவரின் முகமும் மறைந்தது.

ஆசை தீர பிரகாஷின் இதழ்களை முத்தமிட்டு சுவைத்தாள் சமி. இல்லை பகலதி. அப்போது கூட பிரகாஷுக்கு மண்டையில் பாட்டுதான் ஓடியது.

ஊருக்கே சிட்டுவேஷன் சோங் பாடுபவன் அவனுக்கென்று பாடிக் கொள்ள மாட்டானா என்னே.

மரகத மாலை நேரம்
மமதைகள் மாய்ந்து வீழும்
மகரந்த சேர்க்கை காதல்தானா

இரவினில் தோற்ற தீயை
பருகிட பார்க்கும் பார்வை
வழிவது காதல் தீர்த்தம் தானா

வார்த்தைகள் தோற்க்குதே
தீண்டலே தரு மொழி நீயா

தூரங்கள் கேட்குதே
காதலின் வழித்துணை நீயா

எழுதிடவா…..இதழ் வரியா
இடைவெளிதான்….
பெண் உயிர் வலியா

கொடுப்பதும் பெறுவதும் மிச்சமில்லாமல் வற்றி போய் திரும்ப திரும்ப கேட்பது என்னவோ முத்தமொன்றே. அப்பேர் பட்ட முத்தத்தை சுரதி இளவரசி அதி ரூப பகலதி தர யாழியின் இளவரசன் கிரீசன் தேனான மகரந்தத்தை அனுபவித்து ருசித்தான்.

பிரகாஷின் சட்டையை பிடித்திருந்த சமி முத்தமிட்ட பிறகு வழக்கம் போல் மயக்கமாகி சரிய அவளுடனே பிரகாஷும் உருண்டு போய் பாறையிலிருந்து நீரோடையில் விழுந்தான்.

நடக்கின்ற கூத்தையெல்லாம் அங்கிருப்பேர் வேடிக்கை பார்ப்பதை இவர்கள் கண்டிடவில்லை.

மித்ராவும் பார்த்துக் கொண்டே தான் இருந்தாள். அவளுக்கும் ஆசைதான். ஆசை யாரை விட்டது இவளை விட. அதற்கு தமிழ் அல்லவா ஒத்துழைக்க வேண்டும். ரவா புட்டுக்கு மித்ரா ஈடு கொடுப்பாளா என்று தமிழைத்தான் கேட்கணும்.

இதுபோன்ற முத்தங்கள் எல்லாம் கிடைக்காது வேண்டுமென்றால் நாலு மொத்துக்கள் கிடைக்கும் என எண்ணியவள் நேற்று வரும் வழியில் பார்த்த அந்த பாதி மேப்பை பிரித்து பார்க்க அதில் ஒன்றுமே தெரியாமல் இருக்க அதிர்ச்சியாகி போனாள்.

எழுத்துக்கள் மட்டுமின்றி அதில் இருந்த வரைப்படைத்தையும் காணோம். எங்கே தான் போயிருக்கும்.

ஒரு வேலை நமக்குத்தான் சூரியன் சுள்ளென்று அடிக்கும் காலை நேரத்தில் கண் சரியாக தெரியவில்லையோ என நினைத்து மேப்பை மேலே தூக்கி ஏதும் தெரிகிறதா என்று பார்த்தாள் மித்ரா கால் போன போக்கில் நடந்தவாறு.

மித்ரா மேப்பில் கவனமாய் இருக்க, தமிழ் அவள் நடக்கையில் காலை குறுக்கே வைத்தான்.

தமிழின் கால் இடறி கீழே விழ போன மித்ரா வேண்டுமென்றே காலை குறுக்கே நீட்டி அவளை விழ வைத்த தமிழை பார்த்தபடியே, அவளின் வயிற்றை கெட்டியாக பிடித்துக் கொண்டு கீழே விழுந்து அவள் வயிறு மண்ணை தொட ; உயிர் போகின்ற வலியில் தமிழ் ! என அலறினாள் அவனை நோக்கி கை நீட்டி.

யாழியின் ருத்ர கிரீசன் வருவானா ! யாழியை மீட்டிடுவானா !
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement