யாழியின் ருத்ர கிரீசன் - 16

Advertisement

cover (14).jpg

யாழியின் ருத்ர கிரீசன் - 16

நான் உன் பொண்டாட்டி இல்லையா என்ற மித்ராவின் கேள்வி வாக்கியம் திரும்ப திரும்ப பிரகாஷின் காதில் கேட்டது.

ஏன் ? எப்படி ? என்ற அதிர்ச்சியோடு பிரகாஷ் நண்பன் தமிழின் தோளில் கை வைத்து,

பிரகாஷ் : எப்படா தாலி கட்டுனே ?! சொல்லவே இல்லே ! ஒன்னா பறந்து வந்திங்களே அப்பையா ?

தமிழின் காலின் கீழே கதறிக் கொண்டிருப்பவளை, தமிழ் ஒரு கையால் மேலே தூக்கினான். மித்ராவின் கைகளை இறுக்கமாக பற்றினான். அவள் வலியால் துடித்தாள்.

மித்ரா : தமிழ், வலிக்குது தமிழ் ! விடு தமிழ் !

பிரகாஷ் குறுக்கே புகுந்தான்.

தமிழின் கையை பிடித்து, கண்டிப்பான குரலில் சொன்னான்.

பிரகாஷ் : விடு மச்சான் !

தமிழ் யார் சொல்வதையும் கேட்கவில்லை. வலியில் துடிக்கின்ற மித்ராவின் முகத்தை மட்டுமே பார்த்து ரசித்தான். மித்ராவோ வலியில் துடித்தாள் புழுவாய்.

தமிழின் மனசாட்சி அற்ற செயலல்ல கடுப்பாகி போனான் பிரகாஷ். கோவதோடு,

பிரகாஷ் : தமிழ் ! விடுன்னு சொல்றேன்லே !

அவ்வளவு பலங் கொண்டு பிடித்திருந்த தமிழின் கையை பிரகாஷ் முறைத்தவாறே பிடித்து அவனின் பலங் கொண்டு தூக்கினான்.

மித்ரா தப்பித்தோம் பிழைத்தோம் என ஓரமாய் ஒதுங்க, தமிழ் கோவத்தோடு பிரகாஷ் பிடித்திருந்த அவனின் கையை உதறி மித்ராவை பார்த்தான் எரித்துவிடும் பார்வையில்.

தமிழ் : பிரகாஷ் காப்பாத்திட்டான். தப்பிச்சிட்டேன்னு நினைக்கிறியா ?! தப்பு கணக்கு போடாத ! என்னைக்குமே நீ என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது. எவ்ளோ தூரம் ஓடி போய் ஒழிஞ்சே. கடைசியா பார்த்தியா எங்க வந்து நிட்கறேன்னு ! அதான், கர்மா இஸ் பூமேரேங் மித்ரா திருவாசகன் ! சோரி மித்ரா தமிழ் செல்வன் !

மித்ரா கதறலை நிறுத்தவில்லை. நிகிலாவின் பின்னால் ஒளிந்துக் கொண்டு தமிழை பார்க்கவே பயந்தாள். கையெல்லாம் நடுங்க ஏற்கனவே காய்ச்சல் வேறு. அழுத மூக்கில் சளி வேறு. ஒன்றையும் துடைக்கவில்லை.

பிரகாஷ் என்ன நடக்கிறது என்று கதை தெரியாமல் விழித்தான்.

தமிழிடம் பேசிய மறுநாளே பாப்பு சொன்னதை போல் எல்லா தெய்வங்களுக்கும் செய்ய வேண்டிய நேர்த்திக் கடன்களை செய்து ரெடி ஆகினாள்.

காலை ஆறு மணிக்கே கிளம்பி விட்டாள் கோட்டு மலை புள்ளையார் கோவிலுக்கு. குட்டி விநாயாகவும் அவளுடன்தான் இருந்தார். மஞ்சள் சேலை கட்டி பயபக்தியோடு விநாயகரை வணங்கி, சொன்னது போல் அவருக்கு 108 தேங்காய்களை உடைத்து அர்ச்சனை செய்து அங்கிருந்து நேராய் செந்தூல் ஆதீஸ்வரன் கோவிலுக்கு சென்றாள் பாப்பு.

போன வேகத்தில் முதலில் சிவனுக்கு சிறப்பு பாலபிஷேகம் நடக்க சொக்கநாதனை நன்றாக வேண்டிக் கொண்டாள். வீட்டில் இருக்கும் லிங்கத்திற்கும் பூஜைகளை சிறப்பாய் முடித்திருந்தாள் பாப்பு.

அதற்கடுத்து ஆதீஸ்வரன் கோவில் பக்கத்திலியே வீற்றிருக்கும் செந்தூல் காளி கோவிலுக்கு சென்றாள். அம்மனுக்கு வேப்பிலை சாத்தி கோவிலை சுற்றி அங்கப்பிரதேசம் செய்து இறுதியாக பத்து மலை திருத்தலத்திற்கு சென்றாள்.

காலில் செருப்பின்றி பால் குடம் தூக்கி 272 படிகளை ஏறி முருகனை மனம் உருகி வேண்டி களைத்து போய் மலைக்குள் இருக்கின்ற சின்ன படிக்கட்டினில் அமர்ந்தாள் பாப்பு.

பச்ச தண்ணீர் கூட பல்லில் படாமல் காலையிலிருந்து இவ்வளவு பரிகாரத்தையும் செய்தவளுக்கு லேசாய் தலை சுற்ற ஆரம்பித்தது. புள்ள தாச்சி வேறு.

மயக்கம் கண்ணை சொருக அப்படியே படியின் தூணில் சாய்ந்தவள், விழுந்தாள் தியானத்தில் இருந்த வயதான பெண்ணொருவர் மடியினில்.

முகத்தில் தண்ணீர் தெளிக்க எழுந்தவள்,

பாப்பு : சோரி, பாட்டி. கொஞ்சம் மயக்கம் வந்துருச்சி. அதான் விழுந்துட்டேன். தியானம் கலஞ்சிருச்சா. மன்னிச்சிருங்க பாட்டி.

பாட்டி சிரித்தார்.

பாட்டி : நீ சாப்டாதானே உள்ள இருக்கற குழந்தையும் சாப்பிடும். பட்டினி போடறியா ? உன் புருஷன் மேல உள்ள கோவமா ?

பாப்பு : ஐயோ ! பாட்டி. நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க. எனக்கு என் வீட்டுக்காரர் மேல கோவம்லா இல்லே. அவர் ஒரு பெரிய விசயத்துல ஈடுபட்டுருக்காரு. அதுல ஜெய்ச்சி வீட்டுக்கு நல்லப்படியா வரணும்னு தான் நானும் பாப்பாவும் இதெல்லாம் பண்ணோம்.

பாட்டி : அவ்ளோ பிடிக்குமா உன் புருஷனே ?

பாப்பு வெட்கப்பட்டு சிரித்தாள்.

பாப்பு : ஹ்ம்ம்.... லவ் மேரேஜ் பாட்டி.

பாட்டி : நான் ஒரு இடம் சொல்றேன். ரொம்ப சக்தி வாய்ந்த கோவில். அங்க போறியா ?

பாப்பு : எங்க பாட்டி ? சொல்லுங்க ? என் தமிழுக்காக நான் எங்க வேணும்னாலும் போவேன்.

பாட்டி : நீ கர்பமா இருக்கியே ?!

பாப்பு : அதுக்கென்ன பாட்டி ? நான் என்னையும் பாப்பாவையும் பத்திரமா பார்த்துக்குவேன். நீ சொல்லு எங்கே போனும் ?

பாட்டி : காட்டு கோவில். பயப்படாம தனியா போவியா ?

பாப்பு : போவேன் பாட்டி. எனக்கு ஒன்னு ஆகாது. நாங்க கும்பிடற சிவன் எங்களை கைவிட மாட்டாறு.

பாட்டி : காராக் காட்டுக்குள்ள சக்தி வாய்ந்த வீரபத்திரன் கோவில் இருக்கு. அங்க போ. இது மத்த கோவில் மாறி இல்லே. நல்லா கேட்டுக்கோ. விடியற்காலை நேரம் தான் நீர்வீழ்ச்சிலர்ந்து கீழே கொட்டர தண்ணீ வத்தி கோவில் தெரியும். ஒரே இருட்டு. பெரிய சிலை. சின்ன அகல் விளக்கு கொண்டு போ. எக்காரணத்தை கொண்டும் தீபம் அணைய கூடாது. கோவில் படிக்கட்டுல உன் மிஞ்சி படர வரைக்கும். போகும் போது வெத்தலை,பாக்கு,சுருட்டு எல்லாம் எடுத்து போ.

பாப்பு : சரி, பாட்டி. நான் இப்பவே கிளம்பறேன். அப்போதான், சரியா இருக்கும்.

பாட்டி : தீர்க்க சுமங்கலியா இரு. ஓம் நமச்சிவாய !

பாப்பு பாட்டியிடமிருந்து விடை பெற்று இரண்டு அடிகள் தான் எடுத்து வைத்திருப்பாள். பாட்டியின் குரல் மீண்டும் கேட்டது.

பாட்டி : குட்டி விநாயகனே எடுத்து போ ! பயத்துக்கு துணையா இருப்பான்.

முதலில் தலையாட்டிய பாப்பு, பின் யோசித்தாள். பாட்டிக்கு எப்படி தன்னிடம் இருக்கும் குட்டி விநாயகனை பற்றி தெரியும் என.

பின்னால் திரும்பி பாட்டியிடமே கேட்கலாம் என்றால் அதற்குள் பாட்டி காணாமல் போயிருந்தார்.

இனியும் தாமதிக்க கூடாது என பாப்பு பாட்டி சொன்ன வீரபத்திரன் கோவிலுக்கு இன்றே சென்றிட வேண்டும் என முடிவெடுத்தாள்.

பாப்புவின் கார் காராக் காட்டை நோக்கி பறந்தது. அவளுக்கு தெரியுமா என்னே அவளின் காரமுறுக்கு அங்குதான் இருக்கிறான் என்று.

பாப்பு நினைத்ததோ இன்று போய் சாமி கும்பிட்டு நாலா வந்த விடலாம் என்று. பார்ப்போம் சிவனெழுதிய திருவிளையாடலை.

நேற்று நடந்த சலசலப்பில் நிகிலா பிரகாஷ் மட்டுமே பேசிக் கொண்டனர். பிரகாஷும் இப்போதைக்கு தமிழிடம் ஏதும் கேட்காமல் இருப்பதே நல்லது என விட்டு விட்டான்.

சூடு தணிந்ததும் நிச்சயமாய் தானாகவே வந்து சொல்வான் என பிரகாஷுக்கு நன்றாய் தெரியும்.

இரவு அனைவரும் லேட்டாகத்தான் படுத்தனர். மித்ரா நிறுத்தாமல் வாந்தி எடுத்தாள். தமிழின் கூடாரத்தின் பக்கமாய். வாந்தி எடுக்கும் சத்தம் தமிழின் தூக்கத்தை கலைத்தது.

கடுப்பில் வெளியே வந்தவன் பாதி தூக்கத்தோடு மித்ரா எங்கே இருந்து வாந்தி எடுத்துக் கொண்டிருக்கின்றாளோ அங்கே சென்றான்.

மித்ரா ஒட்டப் பந்தயம் ஓடுபவர்களை போல் அமர்ந்துக் கொண்டு நெற்றியின் இறுப்பக்கத்தையும் விரல்களால் அழுத்தி பிடித்திருந்தாள்.

தமிழ் போன வேகத்திற்கு மித்ராவின் தலையை தட்டினான். அவள் கீழே விழ முட்டியெலாம் சீராய்ப்பு ஆகி போனது.

தமிழ் அவளின் இருகைகளையும் பின்னால் வளைத்து பிடித்துக் கொண்டான். மித்ராவின் பூரான் ஜடையை கொத்தாக பிடித்து அப்படியே அவளை தர தர வென்று தண்ணீருக்குள் முங்கி எடுத்தான்.

பாவம் மித்ரா மூச்சு முட்டியது அவளுக்கு. தத்தளித்தாள். இது இரண்டு மூன்று முறை தொடர, தூங்கியவனை காணவில்லையே என பிரகாஷ் தேட; மித்ராவை இவன் பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் காட்சி கண்ணில் பட்டது.

தமிழை மனதில் திட்டிக் கொண்டே பிரகாஷ் கூடாரத்திலிருந்து பாறைகளில் ஓடி தமிழை அடைந்தான். அவனிடமிருந்து மித்ராவை வலுகட்டாயமாக இழுத்து பிடித்து காப்பாற்றினான்.

காலையிலேயே நண்பர்களுக்குள் ஓடை தண்ணீரில் வாய் சண்டை மித்ராவில்.

தமிழ் : மச்சான் விட்ரு ! இவ சாகனும் ! இவளாம் உயிரோடையே இருக்க கூடாது ! நீ போய்டு மச்சான் ! நீ போயிடு !

பிரகாஷ் : தமிழ், எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு ! என் கிட்டே அடிவாங்கிறாத ! ஒழுங்கு மரியாதையா மித்ராவே விடு ! மித்ராவே விடுங்கறேன்லே !

தமிழ் : உண்மை தெரிஞ்ச நீயே இவளை மன்னிக்க மாட்டே !

பிரகாஷ் : அதுக்குதான் வெயிட் பண்றேன் ! சொல்லு ! என்ன உண்மை ? உனக்கும் மித்ராக்கும் என்ன ? சொல்லித் தொலை !

தமிழ் : இவ அப்பன்கிட்ட சொல்லி என் பிரவீனாவே சிமெண்ட் லாரி வெச்சி accident பண்ணாதே இவ தாண்டா !

பிரகாஷின் பிடித் தளர்ந்தது. தமிழ் சொன்னதை கேட்டு ரெண்டு அடி பின்னாலே சென்று விட்டான்.

தமிழின் பிடி இறுகியது. உண்மையில் மித்ரா மயக்கமாகி ரொம்ப நேரம் ஆகி விட்டது.

திடீரென தமிழின் கருவிழிகள் அங்கேயும் இங்கேயும் கண்ணுக்குள் கபடி ஆடின. உள்மனது ஏதோ சொல்லியது. கெட்ட வடை ஒன்று எங்கிருந்தோ வந்தது.

என்ன தோன்றியதோ மித்ராவின் ஜடையை அப்படியே தண்ணீருக்குள் விட்டுவிட்டு வேகமாக சம்யுக்தாவின் கூடாரத்திற்கு விரைந்தான்.

உள்ளே சென்றவன் அவளை ஒரு பொருட்டாய் மதிக்கவில்லை. அவள் தூங்கி கொண்டிருந்தாள். சம்யுக்தாவின் மேஜையில் கிடந்த புத்தகங்கள், காகிதங்கள், பேனா, மடிக்கணினி என எல்லாவற்றையும் தள்ளி தள்ளி வைத்து அவன் தேடியது கிடைக்கிறதா என்று பார்த்தான்.

கிடைக்கவில்லை. எங்கே போனது என்று இடுப்பில் கை வைத்து திறந்திருந்த கூடாரா வாசலை வெறித்து பார்த்தான் தமிழ்.

தூரத்தில் அஜய்யுடன் இன்னும் நான்கைந்து பேர் நடந்து சம்யுக்தாவின் கூடாரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

கண்கள் சிவக்க அவர்களை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் தமிழ்.

மித்ராவை, நிகிலாவின் கையில் ஒப்படைத்து விட்டு சம்யுக்தாவின் கூடாரத்தை நோக்கி ஓடினான் பிரகாஷ்.

அங்கு போய் அவளை என்ன செய்ய போகிறானோ என்று எண்ணி. தமிழின் மிக பெரிய பிரச்சனை கோவம் வந்தால் கண் மண் தெரியாமல் போய்விடும். எல்லாம் நொடிப்பொழுதில் தும்சமாகிடும்.

பிரகாஷ் கூடாரத்தின் உள்ளே நுழைய அனல் கொதித்தது. என்னடா இது இன்னும் வெயில் கூட வரவில்லையே.

இப்போதுதானே மணி விடியற்காலை ஆறு என்று மண்டை சொறிந்தவன் தமிழ் கோவத்தோடு நின்று முன்னோக்கி வருபவர்களை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தான்.

இவன் ஏன் வருபவர்களை இப்படி பார்த்துக் கொண்டிருக்கிறான் என புரியாமல் அவனின் தோளை குலுக்கினான் பிரகாஷ்.

பிரகாஷ் : யாரு மச்சான் ?! ஏன் இவ்ளோ கொலை வெறி ? தெரிஞ்சவங்களா இல்லே அடி வாங்கனவங்களா ?

தமிழ் : இனி மேல் வாங்க போறவங்க !

தமிழின் பார்வை வருபவர்களின் மேலிருந்து அகலவில்லை. கழுத்தை மட்டும் லேசாய் ஆட்டி,

தமிழ் : அந்த புக்கே எடு.

பிரகாஷ் எந்த புத்தகத்தை சொல்கிறான் என்று சுற்றி முற்றி பார்க்க, தமிழ் சொன்னான்.

தமிழ் : பகலதி கையில.

பிரகாஷ் அவன் சொன்னது போல் புத்தகத்தை கட்டியணைத்து தூங்கி கொண்டிருந்த சம்யுக்தாவிடமிருந்து சத்தம் போடாமல் எடுத்திட்டான்.

எடுத்த வேகத்தில் தமிழை கூர்ந்து கவனித்தான். இவன் ஏன் சம்யுக்தாவை, பகலதி என்று சொல்ல வேண்டும் என. அவன் யோசிக்கையில் தமிழ்,

தமிழ் : திருப்பு, ஒவ்வொரு பக்கமா திருப்பு.

பிரகாஷ் ஏன் என்ற கேள்வியை கேட்கவில்லை. தமிழ் சொன்னது போல் ஒவ்வோரு பக்கமாய் திருப்பினான்.

தூரத்தில் வந்தவர்கள் இப்போது சம்யுக்தாவின் கூடார வாயிலை நெருங்க, பிரகாஷ் திருப்பிய பக்கத்தில் தமிழ் கை வைத்து நேரராய் தடவி விட, மிகச் சரியாக வந்தவர்கள் கால் வாசலில் படாமல் எடுத்த அடியை அப்படியே நிறுத்தியது செங்குத்தாய் பறந்து போய் வீரம் குறையாமல் நின்ற தங்க பிடிக் கொண்ட நீண்ட வாள்.

வாசலில் நிற்பவன் தமிழை பார்க்க, தமிழும் குனிந்திருந்த அவனின் தலையை மேலே தூக்கி முன்னிருப்பவனை பார்த்தான் கர்வத்தோடு.

தமிழின் கண்களில் கூர்மையான கனல் பார்வை. காரணம் தான் தெரியவில்லை. இடுப்பில் இருந்த கைகளும் கீழே இறங்கவில்லை.

அவனின் முதுகில் இருந்த ருத்ரனின் படம் வழக்கம் போல இம்முறையும் வெடிக்க போகும் எரிமலையை போல் கொதித்துக் கொண்டிருந்தது.

இதை பார்த்த பிரகாஷ் ஒரு கணம் கண்கள் மூடி திறக்க, இதற்கு முன்பு பிரகாஷுக்கு நடந்த சம்பவங்கள் அவன் கண் முன் வந்து போயின. அவனால் சரியாக யூகிக்க முடியவில்லை. ஆனால், அவனால் அவனையே பார்க்க முடிந்தது.

இறந்து போன ரீனாவை சவக்கிடங்கிலிருந்து தூக்கி கொண்டு நேராய் பிரகாஷ் செல்வது தமிழிடமே. சுடுகாட்டில் அமர்ந்திருக்கும் தமிழின் காலுக்கு அடியில் பிரகாஷ் அவன் தூக்கி வந்த ரீனாவை படுக்க வைக்கிறான். அவனால் அவ்வளவு தான் பார்க்க முடிந்தது.

அதிர்ச்சியில் கண்களை மூடித் திறந்தவன் தமிழை திரும்பிப் பார்த்தான் என்ன நடக்கிறது என்று புரியாமல்.

தமிழ் வந்திருப்பவனை பார்த்து சொன்னான் கம்பிரமாய் ஒரு இளவரசன் தொனியில்.

தமிழ் : எச்சரிக்கிறேன் விருசபர்வா ! குறி தப்பவில்லை ! உயிர் பிச்சை அளிக்கிறேன் ! வந்த வழி சென்றிடு ! யாழியின் காற்றை கூட உன்னால் தீண்ட இயலாது விருசபர்வா ! இந்த ருத்ர இருக்கும் வரை ! யாழியின் இளவரசன் ருத்ர இருக்கும் வரை !

தமிழ் மீது பதித்திருந்த கண்களை பிரகாஷ் அகற்றவே இல்லை. கூடவே எங்கிருந்தோ சங்கு ஊதுகின்ற சட்டம் வேறு கேட்டது.

மூச்சு வாங்க அவன் சொன்னதைக் கேட்டவனுக்கு நடப்பதெல்லாம் நினைத்ததை விட பயங்கராகவும் ஆபத்தானதாகவும் தெரிந்தது.

தமிழின் எதிரில் சம்யுக்தாவின் கூடார வாசலில் நின்றிருந்த விருசபர்வன் அவமானப் பட்டிருந்தான். தமிழின் வார்த்தை அவனை காரி உமிழ்ந்தது போல் இருந்தது. அவன் முகம் ஈயாடவில்லை. சிலையாய் நின்றிருந்தான் விருசபர்வன்.

தமிழின் மாற்றத்திற்கு காத்திராமல், பிரகாஷ் பேசினான்.

பிரகாஷ் : உனக்கு அவனே தெரியுமா மச்சான் ?!

தமிழ் உடலை குலுக்கி சத்தமின்றி புன்னகைத்தான் உதட்டோரமாய். வா போகலாம் என்று தலையை ஆட்டினான் தமிழ்.

பிரகாஷ் அவன் பின்னாலே சென்றான். தமிழ் அந்த விருசபர்வனை கடக்கும் போது கம்பிரமாய் வீற்று நிக்கும் வாளை அவன் கைகளால் எடுத்தான். இருவரின் விழிகளும் பல ரத்தம் பார்த்த கதைகளை பேசின.

பார்வையாலே ஒருவரை ஒருவர் குத்தி கிழித்துக் கொண்டனர். தமிழும் பிரகாஷும் சம்யுக்தாவின் கூடாரத்திலிருந்து வெளியாக விருசபர்வன் உள்ள சென்றான்.

யாழியின் ருத்ர கிரீசன் வருவானா ! யாழியை மீட்டிடுவானா !
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top