யாழியின் ருத்ர கிரீசன் - 15

Advertisement

cover (39).jpg

யாழியின் ருத்ர கிரீசன் - 15

அனைவரும் பேசி பேசி மணி ஒன்றாகி இருந்தது. மித்ராவின் மீது பதிந்திருந்த தமிழின் பார்வையை பிரகாஷ் கவனிக்காமல் இல்லை.

ஆருயிர் தோழன் என்னவோ மறைக்கிறான் என்று மட்டும் பிரகாஷுக்கு நன்றாய் தெரிந்தது. படுத்துக் கொண்டே ஒரு கால் மேல் இன்னொரு காலை போட்டு மர குச்சியை கைகளில் வைத்து தமிழின் முதுகை குத்திக் கொண்டே, பாடினான்.

பிரகாஷ் :

காதல் என்பது
பொல்லாத தீ தான் மறக்க
நினைத்தும் நெஞ்சோடு
நீ தான்

கண்கள் முழுதும்
நீ வந்த கனவு விடிந்தாலும்
முடியாதடி

உன்னோடு நான்
வாழ்ந்த நொடிகளே போதும்
ஜென்மம் ஈடேருமே உன்
விரல் தருகின்ற வெப்பங்களை
நினைத்தால் நெஞ்சில் வலி கூடுமே

அன்பே அன்பே
ஏன் கண்ணில் விழுந்தாய்
அன்பே அன்பே ஏன் நெஞ்சில்
நுழைந்தாய் அன்பே அன்பே
ஏன் விட்டு பிாிந்தாய் அன்பே
அன்பே புயல் போலே கடந்தாய் !

தமிழ் : நான் ஒன்னு சொல்லட்டுமா ! நீ பேசாமே செத்துருக்கலாம்டா ! இப்படி பாடி பாடி எங்களை சாகடிகரத்துக்கு !

பிரகாஷ் : போடா ! ஆண்டவனே நம்ப பக்கம். நிகி டார்லிங் எனக்கு ஒரு டவுட்டு. நீ என் பிரெண்டு வாசுவே பார்த்துறிக்கியா ?

நிகிலா : நான் இல்லே. மேடம் பார்த்து இருக்காங்க.


தமிழ் ஆர்வக் கோளாறாய் கேட்டிட,

தமிழ் : ஏன் ? ஏன் ? ஏன் ?

பிரகாஷ் : டேய் ! நீயென் இப்போ ? மித்ரா வாசு பார்த்தா என்னே ? என்ன பார்த்த உனக்கென்ன ? ஓவர் ஆட்டம் உடம்புக்கு நல்லதில்ல தம்பி. அடங்குங்க ! நீ சொல்லு மித்ரா.

பொறுமையாய் வாய் மூடி கொண்டான் தமிழ்.

மித்ரா : நான் வாசுவை பஸ் ஸ்டாப்ல பார்த்துருக்கேன். எனக்கு வந்த கோல். ஒரு மாஸ்க் கொடுத்து அதை போட்டுக்கிட்டு அந்த வாசு கூட ரொம்ப நெருக்கமா இருக்கணும்னு சொன்னாங்க. நான் முடியாதுன்னு சொன்னப்போ நிகிலாவே பிடிச்சி வெச்சிக்கிட்டு கொன்றுவேனு மிரட்டனாங்க. எனக்கு வேறே வழி தெரியல. அவுங்க சொன்ன மாதிரி செஞ்சேன். அவ்ளோதான்.

பிரகாஷ் : அதுக்கு அப்பறம் பகலதின்றே நேம் நீ எங்க, எப்போ யூஸ் பண்ணே ? ஞாபகம் இருக்கா ?

மித்ரா : உன்னே கடல் அலை செட் பண்ணி கடத்தும் போது நான்தான் டெம்போரரி ஹார்ட் பீட் ஸ்டாப் பண்ற மெடிசன் இன்ஜெக் பண்ணேன். mortuary ரூம்லர்ந்து உன்னே ஷிப்ட் பண்ணி கொண்டு போகும் போது நானும் நிகிலாவும் சேர்ந்து உன்ன அவுங்ககிட்ட இருந்து கடத்தி கொண்டு வரும் போது உனக்கு ஹார்ட் மறுபடியும் துடிக்க ஆரம்பிச்சிருச்சி. நீ வேறே பகலதி, பகலதினு பினாத்திக்கிட்டு இருந்தே. சோ, நான் அந்த பேரையே மெய்டன் பண்ணிக்கிட்டேன்.

பிரகாஷ் : அப்போ நீ ஒரு தடவ கூட பகலதின்ற பேர்ல என்ன வந்து பார்த்தது இல்லையா ?!

படுத்திருந்த பிரகாஷ் இப்போது எழுந்து உட்கார்ந்து கொண்டான்.

மித்ரா : இல்லே. ஆனா, ஒரு தடவ நீ இந்த காராக் காட்டுக்கு வந்தப்போ இங்க. ஆனா, நீ மயக்கத்துல இருந்த. சோ, நானும் நிகிலாவும் மத்தவங்க பார்வையே உன் மேலே திருப்ப நாங்க படிச்சே மாதிரியே அந்த ஷர்பலிங்கத்த உன் விலா கிட்ட டேட்டுவா குத்திட்டோம். அது கெமிக்கல்னு யார்க்கும் தெரியாது. கடத்தறவனுங்க நீதான் தமிழ்னு நம்பனும். சோ, அதான் இந்த ஏற்பாடு.

நிகிலா : ஆனா, அந்த ஒரிஜினல் டேட்டு தமிழ்கிட்ட இருக்கு !

தமிழ் : இது என் உடம்பு. எது இருக்கும் இருக்காதுன்னு எனக்கு தெரியும். நான் சொல்றேன் நீங்க சொல்றே மாறி எந்த டேட்டுவும் என் உடம்புல இல்லே.

மித்ரா வேகமாய் எழுந்தாள். நேராய் தமிழிடம் சென்றாள். அவனின் சட்டையை பிடித்து மேலே இழுக்க அவன் எழுந்தான்.

மித்ரா அவனின் பேண்டை இடுப்பு பகுதியின் கீழே கொஞ்சம் இறக்கி விலா எலும்பில் கை வைத்து சில வரி மந்திரங்கள் சொல்லி கை எடுக்க தமிழின் இடுப்பு விலா பகுதியில் அந்த ஷர்பலிங்கம் வடிவம் தெரிந்தது.

அதிர்ச்சி அடைந்த தமிழ்,

தமிழ் : நோ ! நான் நம்ப மாட்டேன் ! இதுலாம் சுத்த பைத்தியக்காரத்தனம் ! நீ மந்திரம் படிச்சே. நான் பார்த்தேன். சோ, இது பொய் !

தமிழ் இருப்பதை இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்க பிரகாஷோ அவனின் டி-ஷர்ட்டை தூக்கி பேண்டை கொஞ்சம் விலா எலும்பின் பக்கம் இறக்கி இல்லாத ஷர்பலிங்கத்தை தேடிக் கொண்டிருந்தான்.

நிகிலா : என்னே டார்லிங் தேடறே ?

பிரகாஷ் உதட்டை பிதுக்கி,

பிரகாஷ் : எனக்கு இல்லே அந்த மாதிரியான டேட்டு ! அவனுக்கு மட்டும் இருக்கு ! கடவுள் ரொம்ப மோசம் ! ஓரவஞ்சனை பார்க்கறாரு ! அவனுக்கு மட்டும் நிறைய கேர்ள் பிரெண்ட்ஸ். அவனுக்கு மட்டும் இந்த மாதிரி சூப்பர் பவர். அப்போ, நான் என்னே தக்காளி தொக்கா ?! நான் பாவம் இல்லையா ?!

நிகிலா : அச்சச்சோ !

நிகிலா சிரித்தாள்.

பிரகாஷ் : ஏற்கனவே பகலதின்ற பேர்ல என்ன மீட் பண்ண ஜீவராசி யார்னே இன்னும் தெரியல ! அது வந்து என்ன கதை சொல்ல போதோ ! மித்ரா நான் இல்லன்னு சொல்ற ! நிகி நீயா ?!

நிகிலா : பிரகாஷ் இந்த கேள்விக்கும் பதில் அந்த புக்ல இருக்கு. அந்த புக் இப்போ அந்த கெட்டவன் கையிலே இருக்கு. அவனுக்கு நடக்க போறது நடந்துகிட்டு இருக்கறது எல்லாமே தெரியும். இவென், நாம அவனை எப்படி அட்டேக் பண்ண போறோம்னு கூட அவனுக்கு தெரியும்.

பிரகாஷ் : சரி, அந்த சுள்ளா புலாக்கி எங்க இருப்பான் ? நாம போய் அந்த புக்கே ஆட்டையை போற்றுவோம். அவ்ளோதான். பிரச்சனையெல்லாம் தீர்ந்திடும்.

நிகிலா : அது அவ்ளோ சுலபம் இல்லே டார்லிங்.

பிரகாஷ் : சரி அப்போ என்னதான் பண்றது ?

நிகிலா : மேடமத்தான் கேட்கணும்.

பிரகாஷ் : ஏய் ! நில்லு உனக்கு சிங்க பல்லு இருக்கு. பாப்புக்கும் அப்படித்தான் இருக்கும். அது ஒரு தனி அழகு. டேய் ! தமிழ் இங்க பாரேன்.

மித்ராவிடம் மல்லுக்கட்டிய தமிழ், பிரகாஷ் அழைக்க திரும்பி பார்த்தான்.

தமிழ் : என்னடா ?

பிரகாஷ் : இங்க பாரேன் நிகிக்கு பாப்பு மாதிரி சிங்க பல்லு இருக்கு. சீக்கிரம் நிகி கோல்கெட் விளம்பரத்துக்கு போஸ் குடுக்கற மாதிரி நில்லு. அப்போதானே, தமிழ் பார்க்க முடியும்.

நிகி சிரிக்க அவளின் சிங்கப் பல் அழகாய் தெரிய, தமிழுக்கு ரவா புட்டின் ஞாபகம் வந்து விட்டது. எங்கோ பார்த்தவன் பிரகாஷிடம்,

தமிழ் : ரொம்ப மிஸ் பண்றேண்டா அவளே. ரொம்ப மாறிட்டாடா. கல்யாணத்துக்கு அப்பறம். ஹோமிலி கேர்ள் ஆயிட்டா. ஒரு கண்ணடிச்சா போதும் மச்சான், கண்ண மூடி ரெடியா ஆயிடுவா முத்தத்துக்கு.

தலை குளிச்சிட்டு வந்த போதும் வேணுமுன்னே என் முன்னுக்கு வந்து தலை துவட்டுவா. அந்த தண்ணிலாம் என் மூஞ்சில படும். அதுல ஒரு சந்தோசம் மேடம்கு. டைனிங் டேபிள் மேலே ஏறி உக்காந்துகிட்டு ஆர்ப்பாட்டம் பண்றது.

பிரகாஷ் நண்பனை கட்டிக் கொண்டான். முதுகை தடவிக் கொடுத்தான்.

நிகிலாவுக்கும் என்னவோ போல் ஆகி விட்டது. அப்படியே திரும்பி மித்ராவை பார்த்தாள். அவள் கண்களில் வலிந்துக் கொண்டிருந்த கண்ணீரை சால்வையில் துடைத்துக் கொண்டிருந்தாள்.

நிகிலா அனைவரின் சோகத்தையும் கலைத்தாள்.

நிகிலா : யாழி கண்டத்துக்கும் நமக்கும் எதோ ஒரு வகையில சம்பந்தம் இருக்கு. சோ, நாம சீக்கிரமா அங்க போய் செய்ய வேண்டியதெல்லாம் செஞ்சி நம்ப உயிரையும் நமக்கு பிடிச்சவங்க உயிரையும் காப்பாத்தணும். எல்லாரும் ஒத்துமையா இருந்தாதான் இது முடியும். உங்க பர்சனல் விஷியம் தள்ளி வெச்சிட்டு கைகோர்ப்போம்.

மித்ரா : இந்நேரத்துக்கு இந்த சினிமா கூட்டத்துல இருக்கற பினாமி கண்டிப்பா அவனுங்களுக்கு தகவல் சொல்லிருக்கனும். இப்போதைக்கு, அவனுங்களோட முதல் டார்கெட் தமிழ் தான். தமிழ் மனைவியை குறி வெச்சாலும் வெச்சிருப்பானுங்க !

மித்ரா சொன்னதை கேட்டு கோவம் வந்தது தமிழுக்கு. பைத்தியம் பிடித்தவன் போல நெருப்பு கட்டைகளை கால்களால் எத்தி தள்ளியவன் கைகளை மடக்கி முட்டியால் பாறைகளையும் குத்தினான்.

பிரகாஷ் பயந்த பிள்ளை போல் கால்களை கட்டிக் கொண்டு கால் முட்டியில் முக தாடையை வைத்து தமிழின் அட்டகாசத்தை பார்த்துக் கொண்டிருந்தான் உதட்டை பிதுக்கி. அவனுக்கு இதுவெல்லாம் பழகியதுதானே.

தமிழின் செய்கை அச்சத்தை மூட்டவே நிகிலா நிஜமாகவே பயந்து விட்டாள்.

தமிழ் : யாரு, யாரு மேலே கை வைக்கறது ?! கொன்றுவேன் ! ஒருத்தன் விடாம கொன்றுவேன் ! யார் மேலே ! என் பொண்டாட்டி மேலையா ?! இந்த தமிழ் இருக்குற வரைக்கும் என் புட்டு நிழலை கூட யாராலையும் தொட முடியாது !

மித்ராவுக்கு கோவம் வந்து விட்டது. பாப்புவை பற்றி சொன்னதும் எப்படி பொத்துக் கொண்டு வருகிறது இவனுக்கு கோவம். காதல் திருமணம் அல்லவா. அப்படித்தான் இருக்கும்.

கோபங் கொண்டு எழுந்தவள் நேராய் போய் தமிழின் சட்டையை பிடித்தாள்.

மித்ரா : பாப்புவே அந்த கெட்டவனுங்க குறிதான் வெப்பானுங்கன்னு சொன்னேன். அதுக்கு போய் இந்த குதி ! இவ்ளோ ஆர்பாட்டம் ! ஏன் ?!

தமிழ் : அவளை யாராவது எதாவது சொன்னாலே எனக்கு அப்படி கோவம் வரும் ! இவன் யாரு ?! சுண்டக்கா பையன் ! எவ்ளோ பெரிய பருப்பா இருந்தாலும் எனக்கு கவலை இல்லே ! சாகடிச்சிருவேன் ! என் புட்டுக்கு ஒன்னுன்னா ! எல்லாரையும் சாகடிச்சிருவேன் ! அவ என் பொண்டாட்டி ! பாப்பு என் பொண்டாட்டி !

மித்ரா : அப்போ, நான் உன் பொண்டாட்டி இல்லையா ?! சொல்லு தமிழ் ? நான் உன் பொண்டாட்டி இல்லையா ?! அவளை ஒரு வார்த்தை சொன்னதுக்கே உனக்கு இப்படி கோவம் வருதே ! என்ன சொல்லும் போது வரலையா ?! என்ன கொல்ல பார்த்தப்போ வரலையா ?! அவ மேல இருக்கற லவ்லே ஒரு துளி கூட, என் மேல இல்லையா ?! சொல்லு தமிழ் ! சொல்லு !

மித்ரா தமிழின் சட்டையை பிடித்தவாறே அப்படியே சரிந்து அவனின் கால்களில் விழுந்து கதறினாள்.

யாழியின் ருத்ர கிரீசன் வருவானா ! யாழியை மீட்டிடுவானா !
 

banumathi jayaraman

Well-Known Member
dear N means enna artham ??
இப்போத்தான் கமெண்ட்ஸ் எழுதியிருக்கேன்
முதலில் ஏதோ ஒரு எழுத்து போட்டேன்
இப்போத்தான் இந்த லவ்லி அப்டேட் படிச்சேன்ப்பா
தமிழில் உங்கள் பெயரை எப்படி எழுதுவது, Deep டியர்?
 
இப்போத்தான் கமெண்ட்ஸ் எழுதியிருக்கேன்
முதலில் ஏதோ ஒரு எழுத்து போட்டேன்
இப்போத்தான் இந்த லவ்லி அப்டேட் படிச்சேன்ப்பா
தமிழில் உங்கள் பெயரை எப்படி எழுதுவது, Deep டியர்?

தீப்சந்தினி. thanks dear for the comment
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top