யாழியின் ருத்ர கிரீசன் - 14

#1
cover (38).jpg

யாழியின் ருத்ர கிரீசன் - 14

கையில் இருந்த குச்சியை எடுத்து பிரகாஷின் தொடையிலேயே ரெண்டு தட்டு தட்டினான் தமிழ்.

கண்களால் மித்ராவை காட்டினான். பிரகாஷ் திரும்பி மல்லாக்க படுத்துக் கொண்டான்.

தமிழ் : சொல்றத எல்லாத்தையும் கேட்டுகிட்டு தலையாட்டற கிறுக்கன் நான் இல்லே ! ஒரு அளவுதான் ! மண்டைக்கி ஏறுனுச்சி, யார் எவருனு பார்க்க மாட்டேன் ! என்ன பத்தி தெரியும் ! சொல்ல வேண்டியது இல்லேன்னு நினைக்கறேன் !

மித்ரா சால்வையை கைகளில் இறுக்கிக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள். தமிழ் அவளை தான் குறி வைக்கிறான் என்று அவளுக்கு தெரியாமல் இல்லை.

மித்ரா : கோரோனோ வைரஸ். கேன்சர் மாதிரி மருந்தில்லா நோய். அதுக்கு மருந்து கண்டுபிடிக்க சில டாக்டர்ஸ் டீம் மத்த கம்பனிஸ்கிட்ட பண உதவி கேட்ட மாதிரி என் கம்பனியையும் தேடி வந்தாங்க.

இப்போது, மித்ரா தலையை தூக்கி தமிழை பார்த்தாள்.

பிரகாஷ் : நானும் நல்ல விசியம்னு ஓகே சொல்லி அவுங்களுக்கு தேவையான பணத்தை ரெடி பண்ணி கொடுத்தேன். ஒர்கிங் ப்ரோஸ்ஸ்ஸ் எப்படி இருக்குனு கேட்டேன். பதில் வரலை. பணம் குடுத்த நான் ரிப்போர்ட்ஸ் பார்க்கணும்னு சொன்னேன். அதுக்கும் சரியான ரெஸ்பான்ஸ் இல்லே. எந்த அக்காவுண்டுக்கு பணம் போணுச்சோ. அந்த ஓனர் தேடி நானே போனேன். என் கண்ணே என்னாலையே நம்ப முடியல. நான் போன அட்ரஸ் ஒரு சுடுகாடு !

பிரகாஷால் சிரிப்பை அடக்க முடியவில்லை. கைத்தட்டி சிரித்து விட்டான். தமிழுக்கும் சிரிப்பு தான் இருந்தும் கெத்தை மெய்டன் செய்துக் கொண்டான்.

பிரகாஷ் : மச்சான் சிரிச்சிரு ! சிரிப்பே மடக்கி வைக்காதே ! ஏம்மா நீ எவ்ளோ பெரிய ஆளு அங்க போறத்துக்கு முன்னாடி நம்ப பய புள்ளே கோகுலன் கிட்ட ஒரு வார்த்தை கேட்ருக்கலாம்லே !

நிகிலா : கோகுலன்னா ?!

தமிழ் : கூகுளை சொல்றான்.

நிகிலா சிரித்தாள். மித்ரா தொடர்ந்தாள்.

மித்ரா : பர்சனல் டிடெக்ட்டிவ் வெச்சி செக் பண்ணதுல அது ஒரு பெரிய நெட்வேர்க்னு தெரிஞ்சிக்கிட்டேன். உலகத்துல அங்கங்க புதைஞ்சி கிடைக்கற பொருட்களை, நாணயங்களை, நகைகளை கொள்ளையடிச்சி தனக்கு சொந்தமாக்கி வியாபாரம் பண்ற கூட்டம் அது.

நிகிலா : டிடெக்ட்டிவ் அவுங்க எங்ககிட்ட வாங்குன பணத்துல இப்போதைக்கு மலேசியாலதான் ஏதாவது வேல பார்த்துக்கிட்டு இருக்கணும்னு சொன்னாரு. கடைசியா அவர்தான் இந்த காட்டுல அதுக்கான வேலைகள் போய்கிட்டு இருக்குன்னு கண்டுபிடிச்சி சொன்னாரு. ஆனா, எங்களுக்கு தகவல் சொன்ன அன்னிக்கே அவர் இறந்துட்டாறு. அவரே யாரோ கொன்னுட்டாங்க.

மித்ரா : அன்னைக்கி ஆரம்பிச்சது எங்களுக்கு பீடை. நிறைய கொலை மிரட்டல்கள். ரெண்டு தடவ செத்து பொழைச்சேன். உண்மை எனக்கு தெரியுங்கறதுனால.

மித்ரா சொன்னதைக் கேட்ட தமிழ் டக்கென்று அவனையும் மறந்து,

தமிழ் : என்னாச்சி ?

பிரகாஷ் வேண்டுமென்றே தமிழின் முன் சென்று தலையை சாய்த்து,

பிரகாஷ் : பாசம் தான்... ஹ்ம்ம்.... நிகிலா நோட் திஸ் பாயிண்ட் ! என்னமோ நடக்குது ! மர்மமா இருக்குது !

தமிழ் : சீ ! பே !

பிரகாஷ் : நீ சொல்லுமா, கதை இன்டெரெஸ்டிங்கா போதில்ல.

மித்ரா : அப்பாவை கொன்னு வீட்டுக்கு பார்சல் பண்ணி அனுப்பி இருந்தாங்க.

மித்ரா சொன்னதை கேட்டு தலையில் கை வைத்தான் தமிழ். பிரகாஷுக்கு கூட கோவம் வந்தது லேசாய்.

பிரகாஷ் : ஷீட் ! யாரவனுங்க ?!

நிகிலா : யார்லாம் தெரியாது டார்லிங். அவுங்க ஆளுங்க எங்களை வாட்ச் பண்ணிக்கிட்டே இருந்தாங்க. ஒரு நாள் திடிர்னு வீட்டுக்கு ஒரு மொட்ட கடுதாசி. சொல்றதெல்லாம் செய்யனும். இல்லன்னா கொன்றுவேன்னு. பயத்துல நாங்க போலீஸ்கிட்ட போனோம். அங்கையும் அவனுக்கு ஆள் இருந்தாங்க. லெட்டர் போன் கோல்லா மாறுனுச்சி. ஒரு கை பார்த்திடலாம்னு முடிவு பண்ணப்போ. மேடம்...

மித்ரா, நிகிலாவின் கையை பிடித்தாள். வேண்டாமென்று தலையாட்டினாள். இவள் அவளை சோகமாக பார்க்க மித்ரா அவளுக்கே உரிய பாணியில் புன்னகைத்தாள்.

தமிழ் : என்னமோ சொல்ல வந்து ஏன் பாதியில ஸ்டாப் பண்ணிட்டே நிகிலா ?

நிகிலா : இல்லே, ஒன்னும் இல்லே.

பிரகாஷ் : டார்லிங், ஏன் மெண்டு முழுங்கறான் ?! சொல்லு ! சொல்லு ! தமிழ் கேட்குது !

தமிழ் கையில் இருந்த குச்சியை பிரகாஷ் மீது விட்டடித்தான்.

தமிழ் : பேசாமே, இருடா ! நீ சொல்லு நிகிலா.

நிகிலா : ஒரு இக்கட்டான சூழ்நிலை. எங்களுக்கு வேறே வழி தெரியலை. நாங்களும் அவுங்க கூட சேர வேண்டியதா போச்சி. இங்க வந்து பார்த்த போது ஒரே அபசகுனம். ஒரு நாளைக்கி ஒரு சாவு. தோண்றவன்லா செத்தான். அன்னிக்கி இல்லே. மறுநாள்.

மித்ரா : இதுல ஆச்சரியமான விசியம் என்னென்னா இன்னிக்கி அங்கிருந்து கொண்டு வந்து வைக்கற எல்லா பொருளும் மறுநாள் காலையில இங்க இருக்காது. அங்க இருக்கும். இப்படி ரெண்டு மூணு தடவ நடக்கும் போது, அங்கையே கூடாரம் போட்டு பெட்டி பெட்டியா கடத்த ஆரம்பிச்சாங்க. எனக்கு இதுல என்னமோ பெரிய மர்மம் அடங்கிருக்கறதா தோணுச்சு. சில பெரிய சாமியார்கள நானும் நிகிலாவும் போய் பார்த்தோம். நடந்த எல்லாத்தையும்......

பேசிக் கொண்டிருக்கும் போதே திடிரென்று மித்ராவுக்கு குமட்டிக் கொண்டு வந்தது. பக்கம் இருந்த நிகிலாவை விட எதிரே இருந்த தமிழ் தான் முதலில் பதறி போய் டக்கென்று எழ போனான். பின்பு, சுதாரித்து அப்படியே பார்வையை பிரகாஷின் பக்கம் திருப்ப,

பிரகாஷ் : தான் ஆடவிட்டாலும் தன் சதை ஆடும்னு சொல்வாங்களே, அது இதுதானா மச்சான் !

கிண்டலடித்தவனை பார்த்து முறைதான் தமிழ்.

நிகிலா, மித்ராவிற்கு சுடுதண்ணீர் கொடுத்து முதுகை நீவி விட்டு தொடர்ந்தாள்.

நிகிலா : சாமியார்ங்க எங்கள சித்தர்களை போய் பார்க்க சொன்னாங்க. நாங்க போறதுக்கு முன்னாடியே எங்களை சித்தர் ஒருத்தர் பார்த்தாரு. கடத்தல் நடக்கற இடம் பேரு யாழி கண்டம்னு சொன்னாரு. பல சரித்திரங்கள், போர், வெற்றி, ரத்தம், பகை, நட்பு, துரோகம் பார்த்து சாபத்தையே வரமா வாங்கிய ஊர்னு சொன்னாரு. மண்ணோட மண்ணா மக்கி போய் எத்தனையோ யுகங்கள் கடந்துருச்சின்னு சொன்னாரு. இளவரசன் வருவான். கயவர்களை கொன்னு புதைப்பான்னு சொன்னாரு. சொன்னவாறு எங்க கையிலே ஒரு குட்டி விநாயகரை கொடுத்து மறைஞ்சிட்டாறு.

தமிழ் யோசித்தான். குட்டி விநாயகரா ?! ஆமாம், அவன் தான் அவனின் குட்டி விநாயகரை வீட்டிலேயே வைத்து விட்டு வந்து விட்டானே.

மித்ரா : நான் யாழி கண்டத்தை பத்தி தேடி தேடி படிச்சேன். ஒரு துரும்புக் கூட விடாம படிச்சேன். எங்க அப்பாவை கொன்னவனே பழி வாங்கியே ஆகணும்னு முடிவு பண்ணேன். யாழி பத்தி தேடும் போது தான் எனக்கு சில உண்மைகள் தெரிய வந்தது. இளவரசன் வருவான். கயவர்களை கொன்னு புதைப்பான்னு சொன்னது சித்தர் கிடையாது. அது ஏற்கனவே நடக்க போறத தெரிஞ்சி எழுதப்பட்டிருக்கற உண்மை. அந்த உண்மை நிஜமாகணும்னா யாழி கண்ட தேசத்துல பிறந்த இல்ல அந்த ராஜ வம்சாவளியில வந்த ஒருத்தனாலத்தான் அது முடியும்னு நான் கண்டுபுடிச்சேன். இந்த விசியம் அந்த கடத்தல்காரனுங்களுக்கு தெரியாம...

மித்ரா முடிக்கவில்லை. வாந்தியை தடுக்க முடியவில்லை. எடுத்து விட்டாள்.

தமிழ் தெரியாததுப் போல் அமர்ந்திருந்தான் குத்துக் கல்லாய்.

பிரகாஷ் பொறுக்கவில்லை. டக்கென்று அவள் அருகில் ஓடி. தலையை தொட்டு பார்க்க, தமிழ் கழுகு பார்வை பார்த்தான் பிரகாஷை.

காச்சல் அடிக்கிறது மருந்து கொண்டு வருகிறேன் என்று சொன்னவனை தடுத்தாள் நிகிலா.

நிகிலா : டார்லிங் அதெல்லாம் ஒன்னும், வேணாம். மேடம் மருந்து சாப்பிட கூடாது.

பிரகாஷ் : என்னா டார்லிங் நீ ! மண்டே ஓடிருச்சா ! காய்ச்சல் இப்படி கொதிக்குது. மருந்து வேணா ! மட்டே வேணாம்னு !

மித்ரா : தேங்கியூ பிரகாஷ். இந்த அக்கறையே போதும். காய்ச்சலும் எனக்கு புதிசில்ல. யாருமில்லாமா நான் தனியா இருக்கறதும் புதுசில்ல. ஐம் ஓகே.

பிரகாஷ் அவனின் சால்வையை எடுத்து மித்ராவை போர்த்த போக, தமிழ் விருட்டென்று அவனின் சால்வையை நிகிலாவிடம் விசிறினான்.

தமிழ் : எனக்கு குளிருல ! யூஸ் பண்ணிக்கோ !

நிகிலா புன்னகையோடு பிரகாஷை பார்த்து சால்வையை மித்ரா மீது போர்த்த,

பிரகாஷ் : எங்கையோ இடிக்குது ! கண்டு பிடிக்கிறேன் ! மாட்டாமையா போவே சில்வண்டு ! அப்போ இருக்குடி உனக்கு !

என்றான் நடிகர் நம்பியார் ஸ்டைலில் கையை மடக்கி.

தமிழ் : அவன் கிடக்கிறான். நீ சொல்லு அந்த யாழி இளவரசன் என்ன கதை ?

நிகிலா : அதைத்தான் இப்போ நானும் சொல்ல வந்தேன். யாழியில பிறந்த இளவரசன் யார்னு தேடும் போதுதான் உங்கள பத்தின தகவல்கள் தெரிய வந்துச்சி. ஆனா, ஏதோ ஒன்னு எங்களால உங்கள நெருங்கவே முடியல தமிழ். ஒவ்வொரு முயற்சியும் தோல்விதான். நாங்க ரகசியமா வெச்சிருந்த இந்த மேட்டர கூட எப்படியோ மோப்பம் பிடிச்சிட்டாங்க. ஆனா, அவனுங்க பண்ண தப்பு. பிரகாஷ்தான் தமிழ்ன்னு தப்பா புரிஞ்சிகிட்டு பிரகாஷை தூக்க பிளான் பண்ணாங்க.

மித்ரா : நாங்களும் உண்மையை பத்தி மூச்சு விட்டுக்கல. எவ்ளோ தூரம் தான் போறானுங்கன்னு பார்க்க. அவனுங்களுக்கு எல்லாம் பெரியவன் ஒருத்தன் இருக்கான். யாருமே அவனே பார்த்ததில்ல. தெரிஞ்ச வரைக்கும் அவன் கூட்டத்துல ஒருத்தனா இருப்பான்னு பேசிகிட்டாங்க.

நிகிலா : மேடம், அவுங்க பிளான்னே வெச்சே அவனுங்கள சாகடிக்க திட்டம் போட்டாங்க. அதுக்குத்தான், அவுனுங்க கடத்தன பிரகாஷை நானும் மேடமும் இன்னும் லொன்ச் கூட ஆகாத எங்களோட spaceship-ல விண்வெளிக்கு கொண்டு போய்ட்டோம்.

பிரகாஷ் : பார்டா...

நிகிலா : இது எல்லாமே ஆப் டூ டேட் அந்த மாஸ்டர் மைண்டுக்கு தெரிய வந்துச்சி. அவன் எங்களை தேடி space வந்த சாகனுங்கறதுக்காகத்தான் space safety pod-ல கெமிக்கல் சப்ஸ்டேன்ஸ் மிக்ஸ் பண்ணி அதை உருவாக்கனோம். யார் அதுல வந்தாலும் செத்து தான் வரணும்னு. ஆனா, நிஜமாவே எவன் யாழியே சேர்ந்தவனோ அவனுக்கு சாகா வரம் இருக்கறதுனால அவன் உயிர்க்கு ஒன்னும் ஆகாதுன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்.

பிரகாஷ் : அப்போ, அந்த பகலதி யாரு ?!

மித்ரா : நான் படிச்ச வரைக்கும் பகலதி சுரதி கண்ட இளவரசி. அவளுக்கும் யாழி இளவரசனுக்கும் காதல்.

பிரகாஷ் ஒரு கணம் யோசித்தான். சமி நடந்து கொண்டதற்கும் மித்ரா சொல்வதற்கும் சம்பந்தம் இருப்பதாய் உணர்ந்தான்.

மித்ரா : சோ, இதையே நான் ஒரு துருப்பு சீட்டா பயன்படுத்திக்கிட்டேன். அதுக்காக சில மந்திர தந்திரங்களையும் நான் கத்துக்கிட்டேன். என் உயிரையே பணைய வெச்சி பிரகாஷை அண்ட் நிகிலாவே ஸ்பைஸ் கூட்டிகிட்டு போனேன்.

பிரகாஷ் : உங்க புது ராக்கெட்டே என்ன வெச்சி டெஸ்ட் டிரைவ் பண்ணிருக்கீங்க ! நல்லா வருவிங்கம்மா ரெண்டு பேரும் !

மித்ராவை பார்த்து முறைதான் தமிழ். அவள் தொடர்ந்தாள். அவன் முறைத்தது ஏனென்று அவளுக்கு தெரியும். ஆம், உயிரை பணைய வைத்தேன் என்றாள் அல்லவா அதற்குத்தான்.

மித்ரா : யாருக்குமே உதவாத உயிர், இருந்தா என்னே போனா என்னே ! இப்படி சொல்லாதன்னு அதட்டக் கூட ஆள் இல்லையே.

மித்ராவின் கலங்கிய கண்கள் தமிழை பார்க்க அவனும் அவளை கனத்த இதயத்தோடு பார்த்தான்.

குற்றமுள்ள நெஞ்சு லேசாய் குறுகுறுக்க ஆரம்பித்தது தவறு செய்து விட்டொமோ என்று.

யாழியின் ருத்ர கிரீசன் வருவானா ! யாழியை மீட்டிடுவானா !
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement