யாழியின் ருத்ர கிரீசன் - 13

#1
cover (37).jpg

யாழியின் ருத்ர கிரீசன் - 13

தமிழை தேடி வந்த பிரகாஷை கிண்டலடித்தான் தமிழ்.

தமிழ் : அப்பறம் மச்சான் போன காரியம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிச்சா ?

பிரகாஷ் : டேய் ! பிரகாஷ்னு ஒரே ஒரு நல்லவன் இருக்கான் ! அவனையும் கெடுக்க பார்க்கறே ! அப்படித்தானே !

தமிழ் : மச்சான் , பாம்பின் கால் பாம்பறியும் ! நீ என் பிரெண்டுடா ! எனக்கு தெரியாதா டா !

பிரகாஷ் : பேருக்குத்தான்டா உன் பிரெண்டு. ஆனா உன்ன மாறி ஒரு பெர்ஸன்ட் கூட எதுமே பண்ண முடியலையே ! நீ மட்டும் மனசாட்சியே இல்லாம கிடைக்கற மீனெல்லாம் வாரி வாயில போட்டு கிட்டா நான் எப்போ ஜோடி சேராது ?! என்ன கடைசி வரைக்கும் சிங்கலாவே சாக சொல்றியா ?!

பிரகாஷ் பேச்சு வாக்கில் தமிழின் சட்டையை பிடித்து உலுக்கி எடுத்தான். தமிழின் ருத்ராட்ச்சம் வெளியில் வந்து விழுந்தது.

தமிழ் : விட்ரா நாயே ! மாலையே அறுத்துருவே போலிருக்கு !

பிரகாஷ் : சே ! என்னோட மாலையே அந்த ஹோட்டல் ரூம்லையே அறுத்து போட்டுட்டேன்டா ! கழுத்து வேறே கோசமா இருக்கு !

தமிழ் : அட அரைவேக்காடு ! உன் கழுத்தை நல்லா பாரு ! நண்பன் செத்துட்டானே அதுவும் காலி கழுத்தோட இருக்கானேன்னு நான்தான்டா உனக்கு இந்த புது மாலையை போட்டு விட்டேன்.

பிரகாஷ் : நல்ல வேலைடா மச்சான் நீ மட்டும் அன்னிக்கி போஸ்ட் மார்ட்டம் பண்ண வேணான்னானு சொல்லல. இந்நேரம் உண்மையாவே இந்த மாலை என் படத்துல தான் தொங்கிகிட்டு இருந்திருக்கும்.

தமிழ் : ஆமா, அது எப்படி உனக்கு தெரியும் ?

பிரகாஷ் : அந்தக் கடத்தி இன்னொரு நாளைக்கி சொல்றேன்.

தமிழ் : டேய், நீ சாகாதது உண்மையிலே நல்லதா போச்சி. இல்லே எந்த பொண்ணுக்கிட்டையும் என்னே நெருங்கவே விட்ருக்க மாட்டே !

பிரகாஷ் : சத்தியமா மச்சி ! நான் மட்டும் அல்பாயுசுல ஒண்ணுமே அனுபவிக்காம போகணும். நீ ஒண்ணுக்கு நாலஞ்சி வெச்சி மெய்டன் பண்ணுவியா !

தமிழ் : போதும் ! போதும் ! ரொம்ப கறுவாதா ! நான் உன்கிட்ட ஒரு சந்தோசமான விசியம் சொல்லணும்.

பிரகாஷ் : ஏன் நீ அப்பாவாயிட்டியா ?

தமிழ் : டேய் மச்சான் எப்படிடா ?!

பிரகாஷ் : அதே வேலையா இருந்தா ! அந்த வீட்டுல ஒரு இடம் விடல ! சரி, ஹாஸ்பிட்டலையாவது விட்டு வெச்சியா ! அல்ப, அந்த mortuary கூட விட்டு வைக்கலையே !

தமிழ் : சீ ! போடா ! எனக்கு வெட்கமா இருக்கு !

பிரகாஷ் : ஏண்டா இருக்காது ! ஏன் இருக்காது ! இப்படி ஒரு காமக்கொடூரனை என் கூட வெச்சி சுத்திகிட்டு இருக்கேன் பாரு ! என்னைக்கி வெறிப்புடுச்சி என்ன ரேப் பண்ண போறியா ! மச்சான் நான் ரவா புட்டு இல்லடா ! ஏதா இருந்தாலும் பார்த்து பதமா பண்ணுடா !

நண்பர்கள் இருவரும் என்ன பேசுகிறார்கள் என்பதை இவ்வளவு நேரம் பாறைகளின் பின்னால் நின்று ஒளிந்து மித்ரா கேட்டுக் கொண்டுதான் இருந்தாள்.

தமிழ் என்னவோ சொல்ல பிரகாஷ் உடனே சமியின் கூடாரத்திற்கு விரைந்து செல்வதை பார்த்த மித்ரா இவர்கள் சமியின் உதவியுடன் இங்கிருந்து தப்பிக்க பார்க்கிறார்கள் என முடிவு செய்துக் கொண்டு அதை முறையடிக்கும் வகையில் அவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்டாள்.

இதை கண்டுக் கொண்ட தமிழ் ஏற்கனவே பிரகாஷிடம் ஒரக் கண்ணால் ஜாடை காட்டிட, மித்ராவுக்கு சந்தேகம் வராத படி இருவரும் கலாட்டாவான பேச்சுக்களை பேச ஆரம்பித்தனர்.

இவர்கள் அப்படியே பேசிக் கொண்டிருக்க இருவரின் வாயிலிருந்தும் அவள் எதிர்பார்த்த எந்த துப்பும் வெளிவராததால் கடுப்பாகி மீண்டும் நெருப்பு மூட்டியிருக்கும் இடத்திற்கே செல்ல நினைத்தாள் மித்ரா.

அந்நேரம் பார்த்து அவள் காதில் பாப்பு கருத்தரித்திருக்கும் செய்தி கேட்க அப்படியே பாறையின் மீது சாய்ந்து அவளின் வயிற்றை பிடித்துக் கொண்டாள். விசும்பலின்றி அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

அதிர்ச்சியா, ஆனந்தமா, கோபமா, வருத்தமா ஒன்றுமே தெரியவில்லை. அவள் முகம் எந்தவொரு ராசயனை மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அதற்கு மேல் அங்கு நிற்க அவள் மனம் இடம் தரவில்லை. அங்கிருந்து சென்றும் விட்டாள் மித்ரா.

அவள் போவதை பார்த்த பிரகாஷிடம்,

தமிழ் : இவளை நம்பவே முடியாது ! என்ன வேணும்னாலும் செய்வா !

பிரகாஷ் : நான் கேட்கணும்னு நினைச்சேன். மித்ராவே உனக்கு முன்கூட்டியே தெரியுமா ? என்ன பிரச்சனை உங்க ரெண்டு பேருக்கும் ?

தமிழ் : சில விசயங்களை பேசறது இல்லே, நினைக்கறது கூட தப்பு ! வா, அங்க போலாம்.

தமிழ் பாறையின் மீதிருந்து எழ, அவனுடனே எழுந்த பிரகாஷ் அவனின் பின்னால் நடக்கையில் கேட்டான்.

பிரகாஷ் : யாழி கண்டம், இளவரசன் கிரீசன். இப்படி எதாவது கேள்வி பட்டிருக்கியா மச்சான் ?

தமிழ் : இல்லையே ! ஏன் ?

பிரகாஷ் : நாம நினைக்கறதா விட இங்க வேறே என்னவோ பெருசா இருக்கு மச்சான். என்னன்னு எனக்கு சரியாய் figure out பண்ண முடியல. ஆனா, கண்டிப்பா ஏதோ ஒன்னு நம்பல சம்பந்தபடுத்தி இருக்கு.

தமிழ் : இந்த நாடகத்துக்கு எல்லாம் காரணம் மித்ராதான். அவளை பிடிச்ச எல்லா உண்மையும் வெளி வரும். புடிக்கறேன் ! இன்னிக்கி கேட்கற கேள்விக்கு அவ சரியாய் பதில் சொல்லல ! தூக்கி சொருகிறேன் !

பிரகாஷ் : சமிக்கும் இதுல லிங்க் இருக்கு. ஆனா, டைரெக்டா இல்லே இன் டைரக்டான்னுதான் தெரியல.

தமிழ் : சமி ஏதும் சொன்னாலா ?!

பிரகாஷ் : சமி சொல்லல்ல....பட் kind of visual hallucinations. திடிர்னு என்ன கிரீசன்னு சொன்னா. Subconscious memory எதோ அவளுக்கு எல்லாத்தையும் எடுத்து கொடுத்த மாதிரியே இருந்துச்சி. பேசறதுலர்ந்து அவ டச் வரைக்கும் totally different. I can feel her man ! எத நம்பறது எத நம்பாம இருக்கறதுனு தெரியல மச்சான். ஒரே குழப்பமா இருக்கு. இப்படியே போன நாம யார்னு நமக்கே மறந்து போய்ட்டும் போல ! அப்பறம், இதே காட்டுக்குள்ளையே நாம ரெண்டு பேரும் காதல் பட பரத் மாறி கொட்டாங் குச்சி வெச்சிக்கிட்டு ந்யேந்யேனு சுத்த வேண்டியதுதான் போ !

தமிழ் : எனக்கு இது நொடிக்கு ஒரு தரம் மைண்ட்லே ஓடிக்கிட்டே இருக்கு மச்சான். பாப்பு வேறே இப்போ மாசமா இருக்கா. இங்கிருந்து நாம சீக்கிரம் கிளம்பனும்.

பிரகாஷ் : அதுக்கு ஒரே வழி ! மித்ரா பேசணும் !

தமிழ் : பேசணும் தானே ! வா ! அவளை எப்படி பேச வைக்கறேன்னு மட்டும் பாரு !

பிரகாஷ் : டேய் ! நில்லுடா ! நீ போற வேகத்தை பார்த்தா அவ கூட சண்டைக்கி பேச போற மாதிரியே தெரியல ! பேசறேன் பேசறேன்னு சொல்லி கடைசியா வேறே மாறி பேசிடாதடா ! நில்லுடா ! மன்மதா !

இரவு பனிரெண்டை எட்டியிருந்தது. அசிடெண்ட் டைரக்டர் அஜய் இன்னும் அங்கையும் இங்கையும் நடந்தவாறு கையில் பேனா பேப்பர் கொண்டு எழுதி கொண்டிருந்தான். தலையில் குட்டி டார்ச் லைட்டை அவன் தொப்பியினுள் சொருகிருந்தான்.

நிகிலாவும் மித்ராவும் கையில் சூடான தேநீரை வைத்திருந்தனர். குளிர் அனைவரையும் தள்ளாட வைத்துக் கொண்டிருந்தது.

தடுப்பான சால்வைகளை போர்த்திக் கொண்டு ஆட்கள் நடமாட போலீஸ் பாதுகாப்பும் அங்கே இருந்தது. அங்கு வந்த பிரகாஷுக்கும் தமிழுக்கும், அஜய்யின் ஆர்டர் படி தனி தனி கப்பில் தேநீர் கொடுக்கப்பட்டது.

நெருப்பை சுற்றி ஆட்கள் ஒரு சிலர் அமர்ந்திருக்க இவர்களின் எதிரிலேயே அஜய் மற்றும் மித்ரா, நிகிலா அமர்ந்திருந்தனர். தமிழை பார்த்த மித்ரா தேநீரை ஒரு முடக்கில் பருகி அங்கிருந்து கிளம்ப, தமிழ் தடுத்தான்.

தமிழ் : மித்ரா, நில்லு !

தமிழ் அவள் பெயர் சொல்லி அழைத்ததும் இதயம் நின்று துடித்தது மித்ராவுக்கு. முன்னே போன கால்கள் தானாய் பின்னோக்கி வந்து அப்படியே நிகிலாவின் அருகில் அமர்ந்துக் கொண்டாள்.

நிகிலாவின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்ட மித்ராவின் மேல் சால்வையை இன்னும் நன்றாக போர்த்தி விட்டாள் நிகிலா.

தமிழ் இது எதையுமே கவனிக்கவில்லை. அவன் பார்வை என்னவோ அங்கு கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டிருந்த நெருப்பில் மட்டுமே இருந்தது.

தமிழ் : பேசணும். எனக்கு உண்மையான பதில் மட்டும் தான் வேணும் !

தமிழ் சொன்னதைக் கேட்ட அஜய் கண்களை உருட்டினான், அவனின் பட குழுவில் சம்பந்தபட்ட ஆட்களை பார்த்து. அவர்கள் அங்கிருந்து கிளம்பினர். அஜய்யும் நழுவினான்.

அவனுக்கு புரிந்தது எதோ முக்கியமான பர்சனல் விசியம் பேச போகிறார்கள் என்று. இங்கீதம் கருதி எல்லாரையும் துரத்தி விட்டு அவனும் கழண்டிக் கொண்டான்.

மித்ரா, நிகிலா, பிரகாஷ் மற்றும் தமிழ் மட்டுமே அங்கிருந்தனர்.

தமிழ் அங்கிருந்த சிறிய மர குச்சிகளை ஒவ்வொன்றாய் எடுத்து நெருப்பில் போட்டான்.

பிரகாஷ் அங்கிருந்த பெரிய மரத்தண்டில் படுத்துக் கொண்டு கையை தலைக்கு தலையணை ஆக்கி, வெட்ட வெளி வானை வெறித்து பார்த்து பாடினான்.

பிரகாஷ் :

நேற்று முன்னிரவில்
உன் நித்திலப்பூ மடியில்
காற்று நுழைவது போல்
உயிர் கலந்து களித்திருந்தேன்
இன்று பின்னிரவில்
அந்த ஈர நினைவில்
கன்று தவிப்பது போல்
மனம் கலங்கி புலம்புகிறேன்
கூந்தல் நெளிவில் எழில் கொண்ட சரிவில்
கூந்தல் நெளிவில் எழில் கொண்ட சரிவில்
கர்வம் அழிந்ததடி !
என் கர்வம் அழிந்ததடி !

பிரகாஷ் யாரை நினைத்து பாடினான் என்று தெரியவில்லை. ஆனால், மித்திராவின் கண்கள் என்னவோ தமிழ் மீதுதான் இருந்தது.

தமிழின் எண்ணமெல்லாம் ரவா புட்டின் ஈராக் கூந்தலில் இவன் முகம் புதைத்து செய்த சில்மிஷங்களே நிறைந்திருந்தது.

யாழியின் ருத்ர கிரீசன் வருவானா ! யாழியை மீட்டிடுவானா !
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement