யாழியின் ருத்ர கிரீசன் - 12

Advertisement

bf7c8f473ffb39f84cc679770eeffa09.gif

யாழியின் ருத்ர கிரீசன் - 12

போனை கொடுத்த சம்யுக்தா, தமிழை தேடி வந்தாள். கொசு வேறு அவளை கண்ட மேனிக்கு கடித்து கொண்டிருந்தது. கடுப்பில் அங்கையும் இங்கையும் தன்னை கடித்த கொசுக்களை அடித்துக் கொண்டே வாயில் பேனாவோடு தமிழின் எதிரே வந்து நின்றாள் சம்யுக்தா.

தமிழுக்கு அவளின் முகம் நன்றாக நீரோடையில் தெரிந்தது. அவன் அவளின் முகத்தை பார்க்கவில்லை காரணம் அவன் முகம் அழுது வீங்கியிருந்தது ரவா புட்டின் மேல் கொண்ட காதல் பிரிவால்.

பெண் அவள் முன் ஏன் இந்த முகத்தை காட்டி தன் கெத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என எண்ணியவன் கையை தூக்கி போனை மட்டும் அவளிடம் நீட்டினான்.

தமிழ் : தேங்கியூ. really appreciate it !

அவன் கையிலிருந்து போனை வாங்கிய சம்யுக்தா தமிழின் முதுகில் இருந்து புகை வெளியேறுவதை பார்த்து அதிர்ச்சியாய்,

சம்யுக்தா : உங்க முதுகுல.....

அவள் சொல்லி முடிக்கும் முன் பிரகாஷ் எங்கிருந்தோ அலறிக் கொண்டு ஓடி வந்தான்.

பிரகாஷ் : நவுருங்க ! நவுருங்க ! நவுருங்க......

நெருப்பு கோழியை போல் கட்டுப்பாடின்றி ஓடி வந்தவன் இவர்கள் இருவரின் நடுவிலும் புகுந்து அவர்களுக்கு எதிரே இருந்த நீரோடையில் குதித்தான்.

அமர்ந்திருந்த தமிழ் என்னாச்சோ ஏதாச்சோ என பதறி போய் எழ, சம்யுக்தாவும் அவளின் அடிகளை நீரோடை வரை கொண்டு போனாள்.

சத்தம் கேட்ட மற்றவர்களும் மொத்தமாய் ஓடி வந்து நின்றனர் பிரகாஷின் நிலையை பார்க்க.

வந்த வேகத்தில் தண்ணீரில் குதித்த பிரகாஷ் அவனின் சட்டையை கழட்டி வீசியிருந்தான். அந்த ஜில்லென்ற தண்ணியில் எப்படித்தான் அவனால் குதிக்க முடிந்ததோ என அங்கிருந்தோர் பேசிக் கொள்ள ஏன் குதிக்க வேண்டும் என்ற கேள்வியின் பதிலாய் பிரகாஷ் தண்ணீரில் இருந்து எழுந்தான்.

நிலவொளியில் நடப்பது எல்லாமே நன்றாகவே தெரிந்தது. டார்ச் லைட் தேவையில்லை. எழுந்தவன் முதலில் அனைவருக்கும் காட்டியது அவனின் முதுகையே. அவனின் முதுகில் பதிந்திருந்த சிவனின் திரிசூலம் எல்லோர் பார்வையிலும் பட்டது.

சம்யுக்தாவின் கண்கள் அகல விரிந்தன. கண்கள் ஏமாற்றுமா என்ன. கண் முன் அல்லவா பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

ஏற்கனவே அவள் முட்டை கன்னி வேறு. இப்போது சொல்லவா வேண்டும். அவளின் இதயம் சாதாரண நிலையை தாண்டி சுனாமியாய் வேகங் கொண்டு லப் டப் லப் டப் என அடித்தது.

பிரகாஷ் வெற்றுடலாய் திரும்பி கரையை நோக்கி நடந்து வர அவனின் ஒவ்வொரு அடியும் சம்யுக்தாவிற்கு அவளின் இதயத்தில் வைத்து நடப்பது போன்று இருந்தது. அவ்வளவு சுகமாய் உணர்ந்தாள் சம்யுக்தா.

தண்ணீரில் நனைந்த தலையை பிரகாஷ் எழுந்து வருகையில் ஒரு சிலிர்ப்பு சிலிர்க்க சம்யுக்தாவின் வாயில் இருந்த பேனா தானாகவே கீழே விழுந்தது.

அவளை கடந்து போனவன் சுண்டு விரலால் அவனின் கை விரல்களில் இருந்த தண்ணீரை அவள் மீது தெறிக்க கண்களை மூடி திறந்தவள் நீரோடையை பார்த்து ஸ்தம்பித்து நின்று அவளை அறியாமல் எதோ உளறினாள்.

சம்யுக்தா : யாழியின் கிரீசன். அதே வாசம். அதே கூர்க்கத்தி கண்கள். அதே மையல் பார்வை. அதே கிறங்கடிக்கும் உதட்டோர புன்னகை. இளவரசன் கிரீசன். பகலதியின் அநுகன். இந்த பகலதியின் கிரீசன்.

சொன்னவள் அப்படியே மயக்கடித்து விழுந்தாள்.

தூரத்திலிருந்து இதை பார்த்துக் கொண்டிருந்த மல்ட்டி ஸ்டார் மகேன் அவன் பக்கத்தில் நின்றிருந்த அஜய்யிடம், பிரகாஷை பற்றி விசாரித்தான்.

மகேன் : யாரவன் ? புதுசா இருக்கான். என்ன விட பயங்கரமா மாஸ் கட்றான் ? புது வில்லனா ? எத்தனை படம் நடிசிருக்கான் ? லோக்கலா இல்லே இந்தியாவா ?!

அஜய் சிரித்தான். இதுதான் சமயம் என்று சொல்லி வேண்டுமென்றே கதைக் கட்டி விட்டான் மல்ட்டி ஸ்டாரின் கொட்டத்தை அடக்க.

அஜய் : அவரா ?

மகேன் : அவரா ? மரியாதையெல்லாம் ரொம்ப பயங்கரமா இருக்கு. பெரிய இடத்து சிபாரிசோ ?!

அஜய் : டைரக்டர் மேடமோட வருங்கால வீட்டுக்காரர்.

மகேன் : பார்க்கவே செம்மையா இருக்கான். எப்படி உங்க சிடுமூஞ்சி டைரக்டர்கிட்ட மாட்டனான் ?

அஜய் : காதலுக்கு கண்ணில்லா சார்.

மகேன் : ஆஹ்... படத்துல ஏதும் இவனுக்கு சீன் இல்லலே.

அஜய் : அதெல்லாம் இல்ல சார். ஆனா, டைரக்டர் சொன்னாங்க படத்துல யாராவது ரொம்ப மக்கர் பண்ண தூக்கிட்டு அவுங்க ஆள போடா சொல்லி. நீங்க வேறே கில்மா சோங்ஸ் கேட்டுருந்துங்களே சார் ? நாம அது பத்தி டிஸ்கஸ் பண்லாமா ?

மல்ட்டி ஸ்டார்க்கு மண்டை கிண்டையெல்லாம் கொஞ்ச நேரத்தில் கலங்கி விட்டது. பிரகாஷ் பார்க்கவே ஆள் சூப்பராக இருக்க இதில் அஜய் வேறு இல்லாத பொய்களை வரிசையாய் அடுக்க மகேன் இருக்கின்ற இந்த படத்தை தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்தான்.

சிரித்துக் கொண்டே அஜய்யிடம்,

மகேன் : என்ன அஜய் நீங்க ஹிஸ்டாரி படத்துல போய் கில்மா சோங்லாம் எப்படி ? மக்கள் நம்ப படத்தை பத்தி என்ன நினைப்பாங்க.

அஜய் : நீங்கதானே சார்...

மகேன் : விடுயா ! வேணாம். அப்பறம் உங்க டைரக்டர்ரம்மா ஹீரோவே மாத்திட போறாங்க.

அஜய் : அப்போ, நிஜமா உங்களுக்கு கில்மா சோங்ஸ் வேணா அப்படித்தானே மகேன்.

மகேன் : ஆமாய்யா !

மகேன் கடுப்பில் அவனின் கூடாரத்தை நோக்கி சென்றான்.

மயக்கமாகி விழுந்த சம்யுக்தாவை அவளின் கூடாரத்தில் படுக்க வைத்திருந்தான் தமிழ். லேசாய் மயக்கம் தெளிய அவளின் கூடாரத்துக்குள் யாரோ எதிரே நின்று அவளின் புத்தகங்களை புரட்டி பார்ப்பது தெரிந்தது அவள் கண்களுக்கு மங்கலாய் தெரிந்தது.

முழுதாய் தெளியாத மயக்கத்தில் யாரு என்று கேட்டு எழுந்தாள் தடுமாறி சம்யுக்தா.

தமிழ் அவளின் அருகில் ஓடி வந்தான்.

தமிழ் : ஹேய், பார்த்து பார்த்து....

சம்யுக்தா சுதாரித்து தன்னால் இயன்ற அளவு நன்றாய் கட்டிலில் உட்கார்ந்துக் கொண்டாள்.

தமிழ் : உடம்பு இப்படி நெத்திலி மாதிரி இருக்கும் போதே சந்தேகப்பட்டேன். கண்டிப்பா உடம்புல ஒன்னு இனிப்பு குறைவா இருக்கனும் இல்லே சத்து குறைவா இருக்கனும் அதுவும் இல்லையா ரத்தம் குறைவா இருக்கணும்னு.

சம்யுக்தா : எது குறைவா இருந்துச்சி ?

தமிழ் : ரத்தம். இறைச்சி, ஷெல் இதெல்லாம் நல்லா சாப்பிடணும்ங்க.

சம்யுக்தா : பிரகாஷ் எப்படி ?

தமிழ் சிரித்தான். அவளின் பட்டென்ற கேள்வியில்.

தமிழ் : அவனையே கூப்டறேன் கேளுங்கே.

சம்யுக்தா : இல்லே, வேணா. பரவலா.

தமிழ் அவளின் தோளில் தட்டினான். கூடாரத்திலிருந்து வெளியேறியவன் பிரகாஷிடம் சென்றான்.

தமிழ் : டேய் உன்னே சமி கூப்டா.

பிரகாஷ் : யாரு ? அந்த லிப் லோக் சரக்கா ?

தமிழ் : மச்சான் தேவையில்லாம வார்த்தையை விடாத. அப்பறம் நான் பொறுப்பில்ல. சொல்லிட்டேன்.

பிரகாஷ் : பண்றதெல்லாம் பண்ணிட்டு. பேச்சே பாரு. பெரிய உத்தமன் மாறி ! போடா ! உனக்கு பொறாமே அந்த சரக்கு என்ன கூப்பிடுதுனு !

கூடாரத்துக்குள் பிரகாஷ் நுழைய கட்டிலின் மேல் அமர்ந்திருந்த சம்யுக்தாவிற்கு ஹார்ட் வேகமாக துடித்தது. கண்கள் தானாக மயங்கி மேலே சொருக சரிந்து விழ போனவளை கைத்தாங்கலாக ஓடிச் சென்று பிடித்தான் பிரகாஷ்.

பிரகாஷ் : சமி, என்னாச்சி ?! சமி !

பிரகாஷ் அவளை அப்படியே கட்டில் மேல் சாய்த்து படுக்க வைக்க, பிரகாஷின் கைகளை இறுக்கமாய் பற்றி சமி அவளின் நெஞ்சில் வைத்துக் கொண்டாள்.

அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தன. பிரகாஷுக்கு ஒன்றுமே புரியவில்லை.

இவளை நிகிலா காட்டிய காற்று டிவியில் பார்த்து நிஜமாகவே லிப் லோக் காட்சியில் பார்த்தவன் தான் பிரகாஷ். அதோடு, இப்போதுதான் பார்க்கிறான்.

அப்படி இருக்கையில் அவளின் அருகில் இப்படி நெருங்கி இருப்பது என்னவோ பல காலம் வாழ்ந்ததைப் போல் உணர்த்தியது.

சமியும் இப்படி பார்த்த உடனே ஒருவனின் கையை பிடித்து நெஞ்சில் வைக்க பைத்தியம் கிடையாதே. அமைதியாக அவள் என்னதான் செய்கிறாள் அல்லது பேசுகிறாள் என்பதில் கவனம் செலுத்தினான் பிரகாஷ்.

சமி அவனின் கையின் பிடியை பிடித்துக் கொண்டு,

சமி : கிரீசா, என் ஒவ்வொரு கணமும் உன் முகம் கண்டு கரைய வேண்டும். காதலால் இந்த சுரதி கண்டத்தின் அதி ரூப பகலதி உன்னில் உருகி மரித்திட வேண்டும்.

சமி ஏதேதோ உளறி பிரகாஷின் கன்னத்தை விரல்களால் தொட்டாள்.

சமி : என் மூச்சை உன்னில் கலந்திட வேண்டி என் அதரம் உனக்காய் காத்திருக்கிறது கிரீசா.

படுத்திருந்த சமி கொஞ்சம் கொஞ்சமாய் மேலே எழுந்து வர, பிரகாஷ்க்கு ஒரு மாதிரியான கிறக்கம் ஏற்பட்டது. மயிலிறகு வருட கூசுகின்ற சுகம் போல இருந்தது அந்த பொழுது அவனுக்கு.

சமியின் முகத்தை அவனின் இரு கரங்களால் பற்றினான் பிரகாஷ். இருவரின் கருவிழிகளும் பேசிக் கொண்டன. அதிக நாள் பேசாமல் இருந்து பேசியது போல்.

பிரகாஷ் அவளின்அதரங்களை விரலால் தடவிட சமி விழிகளை மூடிக் கொள்ள அவர்கள் இருவரும் எதிர்பார்க்காத அந்த இதழ் முத்தம் அங்கே அரங்கேறியது.

இடைவிழி அற்ற திருக்குறளாய், மண்ணை முத்தமிடும் வான் மழையாய், வரம் பெற்ற சாபமாய்.

சமி அப்படியே மயங்கி பிரகாஷின் தோளில் விழ, அவனுக்கு அப்போதுதான் முத்த போதையின் கலக்கம் குறைந்தது. நிலைக்கு வந்தவன் தோளில் சாய்ந்தவளை கட்டிலில் சாய்த்து போர்வையை போர்த்தி யோசனையோடு அங்கிருந்து வெளியேறி தமிழை தேடினான்.

யாழியின் ருத்ர கிரீசன் வருவானா ! யாழியை மீட்டிடுவானா !
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top