யாழியின் ருத்ர கிரீசன் - 11

#1
cover (9).jpg

யாழியின் ருத்ர கிரீசன் - 11

அஜய்யை பார்த்த தமிழ், கிசுகிசுத்தான்.

தமிழ் : யாரு மச்சான் இவன் ?

பிரகாஷ் : இவனா ?! ஏர்லெ லிப் லோக் அடிச்சியே அவளோட அசிஸ்டன்ட் டைரக்டர். இவனே தூக்கிட்டுத்தான் என்ன அங்க ஒக்கார வெச்சி வேலைய முடிக்க பார்த்துச்சுங்க.

தமிழ் : உண்மையிலேயே இங்க என்னதான்டா நடக்குது ?!

பிரகாஷ் : செத்து செத்து விளையாடறோம் மச்சான் ! இரு, முதல்ல இந்த ஆடே பிடிப்போம்.

பிரகாஷும் தமிழும் லொகேஷன் செக் பண்ண வந்த அஜய்யை பாதி காட்டில் வழி மறைத்தனர். மித்ராவையும் நிகிலாவையும் கை காட்டி பேசியவர்கள் பின்பு அவனுடன் சேர்ந்து பெண்களையும் அழைத்துக் கொண்டு கிளம்பினர்.

காட்டில் நீரோடையின் ஒதுக்கு புறமாய் ஐந்தாறு கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவைகளுக்கு நடுவினில் கட்டைகளை அடுக்கி நெருப்பு மூட்டி அதனை சுற்றி சிலர் அமர்ந்திருந்தனர். அஜய் கூட்டி வந்தவர்களை அங்கேயே அமர வைத்து சம்யுக்தாவின் கூடாரத்தை நோக்கி சென்றான்.

உள்ளே சம்யுக்தா மடிக்கணினியில் என்னவோ செய்துக் கொண்டிருக்க, அவளின் கவனத்தை கலைத்தான் அஜய்.

அஜய் : மேடம்

சம்யுக்தா : ஹ்ம்ம்...

அஜய் : ரெண்டு டாக்டர்ஸ் ரெண்டு சைண்டிஸ் வர வழியில காட்டுல பார்த்தேன். வைரசுக்கு மருந்து கண்டு பிடிக்க வந்துருக்காங்களாம்.

சம்யுக்தா : ஹ்ம்ம்.....

அஜய் : கொண்டு வந்த மேப் எங்கையோ மிஸ் ஆயிடுச்சாம். எப்படி போறதுன்னு தெரியலையாம்.

சம்யுக்தா : ஹ்ம்ம்...

அஜய் : அதான், மேடம் அவுங்கள இங்க கூட்டிக்கிட்டு வந்துட்டேன்.

இதுவரை வெறும் மடிக்கணினியை மட்டும் பார்த்து தட்டிக் கொண்டு ஊம் கொட்டியவள் இப்போது திரும்பி அஜய்யை பார்த்தாள்.

நாற்காலியிலிருந்து எழுந்து மேஜையின் ஓரமாய் கை கட்டி சாய்ந்து நின்று,

சம்யுக்தா : அஜய் இது என்னே சத்திரமா ? போறவங்க வரவங்கன்னு எல்லாம் வந்து தங்கிட்டு போக. ஷுட்டிங் ஸ்பாட். ஆர்ட்டிஸ்ட் வர இடம். அவுங்க ப்ரைவேசி நமக்கு ரொம்ப முக்கியம். அத விட முக்கியம் இவ்ளோ காஸ் போட்டு கொஞ்சம் கொஞ்சமா பிளான் பண்ணி இன்ச் பாய் இன்ச் ஒவ்வொண்ணா பார்த்து பார்த்து ஷாட் பண்ணி நாம ரிலீஸ் பண்றே படம் நாளைக்கி தியேட்டர்லே ஓடணும். தமிழ் கன்லையோ, தமிழ் ரொக்கெர்ஸலையோ, தமிழ் யோகிளையோ, யூடியுப்லையே இல்லே. உனக்கே தெரியும் என் படத்துல நான் வைக்கறதுதான் சட்டம். இது கஷ்டம் அது கஷ்டம் அப்படி இப்படினாலும் சரி இஷ்டத்துக்கு முடிவு எடுத்துக்கிட்டாலும் சரி கதவு திறந்தே தான் இருக்கு. எப்போ வேணும்னாலும் கிளம்பலாம். என் படத்துல வேலை செய்றதுக்கு திறமை மட்டும் முக்கியம் இல்லே டிசிபிலின் ரொம்ப ரொம்ப முக்கியம்.

அஜய் : சோரி மேடம், நான் இப்பவே அவுங்கள...

இவர்களின் உரையாடலின் இடையில் தமிழ் குரல் கேட்டது.

அஜய் அனைவரையும் உட்கார வைத்து விட்டு வந்தாலும் தமிழ் மட்டும் எதோ காரணம் சொல்லி பிரகாஷை அங்கேயே விட்டுவிட்டு அவன் தேடுவது இங்கு கிடைக்கிறதா என்று பார்த்தான். வேறு என்னே போன் தான்.

தமிழ் வந்ததோ சம்யுக்தாவின் கூடாரத்தை நோக்கி.

தமிழ் : சோரி, கொஞ்சம் போன் கிடைக்குமா ?

சம்யுக்தா : நீங்களா ?!

அஜய் : மேடம் இவர்தான் டாக்டர் தமிழ். நான் சொன்னது இவர பத்தியும் இவர் பிரண்ட்ஸ் பத்தியும்தான்.

தமிழ் : போன் ?

சம்யுக்தா அவளின் போனை தமிழிடம் தந்தாள்.

தமிழ் : நான் போன் யூஸ் பண்றது யாருக்கும் தெரிய வேணாம். தேங்கியூ.

சம்யுக்தா : அஜய் இவங்களுக்கு எல்லாம் ஒரு கூடாரம் செட் பண்ணிருங்க.

சம்யுக்தா ஏன் என்று கேட்பதற்குள் தமிழ் போனோடு காணாமல் போயிருந்தான்.

போனை எடுத்துக் கொண்டு தனியே வந்தவன் அழைத்தது அவனின் ரவா புட்டுக்குத்தான்.

தமிழ் : பிக் ஆப் ! பாப்பு ! பிக் ஆப் !

பல ரிங்களுக்கு பிறகே பாப்பு போனை எடுத்தாள். செத்து போன நடைப்பிணமாய் ஏதோ ஒரு உலகத்தில் சிக்குண்டு இருந்ததால் அவளுக்கு காதில் கேட்ட போன் ரிங்டோன் எங்கே கேட்கும் இசை போலவே தோன்றியது.

சிந்தனைக்கு வந்த பிறகே போனை எடுத்து காதில் வைத்தாள்.

பாப்பு : ஹலோ....

அவளின் ஒற்றை ஹலோவில் தமிழுக்கு கண்ணெல்லாம் கலங்கி கண்ணீர் கொடகொடவென ஊற்றியது.

அவன் பேசவே இல்லை. பேசியது அவனின் முத்தங்கள் மட்டுமே. போனே வெட்கப்பட்டு போய்விட்டது.

தமிழின் முத்தம் பாப்புவை உயிர் பெற வைத்தது. அலறினாள். நெஞ்சே சந்தோஷத்தில் வெடித்து விடுவது போல.

பாப்பு : தமிழ் ! தமிழ் ! தமிழ் !

தமிழ் : புட்டு.... ஐ லவ் யூ டி ! ஐ லவ் யூ டி புட்டு ! சாப்டியா புட்டு ?

பாப்பு : தமிழ் எங்கடா போன ? என் மேலே கோவமா ? இனி சண்டே போடா மாட்டேண்டா. வந்துடுடா என்கிட்ட. நான் செத்துருவேண்டா. என்ன விட்டுட்டு போயிடாதடா ! நீ யாரே வேணும்னாலு பாரு ! வெச்சிக்கோ ! கட்டிக்கோ ! நான் மூச்சு கூட விட மாட்டேன் அதை பத்தி. என்ன மட்டும் இப்படி தனியா தவிக்க விட்டு போயிடாதடா ! உன் ரவா புட்டு செத்துருவேண்டா ! நீ மட்டும் இன்னிக்கி போன் அடிக்காம இருந்திருந்தே நாளைக்கி நான் கையறுத்துகிட்டு செத்த செய்திதான் வந்துருக்கும் ! நான் அவ்ளோ லவ் பண்றேண்டா உன்னே ! உன்ன பிரிஞ்சி என்னால இருக்க முடியலடா ! பைத்தியம் பிடிக்குதுடா ! என்ன கொஞ்சம் கொஞ்சமா சாகடிக்காதடா தமிழ் ! எங்கிருந்தாலும் வந்துடுடா !

தமிழ் : புட்டு ! கொன்றுவேண்டி உன்னே ! என்ன வார்த்தை பேசற நீ ! செத்திருவாளாம் செத்து ! நீ செத்துட்ட நான் மட்டும் உயிரோட இருந்திருவேனா ! நானும் செத்துருவேண்டி புட்டு ! நீ என் உசுருடி ! மடத்தனமா இனி ஒரு வார்த்தை கூட பேசாதடி ! புட்டு நீ என்ன நம்பறியா ?!

பாப்பு : நம்பறேன் தமிழ். நம்பறேன்.

தமிழ் : நான் சொல்றத நம்ப ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கும். ஆனா, அதுதான் உண்மை. புட்டு, பிரகாஷ் சாகலை. உயிரோடத்தான் இருக்கான். நான் அவன் கூடத்தான் இருக்கேன். நாங்க ஒரு இடத்துல இருக்கோம்.

பாப்பு : என்ன இடம் ?

தமிழ் : அதை விடு. நான் சொல்றத நல்லா கேளு. நான் அடிக்கடி உனக்கு கோல் பண்ண முடியாது. இந்த நம்பர்க்கு நீயும் கோல் பண்ண கூடாது. இங்க ஒரு பெரிய விசியம் நடந்துகிட்டு இருக்கு. என்னன்னு சத்தியமா புரியல. அதை எப்படி உன்கிட்ட சொல்றதின்னும் தெரியல. ஆனா, நான் நிச்சயம் வருவேன் புட்டு . திரும்ப வருவேன். உன்ன கட்டி பிடிச்சி விடாம முத்தம் கொடுக்கறதுக்காகவே நான் திரும்ப வரவேண்டி.

பாப்பு : அப்போ, சீக்கிரம் வா தமிழ்.

தமிழ் : புட்டு, நீ சமத்து பொண்ணு. சொல்றத கேளு. ஹன்சலம் வீட்டுக்கு போய்ட்டு. அங்கிருந்து வேலைக்கி போ. ஒரு மாசத்துக்கு ஆக்ட்டிங் சேர்மன் நீதான். ஹாஸ்பிடல் பார்த்துக்கோ. டைம் கணக்கா சாப்பிடு. நிம்மதியா படுத்து தூங்கு. என்ன பத்தி கவலை படாத. யார் கேட்டாலும் ஹாஸ்பிடல் விஷயமா ஓவர்சீஸ் போயிருக்கேன்னு மட்டும் சொல்லு. ஹன்சலம் கிட்ட நானே அவனுக்கு கோல் பண்ணுவேன்னு சொல்லு. அதுவரைக்கும் அவன அமைதியா இருக்க சொல்லு. எனக்கு அவன் உதவி நிச்சயமா தேவ. ஆனா, இப்போ இல்லே. நான் வந்துருவேன் எனக்கு தெரியும். நான் வந்து ஹன்சலம் வீட்டுலர்ந்து உன்ன கூட்டிகிட்டு போவேன். இது என் ரீத்தா மேல சத்தியம்.

பாப்பு : என்ன மட்டும்தான் கூட்டிகிட்டு போவியா ?! குட்டி ரவா புட்டோ குட்டி காரா முறுக்கோ..... அதை என்ன பண்றது ?!

தமிழ் ஒரு கணம் நிறுத்தினான். நெற்றியில் கை வைத்து, மீண்டும் பேச தொடங்கினான்.

தமிழ் : புட்டு...எப்படிடி ?! எப்போ ??

பாப்பு : சீ ! பண்றதெல்லாம் பண்ணிட்டு எப்படினு கேட்கறியா ?! பண்ணும் போது தெரியலையா எப்படினு ! ரெண்டு நாளாவே தலைவலிக்குது குமட்டுதுனு சொன்னேன்லே. நீ கூட சாப்பாடு ஏதும் தப்பாயிருக்கும் சொன்னே. ஆனா,நர்ஸ் பார்கவி தான் ஒரு யூரின் டெஸ்ட் பண்ணிடலாம்னு சொன்னா. நானும் ஓகே சொன்னேன். இப்போ பாப்பா காண்போர்ம் ஆச்சி.

தமிழ் ஆனந்தத்தில் வாய் பொத்தி கதறினான். மண்ணை கையால் குத்தினான்.

தமிழ் : ஐ லவ் யூ டி புட்டு. சோரிடி என்னால உன்கூட இந்த மாதிரி நேரத்துல இருக்க முடியல. மன்னிச்சிருடி புட்டு ! பட் நான் ப்ரோமிஸ் பண்றேன். I'm going to be the best father for our child !

பாப்பு : நான் குட்டி விநாயகா கிட்டே அழுதேன். என் புருஷனை என்கிட்ட கொடுத்துடுன்னு. அதே மாதிரி உன்ன என்கிட்ட பேச வெச்சிட்டான்.

தமிழ் : புட்டு தேங்கியூடி. எனக்கு அப்பாங்கிற அடையாளம் கொடுத்ததுக்கு. உனக்கு ஞாபகம் இருக்கா. எனக்கு உன் கால்ல படுத்துகிட்டு தூங்க பிடிக்கும். நீ கூட சத்தம் போடுவே என்ன பழக்கம் இதுனு. ஆனா, சத்தியமா சொல்றேண்டி. இப்போ தோணுதுடி நிஜமாவே உன் கல்லா பிடிச்சி அதே மாதிரி படுத்துக்கணும்னு.

பாப்பு : தமிழ் என்ன ஏதுன்னு எனக்கு தெரியல . ஆனா, என் தமிழால முடியாதது எதுவும் இல்லே. அவனுக்கு அழகே அந்த கெத்தும் திமிறும்தான். அது என்னைக்குமே குறைய கூடாது. நான் இனி அழ மாட்டேன். நான் தமிழோட பொண்டாட்டி. அவன் மாறி கெத்தா இருப்பேன். நம்ப பாப்பாவே நான் பத்திரமா பார்த்துக்கறேன். நீ எதையுமே மிச்சம் வைக்காம முடிச்சிட்டு வா.

ஹ்ம்ம் என்று அழுகையின் ஊடே முத்தம் ஒன்றை வைத்து போனை கட் செய்தான் தமிழ்.

பூச்சிகளின் ரீங்கார ஓசை காதுகளில் கேட்க, அங்கேயே உட்கார்ந்து சலனமே இல்லாத நீரோடையில் தனது நிழலை பார்த்தான் நிலா வெளிச்சத்தில் தமிழ்.

யாழியின் ருத்ர கிரீசன் வருவானா ! யாழியை மீட்டிடுவானா !
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement