யாரையும் குறைவாக எடை போட வேண்டாம்!!!!

Advertisement

Eswari kasi

Well-Known Member
#யாரையும் குறைவாக எடை போட வேண்டாம்!!!!

ஒரு விமானத்தில்
தன்னருகே அமர்ந்திருந்த ஒரு சிறுமியிடம்.......

தன் அறிவுக்கூர்மையை காட்ட விரும்பிய ஒரு தத்துவமேதை

அந்த சிறுமியிடம் கேட்டார்

உன்னிடம் சில கேள்விகள் கேட்கலாமா....? என்றார்.

படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு,

என்ன மாதிரி கேள்விகள்....?
என்று சிறுமி கேட்டாள்.....

கடவுள் பற்றியது....

ஆனால்...,
கடவுள்,
நரகம்,
சொர்க்கம்,
புண்ணியம்,
பாவம் என
எதுவும் கிடையாது....

"உடலோடு இருக்கும் வரை உயிர் "......
"இறந்த பிறகு என்ன"......?

தெரியுமா என்றார்....!!

அந்த சிறுமி யோசித்து விட்டு........ ,

நானும் சில கேள்விகள் கேட்கட்டுமா"......? என்றாள்.

ஓ எஸ்..!தாராளமாக கேட்கலாம்".. என்றார்....!!

ஒரே மாதிரி புல்லை தான்.....,
பசு,
மான்,
குதிரை
உணவாகஎடுத்துக்
கொள்கிறது.....

ஆனால்,
வெளிவரும் 'கழிவு"...( shit ) ஏன் வெவ்வேறாக இருக்கிறது......

பசுவிற்கு சாணியாகவும்

மானுக்கு சிறு உருண்டையாகவும்.....,

குதிரைக்கு கட்டி கட்டியாகவும் வெளி வருகிறது.....

ஏன் அப்படி'....?
என்று கேட்டாள்.

'தத்துவவாதி'.
இது போன்ற கேள்வியை எதிர்பார்க்கவில்லை".......!!

திகைத்துவிட்டார்'......

தெரியவில்லையே
என்று கூறினார்.

கடவுளின் படைப்பில் நிகழும் மிக சாதரண விசயமான....,

உணவு கழிவு பற்றிய ஞானமே".....
நம்மிடம் இல்லாத போது

பின் ஏன் நீங்கள்
கடவுள்,
சொர்க்கம்,
நரகம் பற்றியும்,

"இறப்புக்கு பின் என்ன என்பது பற்றியும் பேசுகிறீர்கள்".......?

"சிறுமியின் புத்திசாலித்தனத்தால்"......,

"தத்துவமேதை வாயடைத்து போய்விட்டார்"......

"எவரையும் குறைவாகவும் எடை போடக்கூடாது"......

"தலைக்கனமும் கூடாது"......

"கற்றது கைமண் அளவு",.....
"கல்லாதது உலகளவு".....
Padithathil pidithathu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top