யாருமிங்கு அனாதையில்லை - 23

Advertisement

pon kousalya

Active Member
“யாருமிங்குஅனாதையில்லை!” -- 23
(நாவல்)
டாக்டர்.பொன்.கௌசல்யா

அத்தியாயம் : 23​

ஒருகணம் திகைத்துப் போனான்.

அடுத்தநிமிடமேபைக்கைஸ்டார்ட்செய்துமீண்டும்லாரியைவிரட்டினான்.

சிறிதுதூரம்சென்றபின்ரியர்வியூகண்ணாடியைப்பார்த்ததங்கவேலுகுழப்பமானார்.“என்னதுஅந்தப்பையன்மறுபடியும்லாரியைத்துரத்திக்கிட்டுவர்றானே?”

லாரியைஓரங்கட்டிஅவசரமாய்க்குதித்திறங்கினார்.“என்னப்பா?...என்னாச்சு?”

அவர்கேட்டதைக்கூடகாதில்வாங்கிக்கொள்ளாமல்லாரிகேபினின்இடதுபுறக்கதவைத்திறந்துஉள்ளேநுழைந்தான்தனசேகர்.

“இந்தாப்பா...என்ன?...என்னபண்றே?”கேட்டவாறேடிரைவர்இருக்கைக்குதாவினார்தங்கவேலு.

உள்ளே

ஸ்டியரிங்கிற்குமேலேமாட்டப்பட்டிருந்தடிரான்ஸ்போர்ட்ஓனரின்மகன்கோகுலின்புகைப்படத்தையேவைத்தகண்வாங்காமல்பார்த்தபடிஅமர்ந்திருந்தான்தனசேகர்.

“என்னப்பா?...ஏன்..இந்தப்போட்டோவையேஉற்றுப்பார்த்தபடிஉட்கார்ந்திருக்கே?”தங்கவேலுகேட்க

சுயநினைவிற்குவந்ததனசேகர்“சார்...யாருசார்இந்தப்போட்டோவுலஇருக்கறது?...எதுக்குசார்இதுக்குமாலைபோட்டிருக்கீங்க?...”கரகரத்தகுரலில்கேட்டான்.

“இது...இந்தலாரியோடஓனர்மகன்கோகுல்போட்டோ!....அவன்ரெண்டுவருஷத்துக்குமுன்னாடிஇறந்திட்டான்..அதான்மாலைபோட்டிருக்கோம்”என்றார்தங்கவேலு.

“இல்லைசார்...இதுஎன்ஃபிரெண்ட்முரளியோடபோட்டோசார்!...”என்றுதனசேகர்அவசரமாய்ச்சொல்ல

வியப்பானார்தங்கவேலு.“தம்பி...உனக்குமுரளியைத்தெரியுமா?”

“தெரியுமாவா?...சார்அவன்என்உயிர்நண்பன்சார்!...ஒரு...ஆறேழுமாசத்துக்குமுன்னாடி...ஒருசின்னப்பிரச்சினைல...மனசொடிஞ்சுபோய்...இந்தஊரைவிட்டேபோயிட்டான்சார்”சொல்லிவிட்டுதனசேகர்கண்கலங்கஅந்தநட்பின்வீரியத்தைப்புரிந்துகொண்டார்தங்கவேலு.

“என்னபிரச்சினை?...உங்களுக்குள்ளேஏதாவதுசண்டையா?”நிதானமாய்க்கேட்டார்தங்கவேலு.

“இல்லைசார்....நாங்கரெண்டுபேரும்பழகியதுஎங்கவீட்டில்யாருக்குமேபிடிக்கலைசார்”

“ஏன்?...ஏன்பிடிக்கலை?”

“நான்ஊரிலேயேமிகவும்செல்வாக்கான....உயர்ந்தகுடியில்பிறந்தவன்சார்!...ஆனா...முரளி...சாதாரணமுடிதிருத்தும்தொழிலாளியோடமகன்சார்!...”

“அதனாலென்னப்பா?...நட்பில்இந்தவித்தியாசமெல்லாம்பார்க்கக்கூடாதுப்பா”

“நான்பார்க்கலைசார்!...ஆனாபெரியவங்கபார்த்தாங்களேசார்!...”

“ஓ”என்றபடிமேவாயைநீவினார்தங்கவேலு.

“அதிலும்...எனக்குநிச்சயம்செய்தபெண்ணோடகுடும்பத்தார்ரொம்பவேபார்த்தாங்கசார்!...கடைசில...என்பெற்றோர்...எனக்குத்தெரியாமஅவனைரகசியமாசந்திச்சு... “உன்னாலஇந்தக்கல்யாணத்துலபிரச்சினைவந்துகல்யாணமேநின்னாலும்நின்னுபோயிடும்போலிருக்கு!...அதனாலநீஊரைவிட்டேபோயிடு”னுசொல்லி...அவனைகுடும்பத்தோடஊரைவிட்டேதுரத்திட்டாங்கசார்”சொல்லிவிட்டுஒருபெண்பிள்ளைபோல்வாய்விட்டுஅழுதான்தனசேகர்.

சிலநிமிடங்கள்யோசனையில்ஆழ்ந்ததங்கவேலு“ம்ம்ம்...உன்கல்யாணம்எந்தப்பிரச்சினையும்இல்லாமல்முடிந்ததல்ல?”தணிவானகுரலில்கேட்டார்.

“முடிஞ்சுது...ஆனா....”என்றுசொல்லிதனசேகர்இழுக்க

“ஆனா?”தலையைச்சாய்த்துக்கொண்டுகேட்டார்தங்கவேலு.

“அந்தப்பொண்ணுஎன்வாழ்க்கைலவரணும்என்பதற்காகஎன்நண்பனைத்துரத்தினாங்கல்ல?...நான்அதைஅப்படியேமாத்தி... “என்நண்பன்திரும்பவர்றவரைக்கும்அந்தப்பெண்ணுக்குஎன்வாழ்க்கைலஇடமில்லை!”ன்னுசொல்லி...தாலிகட்டுனகையோடஅப்படியேஅந்தப்பெண்ணைஅவங்கபெற்றோர்கூடஅனுப்பிட்டேன்!”வெற்றிப்புன்னகையோடுசொன்னான்தனசேகர்.

“என்னப்பா?...இப்படிப்பண்ணிட்டியே?...அந்தப்பொண்ணுவாழ்க்கைதானேஅநியாயமாகெட்டுப்போச்சு?.”அங்கலாய்த்தார்தங்கவேலு.

“இல்லைசார்!...என்நண்பன்என்கூடதிரும்பச்சேர்ந்ததும்நான்அந்தப்பெண்ணையும்சேர்த்துக்குவேன்!...”உறுதிபடச்சொன்னான்தனசேகர்.

“அப்பமட்டும்பெரியவங்கஏத்துக்குவாங்களா?”

“ஹா....ஹா...ஹா...”என்றுவாய்விட்டுச்சிரிச்சதனசேகர்“சார்...அன்னிக்குஅந்தமுரளியைவிரட்டினஅதேபெரியவங்கஇப்பஅந்தமுரளியைவலைபோட்டுத்தேடிட்டிருக்காங்க!...திரும்பவும்அவனைஇதேஊருக்குக்கூட்டிட்டுவரபடாதபாடுபடறாங்க!...இதான்சார்எங்கள்நட்போடசக்தி”பெருமையாய்ச்சொன்னான்.

தலையைமேலும்கீழும்ஆட்டிஅதைஆமோதித்ததங்கவேலு“அதுசெரி...முரளிகிடைச்சானா?”கேட்டார்.

“ப்ச்...இதுவரைக்கும்அவன்எங்கேஇருக்கான்?ன்னுஒருசின்னதடயம்கூடக்கிடைக்கலைசார்”என்றதனசேகர்“இந்தப்போட்டோவில்இருக்கறஉங்கமுதலாளிமகன்அப்படியேஎன்நண்பன்முரளியோடஜெராக்ஸ்காபிமாதிரியேஇருக்கார்சார்”என்றான்.

“தம்பி....என்னோடபர்ஸை...என்னைத்துரத்திட்டுவந்துநீகுடுத்தப்பநான்ஒண்ணுசொன்னேனேஞாபகமிருக்கா?”

“என்ன...என்னசார்சொன்னிங்க?”கண்களைச்சுருக்கிக்கொண்டுகேட்டான்தனசேகர்.

“நீசெஞ்சஇந்தஉதவிக்குநிச்சயம்நான்கைம்மாறுசெய்வேன்”ன்னுசொன்னேனே?...அதுக்கானநேரம்இப்பவேவந்திடுச்சுதம்பி”என்றுபுன்னகையுடன்தங்கவேலுசொல்ல

கீழுதட்டைக்கடித்துக்கொண்டுதங்கவேலுவின்முகத்தையேபார்த்தான்தனசேகர்.

“ஆமாம்தம்பி!...நான்உன்முரளியைஉன்னோடுசேர்த்துவைக்கப்போறேன்!...”என்றார்தங்கவேலு.

அதைக்கேட்டதும்பௌர்ணமிநிலவுபோல்முகம்மலர்ந்ததனசேகர்“சார்...அப்படின்னாமுரளிஎங்கிருக்கான்?னுஉங்களுக்குத்தெரியுமா?”அவசரமாய்க்கேட்டான்.

“ம்ஹ்ஹும்...இப்பஎதுவும்சொல்லமாட்டேன்...! ஆனா...முரளியைசீக்கிரத்திலேயேஉன்கண்ணில்காட்டுவேன்”

“சார்...அவன்எந்தஊரில்இருக்கா?...அதையாவதுசொல்லுங்கசார்”கெஞ்சினான்தனசேகர்.

“ம்ம்ம்...கோயமுத்தூரில்இருக்கான்”

“அப்ப...நான்உங்ககூடகோயமுத்தூர்வந்தாஅவனைப்பார்க்கலாமா?”பரபரப்பாய்க்கேட்டான்.

“உன்னால்வரமுடியுமா?”திருப்பிக்கேட்டார்தங்கவேலு.

“நிச்சயம்...இப்பவே...இப்படியேகூடவரத்தயார்”குதூகலமாய்ச்சொன்னான்.

“முன்னாடிநிற்குதேஉன்பைக்அதைஎன்னசெய்யறது?...இப்படியேஇந்தரோட்டிலேயேவிட்டுட்டுப்போயிடறதா?”தமாஷாய்க்கேட்டார்.

“ம்ம்ம்...உங்கலாரிலபோட்டுக்கலாம்”என்றான்தனசேகர்.

“லாரிலபோட்டு?...கோயமுத்தூருக்கேகொண்டுபோயிடலாம்!கறியா?”

“ஆமாம்சார்”என்றதனசேகர்அடுத்தநிமிடமேகேபினிலிருந்துகுதித்திறங்கிதன்பைக்கைலாரிக்குப்பின்புறம்கொண்டுபோனான்.

அவனதுஆர்வத்தையும்வேகத்தையும்பார்த்துதனக்குள்சிரித்துக்கொண்டதங்கவேலு“இருப்பா...உன்ஒருவனால்மேலேஏத்தமுடியாது...நானும்வர்றேன்”என்றுசொல்லிதானும்கிழிறங்கிலாரிக்குப்பின்புறம்வந்தார்.

இருவரும்சேர்ந்துபைக்கைலாரியின்பின்புறத்தில்ஏற்றி, ஓடும்போதுஅதுவிழாதவண்ணம்ஒருகயிற்றால்கட்டினர்.

“ஏம்ப்பா....நீபாட்டுக்குஇப்படியேகிளம்பறியே?...உன்வீட்டுலதேடமாட்டாங்களா?”தங்கவேலுகேட்க

“அவங்கதேடிட்டுப்போறாங்க....நீங்கவண்டியைஎடுங்கசார்!”வெகுஅலட்சியமாய்ச்சொன்னான்தனசேகர்.

நண்பனைக்காணப்போகும்சந்தோஷம்அவன்முகத்தில்ஆடிமாதக்காவேரியாய்கரைபுரண்டோடியது.

-------

மறுநாள்காலைகோயமுத்தூரைஅடைந்ததும்தனசேகரைநேரேதன்வீட்டிற்கேஅழைத்துச்சென்றார்தங்கவேலு.

“என்னங்க...யாரிந்ததம்பி?”அவர்மனைவிவடிவுகேட்க

“இந்ததம்பிபேருதனசேகர்!...வர்றவழிலஒருஇடத்துல...வாடகைப்பணத்தோடபர்ஸைநழுவவிட்டுட்டுலாரிஏறிபோயிட்டேன்நான்!...தம்பிதான்கீழேகிடந்தபர்ஸைஎடுத்துக்கிட்டு....பைக்ல...லாரியைத்துரத்திட்டுவந்துகுடுத்தான்!...”என்றுஆரம்பித்துஅவனுக்கும்முரளிக்கும்உள்ளநட்பைப்பற்றியும்...அந்தநட்பால்விளைந்தசோகங்களைப்பற்றியும்மனைவியிடம்விலாவாரியாய்விவரித்தார்தங்கவேலு.

“அடப்பாவமே?...இப்படியும்இருப்பாங்களா?....நீங்கஅந்தமுரளிகுடும்பத்தைஇங்ககூட்டிட்டுவரும்போதுஅவங்கஎன்னசாதி?ன்னுகேட்டுவிசாரிச்சிட்டாகூட்டிட்டுவந்தீங்க?...இல்லையே?....அதேமாதிரிநானும்அவங்கஎன்னசாதி?ன்னுகேட்டுட்டாஅவங்களுக்குஇங்கதங்கஇடம்கொடுத்து...சாப்பாடெல்லாம்போட்டேன்?...இல்லையே?....இதெல்லாம்மனுஷனுக்குமனுஷன்செய்யறசாதாரணஉபகாரங்கள்தானே?...இதுலசாதிஎன்னவேண்டிக்கிடக்கு?...”படிக்காதபெண்மணியாய்இருந்தபோதிலும்பகுத்தறிவோடுபேசினாள்வடிவு.

“தபாருவடிவு!....இப்பநாமசெய்யவேண்டியதுஎன்ன?ன்னா...இதோஇந்ததம்பியையும்...நம்மமுரளியையும்சேர்த்துவைக்கணும்!..அதன்மூலமாஇந்ததம்பியோடபுதுப்பொண்டாட்டியைஇவனோடசேர்த்துவைக்கணும்!...அவங்கஎல்லோரும்இத்தனைநாள்அனுபவிச்சகஷ்டங்களிலிருந்துவிடுபடணும்!...இனிமேல்மகிழ்ச்சியாவாழணும்!...அதுதான்நமக்குவேணும்”என்றார்தங்கவேலு.

அவர்களிருவரையும்அதிசயமாய்ப்பார்த்தான்தனசேகர்“இவரு...ஒருசாதாரணலாரிடிரைவர்இந்தம்மா....ஒருசாதாரணகுடும்பத்தலைவிஇவங்கரெண்டுபேருக்கும்இருக்கறயதார்த்தமான...பெரும்போக்கான...நல்லமனசுஏன்என்னைப்பெத்தவங்களுக்கும்....எனக்குப்பொண்ணுகுடுதவங்களுக்கும்இல்லை?”

“என்னப்பா...அமைதியாநின்னுட்டே?”தனசேகரைப்பார்த்துக்கேட்டார்தங்கவேலு.

“ஒண்ணுமில்லைசார்”என்றவன்“சார்...முரளி?”என்றுகேட்க

“தம்பி..அவங்ககுடும்பம்இங்கஇல்லை!...எங்கமுதலாளிவீட்டுஅவுட்ஹவுஸ்லஇருக்காங்க!...மதியத்துக்குமேலேநான்உன்னைஅங்ககூட்டிட்டுப்போறேன்”என்றார்தங்கவேலு.

“சரிங்க”என்றான்தனசேகர்.

அன்றுமதியஉணவுக்குப்பின்லாரியிலிருந்துஇறக்கியதனசேகரின்பைக்கிலேயேஇருவரும்கிளம்பினர்.

டிரான்ஸ்போர்ட்முதலாளிவீட்டுஅவுட்ஹவுஸின்கதவைநாசுக்காகதங்கவேலுதட்டமுரளியின்தாய்ராக்கம்மாவந்துகதவைத்திறந்தாள்.தங்கவேலுவைப்பார்த்ததும்“வாங்கண்ணே?”என்றவள்அவர்பின்னால்நின்றிருந்ததனசேகரைப்பார்த்ததும்லேசாய்அச்சமுற்றாள்.

“நீ...நீ...பொன்னுரங்கம்அய்யாமகன்தானே?”

“ஆமாம்அம்மா...உங்கமகன்முரளியோடநண்பன்”அழுத்தமாய்ச்சொன்னான்தனசேகர்.

“நீஎதுக்குஇங்கவந்தே?...அந்தஊரிலிருந்துஉன்னைப்பெத்தவங்க...துரத்தியடிச்சாங்க!...அதனாலஇங்கவந்தோம்!...இப்பஇங்கிருந்துதுரத்தியடிக்கநீவந்திருக்கியா?”கோபமாய்க்கேட்டாள்ராக்கம்மா.

“அதைநான்சொல்றேன்”என்றபடியேவீட்டிற்குள்வந்ததங்கவேலுஅங்கிருந்தநாற்காலியில்தானும்அமர்ந்துதனசேகரையும்அமரவைத்தார்.

ராக்கம்மாஎதையோசொல்லவாயெடுக்க“அம்மா...எனக்குஎல்லாவிபரத்தையும்இந்ததம்பிசொல்லிட்டாரு!...இவனைப்பெத்தவங்கஉங்களைஊரைவிட்டுப்போகச்சொன்னவிஷயம்இந்ததம்பிக்கேதெரியாது!...இவன்தன்னோடகல்யாணத்துக்குமுரளி“வருவான்...வருவான்”...ன்னுவழிமேல்விழிவெச்சுக்காத்திட்டிருந்திருக்கான்!...கல்யாணம்முடிஞ்சபிறகும்முரளிவராததில்சந்தேகப்பட்டுஅவன்வேலைசெஞ்சிட்டிருந்தரைஸ்மில்லுலபோய்விசாரிச்சிருக்கான்!..அப்பத்தான்விஷயம்புரிஞ்சிருக்கு!”என்றுசொல்லிநிறுத்தினார்தங்கவேலு.

கூர்ந்துகேட்டுக்கொண்டிருந்தராக்கம்மாதிரும்பிதனசேகரைப்பார்க்க

மீதியைதனசேகர்சொன்னான்“அம்மா....நண்பனைஇழந்துஒருமனைவியைப்பெறுவதைஎன்மனசுஏத்துக்கலைம்மா...அதனால...”

“அதனால....”

“முரளியைஎன்கிட்டேயிருந்துஒதுக்கினாங்க...நான்அந்தப்பெண்ணைஎன்கிட்டயிருந்துஒதுக்கிட்டேன்!.....எப்பஎன்முரளிகூடசேருகிறானோஅப்பத்தான்அந்தமனைவியும்சேரணும்!”னுஒருகனமானநிபந்தனையைப்போட்டுஅவளைகல்யாணமண்டபத்திலிருந்தேஅவவீட்டுக்குஅனுப்பிவெச்சிட்டேன்!...இப்பகிட்டத்தட்டஏழுமாசமாச்சு!...யார்யாரோவந்துஎன்னென்னமோசமாதானம்சொல்லிப்பார்த்தாங்க!...ம்ஹும்...நான்கேட்கலையே?...எனக்குமுரளிதான்முக்கியம்அந்தமனைவிஇரண்டாவதுதான்”என்றான்தனசேகர்.

அசந்துவிட்டாள்ராக்கம்மா.

உயர்சாதிப்பிறப்புக்கள்எல்லோருமேகொடுமையானவர்களாய்த்தான்இருப்பார்கள்என்றெண்ணியிருந்தராக்கம்மாதனசேகரைவியப்போடுநோக்கினாள்.

“உங்கஎல்லோருக்கும்தெரியாதஒருவிஷயத்தைநான்இப்பசொல்றேன்...இன்னிக்குநான்உயிரோடஉங்கமுன்னாடிநின்னுக்கிட்டிருகேன்னா....அதுமுதல்காரணம்முரளிதான்”என்றஆரம்பித்துசிறுவயதில்அந்தபாழுங்கிணற்றில்நடந்தசம்பவத்தைவிவரித்தான்தனசேகர்.

வாய்பிளந்தாள்ராக்கம்மா.“என்னப்பா...நீசொல்றதுநெஜமா?”

“சத்தியமானஉண்மைம்மா!...தன்னுடையஉயிரையும்...மானத்தையும்பொருட்படுத்தாமல்என்னுடையஉயிரைக்காப்பாத்தியவன்அம்மாஅவன்!..இப்பநான்வாழ்ந்திட்டிருக்கறவாழ்க்கைஅவன்போட்டபிச்சை!”உணர்ச்சிகரமாய்ச்சொன்னதனசேகரைஇழுத்தணைத்துக்கொண்டாள்ராக்கம்மா.

“இதுவரைக்கும்எனக்குஒருமகன்தான்இருந்தான்...இப்பயிருந்துஎனக்குரெண்டுமகன்கள்”என்றாள்அவளும்தழுதழுத்தகுரலில்.

சிலநிமிடங்களுக்குப்பிறகுஅந்ததாயின்அணைப்பிலிருந்துவிலகியதனசேகர்“அம்மா...முரளிஎங்கே?”கேட்டான்.

“இப்பவந்திடுவான்...வழக்கமாஇந்தநேரத்துக்குத்தான்அவன்சாப்பிடவருவான்”என்றாள்ராக்கம்மா.

நண்பனுக்காகதனசேகர்காத்திருக்க

அந்ததனசேகர்தன்புதுமனைவியோடுஇணைந்துவாழவேண்டுமென்பதற்க்காகதங்கவேலுகாத்திருக்க

தன்னுடையஆட்டத்தைக்காட்டவிதியும்காத்திருந்தது.

-------

சிலஅலுவலககடிதங்களைகூரியர்சர்வீஸில்கொடுத்துவிட்டுவெளியேவந்தமுரளியைவாசலிலேயேநிறுத்தியஅந்தப்பெண்.“என்னகோகுல்சார்சௌக்கியமா”கேட்டாள்.

அவள்தன்னைகோகுல்என்றுநினைத்துப்பேசுகிறாள்என்பதைப்புரிந்துகொண்டமுரளிஅந்தஉண்மையைச்சொல்லவாயெடுக்க

அவன்எதிர்பார்க்காதவினாடியில்சட்டென்றுகுனிந்துஅவன்காலைத்தொட்டுவணங்கினாள்அந்தப்பெண்.

அதிர்ச்சியோடுஓரடிபின்னால்நகர்ந்தமுரளி“என்னம்மாஇதெல்லாம்?”என்றுகேட்க

“சார்...நீங்கமட்டும்அன்னிக்குசரியானசமயத்துலவந்துபணம்கொடுத்துஉதவலேன்னா...நான்அசிங்கப்பட்டு....அவமானப்பட்டு...தற்கொலையேபண்ணியிருப்பேன்சார்”என்றாள்.

இந்தபின்புலத்தில்ஏதோகதைஉள்ளதுஎன்பதைப்புரிந்துகொண்டமுரளி“அதனாலென்னம்மா?”என்றுசொல்ல

சட்டென்றுதன்கைப்பையைத்திறந்துஅதனுள்ளிருந்துபணத்தைஎடுத்துஅவனிடம்நீட்டினாள்.“என்னிக்காவதுஒருநாள்நிச்சயம்உங்களைப்பார்ப்பேன்அப்போதுஇந்தப்பணத்தைக்கண்டிப்பாதிருப்பிக்குடுக்கணும்!னுவெச்சிருந்தேன்.....இன்னிக்குத்தான்நீங்கஎன்கண்ணில்பட்டீங்க”

அதைமுரளிவாங்கமறுக்க“சார்...ப்ளீஸ்வாங்கிக்கங்கசார்”கெஞ்சலாய்ச்சொன்னாள்அவள்.

“அம்மா...இதைவாங்கறதுக்குமுன்னாடிநான்ஒருஉண்மையைச்சொல்றேன்...அதைமுழுவதும்கேளு...அப்புறமாஇதைகுடுப்பதா?...வேண்டாமா?ன்னுமுடிவுபண்ணு””என்றுபீடிகைபோட்டமுரளி“நான்கோகுல்இல்லை”என்றான்.

“என்னது?...கோகுல்இல்லையா?”அவனைஏறஇறங்கப்பார்த்துவிட்டு“இல்லை...நீங்கபொய்சொல்றீங்க!...நீங்ககோகுல்தான்!...என்கிட்டேயிருந்துபணத்தைவாங்குவதைத்தவிர்ப்பதற்காகபொய்சொல்றீங்க”என்றாள்.

“இல்லைம்மா...சத்தியமாநான்கோகுல்இல்லை!...நீங்கசொல்றகோகுல்....இறந்திட்டாரும்மா”

(தொடரும்)
 

தரணி

Well-Known Member
adade thansekar vantha piragu kuda muraliyoda sera mudiyatha......

words idaiyil space illama iruku sis padikka konjam siramaga iruku
 

Saroja

Well-Known Member
தனசேகர் கண்டுபுடிச்சுட்டான்
முரளியபாக்க கிளம்பியாச்சு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top