மேவு கடல் நானுனக்கு..!!(அறிவிப்பு)

Preetz

Writers Team
Tamil Novel Writer
#1
வந்தேன்... வந்தேன்...மீண்டும் நானே வந்தேன்..!!
ஆனா ப்ரீத்தா கௌரியாக அல்ல...யஞ்ஞாவாக!

ஆமா யஞ்ஞா தான்!;)இனிமே நம்ம பேரு :)(புது புனைப் பெயர்:))

கொஞ்ச நாள் எழுதறத நிறுத்தி வச்சிருந்தேன்...இப்போ மறுபடியும்
Back to the pavilion;) but யஞ்ஞாவாக:)
புது start!
ப்ரீத்தா கௌரி க்கு குடுத்த ஆதரவ இந்த யஞ்ஞா வுக்கும் குடுப்பீங்கன்னு நம்பறேன் மக்களே:):)

இந்த புது பேர கொண்டாடறதுக்காக "மேவு கடல் நானுனக்கு..!!"ல இருந்து குட்டி டீசர்(உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது:p கதையும் சீக்கிரம் வரும்:love:)
With love
Yagnya:love:

மேவு கடல் நானுனக்கு..!!


அந்த வேகாத வெயிலில் விறுவிறுவென வீட்டினுள் நுழைந்தான் விக்ரம். பொதுவாகவே மதிய நேரம் அவன் வீடு வருவதில்லை... ஆனால் இன்றோ கிடைக்கும் நேரமெல்லாம் வீட்டில் செலவிட துடிக்கிறான்!
அன்றும் அதே போலத்தான் அன்றிருந்த அலுவலெல்லாம் சீக்கிரமே முடிந்துவிட வண்டியை தெருமுனையிலேயே நிறுத்துமாறு கூறியவன் அந்த வெயிலில் மேலெல்லாம் வேர்த்து வழிய... முகமெல்லாம் புன்னகை வழிய வீட்டினுள் நுழைந்தான்!

உள்ளே நுழைந்தவன் முதலில் எதிர்கொண்டது இசக்கி பாட்டியைத்தான். அவனை அந்நேரத்தில் எதிர்ப்பார்த்திராததால் ஆச்சர்யமாக பார்த்து நிற்க அவனோ
அந்த ஹாலில் நின்றவாறே பார்வையை சுழட்டினான்...அவளுக்காக...!

ஆனால் அவள் அங்கு இல்லாதுபோக இசக்கி பாட்டியிடம் திரும்பியவன் "சமுத்ரா..." என்று ஆரம்பிக்க அவன் கேள்வி உணர்ந்தவராக அவரே

"அவங்க மேல இருக்காங்க" என்றார்
"மேலயா??...மேல என்ன பண்றா???" என்று புறுவங்கள் முடிச்சிட ஏறினான் அவன்.
அங்கே கதவு திறந்துக் கிடக்க அவன் உள்ளே சென்றால்...அந்த அறையே ஆளின்றி இருந்தது. குளியலறையிலிருந்து சத்தம் கேட்க கதவு லேசாக திறந்திருந்தது. கதவு பக்கம் சென்றவன் முதலில் இரு விரலால் தட்ட அந்த பக்கம் பதிலில்லை நீர் விழும் சத்தம் வேறு!
லேசாக கதவைத் திறந்தவன் எட்டிப் பார்க்க அங்கே அவன் கண்ட காட்சியில் ஒரு நிமிடம் அதிர்ந்து பின் வேகமாக கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தான்.

"என்ன பண்ற நீ!??" என்றவனின் குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தவள் அவன்தான் என்றவுடன் சற்று ஆசுவாசமானாள்
"பார்த்தா தெரியல? தொவைக்கறேன்" என்றவள் வேலையை தொடர வேகமாக அவளிடமிருந்து சோப்பை பிடுங்கியவன் அது வழுக்கிச் செல்ல அதை அங்கிருந்த பாத் டப்பினுள் தவற விட்டிருந்தான்.
அவன் செயலில் எரிச்சலுற்றவள்
"என்ன ப்ரச்சனை இப்போ???" என்றாள் அனல் தெறிக்கும் குரலில்.

"இதெல்லாம் ஏன் நீ பண்ற??? செல்வியக்காட்ட குடுக்க வேண்டித்தானே?"

"எனக்கு இப்போ வேறெந்த வேலையும் இல்ல...அண்ட் மோரோவர் என் வேலையை நானே பார்த்து பழகிட்டேன்!" என்றவளை வினோதமாக நோக்கியவன்
"அப்போ மிஷின்லயாவது போடலாம்ல?" என்றான்
"இல்ல எனக்கு இப்படித்தான் தொவைக்கணும்...என் இஷ்டத்துக்கு தொவைக்கக்கூட கூடாதா???" என்றவள் போர்கொடி தூக்க அதுக்கெல்லாம் அசறுபவனா அவன்? சட்டை கையை மடக்கியவன் தொட்டியினுள் கிடந்த சோப்பை கையிலெடுத்தவாறு "ஏன் கூடாது??? வா நாம சேர்ந்தே செய்யலாம் நானும் கத்துக்கறேன்" என்று துணிகளுக்கு சோப்போட ஆரம்பித்துவிட்டான்.

......................................

அந்த வேகாத வெயிலில்... மொட்டை மாடியில்... வெளியில் வேர்த்து வழிய நின்றுக்கொண்டிருந்தவனுக்கோ அவளுடன் இருந்த ஒவ்வொரு நொடியும் உள்ளுக்குள் குளுகுளுவென்றுதான் இருந்தது!

அவனும் பார்த்துக் கொண்டுத்தான் இருக்கிறான் அவள் காயப்போடும் அழகை!
இரண்டு பக்க கொடியும் நிறைந்துவிட
மூன்றாவது கொடியை பிடிக்க முடியாமல் எக்கி பார்த்தாள்...முடியவில்லை அதை அவனிடம் கூறினால் இழுத்து பிடிப்பான்தான் ஆனால் அவளுக்குத்தான் மனமில்லை அதற்கு பதிலாக ஒவ்வொன்றாக கையிலெடுத்தவள் சின்னதாக குதித்து அந்த கொடியை பிடித்து போட்டுக் கொண்டிருக்க அவனோ அவள் குதிப்பதும் பின் தள்ளாடுவதுமாக இருந்ததை பார்த்துவிட்டு கொடியை இழுத்துப்பிடித்தான். புன்னகைக்கு பதிலாக அவள் முகத்திலோ எரிமலையே வெடித்தது!

***********************
இரு பக்கமும் வெறும் பொட்டல் காடுகளாக இருக்க சாலையில் சீரான வேகத்துடன் சென்றுக் கொண்டிருந்தது அந்த வாகனம்!
அவ்வளவு நேரமும் சாலையில் கவனம் பதித்திருந்தவன் தான்... ஆனால் வண்டியினுள் அமைதக குடி கொண்டிருக்க ஏதேட்ச்சையாக அவன் பக்கத்து இருக்கையை பார்த்தான் அவன்.

அந்த பாதி அடைத்திருந்த யன்னலின் ஓரத்தில் தலை சாய்த்திருந்தவளின் பின்னலினுள் அடங்கியிருந்த கேசமோ எதிர் காற்றின் வேகத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் கலைந்திருந்தன...

அவன் வண்டியின் வேகத்தை குறைத்திருந்தான்!
காற்றின் அழுத்தம் குறைந்தாலும் அவள் காதோரத்தில்...இன்னும் அந்த தென்றல் காற்று..!!

காதோரங்களில் இருக்கிறதா..இல்லையா என்றுத் தெரியாத அளவு அவளது காதணிகள்..!!
அவனுக்கோ மனதுக்குள் காதல் ஆணிகள்..!!
பார்வை முடியிருந்த அவள் விழிகளைத் தீண்ட...ஏதோ ஒன்று வித்தியாசமாக..!

கண்ணாடியை கலட்டி வைத்துவிட்டாள் போலும்.. பார்லரை பார்த்திராத அவள் புறுவங்களும்.. மூடியிருந்த அவள் விழிகளுமே அவனுக்கு ஆயிரம் கதைகள் கூறின..!!
முகத்தில் கதிரவனின் கரங்கள் படர அவள் அதில் லேசாக புறுவம் சுளித்தாள். அவளையே பார்த்திருந்தவனின் பார்வையில் அது படாமலா போகும்..!?

ஏசியை உயிர்ப்பித்தவன் இன்னிசையாய் இருந்தாலும் அது அவளை பாதிக்காத வண்ணம் சத்தத்தை குறைத்தவன் அவள் பக்க யன்னலை மூடிவிடும் எண்ணத்தில் வண்டியை நிறுத்திவிட்டு அவள் பக்கமாக சாய்நது கண்ணாடி யன்னலை மேலேற்றியவனை ஒரு நொடி உறைய வைத்தது அந்த பாடல்..!
அந்த பன்பலைக்கு கூட அவன் எண்ண அலைகள் தெரிந்து விட்டன போலும்...ஆனால் அந்த நொடி உறைந்துதான் போனான்...!

உசுரே போகுதே உசுரே போகுதே
ஒதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே
ஓ… மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணி குயிலே
அக்கரைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

அவனவளின் வதனம் சில மில்லிமீட்டரில்!
இது புதிதல்லத்தான்...ஆனால் இன்று.. அவன் பார்வையில் அவள் ஓவியமாய்..!!

இவ்வளவு நெறுக்கமாக முதல்முறை..உறங்கும் அவள்..!!

அவன் மனம் அவள் இதழ் தீண்டத் துடிக்க அதில் திடுக்கிட்டுப் போனவன்..மறுநொடியே சட்டென நிமிர்ந்தமர்ந்தான் அவன் இருக்கையில்!


************************************
அவன் போராடிக் கொண்டிருந்தான்...அவனிடமே!
ஆம்! அவனுள் ஒரு போராட்டாம்!

'என்ன காரியம் செய்ய பாரத்த விக்ரம்?!!' என்று அவன் அவனையே கடிந்துக் கொள்ள

'சோ வாட் அவ நீ தாலி கட்டின உன் பெண்டாட்டி தானே?' என்று இன்னொரு குரல்.

'அதுக்கு!?'

'உனக்கு உரிமை இல்லையா?'

'இருக்கு...ஆனா அதுக்கும் மேல பொறுப்பு இருக்கு...என்ன நம்பி தூங்கறவள நான்தான் பாத்துக்கணும்!'

அவளில் தன் பார்வையை பதித்தவன் மனதினில் ஓர் உறுதி!
'இவ என் பேபிதான்...என்னவள்தான்!..ஆனா என்னைக்கு நான் அவ மனசார என்னையும் என் காதலையும் ஏத்துக்கறாளோ...அன்னைக்கு வர நான் காத்திருப்பேன் என் கண்ணம்மாக்காக...என் பேபிக்காக..!!'

பாம்பா விழுதா
ஒரு பாகுபாடு தெரியலையே
பாம்பா இருந்தும்
நெஞ்சு பயப்பட நினைக்கலையே
என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா
நான் மண்ணுக்குள்ள உன் நெனப்பு மனசுக்குள்ள
சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்
இப்ப தலை சுத்தி கெடக்குதே

பாடல் வரிகள் அவனை மீண்டும் துரத்தின...
'ஹ்ம்ம்ம்' என்று ஒரு பெருமூச்சை இழுத்து விட்டவன் வண்டியை எடுத்தான்!

அவள் அவனவள் ஆனாள்..
அவன் சகலமும் அவளானாள்..
ஆனால் அவன் காத்திருப்பின் பலனாவாளா..?
அவள் வினாக்களின் விடையாவானா..?

:love::love::love:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement