மென்சாரலில் நின்வண்ணமோ..!?-8(TEASER)

Advertisement

Preetz

Writers Team
Tamil Novel Writer
என்ன செய்துக் கொண்டிருக்கிறாள் இவள்!? மனம் ஒரு புறம் முரண்டித் தள்ளியது என்றால் மறுபுறமோ எதையும் யோசிக்க மறுத்தது.. ஏன்? என்ற கேள்வியும் இருந்தால் என்ன? என்றதற்கும் இடையில் இருந்தாள் மேகராகா.

சுலபத்தில் அவள் தடுமாறும் ரகமல்ல எத்தனை குழப்பம் இருந்தாலும் ப்ரச்சனைகள் எழுந்தாலும் அவளது முடிவுகளில் என்றுமே திடம்!!

.............

மேம்..மேம்!!" என்று பதட்டமாய் அந்த ஸ்டாஃப்ரூம் வாசலில் ஓடிவந்து சற்று நிதானிக்க முயன்று தள்ளாடியபடி நின்றவளுக்கு மூச்சுவாங்கியது.


அவள்.. மனோவின் மனோஹரி..


"தென்னல்?" என்று கேள்வியெழுப்பிய மேகாவை அதே படபடப்புடன்..


"மேம்..மேம் தே ஆர் ஃபைட்டிங்!" என்றாள் மேல்மூச்சு கீழ் மூச்சுவாங்க


"யாரு?" என்ற சந்தேகமாய் வாய் மொழிந்தாலும் தன்னிடத்தில் இருந்து எழுந்துவிட்டாள் மேகா.


"மேம்...மனோ..மனோவும் உதயும் க்ரௌணட்ல.. ஃபைட் செய்றாங்க" என்றாள் அவளுக்கு தெரிந்த தமிழில். பதட்டத்தில் அவளது தமிழும் படபடத்தது.


அவ்வளவுதான். மறுகணமே மேகாவின் கால்கள் க்ரௌண்டை நோக்கி ஓடியிருந்தது.


.....


அந்த ஸ்டாஃப் ரூமே காலியாய் கிடக்க மின்விசிறியொன்று அவளது கேபினுக்கு மட்டும் ஒலியெழுப்பியவாறு மிதமான காற்றை கடத்திக் கொண்டிருந்தது.


தன்னெதிரே தலைக் குனிந்து அமர்ந்திருப்பவனையே நம்ப முடியாமல் பார்த்திருந்தாள் மேகா.


மனோவா இப்படி? என்று.. இன்னும் அவளால் நம்ப முடியவில்லை.


மேகாவின் கூர்பார்வை தன்னை துளைப்பதை உணர்ந்து நிமிர்ந்தான் மனோ.


.....


"நான் என்ன பண்ணட்டும் தென்னல்?!!" என்றவனின் குரலின் கரகரப்பில் ஒருகணம் தென்னலின் பார்வை மேகாவிடம் திரும்பியது.

........

திடீரென அதிரூபனிடமிருந்து அக்கேள்வி,”லாஸ்ட் டேக்கு அப்பறம் என்னாச்சு மேக்ஸ்? உன்ன பாக்கவே முடியல... காண்டாக்ட் பண்ணவும் முடியல..” என்று வினவ

திடீர் கேள்வியில் ஒரு கணம் நின்றவளோ பின் தன் வேலையை தொடர்ந்தபடியே சொல்லத் தொடங்கினாள்.
........


Please do share your views friendsss!!!:giggle: Comments வரவு கொறஞ்சிட்டே... :unsure: கதை எப்படி போகுது ஃப்ரெண்ட்ஸ்? I'm always open to feedback guys... நல்லா இருக்கா இல்லையானு ரெண்டு மூனு வார்த்தை ஷேர் கரோ கைஸ்:D நாம கதையோட 2nd ஹாஃப்க்கு வந்துட்டோம்:giggle:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top