முன்னோட்டம்

Advertisement

Prashadi

Member
முன்னோட்டம்
அறை முழுதும் இருள் சூழ்ந்திருந்தது....

அந்த கும்மிருட்டில் பளீச் பளிச் என்று ஒளிர்ந்து கொண்டிருந்த அழைப்பேசியை வெறித்துப் பார்த்து அமர்த்திருந்தான்.

அவன் அகமகிழன்|

பெயரில் மட்டும் தான் மகிழ்ச்சி இருந்தது. அந்தப் பெயர்க்குரியவன் முகமோ இருண்டு போய் இருந்தது.

தடாரென்று கதவு திறக்கும் சத்தம் கேட்ட அடுத்த நொடி, சற்று பலமாக வாங்கிய உதையில் சோபாவிலிருந்து தலைக்குப்புற விழுந்தான்.
' கராட்டி கிட் 'என்று பெயர் போனவன், மனம் தளர்ந்து போயிருந்ததால் அந்த உதைக்கு தாக்கு பிடிக்காமல் போனான்.

பட பட என ஒளிர்ந்த விளக்குகள் அறையை வெளிச்சமாக்கியது.

ஆனால் அவன் முன் நின்றவள் முகமோ கோபத்தில் அவனை சுட்டெரித்துக் கொண்டிருந்தது.

வாங்கிய உதையிலும் வெளிச்சத்திலும் தடுமாறியவன், சற்று தெளிந்தவுடன் தன் எதிரே நின்றிருந்தவளை பார்த்து கோபத்தில்

"ஏய்!!! எவ்ளோ தைரியம் இருந்தா என்னை உதைச்சிருப்ப?"

"உன்னை உதைச்சிருக்க கூடாது டா. கொன்னுருக்கனும்" என்று பதிலுக்கு எகிறினாள்.

மென்மொழி!
(மென்மை பெயரில் மட்டுமே)

இருவருக்கிடையேயான சுவாரஸ்யமான கதைக்களம் தொடரும்.....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top