முன்னுரை!!!

Advertisement

Sasideera

Well-Known Member
ஹாய் நண்பர்களே!

தினம் ஒரு குற(ர)ல்...

திருக்குறள் பற்றி அறியாதவர்கள் யாருமில்லை!!! தமிழனாக நம்மை உலகின் எல்லா இடங்களிலும் பெருமை கொள்ள வைக்கும் இந்த இலக்கியத்தை நம் தளத்திலும் போற்றுவோமே!!!

தினம் ஒரு திருக்குறளோடு, திருக்குறளைப் பற்றியும் திருவள்ளுவர் பற்றியும் சில சுவாரஸ்யமான தகவலோடு வருகிறேன்!!! எல்லோரும் பயனடைவோம் நண்பர்களே!!!
 

Sasideera

Well-Known Member
தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு.

மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது இந்நூலின் மொத்தமான நோக்கு.

குறளானது ஈரடிகளில் உலகத் தத்துவங்களை சொன்னதால், இது ‘ஈரடி நூல்’ என்றும், அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதால், ‘முப்பால்’ என்றும் அழைக்கப்படுகிறது.

கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது.

பிற பெயர்கள்
தொகு
உத்தரவேதம்
பொய்யாமொழி
வாயுரை வாழ்த்து
தெய்வநூல்
பொதுமறை
தமிழ் மறை
ஈரடி நூல்
வான்மறை

உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 107 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை"

"மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்"

"மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top