முகம் பொலிவு பெற சில டிப்ஸ்

Advertisement

Bhuvana

Well-Known Member
முகம் பொலிவு பெற சில டிப்ஸ் :

1. வெந்தயக்கீரை, பாசிப்பருப்பு, சீரகம் ஆகிய மூன்றையும் சேர்த்து வேகவைத்து வாரத்தில் இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியடைவதோடு முகம் சுருக்கம் மறையும். மேலும் முகம் பளபளப்பாக மாறும்.

2. வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாளாவது ஆரஞ்சு மற்றும் கேரட் ஜீஸ் குடித்து வந்தால் முகம் பொன்னிறமாக மாறும்.

3. நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகிய இரண்டையும் சமஅளவு எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பின் கடலை மாவினால் தேய்த்து கழுவினால் முகம் புத்துணர்ச்சியாக இருப்பதை காணலாம்.

4. இதே செய்முறையை ஆலிவ் எண்ணெய் மற்றும் சுத்தமான தேங்காய் எண்ணெயிலும் செய்யலாம். இவ்வாறு செய்வதால் முகம் இளமையாக தோன்றும்.

5. சிறிதளவு பாசிப் பயிறை எடுத்து தேங்காய் பாலில் ஊறவைத்து மைபோல அரைத்து அதனுடன் மஞ்சள் பொடியை சேர்த்து முகத்தில் பூசி உலர்ந்த பின்னர் முகத்தை கழுவி வந்தால் முகம் மென்மையாக காணப்படும்.

6. கொத்தமல்லி விதை, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி காயவைத்து பின்பு தண்ணீரில் கழுவி வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் குறையும்.

7. துளசி இலை மற்றும் வேப்ப மரத்தின் கொழுந்து இலைகள் இரண்டையும் பறித்து சுத்தம் செய்து நன்கு கழுவி நிழலில் காய வைத்து உலர்த்தி இடித்து பொடி செய்து அதனுடன் கடலை மாவு சேர்த்து சிறிது எலுமிச்சை பழச்சாறு கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் வைத்து பிறகு குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் கரும்புள்ளிகள் குறைந்து முகம் பளபளப்பாக மாறும்.

8. கோழி முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துக் கொள்ளவேண்டும். பாதாம் பருப்பை அரைத்து முட்டையின் வெள்ளைக் கருவுடன் கலந்துக் கொள்ளவேண்டும். பின்பு சிறிது எலுமிச்சம் பழச்சாற்றை இந்த கலவையுடன் கலந்து முகத்தில் தடவி கால்மணி நேரம் கழித்து முகத்தை சோப்பு போட்டு கழுவி வந்தால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் குறையும்.

9. 2 தேக்கரண்டி தேயிலைத்தூள் எடுத்து அதனுடன் சிறிதளவு துளசி இலை சேர்த்து 2 டம்ளர் நீர் விட்டு நன்கு அரை டம்ளராக வற்றும் வரை நன்றாக காய்ச்சி வடிகட்டி ஆறியதும் முகத்தில் தடவி வந்தால் முகப்பரு குறையும்.

10.தயிர் அல்லது பால் ஏடு எடுத்து கால் டீஸ்பூன் மஞ்சளை அதனுடன் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் குறைந்து முகம் பளிச்சிடும்.
 
Rukmani Sankar

Super tips sis .
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top