மின்னல் அதனின் மகனோ...(அழகி ஒரு வாசகியாக)

#1
@Saranya Hema

கதையின் தலைப்பு மிக அழகாக வித்தியாசமாக இருந்தது. கதைக் கருவும் வாசகர்களைப் படிக்கத் தூண்டும் வகையில் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.

அஷ்மிதா/துவாரகா... இவர்களில் யார் ஹீரோயின் என்பதில் ஆரம்பத்தில் வாசகர்களைக் கொஞ்சம் குழப்பத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்று ஆசிரியர் நினைத்தார் போலும்.(நான் கொஞ்சம் குழம்பித்தான் போனேன்.)

அஷ்மிதாவின் ஹாஷ்யம்...‌ அப்பப்பா! ஒருசில இடங்களில் என்னை மறந்து நான் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தேன்.

மயில்சாமி... சீச்சீ, ரத்தினசாமி... டெர்ரரான அரசியல்வாதி. ஆனால் தங்கைப் பாசம் கண்ணை மறைத்துவிட்டது. இருந்தாலும் அழகான குடும்பத்திற்குச் சொந்தக்காரர்.

கல்யாணக் களேபரத்தின் போது கதை மிகவும் பரபரப்பாகப் போனது. என்ன நடக்கப் போகிறதோ என்ற விறுவிறுப்பு அங்கே குறைவில்லாமல் இருந்தது. நன்று.

அதன் பிற்பாடு கதை கொஞ்சம் ரோலர் கோஸ்டர் போல அவசியமில்லாமல் ஏறி இறங்கியதோ!?

கதையின் ஆரம்பத்தில் இருந்த அனைத்துப் புதிர்களுக்கும் அகிலவேணியின் ஃப்ளாஷ் பேக் மூலம் ஆசிரியர் பதிலளித்திருந்தார்.

முப்பத்தி இரண்டு அத்தியாயங்கள். இருபத்தி ஐந்தில் முடிக்க நினைத்ததாக ஆசிரியரே குறிப்பிட்டிருந்தார். அப்படி முடித்திருந்தால் கதை இன்னும் திறம்பட இருத்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

எழுத்துப் பிழைகள் குறைவாக இருந்தது கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது. ஆசிரியர் அதில் கவனமெடுத்தால் இன்னும் நான் மகிழ்வேன்.

இதமான எல்லை மீறாத காதல் காட்சிகள் படிக்க சுகமாக இருந்தது. டாக்டரின் ஹாஷ்யம் கதைக்கு ப்ளஸ். அதே நேரத்தில் சில இடங்களில் இவற்றைத் தவிர்த்திருக்கலாம் என்றும் தோன்றியது.

ஆசிரியர் திட்டமிட்டபடி குறைந்த அத்தியாயங்களில் கதையை முடித்திருந்தால் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல கதைப் படித்த திருப்தி முழுதாகக் கிடைத்திருக்கும்.

ஒரு சின்னப் பூத்திரியில்
ஒளி சிந்தும் ராத்திரியில்...
இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல்
புது வித்தை காட்டிட வா...

அன்புடன் அழகி.
 
Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
#5

@அழகி

ஹாய் மேம்

தவறா நினைக்க வேண்டாம். லேட்டா ரிப்ளே பன்றேன்னு. போட்டிக்கதைல இருந்ததால இந்தபக்கம் வராம போய்ட்டேன்.

தேங்க் யூ சோ மச் :)

எழுத்துப்பிழை இப்ப கொஞ்சம் கவனமா இருந்துட்டு வரேன். இருந்தாலும் சில இடங்களில் என்னை அறியாம வந்திருது தான். குறைச்சுக்கிட்டே வரேன்.

தேங்க் யூ :) இன்னும் கூட நீங்க சொன்ன மாதிரி அதையும் கவனமா பார்த்துக்கறேன் :)

கதை ஆரம்பிக்கும் போது அத்தியாயங்கள் இத்தனைன்னு முடிவு பன்றது தான். ஆனா எழுத உட்கார்ந்ததும் சில நேரம் அப்படியே கதையின் போக்கில் தான் நாம போகவேண்டியதா ஆகிடுது. அப்படி வந்ததுதான் இந்த நீளமான கதை.

இனி வரும் கதைகள்ல கொஞ்சம் சுருக்கமா குடுக்க முயற்சி செய்யறேன் கண்டிப்பா :):)

மீண்டும் நன்றிகள் உங்கள் விமர்சனத்திற்கு :):):)
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement