மினி தாவா பீட்சா

Advertisement

Bhuvana

Well-Known Member
#மினி_தாவா_பீட்சா

#தேவையானவை :
விருப்பாமான டாப்பிங்ஸ் - தேவைக்கு ஏற்ப
ஆலிவ் எண்ணெய்/சமையல் எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
மொசரெல்லா சீஸ் (Mozeralla cheese) - 200கிராம் துருவியது

#பீட்சா_பேஸ்_செய்ய :

மைதா - 1/4 கி
பேக்கிங் சோடா - 1/4 டீ ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1/4 டீ ஸ்பூன்
கட்டி தயிர் - 4 டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப

மேற் சொன்ன பொருட்களை எல்லாம் நன்றாக பிசைந்து வைக்கவும். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிசைந்து மாவை 2 கரண்டி எண்ணெய் விட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

#பீட்சா_சாஸ்_செய்ய :
தக்காளி சாஸ்/டொமேட்டோ கெட்ச்அப் - 1/4 கப்
சில்லி ப்ளேக்ஸ் - 1 ஸ்பூன்
ஒரிகேனா மிக்ஸ்/பீட்சா ஸிசனிங் - 1 ஸ்பூன் (இது கிடைக்கல ன்னா உங்க வீட்டில இல்ல பக்கத்தில இருந்தா கற்பூரவல்லி இலை, துளசி இரண்டையும் மிக்ஸியில் சுத்தி எடுத்து பயன்படுத்தலாம்.
மிளகாய் தூள் - 1/2 டீ ஸ்பூன்
பூண்டு - 7பல் (பொடியாக நறுக்கியது)
உப்பு - சிறிதளவு

மேற் கூறிய பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து பீட்சா சாஸ் தயார் செய்து வைக்கவும்.

கொஞ்சம் அடி கனமான தாவா எடுத்து 5 நிமிடம் ப்ரி ஹீட் பண்ணவும்.

டாப்பிங்ஸை ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு 2 நிமிடம் மட்டும் கொஞ்சம் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி வைத்து கொள்ளவும்.

ஊற வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிரித்து சப்பாத்தி கல்லில் கனமாக தேய்த்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு போர்க் வைத்து அங்க அங்க குத்தி விடவும். ஒன்று போல வேக ஏதுவாக இருக்கும்.

பீட்சா சாஸை தடவி, சீஸ் தூவி, டாப்பிங்ஸ் சேர்த்து, மீண்டும் கொஞ்சம் சீஸ் தூவி தாவாவில் வைத்து 10ல் இருந்து 15 நிமிடம் வரை மிதமான தீயில் வேக வைத்து எடுத்தால் மினி பீட்சா ரெடி.
 

Attachments

  • 20210523_190117.jpg
    20210523_190117.jpg
    726.4 KB · Views: 2

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top