மாலை சூடும் வேளை---6

Advertisement

laxmidevi

Active Member
மாலை-6
பாடல் வரிகள்.
நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே...



போன் சத்தத்தில் தூக்கம் கலைந்து எழுந்தான் விக்ரம். அவன் நண்பன் ஸ்ரீராம் தான் போன் செய்து இருந்தான் பின் இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைத்தான் .
ப்ரஷ் ஆகிவிட்டு மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தான் .

வாடா தம்பி சாப்பிடலாம் என்றார் அம்பிகா அப்படியே அவர் கணவரையும் அழைத்தார் .

தந்தையும் மகனும் பேசியவாறே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் .

விக்ரம் உன் காருக்கு என்னப்பா பிரச்சனை என்றார் முரளிதரன்.

பிரச்சினையா ஒன்றும் இல்லையப்பா ஏன்பா?

இல்லை காலையிலேயே கார்கேட்டாயே அதனால் கேட்டேன்.

உண்மையை கூறினால் அப்பெண் யார் என்று கேட்பார்கள் அன்னை ஏதோ நினைத்துக்கொள்வார்கள் .எனவே ஒரு வேலையாக பாலாவிடம் காரை கொடுத்து அனுப்பி இருக்கிறேன் என்றான் .

சரிமா நான் கிளம்புகிறேன்.

இன்னைக்காவது சீக்கிரம் வாடா சாருவிடம் பேசி விட்டாயா என்றார் .

ம்ம் பேசிட்டேன் மா என்றான் மகன்.

சாருமதி விக்ரமின் தோழி அவர்களின் பூர்வீகம் வட இந்தியாவில் உள்ள பூனே இங்கே ஃபேஷன் நகை கடை வைத்திருக்கிறார்கள். அவளின் தாத்தாவும் விக்ரமின் தாத்தாவும் நண்பர்கள் . அது இப்பொழுது வரை தொடர்கிறது. இருவரின் தந்தையும் நல்ல நண்பர்கள்தான் ஒரு உறவு போல தான் இரு குடும்பத்தினரும் பழகி வந்தார்கள். சாருமதி விக்ரமின் பெற்றோரை அத்தை மாமா என்று தான் அழைப்பாள். அவனும் அப்படியே. சாருமதி தமிழ்நாட்டுப் பையனை விரும்புகிறாள் அதற்கு அவள் வீட்டில் சம்மதம் வாங்கவே விக்ரமிடம் உதவி கேட்டாள். அவனும் தன் தோழிக்காக சரி என்றான் .


விக்ரம் நான் உன்னை ஸ்டேஷனில் விட்டுவிடுகிறேன் என்றார் அவனின் தந்தை .

இல்லைப்பா டாக்சியில் போய் கொள்கிறேன் உங்களுக்கு ஏன் வீண் அலைச்சல் பா கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க காலையிலேயே தொந்தரவு கொடுத்துட்டேன்.

இல்ல தம்பி நான் நான் அந்த பக்கமா தான் ஒரு வேலையா போகிறேன். வா உன்னை ட்ராப் செய்கிறேன்.
என்றபடியே இருவரும் வாசலுக்கு வந்தனர் .

அப்போது அவனுடைய கார் வீட்டின் கார் பார்க்கிங்னுள் நுழைந்தது அதிலிருந்து பாலா இறங்கினார்.


குட் மார்னிங் சார் உங்களுக்கு போன் செய்தேன் ஆனால் கால் போகவில்லை நீங்கள் சொன்னபடியே அந்த பெண்ணை அவளுடைய விடுதியில் விட்டு விட்டேன் சார் உங்களுக்கு கார் தேவைப்படுமோ என்றுதான் எடுத்து வந்தேன் என்றார் பாலா.

பாலாவின் பேச்சை கேட்ட முரளிதரன் தன் மகனை கேள்வியும் ஆராய்ச்சியுமாய் பார்த்தார் .

தந்தையின் பார்வையை உணர்ந்த அந்த காவலன் சரிப்பா நேரமாகிறது நான் வருகிறேன் என்று நழுவினான்.

யார் அந்தப் பெண் என்று யோசித்தவாறே சரிப்பா பத்திரம் மாலையில் உன்னுடன் சற்று பேச வேண்டும் என்றார் அவன் தந்தை.

எப்படியும் தந்தை மாலையில் அந்தப் பெண்ணைப் பற்றி கேட்பார் சரி பார்த்துக் கொள்ளலாம் என்று சிரித்தவாறே பாலாவுடன் காரில் கிளம்பினான் விக்ரம்.

அவன் காரில் செல்லும்போது அவன் செல்போன் சினுங்கியது .அதை எடுத்து சொல்லுங்க சரவணன் என்றான் விக்ரம்.

அந்த இரண்டு தீவிரவாதிகள்ல ஒருத்தன பிடிச்சாச்சு எல்லாம் நம்ம பிளான் படி தான் சார் போச்சு ஆனால் மற்றொரு ஆள பிடிக்க முடியல என்றார் சரவணன்.

எங்க வைத்து மடக்குனிங்க என்றான் விக்ரம்.

பண்ணாரி செக் போஸ்ட் பக்கத்துல சார் இவன் ஒருத்தன் மட்டும் தான் வந்ததாக சாதிக்கிறான். இவனை கூட்டிப்போக அந்த மாநில போலீஸ் கமிஷனர் ஆபீஸில் வெயிட் பண்றாங்க சார் அதை சொல்லதான் காலையிலேயே போன் பண்ணினேன். பட் லைன் போகல அவங்ககிட்ட இவனை ஹேண்ட்ஒவர் பண்ணிடலாமா சார் என்று கேட்டார்.

சரவணன் நமக்கு இந்த கேசை பற்றி எதுவும் தெரியாது .அவங்க தான் இது ஹேண்டில் பண்றாங்க சோ அவங்ககிட்ட ஹேண்ட்ஒவர் பண்ணிடலாம். எதுக்கும் கமிஷனர் சார் கிட்ட கேட்டுக்கோங்க அவர் வழிகாட்டுதலின்படி நடக்கலாம் என்றான் விக்ரம் .

என்ன விஷயம் சார் என்றார் பாலா.

நடந்ததை விவரித்தான் விக்ரம்.
மற்றொருவனை எப்படி பிடிப்பது பாலாண்ணா. பச்சை மலை அதை சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமரா அமைக்கலாமா ?
அப்படியே செய்வோம் சார் .
சரி அங்கே போய் பார்த்துட்டு ஸ்டூடண்ட் ஹாஸ்டல் எல்லாம் பாதுகாப்பா இருக்கா என்று நம்முடைய அலுவலர்களிடம் விசாரித்துவிட்டு இன்னும் கொஞ்சம் செக்யூரிட்டி பலப்படுத்தலாம். மாணவர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் ரொம்ப பெரிய பிரச்சினை ஆயிரும் .

சார் சி2 ஸ்டேஷன்ல ஒரு பைல் இருக்கு அதை இன்னைக்கு கோர்ட்ல கொடுக்கணும் நான் இங்கே செக்போஸ்டில் இறங்கிட்டுமா இல்லை உங்களுடனே வரவா என்றார் பாலா தயங்கித் தயங்கி.

சரிங்க அண்ணா நீங்க ஸ்டேஷன் போய் அங்க உள்ள உங்க வேலையை பாருங்க நான் காலேஜ் போய் மற்ற வேலைகளை பார்த்துவிட்டு அங்கு வருகிறேன் .


பச்சை மலை செக்யூரிட்டி ஆபீஸர் பார்த்து பேசிவிட்டு சக்தி காலேஜ் சென்று அங்குள்ள காலேஜ் செக்யூரிட்டி ஆபீஸர் உடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி பேசிவிட்டு காலேஜ் கேம்பஸ் மாணவ மாணவியர் விடுதியின் பாதுகாப்பை பார்வையிட்டார் மாணவிகள் விடுதி வரை வந்தவன் சற்று தயங்கி வெளியிலிருந்தே அங்கு இருந்த காவலரிடம் விசாரித்துக் கொண்டிருந்தான் விக்ரம்.

அப்போது அங்கு வந்த விக்ரமை பார்த்து மெல்லியதாக அதிர்ந்தாள் மங்கை.



காலை உணவிற்கு பின் தோட்டத்தில் தோழிகளுடன் வம்பளந்து கொண்டிருந்த மங்கை, விக்ரமை பார்த்து விட்டு இது யாரு புதுசா இருக்கு மதி என்றாள.
ஹே இவர்தாண்டி ஏசிபி உனக்கு தெரியாதா? சும்மா ஹீரோ மாதிரி இருக்கார்ல என்றாள் மதி.
அப்போ நைட் நம்ம கார்ல பார்த்த போட்டோல இருந்தது இவர் தானா பரவால்ல சின்ன வயசுலேயே ஏசிபி போஸ்ட் அதற்குள் திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் .செம பாஸ்ட் ஏபிசி சார் என்று மனதினுள் நினைத்தாள் மங்கை.

சரிடி இவர்தான் எனக்கு ஹெல்ப் பண்ணாரு நான் போய் ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு வரேன் என்றாள் மங்கை.
பின் விக்ரமிடம் சென்று சார் நீங்கள் செய்த உதவிக்கு ரொம்ப நன்றி என்றாள் .

மங்கையை பார்த்ததும் விக்ரமின் கண்கள் யோசனையாய் அவள் மீது படிந்தது .

மிஸ் .....என்று இழுத்தான் அவன் .

மங்கையர்க்கரசி என்றாள் மங்கை.

இனிமேல் இது மாதிரி ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள் இதுவே நீங்கள் எங்களுக்கு கூறும் மிகப் பெரிய நன்றியாகும் என்று கடுப்பாக கூறினான்.

பெண்களுக்கு நடக்கும் பிரச்சினைகளை பற்றி அறியாமல் தனியாக அதுவும் முன்பின் தெரியாத ஒரு பெண்ணுடன் செல்ல நினைப்பது, எவ்வளவு பெரிய பிழை, அவளுடன் சென்று இருந்தால் என்னவாகும் என்று அந்த கோபத்தில் தான் அப்படி பதிலளித்தான் விக்ரம்.

நன்றி தானே கூறினோம் ,மனிதர் எதற்காக இப்படி காய்கிறார் என்று குழம்பியவாறே சரி சார் இனிமேல் அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்றாள் மங்கை.

பின் விக்ரம் அந்த பச்ச மலையில் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்களில் பொருத்தும் வேளையில் பிஸியாக இருந்தான் . அதன் காரணமாக அவன் சக்தி கல்லூரிக்கு அடிக்கடி வந்து சென்றான்.மங்கையும் அவனை அங்கு பலமுறை காண நேர்ந்தது .



விக்ரமை பார்த்ததும் அவன் கோபமாய் பேசியது நினைவு வந்து மனதில் வலித்தாலும் அவனை அவனறியாமல் ரசிப்பதை நிறுத்தவில்லை .தன் தோழியரும் அவனைப் பார்ப்பதை பார்த்து அவர்களிடம் விக்ரமிக்கு திருமணம் ஆகிவிட்டது என்றாள் மங்கை.

அதற்கு மதி இல்லடி லூசு. அவர் இந்த கோவையில் மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலர் என்றாள்.

நிச்சயமாக உனக்கு தெரியுமா என்றாள் மங்கை.

நிச்சயமாக எனக்கு தெரியும் . எங்க மாமாவுக்கு ஏபிசி தூரத்து சொந்தம் .அதனால் எனக்கு இது தெரியும்.

அதைக்கேட்டதும் அப்போ அந்த குழந்தைங்க யாரு? அவனுக்கு திருமணம் ஆகவில்லை என்று கேட்டதும் மங்கையின் உள்ளம் குதூகலித்தது.

மங்கையின் குடும்பம் திருவிழாவினை முடித்துவிட்டு அவர்கள் இல்லம் திரும்பினர்.

பாலா அண்ணா கொஞ்சம் ஈரோடு வரை போய் அந்த கமிஷனரை பார்த்துவிட்டு வர முடியுமா? இந்த பழைய ஃபைலை அவர்கள் கேட்டார்கள் இது என்னுடைய பர்சனல் வேலைதான் கொஞ்சம் செய்ய முடியுமா என்றான் விக்ரம் .
ஓகே சார் அந்த பைலை கொடுங்கள் என்றார் பாலா.

அந்த பைலை பார்த்தவுடன் தான் அதன் தீவிரம் உணர்ந்தார் பாலா.

எப்போதுமே மிகவும் ரகசியமான வேலைகளை பாலாவிடமே ஒப்படைப்பான். அவன் சென்றால் அவனுடைய எதிரிகளுக்கு தெரிந்துவிடும் .அதனால் பாலா இல்லை அவரைப்போன்ற நேர்மையான அதிகாரிகளை வைத்து செய்து கொள்வான் .

ஒரு வேலையாக சில நாட்கள் கழித்து ஒ பச்சைமலை சென்றான் விக்ரம்.
அங்கே தூரத்தில் பெண்களின் அலறல் சத்தம் கேட்டது.

மாலை தொடுக்கப்படும்...
 

banumathi jayaraman

Well-Known Member
என்ன பைல் அது?
தீவிரவாதிகள் குறித்த பைலா?
பச்சை மலையில் பெண்களின் அலறல்ன்னா மங்கை and மற்ற ஹாஸ்டல் பெண்களா?
அங்கு ஒளிந்திருக்கும் தீவிரவாதியிடம் மாட்டிக் கொண்டார்களா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top