மாலை சூடும் வேளை-39

Advertisement

laxmidevi

Active Member
மாலை-39


விஜய் தன் அறைக்கு வந்த போது அவன் மனைவி பெட்டில் அமர்ந்து போனில் ஏதோ பார்த்து கொண்டு இருந்தாள்.ஆனால் அவளின் கவனம் அதில் இல்லை.விஜய் அருகில் வந்ததைக் கூட கவனிக்கவில்லை .

விஜய் ரெப்ரெஷ் ஆகி விட்டு வந்து மலரின் பின்புறம் அமர்ந்து அவளின் தோளில் தன் முகம் வைத்தான்.

கனவில் இருந்து விழிப்பது போல் திடுக்கிட்டு எழுந்தாள் மலர்.

நீங்கள் தானா யாரோ என்று பயந்து விட்டேன் என்றாள் மலர்.

நான் வந்தது கூட தெரியாமல் அப்படி என்ன யோசனை மேடம்.

இல்லை அன்று பங்சனில் அந்த மாலதியத்தை அக்காவை பற்றி தவறாக பேசவும் சுந்தர் மாமா உடனடியாக கனியை மனைவி என்றும் சம்முகுட்டியை தன் மகள் என்றும் கூறினாரல்லவா ? எத்தனை பேர் இப்படி இருப்பார்கள் சொல்லு. இத்தனைக்கும் மாமா அக்காவின் மேல் வருத்தமாக இருந்தார்.இருந்தாலும் அக்காவை விட்டுக் கொடுக்காமல் பேசினார் .சுந்தர் மாமா கிரேட் இல்ல ஆனந்த்.

நீ சொல்வது சரிதான் மலர்ம்மா. ஆனால் சுந்தரை விட கனி அண்ணி தான் கிரேட்.இப்படி யோசித்து பார்.நம் வீட்டிலேயே இப்படி பேசுகிறார்கள் என்றால் தனியாக ஒரு குழந்தையுடன் அண்ணி இருந்த போது என்னென்ன பேசியிருப்பார்கள் .அது எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனியாக சம்முவை தன் குழந்தையாகவே வளர்த்திருக்கிறார்கள் .தன்னுடைய வாழ்க்கையே கேள்விக்குறியான போதும் தன் குழந்தையை அவர்கள் யாருக்காகவும் விட்டுக் கொடுக்கவில்லை. அவர்கள் ஏதோ ஒரு காலத்தில் உன்னிடம் பேசவில்லை , வரவில்லை என்று அவரிடம் பேசாமல் அண்ணியை வருத்திக் கொண்டு இருக்கிறாய்.

ஹலோ பாஸ் யார் சொன்னது நான் பேசவில்லை என்று நான் எப்போதோ என் அக்காவிடம் பேசி ராசியாகி விட்டேன் என்றாள் சிரிப்புடன்.

அடிப்பாவி இது எப்ப நடந்தது எனக்கு தெரியாமல்

எப்பவோ நடந்தாச்சு..

சரி கார்த்திக் .இரண்டு பிள்ளைகளை வைத்திருக்கிறான். உன் அக்கா ஸ்கூல் சேர்க்கும் வயதில் பிள்ளை வைத்திருக்கிறார். விக்ரமுக்கும் ஜுனியர் தயாராகிவிட்டார் .எனக்கு எப்போதடி நம் ஜுனியரை தரப் போகிறாய் என்றான் கிறக்கமாக.

ஒரு வாரம் வெயிட் செய்யுங்கள் நான் செக் பண்ணிவிட்டு சொல்கிறேன் என்றாள் வெட்கத்துடன்.

நிஜமாக மலர் என்று தன் மனைவியை கட்டிக்கொண்டான் விஜய்.


ஆமாம் ஆனந்த் இன்னும் செக் பண்ண வில்லை ஒரு வாரம் போகட்டும்

என்னால் இன்னமும் இதையெல்லாம் நம்பவே முடியவில்லை மலர் .நம் திருமணம் நடந்தது. இப்போது நீ என் கையணைப்பில் இருப்பது. இது எல்லாம் கனவோ ,கலைந்து விடுமோ என்று பயமாக உள்ளது என்றான் விஜய் உருக்கமாக.

எல்லாம் நிஜம் தான் என்று அவன் கன்னத்தில் லேசாக கடித்து அவனை வம்பிழுத்து இயல்பாக்கினாள்.

ராட்சசி .முத்தமிடுவாய் என்றிருந்தால் கடித்தா வைக்கிறாய் .இரு உன்னை வைத்து கொள்கிறேன் என அவளின் காது மடல்களை கடித்து கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

அவள் சத்தமிடவும் அவளின் செவ்விதழில் தன் இதழ் பொருத்தி பெண்ணவளை தன்னுடன் சேர்த்தணைத்துக் கொண்டான்.

அங்கே காதலும் மோகமும் கலந்து ஒரு அழகிய சங்கமம் நிகழ்ந்தது.


விக்ரமிற்கு பாலாவிடம் இருந்து ஒரு மெயில் வந்திருந்தது. அதை படித்துப் பார்த்தவனின் விழிகள் மகிழ்ச்சியில் மலர்ந்தது.

அவனே எதிர்பார்க்காத வகையில் அவர்கள் செய்த வேலை மிக எளிதாக முடிந்திருந்தது.

மனம் முழுவதும் மகிழ்ச்சியில் நிறைந்திருக்க தன் அன்னையை தேடி சென்றான் விக்ரம்.

அம்மா மங்கை சென்று 15 நாட்களுக்கு மேல் ஆகிறது எப்போது போய் கூட்டி வரலாம் என்று கேட்டான் விக்ரம்.

அம்பிகா தன் மகனிடம் மங்கையின் அன்னை கூறியதை கூறினார் .

விக்ரமிற்கும் அவர்களது ஏக்கம் புரிந்தது.

தன் மனைவியை விட்டு பிரிந்து இருப்பது வருத்தமாக இருந்தாலும் கொஞ்ச நாட்கள் தானே இந்த கேஸ் முடிந்தவுடன் தான் அங்கு சென்று விடலாம் என்று எண்ணினான்.

உடனே தன் மனைவியுடன் பேச வேண்டும் போல் இருந்தது.போனில் அழைத்தான்.

புகுந்த வீட்டிலிருந்து வந்ததிலிருந்தே ஏதோ யோசனையுடன் இருந்த தன் மகளிடம் மகாலட்சுமி என்னமோ ஏதோ யோசித்துக் கொண்டிருக்கிறாய் மாப்பிள்ளையை பார்க்க வேண்டும் போல் உள்ளதா ? நீ அங்கு போக விரும்பினால் நாம் அங்கே சென்று விடலாம் என்று கேட்டார்.

இல்லையம்மா அப்படியெல்லாம் ஒன்றுமில்லை .நான் இனிமேல் இங்கு தான் இருக்க போகிறேன். அங்கே போக போவதில்லை என்றாள் மங்கை.

என்ன சொன்னாய் மங்கை.

குழந்தைகள் கொஞ்சம் பெரிதாகவும் அங்கே போவதாக கூறினேன் அம்மா என்றால் சமாளிப்பாக.

உனக்கு மாப்பிள்ளைக்கும் ஏதும் பிரச்சனையா என்றார் நம்பாமல்.

அப்படி மகாலட்சுமி கேட்டுக் கொண்டிருக்கும் போதுதான் போனில் இருந்து அழைப்பு வந்ததன் அறிகுறியாக .

கொஞ்சிப் பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடா கொஞ்சமாக பார்த்தால் மழச் சாரல் வீசுதடா
நான் நின்னா நடந்தா கண்ணுஉன் முகமே கேக்குதடா
அட தொலைவில இருந்தா தானே
பெரும் காதல் கூடுதடா தூரமே தூரமாய் போகும் நேரம்

பாடல் ஒலித்தது.

பார்ம்மா உன் மாப்பிள்ளை தான் அழைத்து இருக்கிறார்கள். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்றால் சிரிப்புடன்.

அப்போதுதான் மகாலட்சுமியின் மனம் நிம்மதியானது. சரி நீ பேசு என்று அறையிலிருந்து வெளியே சென்றார்.

ஹலோ என்னம்மா பண்றீங்க மூன்று பேரும் என்று கேட்டான் விக்ரம்.

என்னது மூன்று பேரா என்றால் கேள்வியாக அவன் மனைவி

ஆமாம் நீ அப்புறம் நம்ம செல்லக் குட்டிகள் ரெண்டு பேரும் என்று பதில் தந்தான்.

எல்லாரும் நன்றாக இருக்கிறோம்.

மாத்திரையெல்லாம் ஒழுங்கா சாப்பிடுகிறாயா இப்பொழுது கால் வீக்கம் குறைந்து இருக்கிறதா,காலை, மாலை இருவேளையும் கண்டிப்பாக வாக்கிங் போகவேண்டும் எனக்கு தெரியாது என்று ஓபி அடிக்காதே அவ்வப்போது மாமாவிடம் பேசி தெரிந்து கொள்வேன். சுகம் ஹாஸ்பிடல் டாக்டர் பிரியாவிடம் உன்னுடைய ரிப்போட்களை அனுப்பி இருக்கிறேன்.அவர்களுடன் பேசிவிட்டு அடுத்து செக்கப்பிற்கு எப்போது வரவேண்டும் என்று கேட்டு தெரிந்து கொள். நீ எங்கும் தனியாக செல்லாதே எங்கு செல்வதாக இருந்தாலும் எனக்கு தெரிவித்து விட்டு செல் சரியா.நான் மட்டும் தான் பேசிக்கொண்டே இருக்கிறேன். நீ எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறாய் என்றான் விக்ரம்.

நீங்கள் என்னை பேச விட்டால் தானே என்றால் மங்கை.

மனைவியின் பதிலைக் கேட்டு சிரித்தான் .

இன்னும் பத்து நாட்களுக்கு வேலை உள்ளது.முடிந்தவுடன் அங்கு வருகிறேன் . இன்னும் கொஞ்ச நேரம் அவளுடன் பேசி விட்டு போனை வைத்தான்.



விக்ரமின் ஒவ்வொரு செய்கையிலும் மங்கையின் மீது அன்பும் அக்கறையும் விரும்பி வழிவதை அவள் கண்டிருக்கிறாள். ஆனால் காதல் அது உள்ளதா என்பதுதான் தெரியவில்லை. இன்னமும் அவன் சாருவை மறக்கவில்லை என்பது அன்று கனிக்காவிடம் பேசியதிலிருந்து தெரிகிறது. ஆனால் அவர் என் மீது காட்டும் அக்கறைக்கும் அன்பிற்கும் அர்த்தம் என்ன? அவருடைய வாரிசு என்னுள் வளர்கிறது என்ற காரணமா. ஒருவேளை குழந்தைகளுக்காக என்னுடன் வாழ முயற்சிக்கிறாரோ.
அப்படி தான் இருக்க வேண்டும். இரக்கத்தால் அவர் தரும் வாழ்வு எனக்கு வேண்டாம்.என் கணவன் என் மேல் உள்ள அன்பாலும் காதலாலும் என்னுடன் வாழ வேண்டுமே தவிர கட்டாயத்தால் வாழக்கூடாது. அப்படியே வாழ்ந்தாலும் அவர் மனதில் எனக்கு இடம் இருக்குமா என்று தெரியவில்லை. கணவனின் மனதில் இன்னொரு பெண் வாசம் செய்கிறாள் என்று வேதனையில் நானும் காதலித்தவளை மறக்கமுடியாமலும் கட்டியவளை ஏற்கமுடியாமலும் அவரும் கஷ்டப்பட வேண்டாம். அவராவது நிறைந்த மகிழ்ச்சியுடன் நிம்மதியாக வாழட்டும்.இதை கூறி பிரிந்து விடலாம் என்றால் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டார். குழந்தையுடன் உன்னை இப்படியே தனியாக விடமுடியாது என்பார்.எனவே வேறு ஏதேனும் காரணம் தான் சொல்ல வேண்டும்.

தன்னவனை பிரிய வேண்டும் என்ற நினைப்பே காயத்தில் கத்தியை வைத்து திருகுவதை போல் வலித்தது.இதில் மனமும் உடலும் சோர்ந்து போனது மங்கையவளுக்கு.

விக்ரம் ,கார்த்திக் பாலாவும் கமிஷனரிடம் தாங்கள் சேகரிதத விபரங்களை தந்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய அனுமதி கேட்டனர்.

சில பெரும்புள்ளிகளும் சம்பந்தப்பட்டு இருப்பதால் கமிஷனர் உள்துறை செயலாளரிடமும் பேசி விட்டு அவர்களுக்கு அனுமதி அளித்தார்.

விக்ரமும் கார்த்திக்கும் போதை தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக முறையாக பொறுப்பு ஏற்றனர்.


தங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை தொடங்கினர்.


எல்லோரையும் விட விக்ரம் இன்னும் வேகமாக பணிகளை முடித்தான்.

கார்த்திக் காரணம் கேட்டதற்கு சீக்கிரமாகவே வேலையை முடித்து விட்டு தன் மனைவியை காண போவதாக மகிழ்ச்சியுடன் கூறினான்.

ஆனால் அங்கே சென்றவனுக்கு அவன் மனைவி கூறிய வார்த்தைகள் அவன் உயிரின் உள் வரை சென்று வதைத்தது.

மாலை தொடுக்கப்படும்...

வணக்கம் நண்பர்களே..


கதையை பற்றிய உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்..

என்றும் அன்புடன்
உங்கள் தோழி லக்ஷ்மி தேவி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top