மாலை சூடும் வேளை-32

Advertisement

laxmidevi

Active Member
மாலை-32

பாடல் வரிகள்

தாய் அன்பிற்கே ஈடேதம்மா
ஆகாயம் கூட அது போதாது
தாய் போல் யார் வந்தாலுமே
உன் தாயை போலே அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்
உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்
முத்தே என் முத்தாரமே
சபை ஏறும் பாடல் நீ பாடம்மா
நீ பாடம்மா ...


பெங்களூர்

கனிமொழி தூங்கும் தன் மகள் சம்முவின் முகத்தையே ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள். வெறுமையாக இருந்த தன் வாழ்க்கை பக்கங்களை வண்ணமாய் வந்து வானவில்லாய் மாற்றியவள். சுந்தர் கூறிய செய்தியைக் கேட்டு கனிமொழி உள்ளுக்குள் கொஞ்சமாக நொறுங்கிப்போனாள். சுந்தரியின் அம்மா அவர்களின் திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதத்தில் தேதி குறித்திருந்தார். ஆனால் திருமணத்தின் பின் கண்டிப்பாக சம்மு அவர்களுடன் இருக்கக் கூடாது என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார் .சுந்தர், மாமா ராமநாதன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பத்மா அதற்கு மட்டும் ஒத்துக் கொள்ளவே இல்லை. சுந்தரும் திருமணத்தை தள்ளிப் போடுமா? பிறகு வைத்துக்கொள்ளலாம் என்று எவ்வளவோ போராடிப் பார்த்து விட்டான் .இவர்கள் பேச்சு எதுவும் பத்மாவிடம் எடுபடவில்லை.

கனிமொழியால் ஒரு நிலைக்கு மேல் பத்மாவிடம் எதுவும் பேச முடியாத சூழ்நிலை என்ன செய்வது என்றே தெரியவில்லை ஆனால் எதற்காகவும் அம்மா உன்னை மட்டும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறி சம்முவின் நெற்றியில் முத்தமிட்டாள். சம்முவின் அருகில் படுத்ததும் அவளுக்கு அவளது கடந்த காலம் நினைவுக்கு வந்தது. நான் ஒருத்தி செய்த பிழையால் எத்தனை பேர் கஷ்டப்படுகிறார்கள் என்று நினைத்து வருந்தினாள்.


கனிமொழி வீட்டிற்கு மூத்த பெண். அம்மா பூரணி,அப்பா ராகவன், மிகவும் செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவள்.ராகவனின் அம்மா பெயர் தெய்வக்கனி.ராகவனின் தாத்தாவிற்கு நிறைய நாட்கள் குழந்தை இல்லாததால் தெய்வத்தை வேண்டி அவரின் அருளால் பிறந்தவர் தான் ராகவனின் அம்மா அதனால் தெய்வக்கனி என்று பெயரிட்டு இருந்தார் .தன் அன்னையின் பெயரை தன் மகளுக்கு வைக்க வேண்டும் என்று விரும்பி அவர்கள் பெயரில் பாதியை எடுத்து தற்கால முறைப்படி கனிமொழி என்று பெயரிட்டு இருந்தார். வீட்டிற்கு ரொம்ப செல்லம் தன் மகளை கனியம்மா என்றுதான் அழைப்பார். சில நேரங்களில் மட்டும் அம்மு.அவளின் தங்கை மலர்.அவளுடன் விளையாட்டு, செல்ல சண்டைகள் என கனியின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது அப்போது இன்டீரியர் டெக்ரேஷன் படித்துக்கொண்டிருந்தாள்.அங்குதான் பிரதாப் அறிமுகம் ஆனான். கனியின்சோதனை காலம் தொடங்கியது .கனியை காதலிப்பதாகக் கூறினான். முதலில் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக அவனை பார்த்து இரக்கப்பட்டாள் .அந்த இரக்கம் கொஞ்ச நாட்களில் காதலாக மாறியது. முதலில் உன்னை காதலிக்கிறேன் என்று கூறியவன் பின் வந்த நாட்களில் இந்த காதல் வேண்டாம் கனிக்குட்டி உங்கள் வீட்டில் எப்படியும் நம்முடைய காதலை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் .நான் உனக்கு வேண்டாம் விட்டுவிடு என்று நல்லவன் போல் கூறினான் .







அப்படி எல்லாம் இல்லை பிரதாப் என் அப்பா கண்டிப்பாக எனக்காக ஒத்துக் கொள்வார். என்னுடைய விருப்பம் தான் அவருக்கு முக்கியம் என்று பதில் கூறினாள்.


பிரதாப் எப்படி எப்படியோ பேசி அவர்கள் வீட்டில் அவனை
மாப்பிள்ளையாக ஒத்துக் கொள்ள மாட்டார்கள் யாரும் இல்லாத அனாதை யாராவது மருமகனாக ஏற்றுக் கொள்வார்களா என்று கொஞ்சம் கொஞ்சமாக பேசி அவளுடைய மனதை மாற்றி நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டு பின் உன் அப்பாவிடம் சொல்லலாம் .
அப்பொழுது அவருக்கு கோபம் இருந்தாலும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள் என்று கூறினான் என்ன தான் இருந்தாலும் தனக்கு தன் அப்பாவிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்வதில் விருப்பமில்லை வேண்டாம் இது சரி இல்லை என்று கூறினாள் கனி.

என்ன கனி எல்லா இடங்களிலும் பெண்கள் தான் திருமணத்திற்கு வற்புறுத்துவார்கள் நான் உன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறேன்.நீ வேண்டாம் என்று மறுக்கிறார். ஒரு அனாதையை திருமணம் செய்துகொள்ள உனக்கு விருப்பமில்லையா என்று கேட்டான். நான் உன்னை இழந்து விடக்கூடாது என்பதற்காக தான் சொல்கிறேன் கண்மனி என்றான் உருக்கமாக.


அவனுடைய பேச்சின் மூலம் எப்படியோ கனியிடமிருந்து சரி என்ற ஒரு வார்த்தையை வாங்கிவிட்டான் பிரதாப். கனியை அழைத்துக்கொண்டு கேரளா சென்று விட்டான். திருமணத்திற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து கொண்டிருந்தான். விடிந்தால் திருமணம். திருமணத்திற்கு பின் வசிப்பதற்கு ஏற்பாடு செய்திருந்த வாடகை வீட்டில் இருந்தால் கனி. அவளை பார்ப்பதற்காக வந்திருந்தான் பிரதாப். கனியின் உடல்நிலை சரியில்லாமல் இருக்கவே மாத்திரை சாப்பிட்டு படுத்து இருந்தால். கனியை பார்த்து விட்டு கதவை பூட்டிவிட்டு வெளியில் அமர்ந்திருந்தான் பிரதாப். அப்போது யாரோ வேகமாக வந்து கதவை தட்டினார்கள்.


யார் என்று பார்த்து அதிர்ச்சியாக இருந்தது நீங்கள் எப்படி .... பிரதாப்புக்கு வார்த்தைகள் வெளியில் வர மறுத்தன .


என்ன பிரதி எல்லாம் மறந்து விட்டாயா என்று கேட்டார்கள்.

இல்லை இல்லை என்று தெரிவித்தான் பிரதாப்.

இந்த பேச்சுக்களில் தூக்கம் கலைந்து விழித்து கொண்டாள் கனி.


யார் என்று பார்க்கலாம் என்று கதவின் அருகில் வந்த போது அவர்களின் பேச்சை கேட்டு அதிர்ச்சியடைந்தாள்.

என்ன பிரதி திருமணம் செய்துகொள்ளப் போகிறாயமே . பெண்ணை அழைத்துக் கொண்டு வந்திருப்பதாக தகவல் வந்தது.

இல்லை அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று மறுத்தான் பிரதாப்.

நம்முடைய தொழில் என்ன பெண்களை காதலித்து ஏமாற்றி அவர்களை வெளிநாட்டில் விற்பது தானே . நீ என்ன இப்பொழுது புதிதாக காதல் திருமணம் என்று ஏதேதோ செய்து கொண்டிருக்கிறாய் என்றான் ஒருவன்.

உண்மையில் பிரதாப் கனிமொழியை ஏமாற்றும் எண்ணத்துடன் தான் பழகினான். பிறகு அவள் பெரிய இடத்துப் பெண் இந்த தெரிந்தவுடன் உண்மையிலேயே அவளை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகி விடலாம் என்று நினைத்தான். ஒரு வேளை முன்னாடி அவன் செய்த பிழைகள் தெரிந்தாலும் கனியின் தந்தை செல்வாக்கில் வெளியில் வந்து விடலாம் என்று கணக்குப் போட்டுத்தான் அவசர அவசரமாக திருமணம் செய்து கொள்வதற்கு நினைத்தான்.

அதற்கு முன் அவனுடைய கூட்டத்தினருக்கு இந்த விஷயம் தெரிந்து வந்துவிட்டனர்.

இனிமேலும் மறைத்துப் பயனில்லை என்பதால் அவளை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று நினைத்தேன் என்றான் பிரதாப்.

உன் வாழ்க்கையில் செட்டில் ஆவதற்கு எங்களைக் காட்டிக் கொடுக்கலாம் என்று நினைக்கிறாயா என்றான் மற்றொருவன்.

இல்லை அப்படி எல்லாம் இல்லை என்று கூறினான்.

ஆனால் அவர்கள் அதற்குள் எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை பிரதாபை சுட்டு விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டனர். அவர்களுக்கு கனிமொழி அந்த வீட்டில் இருப்பது தெரியாது.

கனிமொழி எப்பொழுது பெண்களை விற்பது பற்றி அறிந்து கொண்டாலோ அப்போதே அவர்களிடமிருந்து தப்பித்து செல்ல வேண்டுமென்று வீட்டின் பின்பக்க வாசல் வழியாக சென்று விட்டாள்.

அவளுக்கு பிரதாபை சுட்டது கூட தெரியாது.மறுநாள் காலையில் நியூஸில் பார்த்துதான் தெரிந்து கொண்டாள். ஊரும் பாஷையும் தெரியாமல் தான் தனியாக மாட்டிக் கொண்டதை நினைத்து வருந்தினாள். தற்போது ஒரு பெண்கள் விடுதியில் தங்கி இருந்தாள் சுற்றுலா பயணி என்று சொல்லி.அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. என்ன செய்யப் போகிறோம் என்ற நினைப்பே மலைப்பாக இருந்தது .


அப்போது தான் எதிர்பாராத விதமாக அவர்களுக்கு தெரிந்த ஆசிரமத்தின் தலைவி ஜெனிபரைப் பார்த்தால். கனி அவரிடம் எல்லாம் கூறி விட்டாள்.அவரும் கனியை தன்னுடன் ஆசிரமத்தில் வைத்துக் கொண்டார். பெற்றோர்களுக்கு கெட்ட பேரை தேடி கொடுத்து விட்டு மறுபடியும் அவர்களிடம் செல்ல விருப்பமில்லை கனிமொழிக்கு.

அங்கேயே தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு சென்னையிலேயே வேலை செய்து கொண்டிருந்தாள். அப்பொழுதுதான் எதிர்பாராவிதமாக குழந்தை கடத்தல்காரர்களிடமிருந்து சம்முவை காப்பாற்றினாள். சம்முவை ஜெனிஃபர் அம்மாவிடம் கூறி அதே ஆசிரமத்தில் சேர்த்துக் கொள்ள வைத்தாள்.பின் சட்ட ரீதியாக சம்முவை தானே தத்து எடுத்துக் கொண்டாள்.


ஜெனிபர் அம்மா முதலில் அதற்கு மறுத்தார்.உன்னுடைய எதிர்கால வாழ்விற்கு இதெல்லாம் சரியாக இருக்காது எவ்வளவு எடுத்து சொல்லியும் கணி கேட்காமல் ஜெனிம்மா எனக்கு எதிர்காலம் ஒன்று இல்லவே இல்லை. என்னுடைய இந்த வறண்ட பாலைவன வாழ்வை இந்தக் குழந்தையின் வரவு வசந்தமாக்கும். தயவு செய்து இவளை எனக்கு கொடுத்து விடுங்கள் என்று அவரின் மனதை மாற்றி விட்டாள்.

கனிக்கு திருமணம் ஆகாமல் இருப்பதாலும் இன்னும் பிற காரணங்கள் இருப்பதால் ஒரு சில சட்ட சிக்கல் வரும் என்று தன் பெயரிலேயே தத்தெடுத்து கனிமொழியிடம் கொடுத்துவிட்டார் ஜெனிபர்.



சட்டப்படி தத்து கொடுக்கப்பட்ட குழந்தை ஆசிரமத்தில் இருக்கக் கூடாது என்ற காரணத்தால் சம்முவை கூட்டிக்கொண்டு ஆசிரமத்தின் அருகில் உள்ள பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி கொண்டாள் கனிமொழி.

அப்போது தான் வெளியில் சென்று வரும் வழியே மயக்கமாக இருந்த வைதேகி அம்மாவை பார்த்து தன்னுடன் அழைத்து வந்தாள் கனி. அவரைப் பார்க்கும்போது தன் அம்மாவையே பார்ப்பது போல் இருக்கும் கனிமொழிக்கு .

வைதேகியம்மா கேட்ட பின்புதான் இன்னும் தன் குழந்தைக்கு பெயர் வைக்கவில்லை என்று நினைவு வந்தது.


கனி தன் தாயின் நினைவாக சம்பூர்ணா என்று பெயரிட்டாள்.
கனியின் உலகம் சம்மு, வைதேகியம்மா, ஆசிரமம் ஜெனிம்மா , வேலை என்று அழகாக சுற்றிக் கொண்டிருந்தது. அப்போது தான் ஒரு நாள் விக்ரம் சென்னையில் எஸ்பியாக பணியாற்றுவதை பார்த்தாள். கண்டிப்பாக இங்கு இருந்தால் தான் அவனிடம் மாட்டிக் கொள்வோம் என்று உணர்ந்து ஜெனிம்மாவிடம் சொல்லிவிட்டு அந்தமான் தீவிற்கு மாற்றல் வாங்கிக்கொண்டு சென்று விட்டாள்.







அங்கேயும் தன் மகள் தன்னை மகளாக ஏற்றுக் கொண்ட வைதேகி என நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தாள். அப்போது சுந்தர் தன் அலுவலக வேலையின் காரணமாக அந்தமான் வந்தான்

அன்று பூங்காவில் சம்முவையும் சுந்தரையும் சேர்த்துக் கொண்டதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
சுந்தரை பார்த்த பின் தான் உணர்ந்தாள். பிரதாபிடம் தோன்றியது அவன் பேச்சினால் ஏற்பட்ட இரக்கம் என்று.மனம் சுந்தரின் பால் சாயத் தொடங்கி விட்டது. இது தனக்கு ஒத்துவராது என்று தான் விலகி இருந்தாள்.


அவளுடைய அம்மா வழி சொந்தகார பெண் அந்தமானிற்கு திருமணமாகி வந்தாள்.எனவே அங்கிருந்து பெங்களூர் வந்துவிட்டாள்.

எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுந்தரை விட்டு விலகுவதில் உறுதியாக இருந்தால். ஆனால் சுந்தரின் காதலால் அவளுடைய உறுதி ஆட்டம் கண்டது.மனதில் நிறைந்து இருப்பவனின் அன்பை மறுக்க முடியவில்லை. சுந்தருடைய காதலும், சம்முவின் அன்புமாய் கனியின் உலகில் மகிழ்ச்சி மட்டுமாய் இருந்தது. சுந்தரின் வீட்டில் திருமணத்திற்கு சம்மதிக்கவே இன்னும் மகிழ்ச்சியாக சுற்றினாள். கூடிய விரைவில் சுந்தரை அழைத்துக்கொண்டு தன் பெற்றோரை பார்க்கப் போகலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதுதான் பத்மா திருமணத்திற்கு பிறகு சம்முவை ஹாஸ்டலில் விட்டுவிட வேண்டும் என்று கூறினார்.

கண்டிப்பாக அது தன்னால் முடியாது. இனி என்ன செய்யவேண்டும் என்று தனக்குள்ளேயே சிந்தித்துக் கொண்டிருந்தால் கனிமொழி .


இந்த சுந்தரும் மிகவும் வருத்தத்தில் இருந்தான். சும்மா இருந்த பெண்ணிடம் போய் காதலை சொல்லி திருமணம் செய்து கொள்கிறேன் என பெண்ணின் மனதில் ஆசையை விதைத்தாயிற்று. குழந்தையின் உள்ளத்தில் நான் தான் உன்அப்பா என்ற உறவையும் பதித்தாயிற்று இப்பொழுது அம்மா ஏற்படுத்தியிருக்கும் பிரச்சினைகளை எப்படி தீர்த்து வைக்கப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.


கனி இரவு முழுவதும் தூங்காமல் இருந்து சிந்தித்தும் பிரச்சனைக்கு தீர்வு என்னவென்று தெரியவில்லை.

பத்மாவின் சொல்லையும் மீற முடியாது. சம்முயையும் விட முடியாது. சுந்தரின் வாழ்க்கையில் இடையில் வந்த தான் இடையிலேயே செல்வது தான் சரி என்று முடிவெடுத்தாள் . நினைக்கும் போதே மனம் கனத்தது. காவிரி புது வெள்ளமாய் பெருகிய கண்ணீரை அடக்கிக் கொண்டு கிளம்பினாள்.


அந்தமானில் வேலை பார்க்கும் போது உடன் வேலை பார்த்த பெண் தற்பொழுது திருநேல்வேலியில் இருந்தாள். அவளிடம் போன் செய்து தான் திருநெல்வேலி கோவிலுக்கு வருதாக மட்டும் கூறினால்.

அங்கு சென்ற பின் என்ன செய்வது என்று யோசிக்கலாம் என்று முடிவு எடுத்தாள்.

அந்த அதிகாலை வேளையில் தூங்கி வழியும் தன் மகளை தூக்கி கொண்டு திருநெல்வேலியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாள் கனிமொழி.

அந்த பயணத்தின் முடிவில் அவளுக்கு பல்வேறு அதிர்ச்சியும், ஆனந்தமும் காத்துக் கொண்டு இருந்தது....

மாலை தொடுக்கப்படும்..

வணக்கம் நண்பர்களே
கதையை பற்றிய உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்..

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

என்றும் அன்புடன்
உங்கள் தோழி லக்ஷ்மி தேவி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top