மாலை சூடும் வேளை-24

Advertisement

laxmidevi

Active Member
மாலை -24
பாடல் வரிகள்
நீ எனது உயிராக
நான் உனது உயிராக
ஓர் இரவு நெஞ்சத்தில் தோன்றிடும் நேரம்
நீ காணும் கனவெல்லாம் நான் காணும் கனவாகி
நாம் சேர்ந்து ஒன்றாக பார்த்திட வேண்டும்
உயிரே நீ பார்த்தாலே உயிருக்குள் பூகம்பங்கள் தோன்றும்
உன்னால் அடி உன்னாலே உள்ளுக்குள்ளே என்னென்னவோ ஆகும்.

விக்ரமும் மங்கையும் கோவை வந்து இரண்டு நாட்கள் கடந்து விட்டிருந்தது. மங்கை காலையில் எழுந்து வேலைக்காரர்கள் பறித்துக் கொண்டு வரும் பூக்களை அழகாக தொடுத்து சாமிக்கு பூஜை செய்வாள். சமையல்காரர் கலந்து கொடுக்கும் காப்பியை அல்லது டீயை அனைவருக்கும் எடுத்துக்கொண்டு போய் கொடுப்பாள். பின்பு விக்ரம் வேலைக்கு கிளம்பும் வரை அவனுக்கு காபி தருவது சாப்பாடு எடுத்து வைப்பது அவன் கேஸ் ஃபைலை எடுத்து தருவது என்று சிறுசிறு வேலைகளை செய்து கொண்டிருப்பாள். விக்ரம் வேண்டாமென மறுத்தாலும் அவனுக்காக அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தாள் காதலோடு. இரவு வீடு திரும்பும் வரை அவனுக்காக பார்த்துக் கொண்டிருப்பாள்.அவன் வந்ததும் அவனுக்கு சாப்பாடு பரிமாறுவாள்.சாப்பிட்டுவிட்டு வந்தால் பாலை சூடு செய்து கொடுப்பாள். விக்ரம் வருவதற்கு இரவு தாமதம் ஆகிவிடுவதால் அம்பிகா அவ்வளவு நேரம் விழித்திருந்தால் உடல்நிலை கெட்டு விடும் என்று தனக்காக அவர் காத்திருக்கக் கூடாது என்றும் காத்திருந்தால் போலீஸ் ஸ்டேஷனிலேயே தங்கி விடுவதாகவும் அவரிடம் கண்டிப்பாக கூறியிருந்தான். அதனால் அம்பிகா விக்ரமுக்காக காத்திருப்பதில்லை. மங்கையும் அவன் காத்திருக்க வேண்டாம் என்றுதான் கூறினான் அவள்தான் பரவாயில்லை சும்மாதான இருக்கேன் இது கூட செய்ய மாட்டேனா என்றாள். விக்ரமும் அவளுடைய அருகாமை ரசித்தான். அதனால் அதற்கு மேல் ஒன்றும் கூறவில்லை.அவனுடன் இருக்கும் அந்த நேர தனிமையை ஐஸ்கிரீமை ருசிக்கும் சிறு குழந்தையென இரசிப்பாள் மங்கை.

மங்கை வீட்டில் இருப்பதால் அம்பிகா கோவிலுக்கு ,உறவினர் வீடுகளுக்கு சென்று வருவார் .அவருக்கு இப்போது தான் மன நிம்மதியாக இருந்தது வீட்டில் ஒரு பெண் வளைய வருவது சந்தோஷம் தானே .

மணிமேகலை திருமணம் செய்துகொடுத்த இத்தனை நாட்களில் அவள் இங்கு அதிகம் வருவதில்லை. இவர்களுடைய அலுவலகத்தினை பார்த்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளையும் கவனிக்க வேண்டி இருப்பதால் நேரம் கிடைப்பதில்லை. எப்போதாவது நேரம் கிடைக்கும்போது வந்து செல்வாள்.

மங்கை கல்லூரி திறப்பதற்கு இன்னும் மூன்று நாட்களே இருந்த நிலையில் அம்பிகாவிடம் வந்து அத்தை திருமணத்திற்காக வாங்கியவை எல்லாம் கிராண்டாக இருப்பதால் கல்லூரிக்கு அணிவதற்கு எனக்கு கொஞ்சம் உடைகள் வாங்க வேண்டும் என்னுடன் வருகிறீர்களா என்று அழைத்தாள் .

விக்ரமுடன் செல் மங்கை.நீங்கள் இருவரும் எங்கும் வெளியே செல்வதில்லை.இப்போதாவது செல்லுங்கள் என்றார் அம்பிகா.

அத்தை அவரே பாவம் ரொம்ப பிஸியாக இருக்கிறார் .நான் வேறு ஏன் தொந்தரவு செய்யவேண்டுமா? நானே சென்று வருவேன் .அவர்தான் தனியாக எங்கும் செல்லக்கூடாது என்று கூறியிருக்கிறார் அதனால் தான் .மணி அண்ணியும் வேலையில் பிசியாக இருக்கிறார்கள் .

சரி மா நாளை போய் வரலாம் என்றார்.
பின் அம்பிகா தன் மகனுக்கு அழைத்து விக்ரம் மங்கைக்கு சில உடைகள் வாங்க வேண்டுமாம் கூட்டி போய் வா என்றார்

இரவு வீட்டிற்கு வந்த விக்ரம் என்னிடமே சொல்லியிருக்கலாமே . நானே உன்னை அழைத்து சென்றிருப்பேன் என்றான்.

இல்லை நீங்கள் பிசியாக இருப்பீர்கள் அதனால் தான் என்று இழுத்தாள்.

பரவாயில்லை நாளை சென்று வரலாம் மதியம் 4 மணிக்கு மேல் ரெடியா இரு என்று கூறினான்.
அவன் கூறியபடியே மறுநாள் 4 மணியளவில் வந்து அவளை அழைத்துச்சென்றான் .

அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி முடித்தபின் இன்னும் ஏதாவது வேண்டுமா என்று கேட்டான் விக்ரம்.
அவள் ஒன்றும் இல்லை என்று தலையசைத்தாள் ஆனால் அவளுடைய முகம் அவள் ஏதோ கேட்க தயங்குவதாக தோன்றியது.

எனவே மங்கை ஏதாவது வேண்டுமா என்று மறுமுறை அழுத்திக் கேட்டான். ம்ம் வேண்டும் ஆனால் நீங்கள் திட்டக்கூடாது என்று கூறினாள்.

சரி திட்டவில்லை கேள் என்ன வேண்டும்?

எனக்கு ஐஸ்கிரீம் வேண்டும் வாங்கி தருகிறீர்களா ?

அவள் கூறியதைக் கேட்டவுடன் பக் என்று சிரித்து விட்டான் விக்ரம்.

பொதுவாக மேகி இப்படி ஏதாவது கூறினாலே அவனுடைய டெபிட் கார்டுக்கு ஆப்பு வைக்கப் போகிறாள் என்று அர்த்தம் .மணிக்கு விதவிதமான காதணிகளை சேகரிக்கும் வழக்கம் உள்ளது .அப்படித்தான் இவளும் ஏதோ கேட்கப் போகிறாள் என்ற எண்ணம் அவனுக்கு.

மங்கை ஐஸ்கிரீம் வேண்டும் என்றவுடன் சிரிப்பு வந்துவிட்டது.
அவனுடைய ரசனையான சிரிப்பினை தன்னை மறந்து பார்த்துக்கொண்டிருந்தால் மங்கை.

பின் மங்கை கேட்டவாறு அவளுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்தான்.
இருவரும் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தபோது விக்ரமிற்கு ஒரு போன் கால் வந்தது அவன் அங்கு சத்தம் அதிகமாக இருந்ததால் சற்று தள்ளி இருந்து போன் பேசிக் கொண்டிருந்தான்.

போன் பேசிக் கொண்டிருக்கும் தன் கணவனை அவனறியாமல் சைட் அடித்துக்கொண்டிருந்தாள் மங்கை. அப்போது பின்னாலிருந்து ஒருவன் அவளை கத்தியால் குத்த வந்தான்.

ஏதோ உள்ளுணர்வு தோன்ற மங்கையை திரும்பி பார்த்த விக்ரம் அவளை ஒருவன் குத்த முயற்சிப்பதை பார்த்து விட்டான் அங்கிருந்து தான் வரும் முன் குத்தி விடுவான் என்று கணித்து விக்ரம் அருகில் அலங்காரத்துக்காக வைத்திருந்த பெரிய பூ ஜாடியை எடுத்து அவள் கையை நோக்கி எறிந்தான். அது குறி தவறாமல் அவன் கையில் பட்டு கீழே விழுந்து கத்தி தெறித்தது
தப்பித்து ஓட முயன்ற அவனை அங்கிருந்தவர்கள் வளைத்து பிடித்துக் கொண்டனர் அவன் ஒரு பெண்ணின் மீது ஆசிட் வீச முயன்ற குற்றத்திற்காக பிடிக்கப்பட்டு சிறையில் இருந்தான் அங்கு விக்ரம் அவனுக்கு நரகத்தை காட்டியிருந்தால் தற்போது தான் வெளியில் வந்த நிலையில் விக்ரமை பழிதீர்க்க நினைத்தவன் அவனை நெருங்க கொஞ்சம் பயந்தான்.பின் அவனுடன் வந்த மங்கையை காயப்படுத்த முயற்சிக்கும் போதுதான் மாட்டிக்கொண்டான்.

விக்ரம் அவள் கையை உடைத்து விட்டான் இனிமேல் இவளை மட்டுமல்ல எந்த பெண்ணையுமே தொட அல்ல நினைக்கக் கூட நீ யோசிக்க வேண்டும் என்று காவலர்களிடம் ஒப்படைத்து விட்டான்.

மங்கை நடந்த நிகழ்வுகளை பயந்து இருந்தாலும் தன் மீதான விக்ரமின் அக்கரையில் நெகிழ்ந்து போனாள்.
காரை ஓட்டிக்கொண்டே மங்கை பயந்து வந்துவிட்டாயா என்றான் விக்ரம் இல்லை நான் பயப்படவில்லை நீங்கள் இருக்கும்போது எனக்கு என்ன பயம் என்று கெத்தாகவே சொன்னாள் பயத்தை மறைத்துக்கொண்டு .

ஆனால் நான் பயந்துவிட்டேன் மா.இனிமேல் எப்பொழுதும் நீ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் சரிதானா என்றான். கத்தியுடன் ஒருவனை மங்கையின் பின்னால் பார்த்தபோது விக்ரமின் இதயம் துடிக்க மறந்து போனது .பின்பு தான் சுதாரித்து அவனை தாக்கினான்.அந்த நொடியில் விக்ரம் உணர்ந்து கொண்டான் மங்கையின் மீதான தன்னுடைய நேசத்தின் அளவை. அது வானின் நீளமாய் கடற்கரை மணலாய் அளக்க முடியாது என்று. இனி அவளவில்லாமல் தான் இல்லை என்று முழுவதுமாக உணர்ந்து கொண்டான்
ஏதேதோ பேசிக் கொண்டே இருவரும் வீடு வந்து சேர்ந்தார்கள் .

நடந்ததை அம்பிகாவிடம் கூறினால் மங்கை பார்த்து பத்திரமாக இருக்க வேண்டும் மங்கை என்று அறிவுறுத்தினார் அவர் .அப்படியே உங்கள் விடுதிக்கு சென்று நீ உன் பொருட்களை எடுத்து வந்து விடுகிறாயா என்று கேட்டார் மங்கையிடம் .

ஏன்மா அவள் விடுதியிலேயே தங்கி படிக்கட்டும் என்றான் விக்ரம்.

அவன் பதிலில் அதிர்ந்து நின்ற மங்கையே கவனித்துவிட்டு அம்பிகா தன் மகனிடம் விக்ரம் ஏன்டா இவ்வளவு பெரிய வீடு இருக்கும் போது என் மருமகள் ஹாஸ்டலில் தங்கி படிக்க வேண்டும் என்கிறாய்?
அம்மா இங்கிருந்து அவளுடைய கல்லூரி செல்ல கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாகும். அதற்கு மேல் என்னால் யாரையும் நம்பி அவளை தனியாக அனுப்பவும் முடியாது பாதுகாப்பு பிரச்சினைகளும் இருக்கின்றன.அவள் விடுதியில் இருப்பது தான் நல்லது என்றான் விக்ரம் முடிவாக.

பரவாயில்லை அத்தை அவர் சொல்வது சரிதானே நான் விடுதியிலேயே தங்கி படிக்கிறேன் என்றாள் அதிர்ச்சியை மறைத்துக்கொண்டு .

இதற்கு மங்கையின் அம்மாவும் முதலில் ஒத்துக்கொள்ளவில்லை பின்பு மங்கைதான் அவரையும் பேசி சரிக்கட்டி வைத்தாள்.

விக்ரமிற்கும் மங்கையை பிரிந்து இருக்க விருப்பமில்லை தான். ஆனால் தன் அருகில் தன்னுடைய படுக்கையில் தன் மனைவியாய் உரிமையாய் தூங்குபவளை காணும் போது தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற வேட்கை அதிகமாகியது விக்ரமிற்கு மேலும் அவளுடைய பாதுகாப்பும் ஒரு காரணம் .இதையெல்லாம் மனதில் வைத்து தான் மங்கை விடுதியில் படிக்கட்டும் என்று கூறினான்.

அவர்களது அறைக்கு வந்த மங்கையிடம் தேங்க்ஸ் என்னை புரிந்து கொண்டு அம்மாவிடம் பேசியதற்கு . நாளை மாலை உன்னை கொண்டு போய் ஹாஸ்டலில் விட்டுவிட்டு வருகிறேன்.உனக்கு தேவையானவற்றை எடுத்துக் கொள் வேறு ஏதும் வாங்க வேண்டும் என்றால் எனக்கு கால் செய் நான் வருகிறேன் வாங்கி விட்டு வரலாம் என்று கூறினான்விக்ரம்.

மங்கைக்கும் விக்ரமை விட்டு பிரிந்து இருப்பது கஷ்டமாக இருந்தாலும் அவன் ஒன்று கூறினால் அதில் ஏதேனும் காரணம் இருக்கும் என்பதை இத்தனை நாட்களில் உணர்ந்திருந்தால் அவன் மனைவி .
ஹாஸ்டல் செல்ல தயாராக இருந்தவளை விக்ரம் வந்து அழைத்துக்கொண்டு மங்கையின் விடுதிக்கு சென்றான்.
ஹாஸ்டல் வார்டன் விக்ரமிடம் சாரி சார் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் மணமான பெண்களுக்கு விடுதியில் தங்குவதற்கு அனுமதி இல்லை. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்றார் .

ஏதோ பேச முயன்ற விக்ரம் பின் பரவாயில்லை மேடம் நாங்கள் மங்கையின் பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு செல்லலாமா என்று கேட்டான்.

பின் இருவரும் மங்கையின் பொருட்களை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள் .
விக்ரமிற்கோ மங்கை தன்னுடன் இருப்பது சந்தோஷத்தை அளித்தாலும் தன்னுடைய கட்டுப்பாடு இன்னும் எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என்பதை நினைக்கும்போது என்று பெருமூச்சு வந்தது அவனுக்கு.
மங்கையின் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது.

மங்கை விக்ரமின் வீட்டிலிருந்து கல்லூரி சென்று வந்தாள்.ஒருநாள் விக்ரம் வருவதற்குத் தாமதமாகி விட்டதால் டைனிங் டேபிளில் தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் மீதே தலை வைத்து தூங்கி விட்டாள் மங்கை .வீடு வந்த விக்ரம் மங்கையை அவ்வாறு பார்த்ததும் அவனுக்கு கோபம் வந்துவிட்டது . மங்கை விக்ரம் காலையில் 4.30 ஜாகிங் செல்லும் நேரமே எழுந்து விடுவாள் எப்பொழுதும் செய்யும் வேலைகளை செய்து விட்டு தான் கல்லூரிக்கு கிளம்புவாள்.கல்லூரியில் இருந்து வந்து அவருடைய படிப்பு சம்பந்தமான வேலைகளை பார்ப்பாள்.பின் விக்ரமிற்காக காத்துக் கொண்டிருப்பாள்.இதனால் அவளது தூங்கும் நேரம் குறைந்து கொண்டே வருவது அவனுக்கு நன்றாக தெரிந்தது. தனக்கு காத்திருக்க வேண்டாம் என்று கூறினாலும் கேட்பதில்லை.
படிக்கும் பெண்ணை சிரமபடுத்துகிறோமோ என்றெண்ணியவாறே மங்கையை அலுங்காமல் தூக்கிக்கொண்டு தங்கள் அறையில் படுக்க வைத்தவன் அவளின் குண்டு கன்னத்தில் முத்தமிட்டு என்னை படுத்துறடி என்று அவளை அணைத்துக் கொண்டே தூங்கி விட்டான்.
காலையில் எழுந்த மங்கைகரசி கண்டது தன்னை அணைத்துக்கொண்டு உறங்கும் கணவனைத் தான். இங்கு எப்படி வந்தோம்.டைனிங் டேபிளில் தானே அமர்ந்து இருந்தோம் என்று யோசித்தாள்.ஒருவேளை இவர் தான் தூக்கிக் கொண்டு வந்திருப்பாரோ என்று நினைக்கும்போதே வெட்கத்தில் முகம் சிவந்தது.
விக்ரம் அன்று மங்கையிடம் தனக்காக காத்து இருக்கக் கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான்.
அதனால் எனக்கு படிக்க வேண்டியிருக்கிறது என்று கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்திருப்பாள்.
விக்ரம் வந்ததும் நானும் படித்து முடித்துவிட்டேன் என்று அவன் உண்டு முடிக்கவும் தனக்கும் அவனுக்குமான பாலைக் காய்ச்சி எடுத்துக் கொண்டு போய் கொடுப்பாள்.அவளின் இந்த திட்டம் தெரிந்திருந்தாலும் விக்ரம் ஏதும் சொல்ல மாட்டான்.
அப்படி ஒருநாள் மங்கை விக்ரமிக்காக சோபாவில் காத்துக் கொண்டிருக்கும் போது அப்படியே தூங்கி விட்டாள்.
வீட்டிற்கு வந்த விக்ரம் களைப்பில் தூங்கும் தன் மனைவியை பார்த்தான்.சாப்பிட்டு விட்டு தூக்கி செல்லலாம் என்று ரெப்ரெஷ் ஆகி வந்து சாப்பிட்டான்.

சோபாவின் அருகில் முட்டி போட்டு தூங்கும் தன் மனைவியையே பார்த்துக் கொண்டிருந்தான். தன்னவள் தனக்கானவள் என்ற எண்ணம் அவன் மனதில் எழுந்தது . இவ்வளவு நேரம் காதலனாய் ரசித்தவன் கணவனாய் மாறி தன் மனைவியின் மீது மோகம் கொண்டான். அப்போது அவனை சோதிக்கும் விதமாக காற்றில் மங்கையும் டாப்ஸ் விலகி அவளின் எலுமிச்சை நிற இடை தெரிந்தது. அதைக் கண்டவுடன் நிலைதடுமாறியவன் மங்கையின் வெற்றிடையில் கரம் பதித்து அழுத்தமாக வயிற்றில் இதழ் பதித்தான் .
விக்ரமின் இதழ்களின் அழுத்தத்திலும்,மீசை குறுகுறுப்பிலும் மங்கையின் தூக்கம் கலைந்ததை கண்டவுடன் அவசரமாக சோபாவின் மேலே ஏறி அமர்ந்து கொண்டான்.தன் மீதே விக்ரமிற்கு கோபம் வந்தது .அவன் மனைவிதான் அவன் முத்தமிட்டதில் தவறில்லை .ஆனால் அனைவரும் வந்து செல்லும் வாய்ப்புள்ள நடு ஹாலிலா என்றுதான் அவனுக்கு கோபம்.இந்தளவா நாம் இவளின் அருகில் நிலையிழக்கிறோம் என்று யோசித்தான்.
தூக்கம் கலைந்த மங்கை விக்ரமை பார்த்து வந்து விட்டீர்களா என்று கேட்க தன் சுயத்தை இழந்த கோபத்தில் உன்னை யார் எனக்காக காத்திருக்க சொன்னது. ஒரு முறை சொன்னால் புரியாது?என்ன கணவரின் மீது அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டுமா ?இந்த அக்கறையை எல்லாவற்றிலும் இருக்க வேண்டும். என்று கத்திவிட்டு மேலே சென்றுவிட்டான்.

விக்ரமின் கோபத்திற்கான காரணம் அறியமால் அவன் திட்டியதில் கண்ணில் கண்ணீர் வழிய நின்றாள்.
மங்கை விக்ரமின் நேசத்தினை தெரிந்து
கொள்வாளா? இல்லை அவனுக்கு தன் காதலை புரியவைப்பாளா?
மாலை தொடுக்கப்படும்
வணக்கம் நண்பர்களே
போன பதிவு சின்னதாய் போட்டதற்காக இந்தமுறை பெரிதாக கொடுத்துவிட்டேன் .அப்படியே படித்தவுடன் உங்களது கருத்துக்களை சொல்லி விட்டு சென்றால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன் .நல்லா இல்லாவிட்டாலும் பரவாயில்லை சொல்லிவிடுங்கள் .
உங்களுடைய கருத்துக்களை எதிர்நோக்கியிருக்கும்
உங்கள் தோழி
லக்ஷ்மி தேவி.
 
banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷ்மி தேவி டியர்
 
Last edited:

Nasreen

Nice epi
Presentation of dialogue can be enhanced
Story is nice
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top