மாயவனின் அணங்கிவள் -8

Advertisement

Priyamehan

Well-Known Member
அப்போதுதான் காரை விட்டு இறங்கி ஓடி வந்த தேவா அருவியைக் கண்டதும் அருகில் செல்ல..

"ஏய் தேவா எப்படி இருக்க...? சித்தி வரலையா? வரேன்னுக் கூட சொல்ல முடியல உன்னால" என்று சந்தோசத்தில் அடுக்கடுக்கான கேள்விகளுடன் தேவாவை அணைக்க போனவளை

"ஏய் ஏய் அருவி டோன்ட் டச் மீ...நீ என்ன இப்படி அலங்கோலமா பார்க்கவே பிச்சைக்காரி மாதிரி இருக்க...இது என்ன உன்மேல ஒரு பேட் ஸ்மல் வருது..."
என்று மூக்கை மூடியவளைப் பார்த்ததும் அணைக்க சென்ற அருவியின் கைகள் அந்தரத்தில் தொங்கியது..

தேவாவோ அருவியின் அருகில் இருந்த அமுதா, மாலதியை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

"தேவா அம்மா அப்பா வரலையா?"

"இல்லை அத்தை அவங்க கிளம்பும் போது தான் புதுசா ப்ராஜெக்ட் ஒன்னு கிடைக்கற மாதிரி இருந்தது, அதனால நீ முன்னாடி போ, நாங்க அடுத்த வாரம் வரோம்னு சொல்லிட்டாங்க சீக்கிரம் வந்துடுவாங்க" என்று பேசியப்படியே உள்ளே சென்றுவிட்டனர்.

அதிர்ச்சியில் இருந்த அருவிக்கோ கண்களில் இப்போவோ அப்போவோ கண்ணீர் எட்டிப் பார்த்துவிடுவேன் என்று பயமுறுத்திக் கொண்டிருக்க

"ஏய் அங்க நின்னுட்டு என்ன பண்ற.. இங்க வந்து இந்த பேக்கை எல்லாம் எடுத்துக் கொண்டுபோய் தேவா ரூமில வை" என்றான் வேந்தன் அதிகாரமாக...

அந்த அதிர்ச்சியிலும் அருவியின் கண்கள் சுற்றி இருந்த வேலைக்காரர்களை காண, "இத்தனைப் பேர் இருக்கும் போது என்னைய எதுக்கு எடுத்துட்டு போக சொல்றார்..?"என்று மனம் முரண்டுப் பிடித்தாலும் கைகள் அவன் சொன்ன வேலையை செய்தது.

கையில் பெட்டியுடன் வந்தவளை மேலிருந்து கீழ் பார்த்த கார்த்திக்

"அரு குடு நான் எடுத்துப்போறேன்" என்று கைகளை நீட்டினான்.

"இல்லை வேண்டாம் காக்கா" என்றவள் தேவாவிற்காக வேந்தன் ஏற்பாடு செய்திருந்த அறையில் பெட்டிகளை வைத்துவிட்டு தன்னுடைய அறைக்குச் சென்றுவிட்டாள்.

தேவா பேசும் போது அங்கு மாலதி அமுதா அம்புஜம், வேந்தன் என்று நால்வர் இருக்க ஒருவர் கூட அவள் பேசியதை தவறு என்று உரைக்கவில்லையே என்று கவலைப்பட்டு நொந்துப் போனாள் அருவி. அதற்கு காரணத்தை தேடி தேடி ஓய்ந்து போனாள்.

ரித்து அப்போதுதான் குளித்துவிட்டு குளியலறையில் இருந்து வெளியே வந்தவள் "என்ன மகாராணி யோசனையில அப்படியே நின்னுட்ட... இன்னைக்கு நீதான் சமைச்சியா? ஒழுங்கா சாப்பிடவே மாட்டியேடி இதுல அவ்வளவு பேருக்கும் ஒத்தை ஆளா சமைச்சி முடிச்சிட்டியா? என்று அருவிக்கு ஆறுதலாக கேக்க..

அவளை நிமிர்ந்துப் பார்த்த அருவி எதுவும் பேசாமல் தன்னுடைய உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்துக்கொண்டாள்.

"இவளுக்கு என்னாச்சி ஏன் இப்படி பேயடிச்ச மாதிரி நிற்கரா?" என்று யோசித்தவள், அவள் வந்ததும் சேர்ந்து சென்று உணவருந்தலாம் என தலையை வாரி பூ வைத்தாள்.

அப்போது அருவியின் எண்ணிற்கு சரவணனிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது.

"அரு இன்னைக்கு நைட் 8 மணிக்கு கோவில் கொளத்துக்கு பக்கத்துல நிற்பேன் மறந்துடாத" என்று அனுப்பியிருக்க..அதை பார்த்த ரித்துவிற்கு கோவம் வந்தது.

"ஓ இந்த வேலை வேற நடக்குதா...? இதைப் பத்தி எதுவும் என்கிட்ட இவ சொல்லவே இல்லையே துரோகி" என்று திட்டிக் கொண்டிக்க அந்த நேரம் பார்த்து குளியலறைக் கதவு திறந்தது.

"அருவி இவன் எதுக்கு உனக்கு மெசேஜ் பண்றான்?" என்று மொட்டையாக கேக்க..

ஏற்கனவே கோவத்தில் இருந்த அருவி.. "எவன் மெசேஜ் பண்ணா உனக்கு என்ன உன் வேலையைப் பார்த்துட்டுப் போ... போய் உன் அத்தை மக வந்துருக்கா அவளுக்கு கூஜா தூக்கு, சும்மா அவன் ஏன் மெசேஜ் பண்றான் இவன் ஏன் மெசேஜ் பண்றான்னு என்னோட பர்சனலுக்குள்ள வராத" என்று எரிந்து விழுந்துவிட்டு படுக்கையில் படுத்துவிட்டாள்.

கோவம் கோவம் கோவம் யாரைப் பார்த்தாலும் எரிச்சளாக வந்தது அருவிக்கு..

"அந்த தேவா அப்படி பேச இந்த வேந்தன் தானே காரணம் ... சரி அவதான் அப்படி பேசுறானா பக்கத்துல நிற்கர யாருமே எதுவும் சொல்லாம இருக்காங்க அவங்களுக்கெல்லாம் நான் அவ்வளவு கேவலமா போய்ட்டனா.. இல்லை வராதவ வந்துருக்கான்னு என்னைய கீழே தள்ளிட்டு அவளை தலைமேல தூக்கி வெச்சிக்க பார்க்கறாங்களா? " என்று கண்டதையும் நினைத்து மனதை கஷ்டப்படுத்திக்கொண்டாள்.

அருவி ஒரு எண்ணத்தில் உளன்றுக் கொண்டிருக்க...

அருவி பேசியதில் ரித்துவிற்கு அழுகை வந்துவிட்டது.

"என்ன கேட்டேன்னு இப்படி பேசறா?"என்று ரித்து அழுகையுடன் 'இனி நீயா வந்து பேசுனாலும் நான் பேச மாட்டேன் போடி.. இவதான் ஊர் உலகத்துலையே பேரழகி மாதிரி சீன் போட்டுப்பா' என்று அங்கிருந்து கீழேப் போக அழுததில் கண் மை கலைந்திருந்தது.

ரித்து கீழே வரும்போதே வேந்தன் அவள் முகத்தில் இருந்த மாற்றதைக் கண்டுக் கொண்டவன், அவள் அருகில் வந்து "ரித்து என்னாச்சி மை கலஞ்சிருக்கறது தெரியாமலா மேக்கப் போட்ட" என்று ரித்துவின் கண் ஓரத்தில் இருந்த மையை தன் சுண்டுவிரல் கொண்டு துடைத்துவிட்டான்.

"எல்லாம் இந்த அருவியால வந்தது அண்ணா.. சும்மா சும்மா என்னைய வெறுப்பேத்தி அழ வெச்சிட்டே இருக்கா" என்று ரித்து அருவியைப் பற்றி குற்றம் சொல்ல வேண்டும் என்று நினைத்து சொல்லவில்லை. மை கலைந்ததிற்கு காரணம் சொல்ல வேண்டுமே என்று யோசனை இல்லாமல் சொல்லிவிட..

"ஓ உன்னைய அழ வெச்சளா?" என்றவனின் குரல் இறுகி இருந்தது.

அதை கவனிக்கும் நிலையில் இல்லை ரித்து, தேவாவைப் பார்த்ததும் ஓடிச்சென்று அணைத்து நலம் விசாரித்தாள்.

"எல்லோரும் டைம்மாச்சி சாப்பிட வாங்க" என்று அம்புஜம் சொல்ல..

"பாட்டி இன்னைக்கு அவ தானே சமைச்சா இல்ல நான் போனதும் உங்க தலையில கட்டிட்டு ஓடிட்டாளா?" என்றான்.

"வேந்தா அரு தான் சமைச்சது.. ஹெல்ப் பண்ண போன உங்க அம்மா சித்திக்கு எல்லாம் ஏகப்பட்ட டோஸ் கொடுத்து அனுப்பி விட்டுட்டா என் பேத்தி" என்றார் சேதுபதி பெருமையாக

வெளியே சென்ற கிருபாகரனும் தினகரனும் வந்துவிட அவர்களும் தேவாவை நலம் விசாரித்து விட்டு சாப்பிட அமர்ந்தனர்.

"நிர்மலா எங்க...?இன்னுமா வரல பண்ணையில இருந்து. இந்நேரத்துக்கு வந்துருக்கணுமே" என்று சேதுபதி கேக்க..

"இன்னைக்கு கொஞ்சம் வேலை அதிகம்ப்பா, அதான் லேட்டாகுது போல... வந்துருவா" என்ற கிருபாகரன்

"அரும்மா எங்க?" என்றார்.

அனைவரும் ரித்துவைப் பார்க்க

"அவ ரூமில தான் இருப்பா நான் கீழே வரும் போதே குளிச்சிட்டா, படுத்துருப்பானு நினைக்கிறேன்" என்று சொல்லிவிட்டு தேவாவிடம் பேச ஆரம்பித்து விட... இனியன் மாடிக்குச் சென்றான் அருவியை அழைத்துவர..

"அரு.."

"ம்ம்"

"சாப்பிட வா"

"எனக்கு பசிக்கலடா"

"என்னடி ஆச்சி? உன் குரல் ஒருமாதிரி இருக்கு அழுதியா?"

"இல்லையே..."

"அப்புறம் ஏன் ஒரு மாதிரி இருக்கு.."

"சளிப்பிடிக்கற மாதிரி இருக்கு அதனாலக் கூட இருக்கலாம்,நீ கேள்வி கேட்டுட்டே இருக்காம போய் சாப்பிடு"

"உனக்கு"

"எனக்கு தான் பசிக்கலைன்னு சொல்றேன்ல"

"உன்னைய அண்ணன் வர சொன்னார், சீக்கிரம் வா" என்று கார்த்தி இனியன் பின்னால் வந்து சொல்ல

"டேய் உண்மையாவே எனக்கு பசிக்கலடா நான் ஹாஸ்டல்ல இருந்தா காலையில சாப்பிடவே மாட்டேன் ப்ளீஸ் எதையாவது சொல்லி சமாளிங்க" என்று சொல்ல

அவர்கள் இருவரும் ஒரு சேர கீழே சென்று "அவளுக்கு வயிறு சரியில்லையா பாத்ரூமில இருக்கா...கொஞ்ச நேரம் கழிச்சி வந்து சாப்பிடுக்கறேன்னு சொல்லிட்டா, நீங்க சாப்பிட்டுங்க" என்றதும் வேந்தன் இருவரையும் உற்றுப் பார்த்து விட்டு மாடிப் படி ஏறினான்.

அதில் இனியனுக்கும் கார்த்திக்கும் இதயம் நின்று துடித்தது.

"என்னடா இவர் மேல போறாரு."

"யாருக்கு தெரியும் நம்ப ஒன்னு சொல்ல அவ ஒன்னை உளறி வைக்கப்போறா" என்று இனியன் பயந்து நடுங்கினான்.

மேலே வந்த வேந்தன் அருவியின் அறைக் கதவை தட்ட...

"டேய் எருமைங்களா எனக்கு தான் பசிக்கலைன்னு சொல்றேன்ல சும்மா சும்மா வந்து கதவை தட்டி உயிரை வாங்காதீங்க போய் தொலைங்க" என்று கத்த.. மீண்டும் கதவு தட்டப்பட்டது

"இவங்களை" என்று பல்லைக் கடித்தவாறு எழுந்து வந்து கதவை திறந்தவள் இனியன் தான் கதவை தட்டுகிறான் என்று அவன் மார்பில் குத்த கையை ஓங்க அங்கு வேந்தனைக் கண்டதும் கையை இறக்கிக் கொண்டாள்.

அவள் முகம் மாற்றத்தையும் குறித்துக் கொண்டான் வேந்தன்.

"சாப்பிட வரலையா?"

"எனக்கு பசிக்கல" என்று தரையைப் பார்த்து பதில் சொன்னவளின் தாடை தன் ஒற்றை விரல் கொண்டு நிமிர்த்தி

"கண்ணைப் பார்த்து பேசு..."என்றான் அதிகாரமாக..

"உங்களுக்கு என்ன தான் பிரச்சனை...? பசிக்கலனா விட வேண்டியது தானே" என்று அவன் கையை விலக்கிவிட்டு மீண்டும் தரையைப் பார்த்து சொன்னாள்.

"சரி வா தோட்டத்துக்கு போகணும்"

"எதுக்கு?" என்று இப்போது அவன் கண்ணைப் பார்த்துக் கேக்க...

"அது" என்று பார்வையால் திமிறைக் காட்டியவன்

"வேலை கத்துக்க வர சொல்லி நேத்தே சொன்னேன்ல ... உன்னைய தோட்டத்துல விட்டுட்டு நானும் தேவாவும் பஞ்சாயத்துக்கு போகணும், ம்ம் சீக்கிரம்" என்று அருவியை அவசரப்படுத்தினான்.

"நீங்க போங்க நான் நிருவை கொண்டுப் போய் விட சொல்லிக்கறேன்" என்றாள்

"அவனுக்கு கோழிப்பண்ணைக்கு போற வேலை இருக்கு... போற இடத்துக்குலாம் உன்னைய கூட்டிட்டு அலைய முடியாது கிளம்பு" என்று ஒரேப்பிடியில் நிற்க

"என்னோட அண்ணன் கூட போகக்கூடாதுனு சொல்ல இவன் யாரு?" என்று மனதுக்கு புழுங்கியவள் "நீங்க போங்க நான் ரெடியாகிட்டு வரேன்" என்றாள்.

"தோட்ட வேலை செய்ய இதுவே போதும் வா" என்று அவன் பிடிவாதமாக நிற்க... சரவணனைப் போல தானும் இனி இந்த ஊர் பக்கம் வரவேக் கூடாது என்று முடிவு செய்தவள் கதவை மூடிவிட்டு அவன் பின்னால் சென்றாள்.

மனதிற்குள் வேதனை அலைமோதியது... தன்னையும் தன் குடும்பத்தையும் ஆதரவற்ற அனாதைகளைப் போல அனைவரும் நடத்துவது போல் தோன்றியது...

அப்பா ஏன்ப்பா விட்டுட்டு போனீங்க என்று கத்தி கதறி அழவேண்டும் போல் இருக்க... கண்களில் தோன்றிய கண்ணீரை மறைத்தப்படியே வேகமாக படிகளை இறங்கியவள் யாரையும் பார்க்காமல் காருக்கு சென்று விட்டாள்.

தேவாவிடம் பேசிக் கொண்டிருந்ததால் பெரியவர்கள் இதை கவனிக்கவில்லை.. ஆனால் இனியன், கார்த்திக் இருவரும் அருவியைப் பார்த்துவிட்டு பாதி சாப்பாட்டில் எழுந்துக் கொண்டனர்.

"எங்கடா சாப்பிடாம போறீங்க?" என்று அம்புஜ பாட்டி கேட்கவும்

"நான் சாப்பிட்டேன் இவன் தான் சாப்பிடல" என்று ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி அடுத்தவர்களை கைக்காட்ட..

"அவ திங்கலைனா நீங்க திங்க மாட்டுங்களா?", என்று வேந்தனிடம் இருந்து கேள்வி வரவும்

"இனியன் எனக்கு போதும் அண்ணா" என்றான்.

கார்த்திக்கோ "அவ சாப்பிட்டா என்ன சாப்பிடலைனா எனக்கு என்ன,? எனக்கு பசிக்கலண்ணா" என்று மேலும் நின்றால் கேள்வி வரமோ என்று கைகழுவ சென்று விட்டான்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Saroja

Well-Known Member
ஆனாலும் இந்த வேந்தன்
அந்த தேவா ரொம்ப அவள
இம்சை செய்றாங்க
 
Vijaya RS

Well-Known Member
What is Vendan’s problem? He has no right to treat Aruvi in this manner and that Deva is another irritating specimen. I hope someone will teach that Vendan a good lesson.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top