மாயவனின் அணங்கிவள் -43 (முதல் பாகம் முடிவுற்றது)

Advertisement

Priyamehan

Well-Known Member
வேந்தன் குளித்து விட்டு வேக வேகமாக இறங்கி வந்தவனை பார்த்து இன்பமாக அதிர்ந்தாள் அருவி.

எனக்கிட்ட இல்ல என்று சொன்னவன் அடர் சிவப்பு நிற சட்டையையும் வெள்ளை நிற வேட்டியும் அணிந்து கம்பீரமாக இறங்கி வருபவனை விழிகள் அகற்றா மல் பார்த்தாள் அருவி..

இவன் என்னவன் என்று நினைக்கும் போதே உடலில் உள்ள அனைத்து செல்களும் துடித்து அடங்கி கர்வத்தை காட்டியது.

வீட்டில் அனைவரும் இருக்கும் போது இருவரும் சிறுப் பார்வையைக் கூட பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.. இன்றும் வேந்தன் அவ்வாறே இருக்க அருவியால் தான் அப்படி இருக்க முடியாமல் தவித்தாள்.

அவளும் அடக்கி அடக்கிப் பார்க்க பார்வை வேந்தனிடமே சென்று நின்றது.

"அமு தட்டை எடுத்தி வெச்சியா?, மொளப்பாரி எங்க?"என்று மாலதி அமுதாவை கேட்டார்.

"வெச்சிட்டேன்க்கா..."

"அப்போ கிளம்பலாம் அண்ணி வாங்க.." என்று எப்போதும் அழைக்கும் நியாபகத்தில் மாலதி நிர்மலாவை அழைத்துக் கொண்டு முன்னாள் செல்ல.. தன்னை அழைக்கவில்லை என்று ஷர்மிளா வெந்து தணிந்துக் கொண்டிருந்தார்.

வீட்டில் மொத்தம் மூன்று கார் இருந்தது.

கிருபாகரன், மாலதி , தினகரன், அமுதா, சேனாதிபதி , அம்புஜம் ஒருக் காரில் ஏறிக் கொள்ள..

நிர்மலா, ஷர்மிளா,நந்தகோபாலன், இனியன் , கார்த்திக் ஒருக்காரில் கிளம்பினர்.இந்த காருக்கு வந்த தேவாவை

"நீ வேந்தனோட வா தேவா..." என்று அனைவருக்கும் கேக்கும்படி சொன்ன ஷர்மிளா... தேவாவிடம் மட்டும் "வேந்தன் பக்கத்துல உக்கார்ந்துட்டு வா சரியா?" என்று மிரட்டுவது போல் கூறினார்.

சரி என்று தலையை அசைத்தாலும் அவளுக்கு கார்த்திக் கூட செல்ல தான் விருப்பம். வெளிப்படையாக காதலை சொல்லி, தான் டைம் கேட்ட பிறகும் கூட அவன் பார்வையில் கண்ணியத்தை மட்டுமே பார்த்தாள், இவ்வளவு நாள் கார்த்திக் அவள் மீது அக்கறையாக இருந்தாலும் அதை உணரும் நிலையில் தேவா இல்லாமல் இருந்திருந்தாள்.. ஆனால் கார்த்திக் காதல் சொன்னதில் இருந்து அவன் அக்கறையையும், பாசத்தையும் புரிந்துக்கொண்டாள்.

தேவாவின் மனம் கார்த்திக்கை நோக்கி சாய்கிறது தான், அதை வெளிப்படையாக சொல்லி அதனால் தன் தாய் ஏதாவது சொல்லிவிடுவாரோ என்ற பயத்தில் கார்த்திக்கின் மீது தோன்றிய ஈர்ப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தாள்.

ஷர்மிளா சொன்னதும் கார்த்திக்கைப் பார்க்க

அவனோ "போ" என்று சம்மதமாக தலையை ஆட்டினான்.

தேவா ஷர்மிளா சொன்னதற்காக வேந்தன் அருகில் முன் பக்கம் அமர போக..

அது வரை அமைதியாக இருந்த அருவி பொங்கி விட்டாள்.

"ஏய் பின்னாடி போடி.நான்தான் இங்க உக்காருவேன்"

இல்ல அரு அம்மா என்று அவள் ஏதோ சொல்ல வர

"அம்மா ஆட்டுக்குட்டின்னு ஆரம்பிச்ச அவ்வளவு தான் ... என்ன சொன்னாலும் நான்தான் இன்னிக்கு முன்னாடி உக்காருவேன் ஓடிடு.." என்ற அருவிக்கு ஏற்கனவே ஷர்மிளாவை நினைத்து பயம் எங்கு தன்னையும் தன்னவனையும் பிரித்துவிடுவாரோ என்று... இதில் அவர் சொன்னார் என்று தேவா வேந்தனின் அருகில் வந்து அமர்ந்தாள் அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பாளா?.

"கோவிலுக்கு என்ன ரொம்ப தூரமா இருக்கு, ஐஞ்சு நிமிசத்துல இறங்க போறோம் அதுக்கு எதுக்கு இத்தன ஆர்ப்பாட்டம், யாராவது ஒருத்தர் உக்காருங்க, இல்லையா நகருங்க நான் உக்காரேன்" என்று நிரு முன் பக்கம் வர அருவி பாவமாக வேந்தனைப் பார்த்தாள்.

அப்போதுதான் அவளைப் பார்த்தான் வேந்தன்... சிவப்பு நிற பட்டு புடவையில் தேவதையாக நின்றவளை மேலிருந்து கீழ் வரை ஒரு முறைப் பார்த்தவன்.

"நிரு நீ முன்னாடி உக்காரு... நீங்க ரெண்டுபேரும் பின்னாடி போங்க" என்றதும் அருவியின் முகம் சுருங்கி போக.. 'எவ்வளவு ஆசையாக வந்தேன்... போடா நீயா வருவில அப்போ பேசிக்கறேன்' என்று பின்னால் போய் அமர்ந்தவள் கார் கதவை அடித்து மூடினாள்.

அதில் வேந்தன் முகம் புன்னகை பூசிக் கொண்டது.தனக்காக பார்த்து பார்த்து அலங்கரித்துக் கொண்டிருப்பவளை தவிர்த்தால் கோவம் வரதானே செய்யும் என்று அருவியின் கோவத்தையும் ரசிக்க தான் செய்தான் வேந்தன்..

கண்ணாடி வழியாக அவளைப் பார்த்தவன் அவள் பார்க்கும் போது கண் அடித்து அருவியை கிறங்க வைத்தான்.

மூன்று நாட்களாக அவன் முகம் பார்க்காமல் ஏங்கி கிடப்பவளுக்கு அந்த ஒற்றை கண் சிமிட்டளே இமாலய சந்தோசத்தைக் கொடுத்தது.இருந்தும் அவன் பக்கத்தில் அமர வைக்கவில்லையே என்று வருத்தமும் இருக்க அதை முகத்தில் காட்டினாள்.

கார் வேந்தனின் கையில் ரதம் போல் செல்ல...கோவிலை நெருங்கி விட்டோம் என்பதற்கு அறிகுறியாக வண்ண வண்ண விளக்குகளும் ஒலிப்பெருக்கியில் இசைத்த பாடல்களும் கண்ணையும் காதையும் ஒரே நேரத்தில் குளிர்வித்தது...

ஊரில் உள்ள அனைவரும் மாவிளக்கு கொண்டு வந்ததும் அதை 100 அடி தூரத்தில் இருந்த கோவில் மண்டபத்தில் வைத்து பின்பு மோளதாளங்கள் முழங்க கோவிலுக்கு அழைத்து செல்வார்கள்... அவர்களை கொண்டு வந்து விட்டுவிட்டு
முளைப்பாரியை அழைத்துச் சென்று கும்மி அடித்து முளைப்பாரி பாடல் முடிந்ததும் அனைத்து மாவிளக்குகளுக்கும் தேங்காய் உடைத்த பின்பு பூஜை நடைபெறும்.

வயதான ஆண்களும் நடுத்தர ஆண்களும் அவரவர் நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று திருவிழாவின் போது தான் காண முடியும் என்று கூடி கூடிப் பேசி தங்கள் உறவுகளை அறிமுகம் படுத்திக்கொண்டிருப்பர்.

நடுத்தர வயதை தாண்டிய பெண்கள் அனைவரும் பட்டுப் புடவை சரசரக்க, வீட்டில் இதுநாள் வரையிலும் வாங்கி வைத்த அனைத்து நகைகளையும் போட்டுக் கொண்டு யார் என்ன நகை போட்டு வந்திருக்கிறார்கள், எவ்வளவு நகை போட்டு வந்திருக்கிறார்கள் என்று கூடி பேசுவார்கள்..அதில் அவர்களுக்கு அலாதிய சந்தோசம்.

இளம்வயது ஆண்கள் நேர்த்தியாக உடை அணிந்து திருவிழாவிற்கு வரும் பெண்களை நோட்டம் விட..

ஆண்கள் நோட்டம் விடுவார்கள் என்று தெரிந்தே தாவணி பாவாடை அணிந்து தலை நிறைய பூ வைத்து அதற்கு தகுந்த அலங்காரத்துடன் வளைய வருவார்கள்..

தெருவோரக் கடைகளில் கூட்டம் அலைமோதிக் கொண்டு தங்கள் குழந்தைங்களுக்காக பெற்றவர்கள் பேரம் பேசிக் கொண்டிருப்பர்.

இவற்றை அனைத்தும் பார்த்தால் தான் திருவிழா முழுமையடையந்தது போல் இருக்கும்.

காரை விட்டு இறங்கியவர்கள் கூட்டத்துடன் கூட்டமாக கலந்தனர்... கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் யார் அருகில் யார் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை..

குடும்பத்தில் இருந்த அனைவரும் முன்னே செல்ல தன் சேலையை சரி செய்ய பின் தங்கியதால் அருவி பின்னால் சென்றாள்.

எப்படியும் கூட்டத்தில் யாரு எங்கு இருக்கிறார்கள் என்று தெரிய போவதில்லை..அலைபேசியில் அழைத்து தான் தெரிந்துக் கொள்ள வேண்டும்..

அருவி கூட்டத்தில் இறங்கி நடக்க சட்டென்று அருவியின் கையை யாரோ பிடிக்கவும் பயந்து அருகில் இருப்பவரை நிமிர்ந்து பார்த்தாள். அந்த வலியக் கரங்களுக்கு சொந்தக்காரன் வேந்தன் தான், தன்னவன் கையை பிடித்திருக்கிறான் என்றதும் உடல் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது அருவிக்கு.

அந்த சிலிர்ப்பை உணர்ந்தவன் "என்னடி ..." என்றான் குனிந்து அவள் காதருகில் அதில் அவனின் மீசை முடி குறுகுறுக்க... இன்ப அவஸ்தையில் நெளிந்தாள்.

"எப்படி இங்க வந்திங்க யாராவது பார்க்க போறாங்க" என்று ரகசியம் பேசியவள் வேந்தன் கையில் தன் கையை வாகாக குடுத்து நிற்க..வேந்தனின் நீண்ட விரல்களுடன் அருவியின் பிஞ்சு விரல்கள் நர்த்தனமாடியது.

"இந்த கும்பல்ல உன்னைய என்னையும் தான் தனியா வந்து பார்க்க போறாங்க .. சும்மா வாடி" என்று அவனும் அவளுக்கு சரியாக ரகசியம் பேசினான்.

"வேந்தன்.. எப்படி இருக்கீங்க...?"என்று ஒருவர் வேந்தனை கண்டுக் கொண்டு நலம் விசாரிக்க...

அவனோ அருவி எங்கு போய்விடுவாளோ என்று அவள் கையை அழுத்தமாக பிடித்தவன்

"ஹா கருணா எப்படி இருக்கீங்க...?" என்றான் சம்பிரதாயத்திற்கு.

"எங்களுக்கு என்ன... உங்களை தான் பிடிக்கவே முடியலை" என்று சொல்ல அருவி முன்னாள் போகும் ரித்துவைப் பார்த்துவிட்டு அவனிடம் இருந்து கையை உருவ முயல..

"எனக்கு என்ன கருணா? வீட்டுல தானே இருக்கேன்..."

"வீட்டுக்கு ஒரு தடவை வந்தேன் ஆள் இல்ல கோவிலுக்கு போய்ட்டதா சொன்னாங்க"

"ஓ" என்றவன் கவனம் முழுவதும் அருவியிடம் தான் இருந்தது.

"கொஞ்சம் பேசணும் அப்படி வரிங்களா?" என்று கருணா அழைக்க...

"இன்னைக்கு கொஞ்சம் பிஸி... இதோ என்னோட விசிட்டிங் கார்டு" என்று வலது கையில் கொடுத்தவன் இடது கையை அருவியிடம் இருந்து பிரிக்கவில்லை.

"கால் பண்ணுங்க இன்னொரு நாள் மீட் பண்ணுவோம்" என்றான்.

"சூர்" என்று கருணாவும் கிளம்பிவிட.. மாவிளக்கு கோவிலுக்கு செல்வதற்குள் வேந்தனிடம் பத்து பேராவது பேசியிருப்பர்.. பொறுத்து பார்த்தவள் அவனிடம் இருந்து கையை உருவிக்கொண்டு முன்னாள் சென்று விட்டாள்.

அங்கு சென்றால் அவரவர் அவர் காதல் ஜோடிகளுடன் கண்ணால் கதைப் பேசிக் கொண்டிருந்தனர்.

அன்று காபி ஷாப்பில் பார்த்த பிறகு இன்று தான் இனியன் ரேணுகாவை பார்க்கிறான் உடனே அவளை தனியாக தள்ளிக் கொண்டு போய் தன் காதல் பயிரை வளர்க்க.. கார்த்திக் தேவாவுடன் கண்களால் பேசிக் கொண்டிருந்தான்.

ரித்துவோ திருவிழாவிற்கு வந்ததே சரவணனை பார்க்க தான்... யாருக்கும் தெரியாமல் அவனுடன் சென்றுவிட்டாள்.

தனித்து விடப்பட்ட நிருவும் கூட கிருபாகரன் தினகரன் கூட்டத்துடன் சேர்ந்து நிற்க.. பெண்கள் அனைவரும் மாவிளக்கை பார்த்துக் கொண்டும் அதைப் பற்றி பேசிக் கொண்டும் இருக்க.. அருவிக்கு தனியாக இருப்பதே பெரிய விஷயமாகி போனது..

வேந்தனின் கையை பிடித்த ஈரம் இன்னும் அவள் கையில் மிச்சம் இருந்தது.. அதைப் பார்த்தவள்.. இப்போதைக்கு வேந்தனை பிடிக்க முடியாது என்று தெரிய ஏக்கத்துடன் கோவிலை சுற்றி வந்தாள்.

கோவிலுக்கு பின்புறம் குளமும் அதை தாண்டி ஒரு மாவு அரைக்கும் மில்லும் இருக்க... கோவிலை சுற்றி வந்தவள்... குளத்தை பார்த்துக் கொண்டே நகர்ந்து போனாள்.

அவள் மனம் வேந்தனுடன் தனி அறையில் இருந்தப் போது நடந்ததையே நினைத்துக்கொண்டிருக்க கால் போன போக்கில் மில் இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் சென்று விட்டாள்.

இன்று கோவில் திருவிழா என்பதால் மில்லுக்கு விடுமுறை விடப்பட்டிருக்க சில இடங்கள் இருளாக காட்சியளித்தது.

அந்த பக்கம் போக வேண்டாம் என்று திரும்பி கோவிலுக்கு செல்லும் பாதையில் நடக்க போகும் போது அவளை ஒரு வலிய கரம் பிடித்து இருளுக்குள் இழுத்தது..

"ஐயோஓஓ....... காப்பாத்துங்க காப்பாத்துங்க" என்று அருவி அலற

அவள் வாயை பொத்தியது உருவம், இருளில் அவன் முகம் பார்க்க முயற்சி செய்ய அது முடியாமல் போகவும்..

வாயை அடைத்த கையை தன் வலிமை கொண்டு தள்ளப் பார்த்தாள்... அந்த உருவமோ அசால்ட்டாக அதை புறம் தள்ளிவிட்டு அருவியின் இதழில் இதழ் பதித்தது.

முதலில் ஆரம்பித்தது மட்டும் தான் அந்த உருவம் அதன்பிறகு முடித்து வைத்தது அருவி தான்..

அருவியை விட்டு விலக... அவன் சட்டையை பிடித்து இழுத்து தன் மேல் போட்டவள்..

"என்ன மாமா இங்க வந்து இப்படி பண்றீங்க?" என்றாள் ரகசியமாக.

"நான்தான்னு எப்படி கண்டு பிடிச்ச ..?"

"உங்க வாசம் எனக்கு தெரியாதா...? வேந்தன் பொண்டாட்டிக்கு முத்தம் கொடுக்க வேந்தனால மட்டும் தான் முடியும்ன்னும் தெரியாதா?"

"சரியான கேடிடி நீ"

"உங்களை விட கம்மி தான்"

"இங்க எதுக்குடி வந்த?"

"எல்லோரும் அவங்க அவங்க வேலையில பிஸியா இருக்காங்க, அதான் நான் இப்டியே வந்தேன்" என்றவளின் இடையில் கை வைத்து அழுத்தம் கொடுத்தான்

"மாமாஆஆஆ...."

"ம்ம்..சேலை கட்டி ஆளை மயக்கிட்டு மாமான்னா என்னடி அர்த்தம்."

"ம்ம்.."

"என்னடி வாசம் இது... உங்கிட்ட வந்தா மட்டும் ஆளை கிறங்கடிக்குது.." என்றான் கிறங்கிய குரலில்.

"சீவக்காய், கஸ்தூரி மஞ்சள்" என்றவள் அவன் சட்டை காலரை இருக்க பிடித்து

"ஊருக்கு பஞ்சாயத்து சொல்றவர் பண்ற வேலையா இது"

"என்னடி பண்ணேன்.."

"என்னால பண்ணல...?"

"தெரியல நீயே சொல்லு..."

"இப்படி இருட்டில தள்ளிட்டு வந்து முத்தம் கொடுக்கறீங்க... இடுப்புல கை வைக்கறீங்க இதுலாம் பெரிய மனுஷன் பண்ற காரியமா?" என்றவளுக்கு அவன் இன்னும் இடுப்பில் வைத்திருக்கும் கையின் அழுத்ததில் உள்ளுக்குள் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய கண்கள் சொக்கிப் போய் நின்றாள்

"பெரிய மனுசனா, எனக்கு என்னடி அம்பது வயசா ஆயிடுச்சி...?

"ஹா.. மாமா ப்ளீஸ் போய்டலாமா? என்னால முடியால... உடம்புக்குள்ள என்ன என்னமோ பண்ணுது..உங்க சிரிப்பே என்னைய மயக்குது"

"எங்க போலாம்" என்றவன் குரலும் பார்வையும் மாறியிருக்க

"கோவிலுக்கு"

"வீட்டுக்கு"

"வீட்டுக்கு போனா எல்லோரும் காணான்னு தேடுவாங்க மாமா.."

"சொல்லிக்கலாம்"

"என்னன்னு"

"ஏதாவது"

"மாமா..."

"எனக்கு வேணும்டி.. மூனு நாள் உன்னைய பார்க்காமல் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா..?"

"நானும் தான் மாமா"

"இதுக்கு முன்னாடி கூட நீ லவ் பண்ணலன்னு மனசை சமாதானம் பண்ண முடிஞ்சிது இப்போ அப்படிலாம் சமாதானமும் பண்ண முடியலடி... எப்போவும் நீ பக்கத்துல வேணும் போல இருக்கு" என்று நீண்ட வசனம் பேச..

"கூடவே இருக்கனும்னு நினைக்கறவர் தான் கார்ல பின்னாடி உக்கார சொன்னாரா..?" என்று அவன் கன்னம் தொட்டாள்..

ட்ரிம் செய்யப்பட்ட தாடியுடன் சொரசொரப்பாக இருந்தது...

அவள் கேள்வியில் பளிச்சென்று புன்னகைக்க அந்த இருளில் வெண் பற்கள் மின்னி அருவியை சொக்கச் செய்தது.

"மூனு நாள் பார்க்காம இருந்துட்டு திடிர்னு புடவையில பார்த்தா எங்க கண்ட்ரோல் மிஸாகி அன்னிக்கு மாதிரி பாஞ்சிடுவனோன்னு பயம் அதான் பின்னால உக்கார்ந்தா பார்த்து ரசிச்சிட்டாவது வரலாமேன்னு சொன்னேன்.. இப்போ மட்டும் இல்ல.. பல தடவை உன்ன பின்னால உக்கார சொன்னதுக்கு காரணமும் இதுதான்.."என்றவன் அவளின் முகத்தில் ஒற்றை விரலால் கோடியிழுத்தான்.

வேந்தனுக்கு பயமா... நம்ப முடியலையே ...

மத்தவீங்க தான் என்னையப் பார்த்து பயப்படணும் .. உன்னைம் அன்னிக்கு மாதிரி காயப்படுத்திடுவனோன்னு தான் பயம்.. அந்த அளவுக்கு ஹார்சா நடந்துக்கிட்டனா இல்ல நீ அந்தவளவுக்கு வீக்கா இருக்கியா?"

"ரெண்டு தான் .." என்றாள் மெலிதாக

அவள் காதில் ஏதோ சொன்னவன் "சாப்பாட்டு உடம்பை தேத்தி வைடி... "

!ச்சை என்ன இப்படி பேசறீங்க...? போங்க" என்று அவனை தள்ளி விட்டவளின் முகம் ரத்தமாக சிவந்திருக்க அந்த இருளிலும் தெரிந்தது.

தள்ளிய கையை பிடித்து இதழ் பதித்தவன்.. "உங்கிட்ட மட்டும் தாண்டி பேச முடியும் உங்கிட்ட டீசன்ட் பார்த்தா வேலையாகுமா? வீட்டுக்கு போலாம்" என்று அவள் முதுகில் கைப் போட்டு தன்னோடு இறுக்கி கொண்டான்.

"நீங்க இருக்கிற ஸ்பீட்டைப் பார்த்தா பயமா இருக்கு மாமா... வாங்க கோவிலுக்கு போலாம்....வீட்டுக்கு போனா அடுத்த பத்து மாசத்துல நம்ப அப்பா அம்மா ஆயிடுவோம்"

"ஆனா சந்தோசம் தாணடி... கல்யாண பரிசா நம்ப குழந்தையை குடுத்துடுவோம்..."

"ஹா ஆசை தான் மாமா, ரொம்ப நேரம் இங்க இருக்க வேண்டாம் மாமா... வாங்க போலாம்"

"ம்ம் போலாம்" என்றவன் மீண்டும் அவள் இதழ் தீண்ட...

இருவரும் ஒருவருக்குள் ஒருவர் அடங்கி நின்றனர்.

ஒருவர் மீது ஒருவர் எல்லையில்லா காதலை கொண்டிருக்கின்றனர். இருவருக்கும் இடையில் இருக்கும் காதல் நீடிக்குமா? இல்லை பாதிக்குமா...? அடுத்த பாகத்தில் பாப்போம்

தொடரும்

முதல் பாகம் முற்றும்.

இரண்டாம் பாகத்தில் அனைவரின் காதல், சண்டை, விருப்பம், வெறுப்பு என்று அனைத்தையும் பார்க்கலாம்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top