மாயவனின் அணங்கிவள் -4

Advertisement

Priyamehan

Well-Known Member
வெளியே வந்த வேந்தனின் கண் அங்கு காரின் மீது சாய்ந்து போனை நோண்டிக் கொண்டிருந்த அருவியின் மீதுதான் சென்றது...

அவள் அருகில் சென்றவன்... "ஏய்... கார்மேல் சாஞ்சி காரை அழுக்கு பண்ணி வெச்சிருக்க" என்றான் கடுப்பாக...

"என்னாது.....!!! நான் சாஞ்சதுல கார் அழுக்காகிருச்சா... மாமா இதுலாம் உங்களுக்கே ஓவரா தெரியலையா....?"

"தெரியல... ஒழுங்கா காரை துடைடி"

"அதுலாம் முடியாது மாமா...வீட்டுல வேலை செய்ய தான் இவ்வளவு பேர் இருக்காங்களா அப்புறம் எதுக்கு என்கிட்ட வேலை வாங்கறீங்க"

" அப்படிங்கற... எப்படி முடிய வைக்கணும்னு எனக்கு தெரியும்" என்றவனின் குரல் அருவிக்குள் குளிரை ஏற்படுத்தியது..

"இருங்க தாத்தாகிட்ட சொல்லி வைக்கிறேன்" என்று சிணுங்கியவளை..

அவளை உற்றுப் பார்த்தவன் "நீ சொன்னது அவர் வந்து என்னோட தலையை சீவிடுவாரா?, இந்தா துணி முதல காரைத் துடை ... என்றான் திமிறாக..

"எத்தனை நாள்த்து அழுக்கோ... என்னைய துடைக்க விடறான்... எருமை..." என்று முகத்தை சிணுங்கியாரு வைத்துக்கொண்டு முனைவ...

"திட்டுனதுல்லாம் போதும் அங்கப் பாருடி அழுக்கு நல்ல தேச்சி துடை, என்ன துடைக்கற...ஒரு காரை ஒழுங்கா துடைக்கத் தெரியுதா? வாய் மட்டும் தான் வண்டி வண்டியா பேசுது வேலையில ஒரு திருத்தமும் இல்ல" என்றான் வேண்டுமென்றே

வேகமாக துடைத்தவள்...துணியை தூக்கி காரின் மீது எறிந்துவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்து விட்டாள்...

"ஏய் எங்கடிப் போற..?"

"ஹா பொடி நடையா அமெரிக்காவை வலம் வரப் போறேன் வரிங்களா கூட சேர்ந்து சுத்திட்டு வரவோம்...?என்று ஏகத்துக்கும் நக்கலாக கேக்க...

"என்ன தேவைக்கு நான் வரணும்?"

"அப்புறம் என்ன தேவைக்கு கேக்கறீங்க...?
நான் நடந்தே பண்ணைக்கு போய்க்கரேன்" என்று அங்கிருந்து போனவளை

"போடி... போ அப்படியாவது உடம்புல இருக்கற கொழுப்பு குறையட்டும்" என்றவன்... காரை கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டான்.

"எவ்வளவு திமிறு எனக்கு கொழுப்பு இருக்குனு சொல்றான்... இவனுக்கு தான் உடம்பு முழுக்க கொழுப்பு, அதுவும் என்னையக் கண்டா மட்டும் உடம்புல தனியா கொழுப்பு கூடிக்கும் போல" என்றவளின் மனமோ..

'எங்க அப்பா இருந்திருந்தால் இவன் இப்படிலாம் பேசுவானா.? நாங்க தான், இவங்க தான் கதினு இங்க வந்து இருப்போமா,எங்க அம்மாவை ஒரு வேலைக்காரி மாதிரி ட்ரீட் பண்ணுறாங்க... அப்பாவோட ராணியா இருந்திட்டு இங்க வந்து இப்படி இருக்கணும்னு அம்மாவுக்கு தலையெழுத்து ' என்று கேள்விக் கேட்டது.

அனைவரும் சாப்பிட்டு விட்டு வெளியே வந்துப் பார்க்க.. ஆளுக்கு முதலாக கிளம்பிய வேந்தன் அருவி இருவரையும் காணவில்லை என்றதும் அவர்கள் இருவரும் தோட்டத்திற்கு சென்று விட்டனர் என்று நினைத்துக்கொண்டனர்.

அவர்களின் தோட்டத்திற்கு செல்ல இருவழிகள் உள்ளது ... அதில் ஒன்றில் அருவி நடந்து சொல்ல மற்றொன்றில் அனைவரும் காரில் சென்றனர்.

வீட்டிற்கும் தோட்டத்திற்கும் ஒரு கிலோமீட்டர் தூரம் இருந்தது... தன் காதில் ஹெட்செட்டை மாட்டிக் கொண்டவள் பாட்டைக் கேட்டுக்கொண்டே நடந்தாள்.

இருப்பக்கமும் கண்களுக்கு விருந்தாக வயல்வெளிகளும் அதை உரசியப்படியே ஓடும் கால்வாய்களும் பார்க்க அழகாக இருக்க அதை ரசித்துப் பார்த்துக் கொண்டே நடந்தாள்.

'விட்டுட்டு போனான்ல... அங்க போய் பார்த்துட்டு என்னையக் காணாம எல்லோரும் அவனை காச்சி எடுக்கணும், அதுவரைக்கும் தோட்டம் பக்கம் போகக்கூடாது, என்ன ஒன்னு அவன் வாங்குற திட்டை என்னால பார்க்க முடியலையே' என்று அங்கிருந்த வாய்க்காலின் கரையில் அமர்ந்து தன் சுடிதாரின் பேண்டை மேலே காலின் முட்டி வரை ஏற்றி மடக்கி விட்டவள் ஓடும் நீரில் காலை விட்டு ஆட்டிக் கொண்டே ஹெட்போன் மூலம் பாட்டு கேட்டாள்.

சூழ்நிலைக்கு ஏற்ப பாடல் கேக்க எப்போதுமே அருவிக்கு ஆசை... இப்போது வரும் பாடல்களை விட இளையராஜா, தேவா, பாடல்களின் மீது அதீத ஆர்வம் உண்டு, அவளின் பிலே லிஸ்டில் கூட அவர்கள் இருவரின் பாடல்களும் எஸ்பிபி பாடல்களும் தான் அதிகம் இருக்கும்...

தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
மாமன் மொகத்த பாத்து தான்
வந்து சேர சொல்ல மாட்டியா?

"ச்சை எங்க போனாலும் இந்த மாமன்ங்கர வார்த்தை மட்டும் என்னைய விடவே விடாத...அவன் படுத்துறது போதலைனு இந்த பாட்டு வேற" என்று புலம்பியவரே அடுத்த பாடலை மாற்ற.... அவள் அருகில் ஒரு உருவம் வந்து அமர்ந்தது..

அதைக் கண்டுக் கொள்ளாமல் பாட்டைக் கேட்டாள்.

ஏரிக்கரை பூங்காற்றே
நீ போற வழி தென் கிழக்கோ
தென் கிழக்கு வாசமல்லி
என்னை தேடி வர தூது
சொல்லு

"அரு.... அரு.....ஏய் அரு....."என்று கத்தியவன் அவளிடம் அசைவு இல்லை என்றதும் காதில் இருந்த ஹெட்போனை பிடுங்கிய "அரு..." என்றான் சத்தமாக.

"சொல்லு கேக்குது" என்றவளின் முகம் வேந்தன் பேசிய போது இறுகியதை விட இப்போது மேலும் இறுகியிருந்தது.

"கோவமா என்மேல...?"

"எனக்கு என்ன கோவம்...?" என்றவள் , " நீ பேசறதை என் மாமா பார்த்தா நான் செத்தேன், தெரியும்ல அவரைப் பத்தி" என்றாள்.. அவள் முகத்தில் அப்படி ஒரு இறுக்கம்.

"இங்கப் பாரு அரு... நான் உனக்காக தான் இந்த ஊருக்கே வந்தேன்...நீ வர சொல்லலைன்னா ஹாஸ்டலே கதினு இருந்திருப்பேன்... வர சொல்லிட்டு பேசமாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்.? "

"அதுக்குனு இங்க வந்து எல்லோரும் பார்க்க பேசுவியா...? என்னோட மாமனை பத்தி தெரியும் தானே , அவனுக்கு உடம்பு பூராவும் கண்ணு, உன்னோட பேசறதை பார்த்துட்டாலோ இல்லை யாராவது பார்த்துட்டு போய் சொன்னாளோ அவ்வளவு தான் உரிச்சி உப்புக்கண்டம் போட்டுடுவாரு.,"

"சும்மா மாமா புராணம் பாடாத அரு நான் பேசணும் நாளைக்கு நைட் கோவிலுக்கு வா .."

"முடியாது,ஏற்கனவே வீட்டுல எப்போ பாரு என்னைய குறை சொல்லிட்டே சுத்துறாரு இதுல இதுவும் தெரிஞ்சா... சொல்லவே வேண்டாம் வெட்டி பொலி போட்டுருவார்..."

"எனக்கு புரியுதுடி..."

"என்னடா புரியுது? எவ்வளவு தடவை சொன்னாலும் இந்த மரமண்டையில ஏறுனா தானே... டி போட்டு போசாத, எங்கையும் பார்த்தா பேசாத, தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதனு, எத்தனை வாட்டி சொல்றது போனுனு ஒன்னு இருக்குல்ல எதா இருந்தாலும் அதுல சொல்ல வேண்டியது தானே ... இதுல புரியுதாமா...போ சரவணா" என்றாள் சலிப்பாக..

"அப்போ எப்போதாண்டி பார்க்கறது..."

"அதுதான் காலேஜ்ல பார்த்துக்கறோம்ல... அப்புறம் என்ன..?முதல நீ டீ ஆத்துறதை நிறுத்து... "

"சரிம்மா தாயே டீ போடல... ஒரு வாரம் லீவுல இன்னிக்கு தான் வீட்டை விட்டு வந்துருக்கீங்க... இனி எப்ப வருவீங்களோ...என்னால அவ்வளவு நாள் பார்க்காமலாம் இருக்க முடியாது அரும்மா, ப்ளீஸ் புரிஞ்சிக்கோயேன்" என்று கெஞ்சியவனின் காதலை கண்டு எப்போதும் போல் இப்போதும் ஆச்சரியப்பட்டாள்...

"உன்னோட லவ் மூட் எல்லாம் ஓகே தான் சரவணா ...ஆனால் இது நம்ப ஊரு... யாராவது நம்பலை சேர்த்து வெச்சிப் பார்த்துட்டா அடுத்த நிமிஷம் பஞ்சாயத்தை கூட்டிடுவாங்க... ப்ளீஸ்டா இங்கிருந்து ஓடிடு ..முதல.."

"நாளைக்கு நைட் 7 மணிக்கு நம்ப கோவில் பவுர்ணமி பூஜைக்கு வர... அங்க வெச்சி நம்ப பார்த்துக்கலாம்.."

"முடியாதுடா.... வேந்தன் மாமா கண்ணுல விளக்கெண்ணெயை ஊத்திட்டு பார்க்கரார்... எங்கையும் நகரமுடியலை சொன்னா கேளு ப்ளீஸ்.."

"அதுலாம் தெரியாது அரு சொன்னது சொன்னது தான்... வரேன்" என்று அங்கிருந்து நகர்ந்துவனை ஆயாசமாய் பார்த்தாள். இந்த பாலாப் போன காதல் தான் எத்தனை இம்சைகளை கொடுக்கிறது என்று...

காதில் மீண்டும் ஹெட்போனை மாட்டிக் கொண்டு பாட்டுக்கு கேக்க ஆரம்பித்து விட்டாள்.

வேந்தன், அருகில் இருந்த அரிசி ஆலைக்கு வேலை சமந்தமாக சென்று விட்டு பண்ணைக்கு செல்ல... அங்கு அப்போது தான் வீட்டில் இருந்து வந்து அனைவரும் இறங்கிக் கொண்டிருந்தனர்.இவனைப் பார்த்ததும்...

"வேந்தா அருவி எங்க?" என்று முதலில் கேட்டது தாத்தா சேனாதிபதி தான்.. அவருக்கு எத்தனை பேரக் குழந்தைகள் இருந்தாலும் எப்போதுமே அருவி ஸ்பெஷல் தான்..

தந்தையை இழந்த சோகம் அந்த பிஞ்சு வயதிலையே அவளின் கண்ணில் கண்டவர் குடும்பம் சிதையக் கூடாது என்று ஒரே வீட்டில் பொண்ணும் மாப்பிள்ளையையும் எடுத்தவருக்கு அவர்களுக்கு ஏதாவது குறை இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும் என்று தோன்றவில்லை.

முதல் பையன் நிரூபன் பிறந்து மூன்று வருடம் கழித்து தான் கேசவனுக்கு இதய நோய் இருப்பதே தெரிந்தது...என்ன செய்வதன்று தெரியாமல் எதுவும் செய்ய முடியாமல் கையை பிசைந்தனர் பெரியவர்கள் சேனாதிபதியோ கேசவனை அழைத்துக் கொண்டு மருத்துவமனை மருத்துவமனையாக அலைந்தார்... பலனோ பூஜியமாக இருக்க, அதற்குள் நிர்மலா இரண்டாம் குழந்தை உண்டாக இதற்குள் மேல் என்ன செய்வது நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட்டனர்.அதன்விளைவு வாழும் வயதில் சீக்கிரமே இந்த மண்ணுலகை விட்டு சென்று விட்டார் கேசவன்.

தாத்தா கேட்ட கேள்வியில் அவரையும் கையில் இருந்த கடிகாரத்தையும் மாறி மாறிப் பார்த்தவன்..."வந்தரேன் தாத்தா" என்று மீண்டும் தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு அருவி சென்ற வழியில் சென்றான்.

"வேந்தன் எங்கப்பா போறான்?" என்ற கிருபாகரனிடம்.. "நான் ஒரு வேலை சொல்லிருந்தேன் கிருபா ,அதான் அங்க போறான்.. நீ போய் மத்த வேலையைப் பாரு போ" என்றவருக்கு புரிந்து போனது.. பேரன் எதையோ சொல்லி இருக்க வேண்டும் அதில் பேத்தி கோவப்பட்டு நடந்து வருகிறேன் என சொல்லிருக்க வேண்டும் என்று .

சரி இருவரும் வந்ததும் பேசிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டார்.

அருவியின் எண்ணிற்கு மாறி மாறி அழைத்தான் வேந்தன்..ஆனால் அவளோ அதைப் பார்த்துவிட்டு "இப்போ மட்டும் அக்கறை ஒழுகுதா போடா... நீ எத்தனை தடவை கூப்பிட்டாலும் நான் எடுக்க மாட்டேன்" என்று பிடிவாதமாக பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

"இவளை" என்று பற்களை கடித்தவன்... "ஒழுங்கா போனை எடு,இல்லை நீ இருக்கற இடம் தேடி வந்து சாவடிச்சிருவேன்" என்று குறுச்செய்தியை அனுப்பினான்..

அது அருவியின் அலைபேசியில் காட்ட.. "எனக்கு தான் கொழுப்பு கூடி போச்சில மாமா அதான் கொழுப்பை குறைச்சிட்டு இருக்கேன்.." என்று பதிலுக்கு அனுப்பி வைத்தவள் வேந்தன் திரும்ப திரும்ப அழைத்தும் அலைபேசியை எடுக்கவில்லை.

"அருவி விளையாடாத...ஒழுங்கா போனை எடு.."

"நான் எதுக்கு மாமா உங்ககிட்ட விளையாட போறேன் நீங்க யாரு? இந்த ஜில்லாவுக்கே வேந்தனா அவ்வளவு பயம்,நான் போய் உங்ககிட்ட விளையாட முடியுமா?" என்று பதில் அனுப்பியவளை... காரை ஓட்டிக் கொண்டே தேடி வந்த வேந்தன் கண்டுக்கொண்டான்.

அவள் அருகில் காரை வேகமாக கொண்டு போய் நிறுத்தியவன்..

"என்னடி நினைச்சிட்டு இருக்க மனசுல..?

"சத்தியமா உங்களை இல்லை"

"வாய்க் கூடிப் போயிடுச்சிடி
ஒழுங்கா வந்து சேர மாட்டியோ" என்றவனுக்கு ஏகத்துக்கும் கோவம் வந்தது..

ஊரில் அனைவரும் வேந்தனை கண்டால் மரியாதையாகவும், நாலு அடி தள்ளி நின்றும் பேசும் போது... அருவி மட்டும் அவனை மதிப்பதில்லையே என்ற கோவம் வேந்தனுக்கு எப்போதுமே உண்டு அதனாலயே அவளிடம் எப்போதும் கோவ முகத்தை காட்டுவான் அப்படியாவது பயப்படுவாள் என்று. ஆனால் அது எதுவும் அருவியிடம் பலிக்கவில்லை.

"நீங்க தானே மாமா நடந்து வந்தாலாவது என்னோட கொழுப்பு குறையும்னு சொன்னிங்க... இப்போ என்ன நீங்களே வந்துட்டீங்க, என்னோட கொழுப்பு குறைய வேண்டாமா?" என்று உதடு சொன்னாலும் 'உன்னோட வீரத்தைலா இந்த ஊருக்குள்ள வெச்சிக்கோ என்கிட்ட வெச்சிக்காத' என்று மனம் துள்ள ஆரம்பித்தது.

"போய் கார்ல ஏறு" என்றான் அழுத்தமாக.

"இல்ல வேண்டாம் மாமா.. நான் நடந்தே பண்ணைக்கு போய்க்கரேன்" என்று எழுந்து நடக்கப் போனவளின் கையைப் பிடித்து இழுக்க... வேந்தன் இழுத்த வேகத்தில் அவன் மீது விழப் போனவளை தள்ளி நின்று கீழே விழ வைத்தான்.

கீழே விழுந்தவள் "மாமா.........." என்று பற்களை கடித்தவாறு கத்தினாள்

"ஒழுங்கா எழுந்து வா.."

"நான் வரல.கார்ல முன்னாடியும் உக்காரக்கூடாது... பின்னாடி போய் உக்கார்ந்தா நான் என்ன உனக்கு டிரைவரானு கேப்பிங்க... அப்புறம் என்ன உங்க தலைமேலையா உக்கார்ந்துட்டு வர முடியும்" என்று கோபமாக கேக்க.
"பின்னாடி போய் ஏறுடி" என்று அதட்டினான்.

"அப்போவும் முன்னாடி உக்காரவுடறானா பாரு... சரியான சீன்னு... நீ விடலனா என்னடா நான் உன் பக்கத்துல உக்கார்ந்துட்டு வர நாள் வரும் அப்போ இருக்குடி உனக்கு" என்று முனைவியவளை..

"இன்னும் ஏறலையா?" என்று அதட்டினான்.

"இதோ ...."என்றவள் அமைதியாக ஏறி அமர்ந்துக் கொண்டு போனில் நோண்டிக் கொண்டு வந்தாள்
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Saroja

Well-Known Member
என்ன இது இப்படி இருக்காங்க
இவ லவ் பண்றாளா
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top