மாயவனின் அணங்கிவள் -14

Advertisement

Priyamehan

Well-Known Member
ஹாய் பிரண்ட்ஸ் இங்க கதை போடும் போது இவ்வளவு ஆதரவை எதிர்பார்க்கல ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு... ஆதரவு கொடுத்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி இதே ஆதரவை கடைசி வரைக்கும் எதிர்பார்க்கரேன்..

"எல்லோரும் வந்தாச்சில காரை எடு கார்த்தி" என்று காருக்கு வெளியே நின்ற கார்த்திக்கிடம் வேந்தன் சொல்ல...

கார்த்திக்கின் அருகே நின்றுக் கொண்டிருந்த அருவி... "டேய் அவனை எடுக்க சொல்லுடா நீ என்னோட இரு காக்கா ப்ளீஸ்" என்றாள் கெஞ்சலாக..

அருவி சாதாரணமாக சொன்னாளே முதல் ஆளாக ஓடிச் சென்று செய்பவன் கெஞ்சலாக சொன்னால் செய்யாமல் இருப்பானா என்ன...

"அதை அவர்கிட்ட சொல்ல முடியுமா அரு?.. வரும் போது மாத்திக்கலாம் நீயும் நானும் வேணும்னா வண்டியில வந்துட்டு அவன்களை காருக்கு தாட்டி விட்டுருவோம் இப்போ மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ ப்ளீஸ் என்று அவனும் பதிலுக்கு கண்களால் கெஞ்சினான்.

"நீங்க பேசி முடிச்சிட்டா காரை எடுக்க முடியுமா? இல்ல நான்தான் காரை எடுக்கணுமா?" என்று வேந்தன் அதிகாரமாக கேட்டான்.

"நான் எடுக்கறேன் அண்ணா" என்று கார்த்திக் ஓடிச் சென்று ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துக் கொள்ள

அவனை திட்டிக் கொண்டே பின் இருக்கையில் அமர்ந்த அருவி தேவாவை என்ன ஏது என்றுக் கூட கேட்டுக்கொள்ளவில்லை...

ரித்துவிடம் மட்டும் "இந்த டிரஸ் உனக்கு நல்லா இருக்கு ரித்து" என்றாள் வாஞ்சையாக.

அருவிக்கு தெரியும் அவளாக சென்று பேசினால் எவ்வளவு கோவத்தில் இருந்தாலும் அதை தூக்கிப் போட்டுவிட்டு ரித்து பேசிவிடுவாள் என்று அதுப்போல் தான் இப்போதும் நடந்தது.

"இந்த டிரஸ் நீயும் நானும் தீபாவளிக்கு ஒரே மாதிரி எடுக்கணும் ஆசைப்பட்டு எடுத்தோமே அதுதான் நியாபகம் இருக்கா அரு"என்று சந்தோசமா உடையைப் பார்த்து ரித்து கேக்க...

"ம்ம் இருக்கு, அதான் அழகா இருக்கா செலக்ட் பண்ணது யாரு அருவி ஆச்சே" என்று அருவி இல்லாத காலரை தூக்கி விட்டு கெத்து காட்ட.. அதில் கடுப்பானது தேவா தான்.

ரித்துவை தன் பக்கம் பேச்சுக்கு இழுத்து அருவிடம் பேசாதவாறு பார்த்துக் கொண்டாள்.

அருவி அதைப் பெரிதாக எடுத்துக்கொண்டால் தானே .....சரவணனுக்கு மெசேஜ் மூலம், தான் கோவிலுக்கு கிளம்பி விட்டதாக செய்தி அனுப்பினாள்.

"நானும் கிளம்பிட்டேன்" என்று பதில் வர முகத்தில் புன்னகை தானாக வந்து அமர்ந்துக் கொண்டது அருவிக்கு.

சிலரை நினைத்தால் ஏன் என்று தெரியாமலே மனதில் சந்தோசம் தோன்றும் அதேபோல் சிலரைப் பார்த்தால் ஏன் என்றே தெரியாமல் எரிச்சல் தோன்றும் அருவிக்கு சரவணனை நினைத்தால் சந்தோசமும், வேந்தனை நினைத்தால் எரிச்சலும் தோன்றியது.

இதைப் பற்றியெல்லாம் கவலைக் கொள்ளாமல் அலைபேசியில் பேசியவாரு வந்தான் வேந்தன்.

கார் கோவிலை அடைந்ததும் எல்லோரும் இறங்கிக் கொள்ள அருவி மட்டும் காரிலையே இருந்தாள்.

"நீ இறங்கலையா?" என்று கார்த்திக் கேக்க

"அவங்க போகட்டும், நீ கார் பார்க் பண்ணப் போவில உன்னோட நானும் வரேன்" என்று சொல்லிவிட

வேந்தன் நிற்காமல் கோவிலுக்குள் சென்றுவிட்டான்.

"நீ சொன்னதுல அண்ணனுக்கு கோவம் வந்துடுச்சினு நினைக்கறேன் ஏன் அரு எப்போ பாரு அவருக்கு எதிராவே எல்லாமே பண்ணற"

"அவருக்கு எதிரா நான் எதுவும் பண்றதில்ல, நான் பண்ற எல்லாமே தான் அவருக்கு புடிக்காம போவுது அதுக்கு நான் என்ன பண்ணட்டும் ரூல்ஸ் ராமனுஜத்துக்கெல்லாம் எ
அந்த தேவா தான் செட் ஆவா..அதைவிடு,

நீ காரை ரொம்ப தூரமா நிறுத்து... அதுக்காகவாது நடந்து வந்து கார் ஏறட்டும்... காலையில அவ்வளவு வெயில என்னைய களை எடுக்க விட்டான்லா உன் நொண்ண" என்றாள்.

கார்த்திக் சிரித்தவாரே அருவி சொன்னதுப் போல் காரை தொலைவில் நிறுத்தினான்.

"வா போலாம்..."

"நீ போ கார்த்தி... நான் கொஞ்ச நேரம் கார்ல இருந்துட்டு வரேன்" என்க

"இந்த வேலையே வேண்டாம் உள்ளேப் போனதும் அருவி எங்க? எங்கன்னு? என்னைய பிச்சி தின்னுடுவாங்க, உள்ளே வந்துட்டு எங்கையோ போ" என்று அருவியின் கைப் பிடித்து அழைக்க வேறு வழியின்றி அவனுடன் சென்றாள்.

அனைவரும் வந்ததும் பூஜையை ஆரம்பித்தனர் கோவிலில் கூட்டம் அலைமோதியது... எப்போதும் வர கூட்டத்தை விட இன்று கூட்டம் அதிகமாக இருந்தது.

அருவி நிர்மலாவின் பக்கத்தில் நின்றுக் கொண்டாள்..

கோவில் மரியாதையாக மாலைகளை கிருபாகரன் மாலதி தம்பதிகளிடம் குருக்கள் வழங்க..

"அப்பா அம்மா இருக்கற வரைக்கும் அவங்களுக்கு தான் அந்த மரியாதை, அவங்ககிட்ட குடுங்க" என்று மறுத்துவிட்டார் கிருபாகரன்

வேந்தன் அதைப் புன்னகையுடன் பார்க்க அவர்களுக்கு பின் வீட்டின் தலைமகனான வேந்தனுக்கு தான் இந்த மரியாதை கிடைக்கும்,

வேந்தனை திருமணம் செய்துக் கொண்டால் நாளைக்கு எனக்கும் அந்த மரியாதை கிடைக்கும் என்ற எண்ணம் தோன்றியதும் வேந்தனின் அருகில் நெருங்கி நின்றாள் தேவா .

சாமி கும்பிட்டதும் அருவி அனைவரின் கண்ணிலும் மண்ணை தூவிவிட்டு குளத்தின் அருகில் சென்று விட்டாள் அருவி...அங்கே அவளுக்காக காத்திருந்தான் சரவணன்.

"ஹேய் அரு இந்த தாவணில அப்படியே தேவதை மாதிரி இருக்க.." என்று சரவணன் சிலாகிக்க...

"போதும் போது ஐஸ் வெச்சது இங்க நின்னா யாராவது பார்த்துடுவாங்க வா உள்ளே போய் பேசலாம் .." என்று சரவணனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு குளத்தின் படிக்கட்டிற்கு சென்றாள்..

அருவின் பின் சென்ற சரவணன் குளத்தில் மேல் படியில் அமர்ந்துக் கொள்ள ... சரவணனுக்கு கீழ் படியில் அவனை ஒட்டி அமர்ந்துக் கொண்டாள் அருவி.

"சொல்லு என்ன பேசணும்னு சொன்ன?" என்ற கேள்வி வந்த மறுநொடி

அடக்கி வைத்த அழுகை பீறிட்டு வந்தது அருவிக்கு

"ஏய் அரு எதுக்குடி அழற? நீ அவ்வளவு சீக்கிரம் அழ மாட்டியே என்னாச்சி? ஏதாவது பிரச்சனையா?" என்று அருவியின் கண்ணீர் கண்டு பதறிவிட்டான் சரவணன்.

நடந்த அனைத்துயும் வேக வேகமாக சொன்னவள் "என்னால முடியலடா சரவணனா... மூச்சு முற்ற மாதிரி இருக்கு அன்பா சொன்னா எவ்வளவு வேலைனாலும் செய்யலாம், ஆனா அவன் என்னய மட்டும் அதிகாரம் பண்ணி வேலை வாங்கப் பார்க்கறான். என்னைய மனுஷியாக் கூட மதிக்க மாட்டிகிறான் அவன் பண்றதுலாம் கடுப்பாகுது...அப்படி என்னடா தப்பு செஞ்சேன்?"

அரு அவர் சொல்றதுலையும் ஒரு நியாயம் இருக்குல்ல நீ படிக்கற படிப்பை வேலையா செஞ்சுக் கத்துக்கறது நல்லது தானே"

"நானும் அதை தப்பு சொல்லல, அதை அன்பா சொல்லலாம்ல... இன்னைக்கு வந்தவளை தேவா தேவானு பேர் சொல்லி அவர் பக்கத்துல உக்கார வெச்சி அழைச்சிட்டு போறாரு, ஆனா இங்கையே இருக்கற என்னோட பேரை ஒரு தடவை கூட சொன்னதில்ல, ஏதோ ஆடு மாடை கூப்பிடற மாதிரி ஏய் வா,போ,அது,இதுனு இப்படி தான் கூப்பிடுவாங்களா சொல்லு..?"

"நான் ஒன்னு கேக்கறேன் பதில் சொல்லு"

"ம்ம்"

"உன்மேல இவ்வளவு பேர் பாசம் வெச்சிருக்காங்க உன்னோட மாமா ரெண்டு பேரும் அரும்மா அரும்மானு உயிரையே வுடறாங்க... அத்தைங்க ரெண்டுப் பேரும் நீ வந்தா தான் வீடு வீடு மாதிரி இருக்குனு அவங்க பிள்ளையை கூட சொல்லாம உன்னைய தான் கொஞ்சறாங்க.. அப்புறம் இனியனும் கார்த்தியும் உன்னை சீண்டி எப்பவும் உன்னைய சிரிச்ச முகமாக வெச்சிக்கணும் ஆசைப்படறாங்க, இவ்வளவு பேரு உன்னைய தாங்கும் போது அவர் ஒருத்தரோட உதாசினம் உனக்குள்ள ஏன் இவ்வளவு பெரிய பாதிப்பை உண்டு பண்ணுது... நீ ஏன் கிடைச்ச அன்பை விட்டுட்டு கிடைக்காத ஒன்னுக்காக ஆசைப்படற..

அவங்களை விடு என்னைய எடுத்துக்கோ நீ சொன்ன வார்த்தைக்காக தான் ஊருக்கே வராதவன் ஊருக்கு வந்துருக்கேன், நான் உன்மேல உயிரையே வெச்சிருக்கேன்னு தெரியும்ல இதுலாம் உன் கண்ணுக்கு தெரியலையா ..? சொல்லு.."

"அப்படி இல்லடா எவ்வளவு அன்பு கிடைச்சாலும் ஒரு உதாசினம் நம்ப மனசை பாதிச்சுடும்ல.." என்ற அருவியை பார்த்தவன் "அது என்னவோ உண்மை தான் அரு" என்றான் சோகமாக..

"ஏய் ச்சை நான் வேற கண்டதையும் நியாபகப்படுத்திட்டனா ..." என்று தன் தலையில் அடித்துக் கொண்டவளின் கையைப் பிடித்தவன் "அதுலாம் ஒன்னுமில்ல நீ இருக்கும் போது எனக்கு என்ன? வேந்தனைப் பத்தி யோசிக்காம பீரியா விடு பாப்பா" என்றான்.

பாப்பா என்றதும் அருவியின் கண்கள் மீண்டும் கலங்க
"சரவணா நான் உன் கால் மேல சாஞ்சிகிட்டுமா?"என்றாள் கரகரப்பான குரலில்...

"ம்ம்" என்றவன் அருவியின் தலையை தன் காலின் மீது சாய்த்துக் கொண்டான்.

இவர்களின் கெட்ட நேரமோ என்னவோ வேந்தனுடன், குளத்திற்கு வந்த தேவாவும், ரித்துவும் இவர்களின் நிலையைப் பார்த்துவிட.
அவசர அவசரமாக தேவா யாருக்கும் தெரியாமல் அருவியும் சரவணனனும் இருந்த நிலையை போட்டோ எடுத்துக் கொண்டாள்.

வேந்தனோ "அருவி" என்று ஆங்காரமாக கத்தினான்.

வேந்தனின் குரலில் விறுக்கென்று எழுந்தவள் சரவணனை விட்டு வேகமாக தள்ளி நின்றாள்.

"என்ன பண்ணிட்டு இருக்க அருவி... கோவிலுக்கு சாமி கும்பிட வந்தியா? இல்லை" என்று ரித்து ஆத்திரத்தில் வார்த்தைகளை விட்டாள்.

"ரித்து அமைதியா இரு..." என்ற வேந்தனின் கண்கள் கோவத்தில் ரத்தமாக சிவந்திருந்தது,அவன் குரலில் அடக்கப்பட்ட கோவத்தின் அளவு தெரிந்து அருவியை குலை நடுங்க செய்தது.ஏதாவது பேசிவிடுவோமோ என்று கை விரல்களை மடக்கி தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டிருந்தான்.

"வீட்டுக்கு வா" என்று மட்டும் அருவியிடம் சொன்னவன் முன்னால் நடக்கச் qசெல்ல

"பயப்படாத அரு...நான் இருக்கேன் " என்று சரவணன் அருவிக்கு ஆறுதல் சொல்லவும், சட்டென்று திரும்பி சரவணனை பார்த்து முறைத்தான் வேந்தன்.

"அமைதியா இருடா" என அருவி மெதுவாக சரவணனிடம் வாய் அசைத்தாள்.

இருவரையும் பார்த்து விட்டு வேக வேகமா அங்கிருந்து சென்று விட்டான் வேந்தன்.

"நீ வீட்டுக்கு போ சரவணா... உன்னைய ஏதாவது சொல்லிடுவாங்களோனு பயமா இருக்கு நீ போ" என்று அவனை அங்கிருந்து அனுப்ப முயற்சிக்க

"என்னைய பத்தி கவலைப்படாத" என்றவன் அவங்க என்ன கேட்டாலும் சொல்லிடாத அரு ப்ளீஸ்" என்றான்.

"ம்ம் சொல்ல மாட்டேன்" என்று முன்னாள் நடந்தாள்.

மனம் பயத்தில் நடுங்கியது "ஒரே நாளில் எத்தனை பிரச்சனை... இது மட்டும் அம்மாவுக்கு தெரிஞ்சா என்னாகுமோ" என்று பதறியப்படியே கோவிலுக்குள் செல்ல...

அங்கியிருந்த அவளது குடும்பம் கோவிலை விட்டு வெளியே செல்ல தயாராகிக் கொண்டிருந்தது.

இவளைக் கண்டதும் கார்த்திக் இவளின் அருகில் வந்தவன் "என்ன அரு எங்க போனாலும் ஏதாவது பிரச்சனை பண்ணி வைக்கற இப்போ என்ன பண்ண?" என்றான் பதட்டத்துடன்.

"ஏன் உங்க நொண்ண சொல்லலையா?'

"இல்லையே ரித்து தான் எதோ சொல்ல வந்தா அதுக்குள்ள அண்ணா எல்லோரும் வீட்டுக்கு கிளம்புங்கனு கத்திட்டார்.. அதனால அவசர அவசரமாக எல்லோரும் கிளம்பிட்டாங்க."

"கார்த்தி ஒரு ஹெல்ப் பண்ணுடா வரும் போது சொன்ன மாதிரி வண்டியில போக ஏற்பாடு பண்ணுடா"

"அதுக்கு வண்டி இருக்கனும்ல சீக்கிரம் போனா அப்பா கார்லையாவது ஏறிக்கலாம் வா" என்று கார்த்திக் சொல்ல இருவரும் அவசர அவசரமாக காரின் அருகில் சென்றனர்.

எல்லோரும் அவரவர் காரில் ஏற... அருவி வந்த காரை விட்டுவிட்டு கிருபாகரனின் காரில் ஏறினாள்.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top