மாயவனின் அணங்கிவள் -11

Advertisement

Priyamehan

Well-Known Member
மதியம் சாப்பிட கிளம்பிய இனியன்... "கார்த்தி வண்டியை தோட்டத்துக்கு விடு, அருவை கூட கூட்டிட்டு போயிடுவோம்..."

"அவ இவ்வளவு நேரம் தோட்டத்துல இருப்பானு நினைக்கறியா?, சோம்பேறி இந்நேரம் விட்டாப் போதும் ஓடிருப்பா"
"
இல்லாம எங்க போவா , எப்போ பாரு அவளை ஏதாவது சொல்லிட்டு... நீ போடா... பாவம் அவ காலையிலையே சாப்பிடல சீக்கிரம் போ" என்று கார்த்தியை அவசரப்படுத்தினான்.

சரவணனிடம் பேசி முடித்தவள் மீண்டும் களை எடுக்கப் போகும் போது கார்த்தியின் கார் தோட்டத்தின் வண்டி தடத்தில் நுழைந்தது.

இனியன் காரை விட்டு இறங்கியவன், " நீ வண்டியை ரிவைஸ் எடுத்து வை நான் அவளை கூட்டிட்டு வரேன்" என்றான் கார்த்திக்கிடம்..

கார்த்தியும் காரை திருப்பி நிறுத்து வேலையைப் பார்த்தான்...

இனியன் அருவியிடம் வந்தவன், "அரு கிளம்பு போலாம்" என்க..

"டேய் இனி.... அதுக்குள்ளவா இப்போதானே நான் வேலையே செய்ய ஆரம்பிச்சிருக்கேன்."

"ஒரே நாள்ல எல்லா வேலையும் கத்துக்க முடியாது ... கிளம்பி வா போலாம், காலையில்லையே நீ சாப்பிடல" என்று சொல்ல சுமதி இனியனை தலை நிமிர்ந்து கூடப்பார்க்கவில்லை.

"சரி அப்போ நான் போய்ட்டு வரட்டுமா? நாளைக்கும் எனக்கு சேர்த்தி சாப்பாடு கொண்டு வாங்க ... சுமி நீ புளிக்குழம்பு கொண்டு வா" என்றவள் "நான் கிளம்பறேன்" என்று அனைவருக்கும் டாட்டா காட்ட...

"அதுலாம் கொண்டு வருவாங்க நீ வா" என்று அவளது கையைப் பிடித்து இழுத்துச் சென்றான் இனியன்.

"டேய் கையை விடுடா இப்போ எதுக்கு இவ்வளவு அவசரமா இழுத்துட்டு வர..."

"நீ இவங்களோட சேர்ந்து சாப்பிட்டியா அரு?"

"ஆமா ஏன்?"

"அண்ணாவுக்கும் தாத்தாவுக்கு தெரிஞ்சா என்ன சொல்லுவாங்களோ தெரியல, அங்க வந்து எதையும் உளறி வைக்காம சாப்பிட சொன்னா எதையாவது கொஞ்சம் சாப்பிட்டுட்டு போய்டு.இல்லனா பிரச்சனை பெருசாகிடும்" என்று சொல்லி தான் அழைத்து சென்றான்.

"ஏய் நில்லு இப்போ நான் என்ன பண்ணேன்னு இப்படி பதற, அவங்களோட சேர்ந்து வேலை செய்யலாம் ஆனால் அவங்க கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிடக் கூடாதா.?"

"நான் சாப்பிடக் கூடாதுனு சொல்லல, ஆனா தாத்தா தான் கவுரவம் அது இதுனு" என்று இழுக்க

"அதுலாம் நான் பார்த்துக்கறேன்" என்று இனியனை பின்னால் ஏற சொன்னவள் கார்த்திக் அருகில் அமர்ந்துக் கொண்டாள்.

"என்ன அரு பஞ்சாயத்து பண்ணி வெச்ச...?" என்றான் கார்த்திக் புன்னகையுடன்.

"நான் எது பண்ணாலும் உங்களுக்கு பஞ்சாயத்து தான், வாயை மூடிட்டு காரை ஓட்டு,இல்லைனா புடிச்சி வெளியே தள்ளிடுவேன் ஜாக்கிரதை" என்றவள் ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்க்க..

அவளிடம் எதுவும் கேக்க வேண்டாம் என்று கண்ணாடி வழியாக கண் ஜாடை காட்டினான் இனியன்.

அவர்கள் கார் கிளம்பியதும் வேந்தன் கார் வந்து நின்றது அருவியை அழைத்துச் செல்ல...

வேந்தன் காரை விட்டு இறங்கி கண்களால் அவளை தேட... அவள் இல்லை என்றது மனதிற்குள் சிறு கோவம் உண்டானது .

"வேலையை கத்துக்க சொன்னா... நான் இந்த பக்கம் போனதும் அவ அந்த பக்கம் ஓடிட்டாளா... ஒரு வேலைக்கும் உதவாத சோம்பேறி" என்று முனவியன், "அருவி வீட்டுக்கு போய்ட்டாளா? " என்றான் அங்கிருந்தவர்களிடம்

"தம்பி அருவி அம்மிணியை சின்ன தம்பி அழைச்சிட்டு போய்ட்டாரே இப்போதான் போறாங்க வண்டி ரோடு தான் திரும்பியிருக்கும்" என்ற கருப்பாயி பாட்டியிடம்

"யாரு இனியனா?" என்று கேக்க

"ஆமாங்க தம்பி" என்றார் பாட்டி.

"கொண்டு வந்து விட தெரிஞ்ச எனக்கு கூட்டிட்டு வர தெரியாதா? இவனுக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலையெல்லாம்" என்று எரிந்து விழுந்தவாரே காரை எடுத்தான்...

கார்த்திக்கின் காரும் வேந்தனின் காரும் அடுத்து அடுத்து வீட்டினுள் நுழைந்தது. அவர்களை விரட்டிப் பிடிக்கவே காரை வேகமாக ஓடிக் கொண்டு வந்தான் வேந்தன் கடைசியில் வீட்டில் தான் கார்த்திக்கின் காரைப் பிடிக்க முடிந்தது.

காரை விட்டு வேகமாக இறங்கிய வேந்தன் , கார்த்திக்கின் காரின் முன்பு வருவதற்குள் முன் பக்கம் இருந்த அருவி கீழே இறங்கினாள்.

அவளை முறைத்துப் பார்த்தவன் "நான் வரதுக்குள்ள உனக்கு என்ன அவசரம் ....? கொண்டுப் போய் விட்டவனுக்கு கூட்டிட்டு வர தெரியாதா?" என்றான் எரிச்சலாக.

அவனுக்கு பின் வந்த தேவாவோ "அவ யார்கூட வந்தா என்ன மாமா? அதான் வந்துட்டால்ல வாங்க உள்ளப் போலாம்" என்று வேந்தனின் முழங்கையைப் பிடித்துக்கொண்டாள்.

அவள் கையையும் வேந்தனையும் மாறி மாறிப் பார்த்த அருவிக்கு முன்பு ஒருநாள் நடந்தது நினைவுக்கு வந்து இம்சை செய்தது.

அழகான மழைக்காலம் அது ... எப்போதும் போல் மழையில் ஆடிவிட்டு யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு வந்தவளை வெளியே நிற்க வைத்து பல டோஸ்களை வாரி வழங்கிக் கொண்டிருந்தான் வேந்தன்.

ஒருக் கட்டத்திற்கு மேல் முடியாமல், "சரி மாமா இனி போக மாட்டேன் விடுங்க" என்று அருவி கெஞ்சலான முகத்துடன் இறங்கி வர... "வந்து தொலை" என்று வேந்தன் வீட்டிற்கு முன்னால் செல்ல .. அவன் பின்னால் வந்த அருவிக்கு ஈரத்தில்
கால் வழுக்கவும் விழாமல் இருக்க வேந்தனின் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள்.

அவளை திரும்பி அனல் பார்வை பார்த்தவன் அவள் கீழே விழாமல் பிடித்து நேராக நிறுத்தி "எவ்வளவு தைரியம் இருந்தா என் கையை பிடிப்ப..? என்னைடத் தொட உனக்கு யாரு பெர்மிஸ்ஸன் கொடுத்தா?" என்று கொஞ்சம் நேரமானாலும் சாமியாடிவிட்டு தான் அடங்கினான் வேந்தன்.

"கீழே விழாம இருக்கத் தானே கையைப் பிடிச்சேன் என்னமோ இவனைக் கட்டி பிடிச்சி ரொமான்ஸ் பண்ண கையை பிடிச்ச மாதிரி பேசறான்" என்று நினைக்கும் போதே அருவிக்கு மனம் நைந்து போனது..அதை இன்று நினைத்துப் பார்த்தவளுக்கு விரக்தி புன்னகை தான் தோன்றியது...

அந்த வேந்தன் பேசியதற்கும், இன்று அருவிடம் நடந்துக் கொள்வதற்கும் அவளாகவே ஒருக்காரணம் கருதிக் கொண்டாள்.

கண்ணதாசன் அன்றே ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது

"உண்மை தானே நாங்க இருக்கற வேண்டிய இடத்துல இருந்துருந்தா... இந்த மாதிரிலாம் இவன் என்னை நடத்துவானா,? " என்று நினைத்தவள் உள்ளே செல்ல

"ஏன் அருவி காலையில சொல்லாம கூடப் போய்ட்ட?" என்று மாலதியும் அமுதாவும் கேக்க... நிர்மலா அமைதியாக அவர்கள் அருகில் நின்றார்.

"சொல்ற நிலைமையில நானும் இல்லை அதை கேக்கற நிலைமையில நீங்களும் இல்ல" என்று சொல்லிக் கொண்டே மேலேப் போக..

"சாப்பிட்டு போ அரும்மா நேரம் ஆயிடுச்சில" என்றார் சேதுபதி.

வேந்தன் மீது இருந்த கடுப்பில் இனியன் சொன்னது எதுவும் அருவிக்கு நினைவில் இல்லை...அதனால். "நான் சாப்பிட்டேன் தாத்தா நீங்க சாப்பிடுங்க" என்று சொல்லியேவிட்டாள்.

அதில் இனியன் தான் தலையில் கை வைத்து நின்றான்.

இனியனையும் அருவியையும் மாறி மாறிப் பார்த்த வேந்தனுக்கு ஏதோ புரிய.. "அப்படிப் போடு இது தான் உண்மையான பஞ்சாயத்து என்று நடக்க இருப்பதை சோபாவில் அமர்ந்து கால் மேல் கால்ப் போட்டுக் கொண்டு உதட்டின் ஓரத்தில் அடக்கப்பட்டப் புன்னகையுடன் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான்.

"எங்க அரு சாப்பிட்ட?" என்ற கேள்விகள் அங்கிருந்த அனைவரிடம் இருந்தும் வந்தது.

அனைவரையும் திரும்பி பார்த்தவள் "எதுக்கு இவ்வளவு ஷாக் ஆகறீங்க? சாப்பாட்டதுக்க?" என்று புரியாமல் அருவிக் கேக்க..

"எங்க சாப்பிட்டனு கேக்கும் போது சொல்ல வேண்டியது தானே?" என்று வந்தது நிர்மலாவிடம் இருந்தது.

"கருப்பாயி பாட்டி, சுமி கூட சாப்பிட்டேன்" என்றவளை அடுத்தக் கணம் ஓங்கி அறைந்திருந்தார் நிர்மலா..

"நிர்மலா என்ன பண்ற வயசு புள்ளையை கை நீட்டி அடிக்கற...?" என்று அம்புஜம் சத்தம் போட..

"இல்லமா அவ பண்ணது தப்பு... நாங்க இங்க இருக்கறது அண்ணன்களோட தயவுல தான், அவங்களுக்கு நல்லது செய்யலைனாலும் அவங்கப் பேரைக் கெடுக்கற மாதிரி எதுவும் பண்ணக்கூடாதுல. தினமும் நூறுப் பேருக்கு சோறுப் போடறவீங்க நம்ப... இவ போய் அவங்ககிட்ட கை ஏந்தி நின்னா நம்ப குடும்பத்தை பத்தி என்ன நினைப்பாங்க, ஊருக்குள்ள பேச சொல்லியாக் குடுக்கனும் ஒன்னுனா ஒன்பதுனு பேசுவாங்க அதுக்கு எதுக்குமா இடம் கொடுக்கணும்?" என்ற நிர்மலாவிற்கு கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.

அப்போது தான் உள்ளே வந்த நிரூபன் வீடே அருவியை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கவும் அவன் மனம் நைந்து போனது இன்று என்ன பிரச்சனையுடன் வந்தாளோ என்று.

"நானும் ஒரு பையனை பெத்துருக்கேன் அவன் எப்படி இந்த வீட்டுக்கு பெருமை தேடி தர மாதிரி நடந்துக்கறான், நீ ஏண்டி இப்படி இருக்க?" என்று நிர்மலா அழவும்,, யாரும் அருவியை சமாதானம் செய்யவில்லை மாறாக நிர்மலாவை சமாதானம் செய்ய சென்றுவிட்டனர்.

"இதுக்கு தான் சொல்லாதனு சொன்னேன் அரு... நீயேன் சொல்ற எதையும் புரிஞ்சிக்க மாட்டிங்கிற இப்போ எவ்வளவு பிரச்சனை பார்த்தியா?" என்று இனியனும் அருவியை திட்டிவிட்டு அவனது அறைக்குச் சென்று விட்டான்.

"சரி விடுங்க நடந்து முடிஞ்ச விசயத்தை எதுக்கு பேசிட்டு? வாங்க எல்லோரும் சாப்பிடலாம்" என்றார் பாட்டி.

வேந்தன் அருவியை உனக்கு இது தேவை தான் என்பதுப் போல் பார்க்க, அவளோ யாரையும் பார்க்கும் நிலையில் இல்லை... மனம் முழுவதும் வலி வலி வலி.. இதுவரை தன் தாய் எதற்காகவும் தன்னை கை நீட்டி அடித்ததில்லை...ஆனால் இன்று ஒன்றும் இல்லாத காரணத்திற்கு தன்னை அடித்துவிட்டார் என்ற வலி..
யாரையும் பார்க்காமல் அவளது அறைக்குச் சென்றுவிட்டாள்.

"இவ எப்போமே இப்படிதானா ரித்து...?வேலை செய்யறவீங்க கிட்ட போய் வாங்கி தின்னுருக்கா..? வ்வ அவங்க சாப்பாட்டை நினைச்சாலே வாந்தி வருது..காலையில இவளைப் பார்க்கும் போதே பிச்சக்காரி மாதிரி தான் இருந்தா...கொஞ்சம் கூட டீஷன்டு இல்ல டிசிப்பிளின் இல்லை" என்று பேசிக்கொண்டே போக.. அவர்களுக்கு பின்னால் இருந்த கார்த்திக் ஏகத்துக்கும் கோவம் வந்தது.

"இவ ரொம்ப மாறிட்டா... முன்னாடி இருந்த தேவா இவ இல்லை... அருவி பின்னாடியே அக்கா அக்கானு சுத்துனதிட்டு இருப்பா இப்போ அவளையே கமெண்ட் பண்ற அளவுக்கு வந்துட்டா," என்று தனக்குள் சொல்லிக் கொண்டவனுக்கு ஆத்திரமாக வர அங்கியிருந்து சென்று விட்டான்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் இருக்க மதியம் செய்து வைத்த விருந்து அனைவரையும் பார்த்து சிரித்தது.
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
 
Saroja

Well-Known Member
என்ன இது அவ என்ன
செஞ்சாலும் இப்படி
திட்டுறாங்க
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top