மாதவன் பூங்குழல் மந்திர கானமே... 8

Advertisement

மதுரயாழினி

Writers Team
Tamil Novel Writer
சஞ்சனா வந்ததை மதுரா நல்லதாகவே நினைக்கும் விதமாக நந்தன்‌ இன்னும் அவளிடம் நன்றாக பேசத் தொடங்கினான். மாலை என்றால் நால்வரும் சேர்ந்து அமர்ந்து பேசுவது வழக்கமாயிற்று‌. அபிநந்தனும் நித்தியும் சண்டை போடுவதை வேடிக்கை பார்க்கவும், பார்வதிக்கு சமையலில் உதவி செய்வதும் என நாட்கள் சுபமாகவே நகர்ந்தது மதுராவிற்கு.. பார்வதியிடம்‌ இருந்து சில பலகாரங்களையும் செய்து பழகிவிட்டாள்.

ஆனால் அவளது நிம்மதியைக் குழைப்பது போல் நான்கு நாட்களில் சஞ்சனா மீண்டும் வந்தாள் பெட்டி படுக்கையுடன். மதுராவின் முகத்தைக் காட்டிலும் நித்தியின் முகத்திலே அதிர்ச்சி அதிகமாய் தெரிந்தது. 'காலேஜ்க்கு‌ வேகமா வர சொல்லிருக்காங்க அத்தை.. அங்க இருந்து போனா லேட் ஆகுது... பரிட்சை வருது... அதுவும் நித்தி காலேஜ் கிட்ட தான... அப்பாட்ட கேட்டேன்... அப்பா சரினு சொல்லிட்டாரு...' என்று நீட்டு முழக்கி காரணம் கூறினாள்.


பின்னாலேயே வந்த சுந்தரமூர்த்தி பார்வதியிடம்., 'அவ கொஞ்ச நாள்‌ இங்க இருக்கட்டும்மா... எதோ பரிட்சை இருக்காம்.. வேகமா காலேஜ்க்கு போகணுமாம்... அங்க இருந்தா கிளம்ப மாட்டா... இவ தான் கும்பகர்ணியாச்சே... ' என்றார்.. தன் எதிரியான மதுராவின் முன் தந்தை‌ தன்னை குறை பேசியதை தாங்காமல்., 'உங்களுக்கு வேற வேலையே இல்லப்பா... நீங்க கிளம்புங்க...' என்று அவரை விரட்டியடித்தாள்.

ஹாலில் சஞ்சனாவும், மதுராவும் அமர்ந்திருந்தனர். மதுரா தனக்கான திட்டக் கட்டுரைகளை எழுதிக் கொண்டு இருக்க., சஞ்சனா அவளது அருகில் வந்து., 'யாரு நீங்க... உங்க பேர் என்ன... அன்னைக்கு உங்க கிட்ட பேச முடில... ' என்றாள் குழைவாக...

'மதுமித்ரா'

'ஹோ... சரி நீங்க ஏன் இங்க இருக்கிங்க...'

'நான் ஹாஸ்டல் தேடிட்டு இருக்கேன்..‌அது வரைக்கும் இங்க...‌ கிடச்சதும் போயிடுவேன்.. ' என்றாள் குரலில் கம்மலுடன்...

'நான் வேணா உங்களுக்கு ஹெல்ப் பண்ணவா... எங்க அப்பாகிட்ட சொல்லி.. ' என்றாள் சஞ்சுவும் விடாமல்..

'உனக்கு எதுக்கு சிரமம்.. நான் பார்த்துடுவேன்... ' என மதுரா உறைக்கவும்

'இல்ல மதுமித்ரா... அபித்தான் நீங்க இருந்தா தயங்கி தயங்கி பேசுறார் என்கிட்ட... அதான் நீங்களும் ஹாஸ்டல் போய்ட்டா உங்களுக்கும் ஃப்ரீயா இருக்கும்.. அபித்தானும் நல்லா பேசுவார்... பேசிப் பழக்கிறது நல்லது தான.. நாளைப்பின்ன நான் இருக்க வேண்டிய இடம்ல... ' என்றாள்‌ அந்த 'இருக்க வேண்டிய இடத்தில்' அழுத்தம் கொடுத்து...

மதுமித்ராவிற்கு இதயத் துடிப்பே நின்றுவிடும் போல் இருந்தது. அப்படியென்றால் நந்தனை இவள் தான் மணக்கப் போகிறாளா... கடவுளே.. எதற்காக அவனை என் கண்ணில் காட்டினாய்...

பலம் கொண்ட மட்டும் குரல் எழுப்பி., 'நீ அப்படின்னா ஹாஸ்டல் பார்க்க சொல்லு சஞ்சனா... நந்தனுக்கு தொந்தரவு இருக்காதுல்ல...' என்றுவிட்டு முகம் கழுவ சென்று விட்டாள். நந்தனாமே... நந்தன்... என்னை மட்டும் மரியாதையாய் பேசச் சொல்லிவிட்டு இவள் மட்டும் இப்படி பேசுகிறாள். உன்னை இங்கிருந்து கிளப்பிவிட்டு தான் நான்‌ இனி கிளம்புவேன் என மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்...

முகம் கழுவச் சென்ற மதுராவோ அங்கே சில நொடிகள் தன்னை மறந்து நின்றுவிட்டாள்... நந்தன்‌ நந்தன்.. என மனது அரற்றிக் கொண்டே இருந்தது. மெல்ல அவளுக்கு புரிபட ஆரம்பித்தது. அவன் யாரோ தானே.. அவனுக்கும் அவள் மேல் அப்படி எதுவும்‌ இருப்பதாய் தெரியவில்லை. பின் தான் மட்டும் ஏன்... இங்கிருந்து எவ்வளவு சீக்கிரம்‌ விலகிச் செல்ல முடியுமோ அது தான் நல்லது என நினைத்து தெளிவுற்றவளாய் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட்டு வெளியே வந்தாள்.

அதே நேரம் நித்தி அறையினுள் துணி மடித்துக் கொண்டு இருந்த தாயிடம் சென்று., 'அவ ஏன்மா இங்க வந்தா... அவள போக சொல்லு...' என்றாள்...

'அப்படில்லாம்‌ சொல்லக் கூடாது பாப்பா... வீட்டுக்கு வந்தவங்கள... ' என்றாள் பார்வதி பொறுமையாக.. அவளிடம் பேசி எதுவும் ஆகாது என நித்திக்கு புரிந்து போயிற்று... அண்ணனிடம் தான் பேச வேண்டும்.. அன்று நந்தன் வேலை அதிகம் என்று நேரம்‌ தாழ்த்தி வந்தான். வாசலில் அவனது வண்டி வரும் சத்தம் கேட்டதும் நித்தி வேகமாக ஓடிச் சென்று கதவைத் திறந்தாள்.

'அதிசயாமா இருக்குடீ... நீ வர்ற கதவ திறக்க...' என்றான் நந்தன்.

அவன் பேசியதை காதிலேயே வாங்காதவளாய்., 'அண்ணா... சஞ்சு வந்திருக்கா...' என்றாள்.

'அவளா... 4 நாள் முன்னாடி தான வந்தா...' என்றான் அவன் சாதரணமாக..

'அண்ணா.. ' என்றாள் நித்தி மீண்டும் அழுத்தமாக...

தங்கையின் பதற்ற முகத்தைக் கண்டவனாய் 'என்ன நித்தி...' என்றான் பரிவுடன்..

அண்ணன் கையை பிடித்துக் கொண்டே 'இங்க தங்க வந்திருக்காண்ணா...' என்றாள்.‌

நந்தனின் கண்கள் கூர்மையுற்றன.. 'எதுக்காம்.. ' என்றான் ஒற்றை வார்த்தையில்.

'எதோ அவளுக்கு காலேஜ் வேகமா போகணுமாம்.. கதையா சொல்லுறா... நீ அவள அவங்க வீட்டுக்கு போகச் சொல்லு...' என்றாள்..

'முட்டாள்தனமா பேசாத...' என கூறிக்கொண்டே உள்ளே நுழைந்து விட்டான். நித்திக்கு கோபமாய் வந்தது யாரும் அவளது பேச்சை கேட்கவில்லை என...

நந்தன்‌ உள்ளே நுழைந்தவுடன் சஞ்சனா வந்து., 'அபித்தான்... ' என கத்தினாள்.

'ஏன் கத்துற சஞ்சு... காது வலிக்குது..' என்றான்.

சஞ்சனா., 'என்ன அபித்தான்... ஒழுங்காவே பேச மாட்டேங்குற... ' என கொஞ்சும் குரலில் கேட்டுவிட்டு., 'உன்னால் தான்‌ பார்... ' என்பது போல் மதுராவை ஒரு பார்வை பார்த்தாள்.

அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் மதுரா சமையல் அறைப் பக்கம்‌ சென்று விட்டாள். நந்தன் அதைக் கவனிக்காமல்‌ இல்லை... மதுராவோ முடிந்தவரை அவளது முன்னால் போகக் கூடாது என நினைத்துக் கொண்டாள். அதை தகர்ப்பது போல் படுக்கும் போது மதுராவும், சஞ்சுவும் அறைக்குள்ளும்.. மீதி‌ மூவரும் வெளியிலும் என படுத்துக் கொண்டனர்..

மதுரா தூங்கும் வரையிலும் ஒரே அபித்தான் புராணம் தான். அபித்தானுக்கு அது பிடிக்கும், அபித்தானுக்கு இது பிடிக்கும்.. கடைசியாக அவள் தீர்க்கமாய் கூறியது அபித்தானுக்கு அவளை மட்டும் தான் பிடிக்கும்... பாரதி போல் தலைப்பாகையை காதோடு கட்டிக் கொண்டு தூங்கலாமா என்று இருந்தது மதுராவிற்கு..

மறுநாள் கல்லூரிக்கு போகும் போது., மதுராவும் நித்தியும் ஒரே வண்டியில் ஏறி அமர, சஞ்சனா நந்தனின் வண்டியில் ஏறி அமர வந்தாள். சட்டென்று வண்டியை விட்டு இறங்கியவன்., 'எதுக்கு சஞ்சு என் கூட ஏறுற... ' என்றான். 'அபித்தான்... காலேஜ்க்கு போகணும்ல எப்படி போவேன்.. ' என்றாள்..

'உன் வண்டி எங்க... '

'அது அப்பாக்கு வேணும்ல... அதனால அத அங்கயே விட்டுட்டு வந்துட்டேன்... நீ கூட்டிட்டு போய் விடு...'

தீர்க்கமாய் அவளைப் பார்த்தவன்., 'நீ அவ கூட வா... நான் நித்திய கூப்பிட்டுக்கிறேன்... ' என்றான்..

'அவ கூடவா..' மதுரா என்கின்ற பெயர் கூட மறந்து போய்விட்டதா.. அப்படி அழைப்பவன் அவன் மட்டும் தானே... சஞ்சனாவும் எரிச்சலோடு மதுராவுடன் வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

அடுத்து வந்த இரு நாட்களும் இதே நிலை தான்.. அடுத்து ஞாயிற்றுக்கிழமை வரவே ஐவரும் வீட்டில் இருந்தனர். ரூமினுள் இருந்த பரணை ஒதுக்கலாம் என நித்தியும், மதுராவும் முடிவு எடுத்திருக்க இருவரும் சாப்பிட்டு முடித்தவுடன் அந்த வேலைக்கு தயாராகினர்.

இதை எடுத்து வை... அதை தூக்கி வை... என இருவரும் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்திற்கு பின்னர் அந்த வேலையை முடித்திருக்க, பார்வதியின் பழைய பெட்டியையும் பரணில் இருந்து எடுத்து தூசி தட்டி வைத்திருந்தனர்.‌ எனவே அதை மேலே ஏற்றும் பொருட்டு நித்தி மேலே ஏறினாள்.

ஹாலில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டு இருந்த நந்தனிடம்., 'அபித்தான்... நான் கடைக்கு போகணும் நோட் வாங்க... கூட்டிட்டு போறியா...' என்றாள். அவன் கவனிக்காமல் செய்தி வாசிப்பதிலேயே குறியாய் இருக்கவும் பேப்பரை சட்டென்று அவன் கையில் இருந்து தட்டி விட்டுவிட்டாள். கோபத்தில் நிமிர்ந்த அபிநந்தன்., 'அறிவு இருக்கா சஞ்சு... உள்ள ரெண்டு பேர் வேலை பார்க்குறாங்கல்ல... நீயும் போய் ஹெல்ப் பண்ணு... உயிர வாங்காம...' என்றான்.

வெடுக்கென்று எழுந்து சென்ற சஞ்சு, அறைக்குள் இருந்த., 'இருவரிடமும் நான்‌ ஹெல்ப் பண்றேன்...' என்றாள். மறுநொடியே சிரித்த நித்தி., 'உனக்கு இதெல்லாம் தெரியுமா...' என்றாள். தன் வீரத்தை நிரூபிக்கும் பொருட்டு பரண் மேல் ஏறிவிட்டாள். மதுரா கீழிருந்து பார்வதியின் பெட்டியை எடுத்துக் கொடுப்பதாகவும், நித்தி அதை மெலே வாங்கி வைப்பதாகவும் திட்டமிட்டு இருக்க., இப்போது மேலே ஏறிய சஞ்சனாவோ தான் வாங்கி வைப்பதாய் கூறிவிட்டாள்..

நித்தியும் சரியென்று பின்னால் இருந்ததை நகற்ற ஆரம்பிக்க, மதுரா பெட்டியை தூக்கி மேலே கொடுத்தாள். பாதி பெட்டியை மேலே எடுத்துவிட்ட சஞ்சனாவிற்கோ அப்போது மதுராவின் மேல் இருந்த ஆத்திரம்‌ அதிகமாயிற்று.. 'பெட்டியை அவள் மேல் போட்டுவிட்டாள் என்ன' என்ற எண்ணம்‌ தோன்ற., யோசிக்காமல் அதனை செயல்படுத்தியுன் விட்டாள்.

இதை எதிர்பாராத மதுரா தான் ஏறியிருந்த மேஜையின் மீது இருந்து சரிய,‌ அந்நேரம் நல்லவிதமாக முகம் கழுவ என்று நந்தன் அறையினுள் நுழைந்திருந்தான். மதுராவின் நிலையைக் கண்டவன் இரண்டடியில் தாவிச் சென்று அவளை தன் கைகளில் ஏந்தினான். அவனும் எதிர்பார்த்திருக்கவில்லை ஆதலால் இருவரும் கீழே விழுந்து விட்டனர்.. நந்தனின் மேல் கிடந்த மதுராவிற்கு சில நொடிகள் என்ன நடக்கிறதென்றே புரியவில்லை...

அதற்குள் நித்தி சஞ்சனாவை திட்டி தீர்த்துவிட்டாள். கீழே கிடந்த அவளது ஆசை அபித்தானையும், தன் எதிரி மதுமித்ராவையும் பார்த்த அவளது கண்கள் நெருப்பை கக்கிக் கொண்டு இருந்தன...
 

Punitha M

Well-Known Member
ச்சே என்ன பொண்ணு சஞ்சனா..
நல்ல குணம் இருந்தாலே எல்லோர்க்கும் நம்மை புடிக்கும்னு தெரியவேணா:mad::mad:..

நந்து நீ ஏன் அமைதியா இருக்க?
மதுரா நினைக்கறத உணர்ந்துக்கற உனக்கு சஞ்சு மனசோட அழுக்கு புரியலயா??:rolleyes:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top