மாதவன் பூங்குழல் மந்திர கானமே... 15

Advertisement

மதுரயாழினி

Writers Team
Tamil Novel Writer
சஞ்சனாவும் மதுமித்ராவும் அதன் பின் பேசிக் கொள்ளவே இல்லை... தான் அங்கு இருப்பதாய்க் காட்டிக் கொள்ளாவிட்டாலும் அவள் பார்வதியின் வீட்டை விட்டு வெளியேறுவதாய் இல்லை.. நித்திக்கும் பாதி விஷயம்‌ தெரிந்திருக்க, பார்வதியும் தெளிவாகவே அறிந்திருக்க அடிக்கடி மதுரா நந்தனின் விழிகள் சந்தித்து மீண்டன..

சஞ்சனாவிற்கு தான் இந்த தொல்லை தாங்கவில்லை.. சீக்கிரமே முடிவு கட்ட வேண்டும் என நினைத்துக் கொண்டாள். இதற்கிடையில் தான் நந்தனும் மதுராவும் சில நாட்கள்‌ பிரிந்திருக்க நேர்ந்தது.. மதுராவின் கைப்பந்து குழு மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகி இருந்தது‌.‌ அவள் தான் குழுவை நிர்வகிக்க வேண்டும்.. நித்தியும் மதுராவும் அப்போது தான் கல்லூரியில் இருந்து‌ வீட்டிற்கு வந்திருந்தனர். நந்தனிடம்‌ சொல்ல வேண்டும்.

ஆனால் அவன்‌ விடமாட்டேன் என்பானே... மன்றாடத் தான் வேண்டும். அன்று இரவு அனைவருமாய் ஹோட்டலுக்கு சென்றனர்.. நந்தனும் மதுராவும்‌ எதிர் எதிரில் அமர்ந்து கொள்ள, பார்வதி நித்தி சஞ்சனா மூவரும் அவர்களை அடுத்தவாறு அமர்ந்திருந்தனர்.

நந்தனிடம் நித்தி அப்போது தான் பேச்சை ஆரம்பித்தாள்., 'அம்மா எங்க டீம் ஸ்டேட் லெவல்க்கு செலக்ட் ஆகி இருக்கு... ' என்றாள்.

அபிநந்தனும், பார்வதியும் உற்சாகமாகி அவளைப் பார்க்க., 'நாங்க ரெண்டு பேரும் 2 வாரம் அங்க தங்கி இருக்கணும்..' என நித்தியே தொடர்ந்தாள். இப்போது நந்தனிடம் மட்டும் அதிர்ச்சி. சஞ்சனா மதுரா போவதை நினைத்து மகிழ்ந்திருக்க, பார்வதி அவர்களின் வெற்றியில் களிப்புற்று இருந்தாள்.

'அவ எதுக்கு‌ நித்தி...' என்றான் நந்தன்..

'உன் மரமண்டைல ஏறவே செய்யாதா... அவங்க தான எங்க கேப்டன்.. சொன்னேன்ல...' என்று கிடைத்த சாக்கில் அண்ணனை மட்டம்‌ தட்டினாள் நித்தி...

'அதுக்கு எதுக்கு 2 வாரம்...' என மீண்டும் நந்தன் வினவ., 'உஸ்..... உனக்கென்ன டா பிரச்சன... நாங்க என்ன டூர்க்கா போறோம்... இதுக்கு எவ்வளோ நாளா வெய்ட் பண்ணுறோம் தெரியுமா...' என அவனிடம் கூறிவிட்டு தன் தாயின் பக்கம்‌ திரும்பி., 'பாரும்மா... இவன் இப்படி சொல்றான் ஒரு ஆல் தி பெஸ்ட் கூட சொல்லாம...' என்றாள் சிணுக்கிக் கொண்டே...

மகளை சமாதானபடுத்தும் நோக்கில் 'நீ விடு நித்தி... எந்த ஊர்ல..' எனக் கேட்டவளின் முகம் அந்த ஊரின் பெயரைக் கேட்டதும் மாறிவிட்டது.

'அவசியமா அங்க போகணுமா நித்தி‌..' என்றாள் தணிந்த குரலில்..

'ம்மா...' என நித்தியும் மதுராவும் ஒரு சேர்ந்தவாறு கத்தியே விட்டனர்... நந்தனுக்கும் அதிசயமே... அம்மா இப்படி கேட்பாள் என அவன் எதிர்பார்த்திருக்கவே இல்லை...

'ஏன்மா... நீயே இப்படி சொல்லுற‌..' என்றான் நந்தன்..

'அந்த ஊர் வேண்டாமே டா...' என்றாள் பார்வதி... அவளது கண்கள் கலங்கிவிட்டிருந்தன... நந்தனுக்கு என்னவோ போல் இருந்தது... அனைவரையும் சமாதானப் படுத்தி உணவருந்த வைத்தான்..

வீட்டிற்கு செல்லும்‌ வழியிலும்‌ கூட நித்தியும், மதுராவும் பேசவே இல்லை.. பார்வதி இப்படி எதையும்‌ தடுக்க மாட்டாள். வேறு எதுவும்‌ என்றால் அவர்களே விட்டிருப்பார்கள். இது முக்கியமான போட்டி... ஆனால் பார்வதி சொல்லையும் மீற முடியாது. என்ன செய்வதென்றே இருவருக்கும் தெரியவில்லை.

வீட்டிற்குள் நுழையும் முன் நித்தி தன் அண்ணனிடம் சென்று கெஞ்சலானாள்.
'அண்ணா... ப்ளீஸ்னா... அம்மாட்ட சொல்லு... இதுக்கு‌தான் இவ்ளோ நாள் நாங்க விளையாண்டதே... ' என அவள் மீண்டும் மீண்டும் உருப்போட., உள்ளே சென்ற நந்தன் தன்‌ தாயை தனியே அழைத்தான்...

அவள் முகத்தில் இன்னும் கவலை குடி கொண்டு இருந்தது...
'என்னாச்சு மா... ' என்றான் நந்தன் மெல்ல...

'அந்த ஊர் வேண்டாமே அபி...' என்றாள் அவளும்‌ விடாதவளாய்...

'அதான் ஏன் மா...'

'தம்பி., அது எந்த ஊர்னு உனக்கு தெரியுதா இல்லையா...'

'தெரியுது மா...‌ அதனால என்ன...'

'அபி.. அந்த ஊர் காத்து கூட படக்கூடாதுனு தான் இங்க நான் வந்ததே... அந்த ஊர நெனச்சாலே எனக்கு நான்‌ பட்ட எல்லா கஷ்டமும் தான் நியாபகம்‌ வருது... வேண்டாம்‌ தம்பி... நமக்கு அங்க எதுவுமே நல்லதா நடக்கல...' என்றாள் விம்மலுடன்...

உண்மை தான் தன்‌ ஊர் பற்றி அவள் இதுநாள் வரையிலும் எதுவும் பேசியதே இல்லை... நித்திக்கு அது எதுவும் நியாபகம் இருந்திருக்காது... சில விஷயங்கள் நியாபகம் இருந்தாலும் தாய்க்கு பிடிப்பதில்லை என்றே நந்தன்‌ எதுவும் பேசமாட்டான்...

ஆனால் அந்த ஊரால் எதுவும் பிரச்சனை வரும் என அவனுக்கு தோன்றவில்லை... வெளியே இருவரும் இவன் சொல்லும் முடிவிற்காக ஆவலோடு வேறு காத்துக் கொண்டு இருக்கின்றனர்..

பார்வதியிடம்‌ மீண்டும் ஆரம்பித்தான்‌ அவன்., 'ம்மா... அதுனால இப்போ என்னம்மா... நித்திக் குட்டி என்ன அங்கயேவா இருக்கபோறா... எவ்வளவு ஆசையா கேட்டா...' என்றான்..

'அபி எனக்கு எதோ சரியா படல....' என்றாள் பார்வதி விடாதவளாய்...

தங்கை கேட்டு விட்டாளே... எப்படி இல்லையென்று சொல்வது... முக்கால் மணி நேரம்‌ தாயுடன் போராடி அவளது அரைமனதான சம்மதத்தை வாங்கிவிட்டு வெளியேவந்தான்.

அறையில் இருந்து அவன் வெளியே வருவதையே இருவரும் ஆவலுடன் பார்த்துக் கொண்டு இருந்தனர். அவன் இருவரையும் நோக்கி கட்டைவிரலை உயர்த்திக் காட்டினான்.

நித்தி ஓடிச் சென்று அவனை கட்டிக் கொண்டாள்...
'அய்யோ இறங்கு டீ... இப்படி தவ்வுவன்னு தெரிஞ்சிருந்தா நான் ஓகே வாங்கிருக்கவே மாட்டேன்... ' என்றான் அவளை சீண்டுவதற்காக...

சட்டென்று இறங்கியவள் அவனை கையில் அடித்துவிட்டு, 'தவ்வுனது தப்பா... இல்ல நான் தவ்வுனது தப்பா...' என்றாள் கண் சிமிட்டிவிட்டு..

'அடிங்... உனக்கு என்ன கொழுப்பு' என அவளை நந்தன் அடிக்க துரத்த பிள்ளைகளின் விளையாட்டை வேடிக்கை பார்த்து ரசித்துக்‌கொண்டு இருந்தாள் பார்வதி...

ஆனாலும் அவளுக்கு மனதினுள் எதோ ஒன்று நெருடிக்கொண்டே தான் இருந்தது..

நித்தியும் மதுராவும் தங்களுக்கு தேவையானவற்றை எடுத்து வைக்க ஆரம்பித்தனர்... அறைக்குள் வந்த நந்தன்., 'நித்தி... உன் ட்ரஸ் மேல காயுது... நீ எடுத்துட்டு வா...' என அவளை வெளியே அனுப்ப முயற்சித்தான்...

காரணத்தைக் கண்டு பிடித்தவள் அண்ணனை கேலி பண்ணாமல் விட்டுச் செல்ல மனமின்றி‌, 'துணி மட்டுமா காயுது...' என இழுத்துக் கொண்டே கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டாள்.

'பிசாசு...' என அவளை திட்டியவன்., மெல்ல மதுராவின் கையைப் பற்றினான்..

சஞ்சனா உள்ளே நுழைந்துவிட்டாள்... அவளுக்கு சும்மாவே காய்ந்து கொண்டு இருந்தது... இதில் அபித்தானும்‌ அவளும் தனியாகவா... பையை எடுக்கிற சாக்கில் உள்ளே நுழைவோம்‌ என நுழைந்தவளுக்கு அபிநந்தன் மதுராவின் கையைப் பற்றி இருந்தது எரிச்சல் வந்தது...

சஞ்சனாவைக் கண்டதும் கோபமுற்ற நந்தன்., 'உனக்கென்ன இப்போ...' என்றான். மதுரா தன்‌ கையை விடுவித்துக் கொள்ள முயன்றாள். அதை இன்னும் இறுகப் பற்றியவன்., சஞ்சனாவை முறைத்தான்...

'இல்ல அபித்தான்... காலேஜ் பேக் உள்ள இருக்கு....' என்றாள்...

'ப்ச்... நீ போ வெளிய... அப்புறம் எடுத்துக்க...' என அவளிடம் காட்டமாய் கூறிவிட்டு மதுராவின் பக்கம்‌ திரும்பினான்..

சஞ்சனாவிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது.. அங்கிருந்து வெளியேறி விட்டாள்...

மதுரா நந்தனிடம்., 'அவ தான் போய்ட்டால்ல... இப்போவாச்சும் கைய விடுங்க...' என்றாள்..

'ஏன்டீ‌.. அவ இருக்கப்போவே பிடிச்சு இருந்தேன்... இப்போவா விடப் போறேன்..' என்றான் சிரித்துக் கொண்டே...

'கைய விடு நந்தன்... நான் எடுத்து வைக்கணும்..' என்றாள்‌ அவள் சிணுங்கியவாறு...

'எத்தன நாள்‌டீ விட்டுட்டு இருக்கணும்...'

'2 வாரம்...'

'14 நாள்...'

'ரெண்டும் ஒன்னு தான் நந்தன்...'

'உனக்கு தான்‌ வருத்தமே இல்ல போ...'

'எதுக்கு டா வருத்தம்... நான் என்ன அங்க போய் தங்கவா போறேன்... வந்திடுவேன்...'

'அப்போ 14 நாள்க்கு சரி வர்ற மாதிரி எதாவது குடு...'

'மரியாதையா போ... இல்ல பார்வதிம்மாவ கூப்பிடுவேன்..'

'போடி...' என்றுவிட்டு எழுந்து சென்றவனை சிரிப்போடு பார்த்துக் கொண்டு இருந்தாள்..

ஊருக்கு இருவரும் மகிழ்ச்சியாகவே கிளம்பினர்... அந்த ஊரின் குளுமையும் வளமும் மதுமித்ராவை கவர்ந்துருந்தன... அங்கு தங்களுக்கு வரப்போகும் ஆபத்தை உணராமலேயே இருவரும் மகிழ்ச்சியில் மிதந்து கொண்டு இருந்தனர்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top