மழலையின் சிரிப்பில்

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
#1
"மயங்கினேன்
என்னை மறந்தேன்
மாய உலகில்
சிறகின்றி பறந்தேன்
சிறு மழலையின் சிரிப்பில்"

"பொக்கை வாய்
சிரிப்பதனில்
பொசுங்கியது
என் நெஞ்சம்"

"இதழ்கடையோரம்
உதிர்க்கும்
சிரிப்பிற்கு
உலகை கூட தந்திட தான்
உள்ளம் எண்ணுகிறது"

"மழலையின்
சிரிப்பதில்
மாற்றங்கள்
கொண்டது என் உள்ளம்"

"உலை கலனாய்
கொதிக்கும் உள்ளம் கூட
ஓரிடத்தில் ஓய்வு கொள்கிறது
அது மங்காத
மழலையின் சிரிப்பில்"

"மகிழ்ச்சி நான் கொண்டேன்
மழலை உன் சிரிப்பில்
என் திமிறும்
கர்வமும் தான்
சென்ற திசை
அறியவில்லை நான்
அழகான
மழலையின் சிரிப்பில்"

"உலக அழகியின்
அழகான புன்னகை கூட
அற்புதமாய் தோன்றவில்லை
அழகிய
மழலையின் சிரிப்பின்
முன்னால்"
 
mila

Writers Team
Tamil Novel Writer
#6
முல்லைப் பற்களை கட்டி என் நெஞ்சம் கொள்ளை கொள்ளும் சிரிப்பு
 
Advertisement

New Episodes