மல்லிகா மணிவண்ணனின் 'நான் எனது மனது'

Advertisement

Joher

Well-Known Member
:love:
படிக்கப் படிக்க சலிக்காத எழுத்துக்களில் ஒன்று மல்லியின் எழுத்து. ஹீரோ ஹீரோயின் என்னதான் தப்பு இருந்தாலும் கடைசில ரெண்டு பேருக்கும் இடையில் வரும் புரிதல் ரொம்ப அழகா சொல்லி இருப்பாங்க.

அதுவும் இந்த ரவி :p:p:p
ரவீந்திரன் ரொம்ப சின்சியர் சிகாமணி. அத்தை லட்சுமியிடம் வேலை தேடி வர. அவரும் கணவருக்கு டிரைவராக அனுப்புகிறார் ரவியை. ரவியோ கேசவனின் பலவீனத்தை அவனோட முதலா யூஸ் பண்ணுகிறான்.

ரவிக்கும் ஷர்மிக்கும் எப்பொழுதும் ஏழாம் பொருத்தம். ஷர்மியின் அவமரியாதை எடுத்தெரிந்து பேசும் பேச்சுக்கு பதிலுக்கு பதில் செய்யும் ரவி.

அம்மா இல்லை. அண்ணன், அப்பாவின் பொறுப்பற்ற தனத்தால் பிசினஸ் முழுவதும் ரவி கை வசமாக, வீட்டு பொறுப்பும் அவன் வசமே போகிறது. ஷர்மி-ரவி முட்டல் மோதல் கேசவன் விஷயத்தில் உச்சத்துக்கு போக, ஷர்மியின் பேச்சில் வெகுண்டெழுகிறான் ரவி.

எந்த பிசினஸ் அவனை வளர்த்ததோ அதன் மூலமே சிக்கலை உருவாக்கி ஷர்மியை இக்கட்டில் நிறுத்தி அவளை மணந்து கொள்கிறான்.
ரெண்டு அகங்காரிகள் வாழ்வில் இணைந்தால் மல்லுக்கு குறைச்சலே இல்லை.

அம்மாவிடம் மட்டுமே ஒட்டுதல் ஆன ரவிக்கு அம்மாவிடமிருந்து கிடைப்பதோ ஏளனப் பேச்சுகள். பொறுப்பில்லாத அண்ணன் சந்தோஷ் பொறுப்பாாக மாறினாலும் மனதுக்குள் ஒரு வெறுமை.

ரவியின் கடின உழைப்பு ஷர்மியை ஈர்க்க, பொறுப்பான ரவியின் மனைவியாக பொறுப்புகளைப் பகிர்ந்து சத்தமில்லாமல் சாந்தமாகிறாள் ஷர்மி.

மனதளவில் யாரோடும் நெருக்கம் இல்லாத இரண்டு மனங்களும் நெருங்குகிறது..... ரவியும் குழந்தைகளும் ஷர்மியை தாங்க, போகப்போக புரிதலோடு காதலும் வளர்கிறது. ரவியின் நான் எனது மனது எல்லாமே ஷர்மி ஆகிப் போகிறாள்....

திருமணத்திற்கு முன்பான பேச்சையும் செய்கையையும் மறக்க மன்னிக்க காலம் மட்டும் இல்லை புரிதலும் எனக்காக துணை நிப்பாங்க எனும் நம்பிக்கையும் வேண்டும்... அதை நிறையவே கொடுத்திருக்காங்க ரெண்டு பேரும்......

மல்லியின் இன்னுமொரு அருமையான கதை...
 
malar02

,,
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top