மலரே மன்னிப்பாயா டீசர்

Advertisement

ஓம் நமச்சிவாய..

மலரே மன்னிப்பாயா..!

இதோ எனது அடுத்த புதிய கதைக்கான சிறு முன்னோட்டம்..

தனிப்பட்ட குடும்ப கதை எழுதுவது இதுவே எனக்கு முதல் முயற்சி,

சமூக கருத்துக்களை பின்னி அதனோடு சிறிதாக குடும்பத்தை காட்டி எழுதுவது ஓரளவுக்கு பிடிபட்ட களமாகும்..

தெரியாது எழுத வராது என்று இதுவரை இருந்து விட்டேன்.. இனியும் தட்டிக் கழிக்காமல் நாம் தினமும் ஒரு குடும்பத்தில் பின்னி பிணைந்து உறவுகளோடு இணைந்து வாழும் ஒரு கதை களத்தை என்னால் முடிந்தளவு ரசிக்கும்படியாக கொடுக்க முயற்சி செய்வேன்..

காதல் திருமண வாழ்க்கை. கோபம் பிரிவு புரிந்துணர்வு போன்ற உணர்வுகளை என்னால் முடிந்த அளவு எடுத்துக் காட்டி இந்த கதையை கொண்டு செல்ல முயற்சி செய்வேன்..

கதையில் இருந்து ஒரு சிறு பாகம்..

எதிர்பாராத நேரத்தில் சம்மந்தம் இல்லாத இருவருக்கு திருமணம் நிகழ்கிறது,.

பெண்ணுக்கு ஆணின் வாழ்க்கை முறை புதிதாக பயமுறுத்துகிறது..

ஆணுக்கு பெண்ணின் இயல்பையும் அவளது வாழ்க்கை முறையையும் அவனது வாழ்க்கையோடு பின்னி செல்வதற்கு கடினமாக உள்ளது..


குட்டி டீசர்.

முதலிரவு அறை

"ஏய் என்னடி எருமை நீயும் உங்க அப்பனும் பணக்கார திமிரை என்கிட்டயே காட்டுறிங்களா?..

உங்ககிட்ட கை நீட்டி காசு வாங்கினா நான் உங்களுக்கு அடிமையா?.. பெரிய அதிகாரம் பண்ணி உன்னை என் தலையில் கட்டி விட்டு போறான் அந்த ஆளு.. உனக்கு நான் வேணுமா?. ஏன்டா இந்த கல்யாணம் பண்ணினோம்னு நீ வருத்த படுவடி அப்போ நீயே என்னை வேணாம்னு சொல்லி ஓடணும்.. இல்லன்னா ஓட வைக்கிறேன்..


" டேய் நீ வாத்தின்னா பெரிய இவனா? நீ எருமை என்று சொன்னா நான் எருமை கிடானு சொல்லுவேன்..

நீ திட்டினா நானும் திட்டுவேன்..

நீ அடிச்சா நானும் அடிப்பேன்..

நீ அன்பா இருந்தா அந்த அன்பை 100% நானும் தருவேன்..

பார்க்கலாம் யாரு ஓடுறா யார் பின்னாடி ஓடி வராதுன்னு

நான் நீ முகம் பார்க்கும் கண்ணாடி மாதிரி நீ செய்வதை அச்சு பிசகாமல் அது காட்டுவது போன்று. நானும் நீ செய்வதை பேசுவதை அப்படியே செய்வேன் பேசுவேன்.. " என்றாள் நிமிர்வுடன் அவள் அனைத்திலும் புதியவள்..

" சரியான குட்டிபிசாசு கிட்ட வந்து மாட்டிகிட்டேன் போலயே..! இனி நானா?.. அவளான்னு பார்க்குறேன். வாடி நாளைக்கு காலேஜ் வரணும் தானே அங்க ஆப்பு வைக்கிறேன்.. என்று மனதில் திட்டியப்படி அறையை விட்டு வெளியேறினான். அவன் ஆண் என்கிற திமிர் மொத்தமும் அவனுக்கே சொந்தம் என்று நினைப்புடன் வாழ்பவன்..

தந்தையின் பேச்சை தட்டாமல் அவர் காட்டிய மணவாளனை திருமணம் செய்து மனிதர்கள் வாழும் வீடு என்று நினைத்து மருமகளாக அவ் வீட்டினுள் காலடி எடுத்து வைக்கிறாள் அவள் பிறைநிலா ..

குள்ளநரிகளும் சந்தர்ப்பத்திற்காக மாறும் பச்சோந்திகளும் வாழும் அடர்ந்த காடு என்று தெரிந்தால் அவளின் நிலை என்ன ஆகுமோ?..

மகனே இவ்வாறு ஆணாதிக்கத்தோடு இருந்தால் அவனைப் பெற்ற தாய் தந்தை அவனுடன் பிறந்த தம்பி தங்கை என அந்த குடும்பம் எவ்வாறு இருக்கும் என தொடர்ந்து கதையில் தெரிந்து கொள்வோம்..

இரு வேறுபட்ட குணங்களையும் பழக்க வழக்கங்களையும் கொண்டவர்கள் இருவர் இணைந்த திருமண வாழ்க்கையில் போராடி வெற்றி பெற்றார்களா?.. இல்லை போராடி அலுத்து தோற்று பிரிந்து சென்றார்களா?..

என்பதே இக்கதை நீங்களும் என்னோடு எனது புதிய முயற்சியில் இணைந்து என்னை ஊக்கப்படுத்தி வழி நடத்தி இக்கதையை வெற்றிகரமாக முடிக்க தொடர்ந்து என்னோடு இணைந்து இருங்கள்..

சீக்கிரம் கதையுடன் வருகிறேன்.

அன்புடன் பிரியதர்ஷினி ரதீஸ்
 

Attachments

  • 54041855.jpg
    54041855.jpg
    18.4 KB · Views: 3
Best wishes ma
Waiting for regular epi's
Welcome and best wishes for your new story.

மிக்க நன்றி மா நாளைக்கு எபி வந்துடும் உங்களின் ஆதரவை தாருங்கள் குடும்ப கதை எழுதுவது புதிது பிழை இருந்தால் சொல்லுங்க திருத்திக்கொள்வேன் ❤
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top