மயக்கும் மான்விழியாள் 9

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..

மயக்கும் மான்விழியாள் 9

சென்னை விமான நிலையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது என்று பெயர் பலகயை பார்த்தபடி தன் உடைமைகளுடன் கம்பீரமாக வந்து கொண்டுருந்தான் சிவரூபன்.தேவகி,செந்தில்நாதன் மற்றும் மோகனா அவனை பின் தொடர்ந்து வர பயணிகள் வருகைக்கான இடத்தை அடைந்தனர் அனைவரும்.அங்கே சிவரூபனின் பெயர் பலகையை பிடித்தபடி ஒருவன் நிற்க தேவகி தான் முதலில் அவனைக் கண்டது.அவனைக் கண்டவுடன்,

"ரூபா...அங்க பாரு நம்மள கூப்பிட வந்தவர் அங்க உன் பெயர் பலகையை வச்சிக்கிட்டு நிக்குறாரு பாரு..."என்று அந்த பெயர் பலகை பிடித்தவன் நிற்கும் இடத்தைக் காட்ட ரூபன் அவனைக் கண்டவுடன் மனதில் இவனா என்று அதிர்ந்தான். பின் தன்னை சமன் செய்துக் கொண்டு அவனை நோக்கி செல்ல அவனின் பின்னே மற்றவர்களும் சென்றனர்.

"ஹலோ...ஐ ம் சிவரூபன்..."என்று அந்த பலகை பிடித்தவனிடன் ரூபன் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள அவனை வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் கௌதம்.அவனுக்கு மகேஷ் ஒருவகையில் அண்ணன் முறை மகேஷ் அவனுக்கு போன் செய்து தன் நண்பன் ஒருவனுக்கு நீதான் உதவ வேண்டும் என்று கூற கௌதமும் சரி என்று கூறினான்.

கௌதம் ஒரு வருடமாக தான் இதில் கால் பதித்து உள்ளான் அவனுக்கு மகேஷ் ஒரு குரு போல் வழிநடத்த அதனால் கௌதமிற்கு மகேஷ் மேல் ஒரு தனி மரியாதை.அதனால் தான் மகேஷ் கூறியவுடன் கௌதம் சம்மதித்தது.
மகேஷின் நண்பன் என்றவுடன் யாரோ ஒருவர் என்று நினைத்திருக்க அங்கு சிரூபனை சற்றும் எதிர்பார்க்வில்லை.கௌதமிற்கு ரூபனை தெரியுமே தவிர அவனது பெயர் மற்றவை மறந்திருந்தது.

"ஹலோ...."என்று தன் முன் கேட்ட கம்பீரமான குரலில் தன்னிலை பெற்றவன்.

"ஹலோ சார்...என்ன தெரியலையா நான் மதுவோட பிரண்ட் கௌதம்..."என்று தன்னை மறந்திருப்போனோ என்ற எண்ணத்தில் கௌதம் கூற ரூபனோ தன் அன்னைக் காட்டியவுடன் கௌதமைக் கண்டுகொண்டான் இவன் மதுவின் நண்பன் என்று. மதுவின் பெயரைக் கேட்டவுடன் ரூபனுக்கு உடலில் சற்று சிலிர்ப்பு ஏற்பட்டாலும் அடுத்த நிமிடம் அவனது உடல் விரைத்தது.தேவகிக்கு வந்திருப்பவன் மதுவின் நண்பன் என்று தெரிந்தவுடன் முகத்தில் தன் போல் கடுமையேற,

"உன் பேரு மட்டும் தான் அவன் கேட்டான் உன்னோட பிரண்ட் பேரெல்லாம் அவன் கேட்கல புரியுதா....எங்களுக்கு கார் எங்க நிக்குது அத சொல்லு முதல்ல..."என்று அழுத்தமாக கூற கௌதமிற்கு தான் ஒருமாதிரி ஆனது.அவனுக்கு சில விஷயங்கள் தெரியும் அதாவது மதுவின் அத்தைக்கு மதுவை பிடிக்காது என்று இதை மதுவே கூறியிருக்கிறாள்.இப்போது அதை நிரூபிப்பது போல தேவகி மதுவின் பெயரைக் கேட்டவுடன் கடுமையாக பேசவும் அமைதியாகிவிட்டான்.

சிவரூபனுக்கு கௌதம் முகம் வாடுவது மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும் தன் அன்னை கூறுவது சரியே என்பது போல இருந்துக் கொண்டான்.இவர்கள் வந்தது இரவு என்பதால் செந்தில்நாதனும்,மோகனாவும் சற்று உறக்க கலக்கத்தில் இருந்தனர் அதனால் அவர்கள் இவர்களின் உரையாடலை கவனிக்கவில்லை.தன் காரை நோக்கி அனைவரையும் அழைத்து சென்ற கௌதம் அவர்களின் சாமான்களை அடுக்க உதவி செய்து அவர்களை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.காரில் மௌனம் மட்டுமே யாரும் பேசவில்லை வயதானவர்கள் இருவரும் உறங்கிவிட தேவகியோ ஜன்னல் வழியாக சென்னையை பார்த்துக்கொண்டு வந்தார்.ரூபனோ யாருக்கோ குறுங் செய்தி அனுப்பியபடி வந்தான்.கௌதம் வண்டி ஓட்டுவதில் கவனம் வைத்தாலும் அவ்வபோது ரூபனை ஓரக் கண்ணால் பார்த்தவன் மனதில்,

"இவரு அப்பவே ஆளு சூப்பரா இருப்பாரு...இப்ப இன்னும் சூப்பராயிட்டாரு..."என்று ரூபனின் தோற்றத்தைக் கண்டு மனதில் சொல்லிக்கொண்டான்.கௌதம் கூறுவது போல தான் ரூபன் வெயிட் கலர் டீஷர்ட் ஜீன்ஸ் கண்ணில் கூலர்ஸ் என்று ஹீரோ போலவே இருந்தான்.இதில் அயராத உழைப்பும் அவனது அழகுக்கு மேலும் அழகூட்டியிருந்தது.கௌதம் தன்னையே பார்ப்பது ரூபனுக்கு ஒருவித சங்கடத்தை தர சற்று கணைத்து அவனை நிகழ்வுக்கு கொண்டுவந்தவன் ரோட்டை பார் என்று கண்களால் செய்கை செய்ய அதற்கு பிறகு கௌதம் திரும்புவானா என்ன.ஒருவழியாக அவர்களை தான் ஏற்பாடு செய்திருந்த வீட்டின் முன் இறக்கிவிட்டு நாளை வருவதாக கூறி விடைப்பெற்றான் கௌதம்.
தன் படுக்கையில் புரண்ட ரூபனுக்கு ஒரு கட்டத்தில் முடியாமல் எழுந்து தன் ரூமின் ஜன்னலை திறக்க சென்னையின் வெப்பக் காற்று அவன் முகத்தில் மோதியது.இரவு நேரம் என்பாதல் வரும் வழியிலேயே உணவினை வாங்கி வந்திருந்தனர்.அவரவர் உண்டுவிட்டு பயணக் களைப்பில் உறங்க சென்றுவிட ரூபனுக்கு தான் உறக்கம் வர மறுத்தது.விழிமா என்ற பெயரை தனக்குள் சொல்லிக் கொண்டவன் மனக்கண் முன்

"சிவு அத்தான்..."என்ற சிணுங்கியபடி கண்களால் பேசும் அந்த மான்விழியாள் தெரிய அவனது முகமும் புன்னகைப் பூசியது.பாலைவனம் போல இருந்த தன் வாழ்க்கையில் வசந்தமாக மாற்றியவளும் அவளே மீண்டும் பாலைவனமாக மாற்றியவளும் அவளே.தன் வாழ்கைகையில் வந்த குறுகிய கால வசந்தம் மதுமிதா.அவளது விளையாட்டு இவனுக்கு வினையாக மாறியது தான் விதியின் செயல்.தன்னால் ஒருவன் தூக்கமின்றி தவிக்க மதுமிதாவோ நீண்ட நாட்களுக்கு பிறகு சுகமாக தூங்கிக் கொண்டிருந்தாள்.

காலை ஒன்பது மணி போல சிவரூபனின் வீட்டிற்கு வந்தான் கௌதம்.அவனை வரவேற்ற செந்தில்நாதன்,
"உக்காருப்பா...எப்போதும் சீக்கிரம் எந்திரிச்சுடுவான் நேத்து வந்த களைப்பாயிருக்கும் அதான் தூங்குறான்..."என்று கௌதமை ஹாலில் சோபாவில் அமர வைத்துவிட்டு ரூபனின் அறை நோக்கி செல்ல.கௌதம் அமர்ந்திருந்த சில வினாடிகளில் அவன் முன் காபியுடன் நின்றார் தேவகி.அவரைக் கண்டவுடன் தன் போல எழப் பார்க்க,

"உக்காருப்பா....நேத்து ஏதோ ஒரு கோபத்துல உன்கிட்ட கொஞ்சம் கடுமையா பேசிட்டேன்...என்னை மன்னிச்சிடுப்பா..."என்று அவர் மன்னிப்பை வேண்ட கௌதமிற்கு தான் சங்கடமாக போனது,

"அய்யோ...மன்னிப்பெல்லாம் எதுக்கு ஆன்ட்டி...நான் எதுவும் நினைக்கல..."என்றவன் அதோடு அமைதியாக அவனிடம் காபியைக் கொடுத்தவர்,

"இனி அந்த பொண்ணை பத்தி எங்க கிட்ட எதுவும் சொல்லாத...எங்களுக்கு அது தேவையில்லாதது..."என்று அழுத்தமாக கூறிவிட்டு சென்றார்.அவர் உள்ளே சென்றவுடன் தான் கௌதமிற்கு மூச்சே சீரானது போல இருந்தது.அதற்கு தேவகியின் ஆளுமையும் நிமிர்வும் ஒரு காரணம்.

"சாரி கொஞ்சம் லேட் ஆகிடுச்சு..."என்றபடி வந்தான் சிவரூபன்.கண்கள் இரண்டும் சிவந்து இப்போழுது தான் எழுந்து தன்னை சுத்தப்படுத்தியிருப்பான் போலும் முகத்தில் ஆங்ஆங்கே நீர் திவளைகள் தெரிய,

"பரவாயில்லை சார் புது இடம் இல்ல அதான்..."என்று கௌதம் கூற அவனை பார்த்து சிறிதாக புன்னகைத்தவன்,

"இல்ல இது எனக்கு பழைய இடம் தான்....தூங்க கொஞ்சம் லேட்டாகிடுச்சு அதான்..."என்றவன் கௌதமிடம்,

"சைட் எந்த ஏரியா...எப்ப போகலாம்..."என்று தன் வேலையில் இறங்க கௌதமும் அவனுக்கு தேவையான தகவலைக் கொடுத்தவன்,

"ஈவினிங் சைட்டுக்கு போகலாம் சார்...இப்ப நீங்க வந்தீங்கனா நம்ம ஆபிஸ்ல கொஞ்சம் வேலையிருக்கு..."என்றான்.கௌதம் ஆபிஸ் என்றவுடன் சிவரூபன்,

"கௌதம் எனக்கு ஆபீஸ்க்கு சின்னதா இடம் பார்க்க சொன்னேனே என்ன ஆச்சு..."என்று கேட்க

"சார்...இரண்டு இடம் பார்திருக்கேன் சார் நீங்க வந்து பார்த்துட்டு ஓகே சொன்னா வாடகை மத்ததெல்லாம் பேசிடலாம்..."என்றவன்

"இப்ப என்னோட ஆபீஸ்ல உங்களுக்கு ஒரு கபின் ரெடி பண்ணியிருக்கேன்...அத நீங்க யூஸ் பண்ணிக்கலாம்.."என்றான்.

"தேங்க்ஸ் கௌதம்...கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நான் சேஞ் பண்ணிட்டு வரேன்.."என்றவன் உள்ளே சென்றுவிட கௌதமிற்கு தான் தேவகி திரும்பியும் வந்துவிடுவாரோ என்ற பயத்தில் நடுக்கத்துடன் அமர்ந்திருந்தான்.கௌதமின் நிலை உணர்ந்த ரூபனும் வேகமாக உடை மாற்ற வர இருவரும் கிளம்பினர்.

கௌதமின் அலுவலகத்தில் சில வேலைகளை முடித்தவர்கள் நேராக சைட்டிற்கு செல்ல மாளிகை போல கம்பீரமாக இருந்தது கட்டிடம்.அதில் ஒரு பகுதி அரசாங்க வேலையிடமாகவும் மற்றொரு பகுதி வேலை சம்மந்தப்பட்ட தொகுப்புக்கள் வைக்கப்படும் இடம்.கட்டிடப் பணி முடியும் தருவாயில் இருக்க கௌதமும்,ரூபனும் கட்டித்தை சுற்றிப் பார்த்தப்படி வந்தனர்.ரூபன் ஒவ்வோரு இடத்திலும் எவ்வாறு பொருட்கள் அமைய வேண்டும் என்று மனதில் கணக்குப் போட்டப்படி வர கௌதமோ இன்னும் என்ன என்ன வேலைகள் பாக்கி உள்ளது என்று பார்த்தபடி வந்தான்.ஒருவாறு அங்கு தங்கள் வேலைகளை முடித்தவர்கள் காரில் ஏற கௌதம்,

"சார் ரொம்ப டையட் ஆகிட்டங்களா..."என்றான்.அவனை புரியாத பார்வை பார்த்த ரூபன்,
"இல்லை...ஏன்..."என்று வினவ

"நேத்து தான் வந்தீங்க அதான் கேட்டேன்....இப்போ உங்களுக்கு ஆபீஸ் இடம் கேட்டீங்களே அதை போய் பார்த்துடலாமா..."என்று வினவ ரூபனும்,

"ஓகே போகலாம்..."என்றான்.கௌதமும் சரி ரூபனும் சரி வேலையை தவிர மற்ற எதையும் பேசிக்கொள்ளவில்லை.கௌதம் தேவகி கூறியதால் மதுவைப் பற்றிய பேச்சை நிறுத்தியிருக்க ரூபனோ நேற்று தன் அன்னை திட்டியதால் அவன் மதுவைப் பற்றி பேசவில்லை என்று நினைத்துக்கொண்டிருந்தான்.கௌதம் கூறியபடி இரு இடங்களை பார்த்தவனுக்கு பிடித்தம் இல்லாமல் போக இறுதியாக கௌதம் தன் நண்பன் ஒருவனின் பிளாட் காலியாக உள்ளது அதை பாருங்கள் என்று அழைத்து வந்திருந்தான்.

"சூப்பர் கௌதம் எனக்கு இந்த இடம் ரொம்ப பிடிச்சிருக்கு...இது நம்ம சைட்டுக்கு பக்கத்திலேயும் இருக்கு குட்..."என்றவன்,

"உன் பிரண்ட் எங்க..."என்று கேட்க,

"சார் அவன் வெளிநாட்டுல வேலை பார்க்குறான்...அதான் நான் பார்த்துக்குறேன்..."என்று கூறினான்.ரூபனுக்கு அந்த பிளாட் பிடித்திருந்தால் அதையே ஆபீஸ் ஆக உபயோகிக்க முடிவு செய்து இருவரும் கார் நிறுத்தும் இடம் வர அப்போது கௌதமின் கைபேசி அழைக்க,

"சார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..."என்று ரூபனிடம் கூறிவிட்டு அவன் சற்று தள்ளி நின்று பேச ரூபனோ அந்த இடத்தை சுற்றி பார்த்தபடி இருக்க அவனது கண்களில் விழுந்தாள் மதுமிதா.கையில் சில மளிகை சாமான்களுடன் தான் வேலை செய்யும் சூப்பர் மார்கேட்டிலிருந்து அவள் வெளி வர சிவரூபனுக்கு முதலில் அவளை அடையாளம் தெரியவில்லை பின் ஊன்று கவனிக்க அது மது தான் ஊர்ஜீகமானது.எப்பொழுதும் சுடிதாரில் பார்த்தவனுக்கு அவளை சேலையில் காணவும் மூச்சடைத்தது.இவர்கள் பார்த்திருக்கும் பிளாட்டின் எதிர் புறம் தான் மது வேலை செய்யும் சூப்பர் மார்கேட்.வைத்தக்கண் வாங்காமல் ரூபன் பார்த்துக் கொண்டிருக்க

"சார் போலாம்..."என்று அவனது சிந்தனையைக் களைத்தான் கௌதம்.

"ஆங்...போலாம்.."என்ற ரூபன் திரும்பியும் மதுவைக் காண அவளோ தன் ஸ்கூட்டியை ஸ்டார் செய்துகொண்டிருந்தாள்.ரூபன் திரும்பி திரும்பி பார்த்தபடி காரின் உள்ளே அமர,

"யாரை சார் பார்க்குரீங்க..."என்றுவிட்டு அவனும் ரூபன் பார்வை சென்ற இடத்தில் பார்வை பதிக்க அங்கே மதுவைக் கண்டவுடன் அதிர்ச்சியானான்.கௌதமும் கல்லூரி காலங்களில் அவளைக் கண்ணடதோடு சரி அதற்கு பிறகு பார்த்ததில்லை.கௌதமும்,மதிவும் ஒரே கல்லூரி ஆனால் வேறு பிரிவு.இருவரும் கேண்டீன் நண்பர்கள்.ஆம் கல்லூரி கேண்டீனில் தான் அவளை முதலில் கண்டது.தன் நண்பர்களுடன் எப்போதும் சிரிப்பும் கும்மாளமுமாக இருப்பாள்.துருதுருவென்று இருக்கும் மதுமிதாவை கண்டு கௌதமே அவளிடம் நட்புக் கரம் நீட்ட எந்தவித பந்தாவும் பண்ணாமல் அவளும் கரம் நீட்டினாள்.அதிலிருந்து ஆரம்பமானது தான் கௌதம்,மதுமிதா நட்பு.கல்லூரி முடிந்து ஒரு வருடம் தொடர்பில் இருந்தவள் பின் தொடர்பு அற்று போனது.கௌதமும் படிக்க வெளியிடம் சென்றுவிட அவனும் மதுவை மறந்து தான் போனான் நேற்று சிவரூபனை பார்க்கும் வரை.ஆம் ரூபனை மது தான் அவளின் அத்தான் என்று இரண்டொருமுறை அறிமுகம் செய்தாள்.

ரூபனைக் காணும் போது மதுவின் கண்களில் மலர்ச்சியே அவள் ரூபனை விரும்புகிறாள் என்று உணர்ந்து கொண்டான் கௌதம்.சொந்தம் வேறு எந்தவித பிரச்சனையும் வராது என்று அவன் நினைத்திருக்க அனைத்தும் பிரச்சனையாகி போனது அவர்கள் வாழ்வில் என்று கௌதமுக்கு தெரியவில்லை.இருவரும் தங்கள் நினைவுகளில் இருக்க "டமார்"என்ற சத்தமும் அதோடு சிலர் கூச்சல் போடும் சத்தமும் கேட்க அதில் முதலில் தெளிந்த ரூபன் என்ன என்று காரை திறந்துகொண்டு இறங்க கௌதமும் இறங்கினான்.அவர்கள் காரின் பின்னால் சற்று தூரத்தில் மக்கள் கூடி இருக்க அந்த இடத்திற்கு இருவரும் வேகமாக செல்ல அங்கே ஸ்கூட்டி கவிழ்ந்து தலையிலிருந்து குருதி பாய கிடந்தாள் மதுமிதா.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

ஹ்ம்ம்.......பூமிநாதன் அப்பன் செய்த திமிர்த்தனம் மகள் மதுவுக்கு கேடாக வந்து முடிந்ததோ?
முன்னாடி என்னதான் நடந்ததுன்னு பிளாஷ்பேக் எப்போ வந்து சொல்லுவீங்க, காயத்ரி டியர்?
ரூபனின் பிளாட்டுக்கு எதிரிலேயே மது வேலை பார்க்கும் சூப்பர் மார்க்கெட் இருக்கா?
சூப்பர் ரூபா
அச்சோ
மதுமிதாவுக்கு என்ன ஆச்சு?
ஸ்கூட்டி எப்படி கவிழ்ந்தது?
 

Ambal

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

ஹ்ம்ம்.......பூமிநாதன் அப்பன் செய்த திமிர்த்தனம் மகள் மதுவுக்கு கேடாக வந்து முடிந்ததோ?
முன்னாடி என்னதான் நடந்ததுன்னு பிளாஷ்பேக் எப்போ வந்து சொல்லுவீங்க, காயத்ரி டியர்?
ரூபனின் பிளாட்டுக்கு எதிரிலேயே மது வேலை பார்க்கும் சூப்பர் மார்க்கெட் இருக்கா?
சூப்பர் ரூபா
அச்சோ
மதுமிதாவுக்கு என்ன ஆச்சு?
ஸ்கூட்டி எப்படி கவிழ்ந்தது?
நன்றி தோழி.....பிளேஷ்பேக் இன்னும் இரு எப்களுக்கு பிறகு வரும் தோழி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top