மயக்கும் மான்விழியாள் 8

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..

மயக்கும் மான்விழியாள் 8

மதுவிடம் தனது திட்டத்தைக் கூறி தன் வீட்டுக்கு இழுத்து வந்திருந்தாள் நிவேதா.இதில் அக்கா நீ எதுவும் பேசாதே என்ற கட்டளை வேறு.மதுவிற்கு தன் வீடு நெருங்க நெருங்க சற்று பயமாக இருந்தது.அவளது பயம் முகத்திலும் தெரிய அதைக் கண்டுக் கொண்ட நிவி அவளது கைகளில் அழுத்தம் கொடுத்து,

"அக்கா...நீ தேவையில்லாம பயப்பிடாத...எல்லாம் நல்லபடியா நடக்கும்...சரி நான் முதல்ல உள்ள போறேன் நீ கொஞ்ச நேரம் கழிச்சு வா நம்ம இரண்டு பேரையும் சேர்த்து பார்த்தா சந்தேகம் வரும்..."என்றுவிட்டு வீட்டிற்குள் செல்ல மது தெருவின் முனையிலேயே நின்றுவிட்டாள்.

மதுவின் மனதில் நிவி சொல்வது போல அனைத்தும் நல்லவிதமாக முடியவேண்டும் என்ற வேண்டுதல் மட்டுமே.அவளுக்கு வசந்தாவைப் பற்றி தெரியும் அவர் ஒரு விஷயத்தில் முடிவெடுத்துவிட்டால் அதை நடத்தியே தீருவார்.அதனாலே எது செய்வது என்றாலும் யோசித்து நிதானமாக தான் செய்யவேண்டும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள் தன் வீட்டை நோக்கி நடைப்போட்டாள்.

மது வீட்டுற்குள் நுழையும் போது வீட்டில் ஒரே சத்தமாக இருக்கவும் வேகமாக உள்ளே நுழைய அங்கு ஹாலில் வசந்தா தங்கள் குடும்ப ஜோசியரிடம் ஏதோ தீவிரமாக கேட்டுக் கொண்டிருக்க எதிர் சோபாவில் அமர்ந்து கொண்டு தங்கள் வீட்டையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார் சுதீப்பின் தாயார் கீதா.நிர்மலும்,நித்யாவும் ஏதோ முக்கியமான விவாதத்தில் இருக்க சுதீப்போ தன்னை யாரும் பார்க்கவில்லை என்ற தைரியத்தில் நிவேதாவை அங்குலம் அங்குலம் ரசித்துக் கொண்டிருந்தான்.அவனது பார்வை போகும் இடங்களை கண்டு மதுவிற்கு கோபம் தலைக்கேர அவர்களை நெருங்கும் நேரம் அவளை பின்னே இழுத்ததுக் கொண்டு சென்றார் சுந்தரி.

மாலை நேர வேலைகளை செய்து கொண்டிருந்த சுந்தரி பக்கத்துவீட்டில் இன்று அனைவரும் சற்று பரபரப்புடன் இருப்பதைக் கண்டும் காணாதது போல இருந்து கொண்டார்.ஆனால் சற்று நேரம் கழித்து நிர்மலின் வீட்டார் வரவும் சுந்தரிக்கு அவர்களின் வருகை எதனால் என்று புரியவில்லை.அவர் ஏதோ யோசனையில் வேலை செய்ய வெளியில் கேட்ட சத்தில் பூமிநாதன் சுந்தரியிடம் என்ன என்று கேட்க அவரோ வந்திருப்பவர்களை கூற பூமிநாதனுக்கும் சற்று குழப்பம் என்ன திடீர் என்று பின் கத்திரிக்காய் முத்தினால் வெளியில் வரும் என்பது போல அமைதியாக இருந்துவிட்டார்.
சுந்தரி பூமிநாதனுக்கு தேவையான உதவிகளை செய்துவிட்டு வெளியில் வர ஹாலில் அவர்களுடன் தங்கள் குடும்ப ஜோசியரைக் காணவும் சுந்தரிக்கு நிர்மல் குடும்பத்தாரின் வருகைக்கான காரணம் புரிந்தது.அவர்கள் நிவேதாவை பெண்கேட்டு வந்திருக்கிறார்கள் என்று.ஏன் இவ்வளவு அவசரம் என்று மனதில் தோன்றினாலும் அமைதியாக இருந்துக் கொண்டார்.இப்போது மகள் ஏதோ கூறப்போகவும் வசந்தா அவளை அனைவர் முன்னும் கண்டபடி பேசிவிடுவாரோ என்ற அச்சத்தில் உள்ளே இழுத்து வந்திருந்தார்.

"மதுமா...நமக்கு எதுக்கு அவங்க வீட்டு விஷயம்...வேண்டாம்..."என்று மறத்தவரை முறைத்தவள்.

"அதுக்காக அந்த பொறுக்கிக்கு நம்ம நிவிய கல்யாணம் பண்ண சொல்ரீங்களா...இத்தனைப் பேர் இருக்கும் போதே எப்படி பார்குறான் பாருங்க...எனக்கு வர கோபத்துக்கு அவன் கண்ணு இரண்டையும் நோண்டிடலாம்னு இருக்கு..."என்று கோபமாக கேட்டவள் திரும்பி ஹாலை நோக்கி செல்ல அங்கே ஜோசியரிடம் ஏதோ விவாதம் செய்துக் கொண்டிருந்த வசந்தாவிடம்,

"என்ன சம்மந்தி நீங்க இந்த காலத்துல இந்த ஜோசியம் அதெல்லாம் நம்பிக்கிட்டு..."என்றார் கீதா.கீதாவிற்கு எப்படியேனும் இதே வீட்டில் தன் இரண்டாவது மகனையும் திருமணம் செய்தால் இந்த சொத்து மொத்தத்தையும் நாம் அடைந்துவிடலாம் என்ற எண்ணம்.பக்கத்துல இருக்குர அந்தாளும் சீக்கிரம் மண்டைய போட்டால் அதுங்களையும் விரட்டி விட்டுடலாம் என்று கணக்கு போட்டுக்கொண்டிருந்தார்.அதற்கு முட்டுக்கட்டை போடுவது போல ஜோசியர் சுதீப் மற்றும் நிவேதாவின் ஜாதகம் பொருத்தம் இல்லை என்றதோடு இல்லாமல் மீறி செய்தால் வீட்டில் உள்ளவருக்கு நல்லதில்லை என்று கூறவும் கீதா கட்டி வைத்த கோட்டை எல்லாம் தகர்வது போல இருக்கவும் அவர் வசந்தாவை தங்கள் வழிக்கு கொண்டு வரும் பொருட்டு இந்த ஜோசியம் இதெல்லாம் நம்பாதீர்கள் என்று கூற அதுவே அவர்களுக்கு எதிராக அமைந்தது.

வசந்தாவிற்கும் ஜோசியர் அவ்வாறு கூறியதில் சற்று வருத்தம் தான் என்றாலும் வேறு ஏதாவது பரிகாரம் செய்தால் சரியாகுமா என்று கேட்டுக் கொண்டிருக்க அதற்குள் கீதா இவ்வாறு கூறவும் அவர்கள் குடும்ப ஜோதிடர்,

"என்னாம்மா என்ன கூப்பிட்டு வச்சு அவமானபடுத்திரீங்களா...உங்களுக்கு நம்பிக்கையில்லைனா எதுக்கு என்ன கூப்பிட்டீங்க...நீங்களே எல்லாம் பேசிக்க வேண்டியது தானே...நான் சொல்லி இதுவரை எதுவும் தப்பானது இல்லை அது உங்களுக்கே தெரியும்...இனி உங்க இஷ்டம் என் கிட்ட இனி கேட்க வராதீங்க..."என்று யாருடைய பதிலையும் எதிர் பாராமல் சென்றுவிட்டார்.

வசந்தாவிற்கு அவர் அப்படி தங்களை கேவலமாக திட்டிவிட்டு செல்லவும் கோபம் தலைக்கேறியது,

"ஏன் சம்மந்தி இப்படி அவசரப் பட்டு பேசினீங்க நான் தான் பேசிக்கிட்டு இருக்கேன்ல அதுக்குள்ள என்ன அவசரம் உங்களுக்கு..."என்று கீதாவிடம் காய,

"எங்க அம்மா சாதரணமா தான கேட்டாங்க அதுக்கு அவரு கோச்சிக்கிட்டு போயிட்டா நாங்க என்ன பண்றது..."என்று தன் அம்மாவிற்கு சுதீப் சப்போர்ட் செய்ய அவனது பேச்சு வசந்தாவிற்கு மேலும் கோபத்தைத் தூண்ட,

"இங்க பாருங்க தம்பி அவர் எங்களுக்கு குடும்ப ஜோசியர்...நாங்க எந்த நல்ல காரியம் செய்யனும்னு முடிவு செஞ்சாலும் அவர் கேட்காம செய்யமாட்டோம்...ஏன் உங்க அண்ணன்,அண்ணி கல்யாணம் கூட அவர் தான் பார்த்து செஞ்சார்..இப்ப ஏதோ உங்க இரண்டு பேருக்கும் சரியில்லைனு சொல்லுராரு...நான் தான் ஏதாவது பரிகாரம் கேட்டுட்டு இருக்கேன்ல அதுக்குள்ள உங்க அம்மாவுக்கு என்ன அவசரம்...உங்களால அவரு எங்கள தான் திட்டிட்டு போராரு...."என்றவர் அதே கோப்பத்துடன் நிர்மலிடம் திரும்பி,

"இங்க பாருங்க மாப்பிள்ளை ஏதோ நீங்க சொன்னீங்கனு தான் நான் இதுக்கு ஒத்துக்கிட்டேன்...இப்ப ஜோசியர் ஏதோ சரியில்லைனு சொல்லுராரு...எனக்கும் இப்ப நடந்தெல்லாம் பார்த்தா மனசும் சரியில்லை அதனால உங்க தம்பிக்கு நீங்க வேற இடம் பார்த்துக்குங்க..."என்றவர் நிவேதாவிடம்,

"நீ உள்ள போமா...இங்க நடந்ததெல்லாம் எதையும் மனசுல வச்சுக்காத போ..."என்று விட்டு உள்ளே சென்றுவிட்டார்.

வசந்தா அவ்வாறு செல்லவும் தங்களை அவமானபடுத்திவிட்ட மாதிரி இருக்க நிர்மல் தன்கைகளை இறுக மூடி திறந்து தன்னை சமன் செய்தவன் மனதில் என் குடும்பத்தையே அவமானப்படுத்திருயா உன்னை சும்மா விடமாட்டேன் இந்த நிர்மல் யாருன்றது காட்டுறேன் என்று கருவினான்.அதற்குள் கீதாவும்,சுதீப்பும் வசந்தாவை வாய்க்கு வந்தபடி பேச அவர்கள் பேச்சை தடுத்து வெளியில் இழுத்துவந்தான்.

"என்னடா உன் மாமியார்காரி நம்மள அவமானப்படுத்துறா...நீ என்னடான எங்கள பேசக் கூடாதுனு இழுத்துட்டு வர..."என்று கத்த

"ம்மா...கொஞ்சம் சும்மா இருக்கியா...நானே செம கோபத்துல இருக்கேன்...நீ வேற..."என்று கீதாவிற்கு மேல் அவன் கத்த,

"நீ என்னடா நம்ம அம்மாவ கத்துர உள்ள உன் மாமியார் எங்கள அசிங்கப்படுத்தியது பத்தலனு நீ வேற செய்யுரியா..."என்று சுதீப்பும் தன் குரலை உயர்த்த நிலைமை கை மீறி போவதை உணர்ந்த நிர்மல்

"டேய்...நீயும் புரியாத மாதிரி பேசாத...நான் உங்களுக்காக தான் அமைதியா இருக்கேன்...என் திட்டமே வேற என்றவன்...எல்லாம் உங்கிட்ட நான் அப்புறம் பேசுறேன் நீங்க கிளம்புங்க..."என்று கூறி அனுப்பி வைத்தான்.

மதுவிற்கு இப்போது தான் மனது சற்று சமன்பட்டு இருந்தது இப்போதைக்கு நிவேதா பற்றி கவலையில்லை என்று நினைத்தவள்.சூப்பர்டி செல்லம் என்று நிவிக்கு குறுந்தகவல் அனுப்பிவிட்டு தன் வேலைகளை பார்க்க போனாள்.

வெகு நாட்களுக்கு பிறகு சற்று மனது சமன்பட்டிருந்தது மதுமிதாவிற்கு தன் வேலைகளை முடித்தவள் தன் படுக்கையில் படுக்க வெகு நாட்களுக்கு பிறகு எந்தவித கனவுகளும் இல்லாமல் உறக்கம் அவளை ஆட்க்கொண்டது.ஆனால் அது நீடிக்கபோவதில்லை என்று கேலி செய்தது விதி.யாரைக் வாழ்க்கையில் காணக்கூடாது என்று நினைத்தாளோ அவனின் முன்னே நாளை அவளை நிறுத்தப்போது தெரியாமல்.அவளது நாயகனோ தன் கனவுகளை நினைவாக்க வந்துக் கொண்டிருந்தான்.எந்த இடத்தில் வீழ்ந்தானோ அதே இடத்தில் தலைநிமிர.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

ஹா ஹா ஹா
பரவாயில்லையே
சின்ன பெண்ணுன்னு நினைத்த நிவேதா ஜோசியரை வைச்சு திருமணத்தை நிறுத்திட்டாளே
ரூபன் வர்றான் வர்றான்
வந்து மதுவை என்ன செய்யப் போறானோ?
 
Last edited:

Ambal

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

ஹா ஹா ஹா
பரவாயில்லையே
சின்ன பெண்ணுன்னு நினைத்த நிவேதா ஜோசியரை வைச்சு திருமணத்தை நிறுத்திட்டாளே
ரூபன் வர்றான் வர்றான்
வந்து மதுவை என்ன செய்யப் போறானோ?
நன்றி தோழி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top