மயக்கும் மான்விழியாள் 7

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..

மயக்கும் மான்விழியாள் 7

காலையில் எழுந்த மதுமிதாவிற்கு தன் பெரியம்மா வீட்டில் நிவேதாவை தவிர மற்ற இருவரும் ஏதோ பரபரப்புடன் இருப்பது போல தெரிந்தது.நேற்று நிர்மலின் பார்வை வேறு அவளுக்கு சற்று கலக்கத்தைக் கொடுத்திருக்க அதே யோசனையில் கிளம்பிக் கொண்டிருப்பவள் சிந்தனையை கலைத்தான் ஆனந்த்.

"அக்கா..."என்று அவன் அழைக்க தன் யோசனையில் இருந்து வெளி வந்தவள் தன் தம்பியைக் காண அவனோ ஏதோ தன்னிடம் சொல்ல தயங்குவது புரிய,

"என்ன நந்து...ஏதாவது சொல்லனுமா..."என்று கேட்டாள்.அவனோ ஆம் என்று தலையாட்ட,

"என்ன சொல்லு..."என்றாள் தமக்கை.

"அக்கா..அது வந்து..."என்று இவன் மேலும் தயங்க தன்னிடம் ஏன் தயங்குகிறான் என்று யோசித்தவள் அவனை கூறுமாறு ஊக்கினாள்,

"எதுவா இருந்தாலும் சொல்லு நந்து..."என்று கூற,

"அக்கா...பெரிய அத்தானோட தம்பி சுதீப் நேத்து இங்க வந்தாருக்கா...அம்மாவும்,அப்பாவும் டாக்டர் செக்கப் போயிருந்தாங்க...எனக்கு கடைசி கிளாஸ் சீக்கிரம் முடிஞ்சதால சீக்கிரம் வீட்டுக்கு வந்துட்டேன்...நான் உள்ள வரும் போது நிர்மல் அத்தான்,நித்தி அக்கா,பெரியம்மா,சுதீப் எல்லாரும் ஏதோ பேசிக்கிட்டு இருந்தாங்க நான் வரத பார்த்தோனே பேச்ச நிறுத்திட்டாங்க...நான் உள்ள போன உடனே..அவங்க ஏதோ ரகசியம் பேசறது போல பேசிக்கிட்டாங்க க்கா...நிவி அக்கா கிட்ட ஏதோ சொல்லாதனு சொன்னாங்க அது மட்டும் தான் என் காதுல விழுந்ததது...அக்கா நிவி அக்காவ ஏதோ செய்யப்போறாங்களோனு பயமா இருக்கு க்கா...அன்னக்கி உனக்கு சப்போர்ட் பண்ணதுக்கு பெரியம்மா எப்படி திட்டினாங்க அதான்..."என்று பயந்து கொண்டு கூற மதுமிதாவிற்கு அனைத்தும் விளங்கியது நேற்று நிர்மலின் பார்வையின் காரணம்.
எதிரே நின்ற தன் தம்பியின் பயந்த முகத்தைக் கண்டவள்,

"நீ பயப்படாத நந்து நான் இருக்கேன்ல பார்த்துக்குறேன்..."என்றாள்.

"போன தடவ செஞ்ச மாதிரி நிவி அக்காவ ஹாஸ்டல்ல சேர்த்துடுவாங்களா...பாவம் அக்கா எப்படி அழுதாங்க அதனால தான் அக்கா உன்கிட்ட சொன்னேன்..."என்றான் தம்பி.ஆனந்த் கூறுவது போல பூமிநாதன் அடிப்பட்டு இருந்த போது நிவி தங்களுக்கு ஆதரவாக பேசினால் என்பதற்காகவே அவளை காலேஜ் ஹாஸ்ட்டலில் சேர்த்தார் வசந்தா.தங்களுடன் இருந்தாள் கெட்டுவிடுவாள் என்று சொல்லுவிட்டு சேர்த்தார்.எவ்வளவு கூறியும் அவர் மனம் இறங்கவில்லை நிவியோ தன் படிப்பையே நிறித்திவிடுகிறேன் என்று மிரட்டியும் அவரது மனது இலகவில்லை.போகவேமாட்டேன் என்று அழுகையில் கரைந்தவளை ஒருவாறு தேற்றி ஹாஸ்ட்டல் அனுப்பியதே மதுமிதா தான்.

ஏற்கனவே தந்தையின் நிலையில் மனமுடைந்து இருந்தவள் தங்கையிடம் யார் என்ன கூறினாலும் நீ என் தங்கை தான் என்று உறுதியளித்து அனுப்பி வைத்தாள்.அது என்னவோ சிறு வயதில் இருந்தே நிவேதாவிற்கு மதுமிதா என்றால் உயிர் அதே போல் தான் மதுவிற்கும் நிவேதா என்றால் உயிர்.அவர்களது பினைப்பை கண்டு நித்யாவிற்கும்,வசந்தாவிற்கும் பொறாமையாக இருந்தாலும் முதலில் ஒன்றும் செய்யாமல் இருந்தவர்கள் அருணாச்சலத்தின் மறைவிற்குப்பின் மது இருக்கும் இடத்தில் நிவியை விடமாட்டார்கள்.அது இன்று வரை தொடர்கிறது.தன் தம்பியிடம் தைரியம் சொல்லி அனுப்பியவளுக்கு அவர்களது திட்டம் புரிந்து போக அதை எப்படி உடைப்பது என்று யோசிக்கலானாள்.

டெல்லியில் சிவரூபன் வீட்டில் மோகனா வீட்டையே தலைகீழாக்கிக் கொண்டிருந்தார்.தங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்ணிடம்,

"மாடில வடவம் காய வச்சேன் எடுத்துட்டு வா...அப்புறம் கோதுமையும் காய போட்டுருக்கேன் நல்ல உளர்ந்துட்டானு பாரு..."என்று கூறிக்கொண்டிருக்க தன் வேலைகளை பார்த்துக்கொண்டு இருந்த தேவகிக்கு தன் மாமியாரின் இந்த உற்சாகம் எதனால் என்று புரிந்தாலும் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தார்.செந்தில்நாதனோ தன் மனைவியை கட்டுப்படுத்த முயன்று தோற்றார்.ஆம் நேற்று காலை மருமகளும்,பேரனும் நம்ம எல்லாரும் சென்னை போகிறோம் என்று கூறியதில் இருந்து மோகனாவிற்கு தன் மகளை எப்படியேனும் காண வேண்டும் என்ற வேகம் பிறந்தது என்று கூறலாம்.

இருக்காதா பின்னே தன் மகளிடம் பேசியே நான்கு வருடங்களுக்கு மேல் ஆகிறது.யாரும் அவரை பேசக் கூடாது என்று தடுக்கவில்லை தான் இருந்தாலும் அன்று தாங்கள் ஆதரவற்று நின்ற போது மகள் தங்களை விட்டு சென்றது மனதை தைத்தது அதோடு முடிந்திருந்தால் கூட மன்னித்திருப்பார் தன் பேரனின் வாழ்வையும் அவர்கள் கேள்விக்குறி ஆக்க நினைத்தபோது வெறுத்தே போனது என்று கூறலாம்.தவறு செய்தவளுக்கு கிடைத்த தண்டனையை விட தவறே இழைக்காமல் தன் பேரன் நின்றது அன்றோடு தன் மகளின் தொடர்பு அறுந்தது என்று கூறலாம்.

திடீர் என்று பேரன் சென்னை செல்கிறோம் என்று கூறியவுடன் மோகனாவிற்கு தன் மகளின் நினைவுகள் ஆட்டிப்படைக்க மகளை எப்படியேனும் காண வேண்டும் என்று மனதில் உறுதி பிறந்தது.நாதன் கூட இது தேவையில்லாத ஒன்று என்று கூறியபோது கூட என் மகள் நான் பார்ப்பேன் என்று ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார்.
தன் அலுவலகம் கிளம்ப தயாராக வந்த ரூபன் தன் பாட்டியின் முகத்தில் கண்ட மலர்ச்சியைக் கண்டு,

"என்ன மோனூ...ரொம்ப ஹாப்பியா இருக்க போல...என்ன விஷயம்..."என்று வினவ மோகனாவோ,

"டேய் படவா...நீ தான சென்னை போகப்போறோம்னு சொன்ன அதான் அதுக்கு தேவையானதை எல்லாம் எடுத்து வச்சிக்கிட்டு இருக்கேன்..."என்றவர் மேலும் பேரனிடம்,

"சென்னை போன உடனே என்னையும் உன் தாத்தாவையும் உன் அத்தை வீட்டுக்கு அழைச்சிட்டு போடா...பார்க்கனும் போல இருக்கு..."என்று அவர் கூற ரூபனின் மலர்ந்த முகம் இறுக்கம் பெற்றது பாட்டியின் கேள்விக்கு பதில் கூறும் முன்,

"நீங்க ரெண்டும் பேரும் அங்க போக நான் ஏற்பாடு பண்றேன் அத்தை...அவனும் நானும் அந்த வீட்டுக்கு வரமாட்டோம்...."என்று சற்று அழுத்தமாக வந்தது தேவகியின் குரல்.அதுவரை தன் மாமியார் செய்வதை பொறுமையாக பார்த்தவர் தன் மகனை அவர்கள் வீட்டிற்கு அழைக்கவும் அனைத்து கட்டுபாடுகளையும் தகர்த்து தன் மனதில் உள்ளதை கூறினார்.ரூபனோ இதற்கு மேல் இங்கு இருந்தால் நிதானம் இழந்துவிடுவோம் என்று கருதியவன் எதுவும் பேசாமல் சென்றுவிட்டான்.

தன் பேரன் தனக்கு சாதகமாக பேசுவான் என்று நினைத்துருந்த மோகனாவிற்கு அவன் எதுவும் கூறாமல் சென்றது வலிக்க செய்ய கசங்கிய முகத்துடன் தன் கண்களை துடைத்தவரின் முன் தண்ணீர் டம்பளர் நீட்டப் பட அதை வாங்காம்ல முகம் திருப்பினார்.தேவகியோ தன் மாமியாரின் இந்த சிறுபிள்ளை தனமான செயலில் தனக்குள் சிரித்தவர் அவரின் கீழ் அமர்ந்து,

"அத்த என்னை மன்னிச்சுடுங்க...நீங்க என் நிலையிலிருந்து யோசிங்க...அவ்வளவு நடந்த பின்னும்..."என்று மேலும் அவர் கூற முடியாமல் மனதின் பாரம் தலைக்கு ஏற தன் தலையை மோகனாவின் மடியில் வைக்க அவரது கைகள் தன் போல் தேவகியின் தலையை வருடியது.

"நீங்க மறக்கலாம் அத்த என்னால முடியாது...அந்த இரண்டு மணிநேரம நானும் என் புள்ளையும் பட்ட வேதனை அதற்கு காரணமானவங்க நிழல் கூட என் புள்ள மேல பட வேண்டாம்... "என்று மனதுடைந்து தேவகி பேச அதற்கு மேல் முடியாமல்,

"மோகனா...நம்ம வேணும்னா போகலாம்...அவங்கள எதுலேயும் இழுக்காத...நீ ஏன்மா கலங்குற...கண்டத நினைச்சு மனச குழப்பிக்காம இரும்மா...நீ தான் எங்க எல்லாருக்கும் தைரியம் சொல்லுவ நீயே இப்படி உடைஞ்சா எப்படி போமா போய் வேலைய பாரு..."என்று தேவகியை தேற்றி அனுப்பினார்.

எப்போதும் தைரியமாக பேசும் மருமகள் இன்று உடைந்து அழுவதைக் காண முடியாமல் நாதன் தேவகியை திசைதிருப்பினார்.மோகனாவிற்கோ தேவகி இவ்வாறு கலங்குவார் என்று நினைக்கவில்லை தன் மகன் இறந்த போது கூட நிமிர்ந்து நின்று எதிர்கொண்டவர் இன்று கலங்கி மடி சாய்ந்தது மனதை உறுத்த அமர்ந்த வாக்கிலேயே இருக்க அவரின் நிலை உணர்ந்த நாதன் மனைவியின் தோள்கைளை தொட அவரது இடுப்பைக் கட்டிக் கொண்டு,

"நான் வேணும்னு எதுவும் சொல்லங்க...என்னைய அறியாம..."என்று முடிக்க முடியாமல் திக்கி திணர அவரது முதுகை ஆதரவாக தடவியவினார் அவருக்கும் மகளை காண வேண்டும் என்று மனது நினைக்கிறது தான் ஆனால் அங்கே சென்று மேலும் அவமானப்பட இப்போது உடலிலும் மனதிலும் தெம்பில்லை என்று எவ்வாறு கூறுவார்.மனைவி மனதை திறந்து கூறிவிட்டாள் தான் கூறவில்லை அவ்வளவு தான்.அதுவும் மகள் தன்னிடம் கடைசியாக கூறியது,

"அப்பா...நீங்க எல்லாம் ரொம்ப இங்க வராதீங்கப்பா...உங்கள கஷ்டபடுத்துவாங்க..."என்று கலங்கிய விழுகளோடு மகள் கூறியதை மனைவியிடம் கூறினால் மனதுடைந்துவிடுவாள் என்று கூறாமல் மறைத்திருந்தார்.ஏற்கனவே பயந்த சுபாவம் கொண்ட சுந்தரிக்கு தன் புகுந்த வீட்டார் அண்ணனின் திருமணத்திற்கு பிறகு தங்கள் குடும்பத்தை ஏளனப்படுத்துவதைக் காண சகிக்காமல் தான் தன் தந்தையிடம் அவ்வாறு கூறியது.அதையெல்லாம் நினைத்தவரது கண்களும் கலங்க அவரது கண்ணீர் துளி மோகனாவின் கைகளில் பட்டு தெரிக்க நிமிர்ந்து கணவனைக் காண அவரும் கலங்கியிருப்பதைக் கண்டு பதட்டத்துடன்,

"என்னங்க நீங்க ஏன் கலங்குரீங்க நான் இனி அவள பத்தி கேக்கலங்க..."என்று கூற பார்த்த நாதனுக்கு தான் பரிதாபமாக போனது.சும்மாவா சொன்னார்கள் பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்று.

மதுமிதா தன் வேலை நேரம் முடிந்து நேராக தன் தங்கையின் காலேஜ் சென்றவள் அவள் வருகைக்காக காத்திருக்க தன் தோழிகளிடம் பேசியபடி வந்தாள் நிவேதா வந்தவள் மதுவைக் கண்டு,

"ஓய் அக்கா...வாட் ஏ சர்ப்பரைஸ்...."என்று கூற அவளது தலையில் செல்லமாக கொட்டுயவள்.தன் தங்கையிடம்,

"நிவி...உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும் டி..."என்று மது கூற
"என்னக்கா எனக்கு அந்த சுதீப்ப கல்யாணம் செய்ய பார்க்குறாங்க அது தான...எனக்கு இது நேத்தே தெரியும்..."என்று சாதரணமாக கூற இப்போது ஷாக் ஆவது மதுவின் முறையானது.

"அக்கா இதுக்கே இப்படி ஷாக் ஆன என்னோட மொத்த பிளானும் கேட்டு ஷாக் ஆகு..."என்று நிவி கூற அவள் கூறிய விதத்தில் ஒருவித பதட்டம் தொற்றிக் கொள்ள இவளும் என்னை போல ஏதாவது ஏடாகூடமாக முடிவெடுத்துவிடுவாளோ என்று பயந்து,

"என்னடி சொல்லுர..என்ன செஞ்ச...ஏதாவது ஏடாகூடாமா செஞ்சுடாதடி..."என்று பதட்டத்துடன் கூற அவளது பதட்டம் உணர்ந்த நிவேதா,

"அக்கா கொஞ்சம் பதட்டபடாம நான் சொல்லரத கேளு..."என்றவள் தன் திட்டத்தைக் கூறினாள்.மதுவின் முகம் தெளியாமல் இருக்க நிவியோ,

"அக்கா நீ பயப்படாத நான் எல்லாம் முன்னாடியே பேசிட்டேன்...இந்த நேரம் நம்ம குடும்ப ஜோசியர் வந்திருப்பார்...வா நாம சீக்கிரம் போவோம்..."என்று மதுவையும் இழுத்துக்கொண்டு சென்றாள் நிவேதா.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

பெண்ணைப் பார்க்கும் ஆவல் இருந்தாலும் மோகனா மருமகளுக்கும் பேரனுக்கும் நேர்ந்ததை நினைத்தும் கவலைப்படும் அளவுக்கு சுந்தரி வீட்டில் என்ன நடந்தது?

நிவேதாவுக்கு என்ன கோளாறு செய்ய அவள் அம்மாவும் அக்காவும் சதி பண்ணியிருக்காளுங்க?
நிர்மலின் தம்பி சுதீப்புக்கும் நிவேதாவுக்கும் கல்யாணமா?

ஹா ஹா ஹா
நிவேதா என்ன செய்திருக்கிறாள்?
குடும்ப ஜோசியர் என்ன சொல்லப் போறாரு?
 
Last edited:

Ambal

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

பெண்ணைப் பார்க்கும் ஆவல் இருந்தாலும் மோகனா மருமகளுக்கும் பேரனுக்கும் நேர்ந்ததை நினைத்தும் கவலைப்படும் அளவுக்கு சுந்தரி வீட்டில் என்ன நடந்தது?

நிவேதாவுக்கு என்ன கோளாறு செய்ய அவள் அம்மாவும் அக்காவும் சதி பண்ணியிருக்காளுங்க?
நிர்மலின் தம்பி சுதீப்புக்கும் நிவேதாவுக்கும் கல்யாணமா?

ஹா ஹா ஹா
நிவேதா என்ன செய்திருக்கிறாள்?
குடும்ப ஜோசியர் என்ன சொல்லப் போறாரு?
நன்றி தோழி....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top