மயக்கும் மான்விழியாள் 6

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..

மயக்கும் மான்விழியாள் 6

தன் ரூம்மில் சென்னை செல்வதற்காக தனக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தான் சிவரூபன்.இன்னும் இருநாட்களில் கிளம்ப வேண்டும்.மகேஷ் சொன்ன அவனின் குடும்ப நண்பரிடம் பேசி தாங்கள் தங்க இடம் ஏற்பாடு செய்துவிட்டு தன் கட்டிலில் அம்ந்தவனுக்கு தன் அன்னையின் சொற்களே மனதில் ஓடிக்கொண்டிருந்தது.தனது வேலை சென்னை என்று தன் அன்னையிடம் தன் வீடு வந்தவுடன் சொன்னான்.தன் அன்னை யோசிப்பார் என்று நினைத்தவனுக்கு தேவகியோ கட்டியணைத்து தன் சந்தோஷத்தை வெளிபடுத்தியதோடு அல்லாமல்,

"உன்னோட சொந்த மண்ணுல நீ வேலை செய்ய போற ரூபா...அதுவும் கவர்மென்ட் பெரிய புராஜக்ட்க்கு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா...உன் அப்பா இருந்தா ரொம்ப சந்தோஷ பட்டுருப்பார்..."என்று அவனை ஊக்கப்படுத்தும் படி பேச சிவரூபனுக்கு தன் மனதில் இதுவரை அழுத்திக் கொண்டிருந்த ஏதோ ஒன்று இறங்குவது போல இருந்தது தன் அன்னையிடம் பேச,

"அம்மா...அது... சென்னை..."என்று மேலும் சொல்ல முடியாமல் அவன் தயங்க ரூபனின் தயக்கத்தை உணர்ந்த தேவகி,

"ரூபா...நீ எதுக்கு தயங்குறனு எனக்கு புரியது...நான் எதாவது மறுப்பு சொல்லுவேன்னு நீ நினைச்சியா..."என்றார் மகனிடம் அதற்கு சிவரூபன் இல்லை என்று தலையாட்டியவன்,
"நீங்க கொஞ்சம் யோசிப்பீங்கனு நினைச்சேன்..."என்றான் தன் உள்ளத்தை மறையாமல்.அவனது தலையை வாஞ்சையாக தடவியவர்,

"ரூபா...உனக்கு இப்ப முப்பது வயசாகிடுச்சு...உன்னோட முடிவ நீ தனியா எடுக்குற உரிமை உனக்கு இருக்கு...நீ தேவையில்லாதெல்லாம் யோசிக்காத...உன்னோட திறமையை நிருபிக்க இது தான் நல்ல சமயம் அதை மட்டும் யோசி...நான் உனக்கு எப்போதும் துணையா இருப்பேன்...நீ கவலைபடாத..."என்றவர் மேலும்,

"நம்ம எல்லாரும் சேர்ந்தே போகலாம்...என்னோட என்ஜிவோ அமைப்பு அங்கேயும் ஒரு கிளை திறந்திருக்காங்க...அங்க கையிட் பண்ண ஆள் வேணும்னு என்னை போக சொல்லி சொல்லிட்டு இருந்தாங்க நான் தான் உங்கள விட்டுட்டு போக யோசனை செஞ்சிட்டு இருந்தேன் இப்ப உனக்கும் அங்க தான் வேலை அதனால எல்லாரும் போவோம்...நாளைக்கு தாத்தா,பாட்டிக் கிட்ட சொல்லாம் இப்ப நீ போய் தூங்கு..."என்று அவனுக்கு மேலும் அதிர்ச்சியியை தந்து விட்டு சென்றார்.

சிவரூபனுக்கு தன் அன்னையின் மேல் அவ்வளவு கர்வம்.ஆம் கர்வமே தன் தந்தை கால் இழந்து அமர்ந்ததிலிருந்து தங்கள் குடும்பத்தின் முதுகெலும்பு போல உழைத்து தன்னையும் வளர்த்து ஆளாக்கி தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் தனக்கு உற்ற நண்பன் போல துணை நின்று என்று தன் அன்னையை நினைத்தாலே ரூபனின் மனதில் புது உற்சாகம் பிறக்கும்.அதே போல் தான் இன்றும் அவர் பேசியது அவன் மனதில் உள்ள சஞ்சலங்களை நீக்கியது.

மது தன் வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்ல கிளம்பியவள் தன் வண்டியை எடுக்க போக அங்கே தன் கை நகங்களை கடித்தபடி ஏதோ தீவிராக யோசனை செய்து கொண்டிருந்தாள் நிவேதா.இவளுக்கு இன்னும் இந்த பழக்கம் போகல என்று தன் மனதில் சொல்லிக்கொண்டவள் தன் வண்டியின் அருகில் போக மது வந்தது கூட தெரியாமல் தன் யோசனையில் இருந்தவளை,

"ஓய்..."என்று மதுமிதா பின்னிருந்து பயமுறுத்த அவளது செய்கையில் அதிர்ந்த நிவேதா கத்தபோக அவளது வாயை மூடி,

"ஏய் கத்தாதடி நான் தான்..."என்று தன் வெண்பற்்கல் தெரிய சிரித்தவளை கண்ணிமைக்காமல் பார்த்தாள் நிவேதா.தன் தமக்கை இது போல் சிரித்து சில வருடங்கள் ஆகிறது.எப்போதும் பூ போல் பூத்திருக்கும் மதுவின் முகம் சில கசப்பான சம்பவங்களுக்கு பிறகு சிரிப்பை துளைத்திருந்தது.அதன் பிறகு ஏதாவது சிரிக்கும் படி கூறினாள் கூட சிரிப்பது போல ஒரு பாவம் மட்டுமே அவளது முகத்தில் தெரியும்.ஆனால் இன்று அவளது பழய சிரிப்பைக் கண்டவள் மதுமிதாவையே விழியெடுக்காமல் பார்க்க.தன் தங்கை தன்னை ஒரு அதிசய பிறவி போல பார்பதைக் கண்டு தன் இரு புருவங்களையும் அழகாக தூக்கி விழிகளால் என்ன என்று கேட்க நிவேதாவோ,

"அய்யோ அக்கா நீ இது மாதிரி செஞ்சி எத்தனை நாள் ஆச்சு..."என்று நிவேதா துள்ளிக்குதித்தாள்.மது ஏதாவது சேட்டை செய்து விட்டு தப்பிக்கும் போதெல்லாம் இதே போல் செய்வது அவளது வழமை.இன்று ஏதோ நியாபகத்தில் மது நிவியை சேட்டை செய்தாள்.அதே போல் இந்த செய்கையும் தன் போல் வர நிவேதா அதையே கூறவும் தான் சற்று நிகழ்வுக்கு வந்தவள் முகம் சிரிப்பு துளைந்து கடினமுற்றது.

"இங்க என்ன செய்ற நிவி..."என்றாள்.

தன் தமக்கையின் மலர்ந்த முகம் மீண்டும் வாடியதை போலவே மாற,
"ஏன்கா...இப்படி இருக்க நல்லாவே இல்ல... "என்றவள் சற்று நேரம் தயங்கி பின் நேத்து அன்னை பேசியதற்க்கு மன்னிப்பு கேட்கும் வகையில்

"அது அக்கா அம்மா..." என்று மேலும் ஏதோ கூற வந்தவளை தடுத்தவளுக்கு நேற்றைய பேச்சுகளை திரும்ப கேட்க விருப்பமில்லை அதனால் அவள் நிவியின் பேச்சை தடை செய்து

"நிவி...என்ன விஷயமா இங்க வந்திருக்க...சொல்லு.."என்றாள்.

"அக்கா...அது நான் மேல படிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் க்கா...ஆனா ஒரு கண்டீஷன்..."என்றாள்.

"என்னடி பீடிகை ஜாஸ்தி இருக்கு என்னனு சொல்லு...."என்றாள் மது.

"நான் படிப்பேன் ஆனா பார்டைமா வேலையும் செய்வேன்...ஓகே னு சொல்லுங்க..."என்றாள்.

மது மறுத்துக் கூற வர அதை சரியாக கணித்த நிவேதா,
"அக்கா...ப்ளீஸ் வேண்டாம்னு மட்டும் சொல்லிடுதா...ப்ளீஸ்..."என்று கெஞ்ச.

"சரிடி எங்க வேலை எவ்வளவு நேரம் எல்லாம் சொல்லு அப்புறம் யோசிக்கலாம்..."என்று மறைமுக தன் சம்மததை தெரிவிக்க நிவேதாவிற்கு ஏக குஷி,

"அக்கா நம்ம நேஷனல் லைபெரரி இருக்குல்ல அங்க தான்.சாய்திரம் ஐந்து மணிலேந்து எட்டு மணி வரைக்கும்...எனக்கும் காலேஜ் முடிஞ்சு நேரா வேலைக்கு போகறதும் ஈஸிதான்..."என்று கூற நிவேதா கூறிய இடம் பற்றி மதுவிற்கும் நல்லா தெரியுமாதலால் அவளும் சரி என்று கூறினாள்.பின் சகோதரிகள் இருவரும் கதை அளந்தபடியே வீட்டை அடைந்தனர்.

வீட்டிலோ நிவேதாவின் கனவுகளை சிதைக்கும் விதமாக தன் திட்டத்தை வசந்தா மற்றும் நித்யாவிடம் கூறிக்கொண்டிருந்தான் நிர்மல்.

"அவக்கிட்ட எதுவும் சொல்லாதீங்க அத்த...அவ இந்த விஷயத்தை மதுக்கிட்ட சொல்லிடுவா..."என்று கூற அதற்கு வசந்தாவும்,நித்யாவும் ஆமாம் என்று தலையாட்டினார்கள்.இவர்களின் திட்டம் எதுவும் தெரியாமல் சிரித்தபடி உள்ளே வந்தனர் மதுமிதாவும்,நிவேதாவும்.அவர்களை கண்டவுடன் வசந்தா மதுவை முறைத்துவிட்டு சென்றார் என்றால் நித்யாவோ இவ எப்படி தான் எதுவும் நடக்காத மாதிரியே இருக்காளோ என்று மதுவை மனதில் வசைபாடியபடியே செல்ல.நிர்மலோ தன் இலக்கை அடைய முதல் படியை எடுத்து வைத்த சந்தோஷத்தில் அவர்களைக் கண்டு சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு சென்றான்.நிர்மல் சென்றவுடன் நிவியோ மதுவிடம்,

"என்னக்கா இந்த லூசு நம்மள பார்த்து சிரிச்சுட்டு போகுது...இதையும் இது பொண்டாட்டியையும் முதல்ல வீட்டை விட்டு துரத்தனும் க்கா..."என்று கடுகடுவென்று கூற மதுவோ நிர்மலின் முகத்தில் இருந்த சிரிப்பைக் கண்டவளுக்கு ஏதோ சரியில்லை என்று மனது கூற அதை பற்றிய யோசனையிலேயே இருந்தாள்.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

பார்றா
அம்மா என்ன சொல்லுவாளோன்னு பயந்தால் ரூபனின் குடும்பமே சென்னை வர்றாங்களா?
இதுவும் நல்லதுதான்
நாத்தனாரின் குடும்பம் இப்போ இருக்கும் நிலைமை தெரிந்தால் தேவகியின் மனம் இளகி விடுமோ?
மச்சினிச்சி நிவேதாவுக்கு நிர்மல் என்ன குழி பறிக்கிறான்?
 
Last edited:

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு
நிர்மல் என்ன திட்டம் போட்டு வச்சு
இருக்கான்
 

Ambal

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

பார்றா
அம்மா என்ன சொல்லுவாளோன்னு பயந்தால் ரூபனின் குடும்பமே சென்னை வர்றாங்களா?
இதுவும் நல்லதுதான்
நாத்தனாரின் குடும்பம் இப்போ இருக்கும் நிலைமை தெரிந்தால் தேவகியின் மனம் இளகி விடுமோ?
மச்சினிச்சி நிவேதாவுக்கு நிர்மல் என்ன குழி பறிக்கிறான்?
நன்றி தோழி...தேவகி மனம் இலகுவது கடினம் தான் பார்க்லாம்...
 

Ambal

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு
நிர்மல் என்ன திட்டம் போட்டு வச்சு
இருக்கான்
நன்றி தோழி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top