மயக்கும் மான்விழியாள் 3

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..



மயக்கும் மான்விழியாள் 3



சென்னை மாநகர் கிண்டியில் உள்ளது அந்த வீடு சற்று பழங்கால அமைப்பு நெடுநாளாக சுவற்றில் வண்ணம் தீட்டாமல் பெயிண்ட் உறிந்து கொட்டி பல இடங்களில் உள் சுவர் தெரிந்தது. வீடு இருபாகமாக பிரிக்கப்பட்டதன் அடையாலமாக அந்த வீட்டின் நடுவில் கோடு போடப்பட்டு இருந்தது.மிகச்சிறிய போர்ட்டிக்கோ போன்ற அமைப்பு அதில் ஒரு எமகா பைக் தன் இடத்தை முழுவதும் அடைத்திருந்தது.தன் பணிநேரம் முடிந்து வீடு திரும்பிய மது தன் வீட்டின் முன் நின்ற வண்டியைக் கண்டு எரிச்சல் மிகுந்தாலும் தன்னை முயன்று அடக்கியவள், தன் வண்டியை வாசலில் யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் ஸ்டாண்ட் போட்டுவிட்டு வீட்டின் உள்ளே நுழைய டீவியில்,

"ஹான்...

ஹான் ஹான் ஹான் ஹான்

ஹக் ஹான் ஹக் ஹான்

ஏய் என்னடா இது

சப்ப பீட்டு கொழுத்துங்கடா

ஆஅஹ் மஜாபா மஜாபா

இதான் இதான் இதான் இதான்

ஏய் இடிடா வாங்கடா

ஏ வாத்தி கம்மிங் ஒத்து..."விஜய்யின் பாடல் வாசல் தான்டி ஒலிக்க,வீட்டின் உள்ளே வரவேற்பறையில் உள்ள சோபாவில் அமர்ந்து டீவியைப் பார்த்துக்கொண்டிருப்பவரைக் கண்டு மேலும் எரிச்சல் அதிகமாக தன் கை முஷ்டிகளை இறுக மூடி திறந்தவள் வேகமாக தன் அறைக்கு சென்று மறைந்தாள். அவள் வந்தது தன்னைக் கண்டு எரிச்சலுற்றது அனைத்தையும் கண்டும் காணாமல் அமர்ந்திருந்தான் நிர்மல்.

வேகமாக தன் அறைக்கு வர அங்கே தன் புத்தகத்தையும் டீவியையும் மாறி மாறி பார்த்தபடி அமர்ந்திருந்தான் அவளது அருமைத் தம்பி ஆனந்த்.அவனது தலையில் செல்லமாக ஒரு கொட்டு வைத்தவள்,

"டீவி பார்க்கனும்னா ஹால்ல நல்ல உக்கார்ந்து பாரு...இப்படி ஒளிஞ்சி பார்க்கிறேனு கழுத்த வலிக்க போகுது..."என்று கூற அவளது தம்பியோ,

"இல்லக்கா... இல்லக்கா... எனக்கு நாளைக்கு பரீட்சை இருக்கு நான் படிக்கனும்...ஆனா சத்தம் அதிகமா இருக்கவும் என்னனு பார்த்தேன்..."என்று அசடு வழிய கூற அவனை வாஞ்சையாக பார்த்தவள் அவனது தலைக்கோதிவிட்டு உள்ளே சென்று கையில் இரு பஞ்சு துண்டுகளை எடுத்து வந்து,

"இந்தா இத காதுல வச்சுக்கிட்டுப் படி..."என்று ஆனந்தின் இரு காதுகளிலும் பஞ்சை திணித்துவிட்டு குளியல் அறைக்கு சென்றாள்.ஐந்து நிமிடத்தில் தன்னை சுத்த படித்தி வெளிவர அவளுக்கு காபியுடன் நின்றார் அவளது அன்னை சிவசுந்தரி.அவரை ஒரு முறைத்துவிட்டு அவர் தந்த காபியைப் பருகியவள் அவரிடம் டம்பளரை கொடுத்து விட்டு தந்தைக் காண சென்றாள்.செல்லும் அவளையே ஒருவித இயலாமையோடு பார்த்துக்கொண்டு நின்றார் சுந்தரி.

தன் தந்தையின் அறைக்குள் நுழைந்தவள் அவருக்கு தேவையான மாத்திரைகளை அதன் டப்பாக்களில் பிரித்து வைத்துவிட்டு கட்டிலைக் காண பூமிநாதனோ தன் மகளையே வெறித்துக்கொண்டிருந்தார் ஆழ்ந்த மூச்சொன்றை இழுத்துவிட்டவள் தன் அப்பாவின் பக்கத்தில் அமர மதுவின் கரங்களை தன் கரங்களுக்குள் கொண்டுவந்து கண்களை ஒற்றியனார் பூமிநாதன். மனது கொதித்தது தன் அறியாமையால் செய்த தவறுகள் மகளை எங்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டது என்று தகப்பனாக வருந்தியவர் கண்களும் கசிய தொடங்க மதுவிற்கு தந்தையின் உடல் குளுங்குவதிலேயே அவர் அழுகிறார் என்று உணர்த்த,

"அப்பா..போதும்...இப்படி உங்கள நீங்களே வருத்திக்காதீங்க ப்ளீஸ்...நீங்க எதுக்கும் காரணம் இல்ல...அதையே யோசிச்சு உங்க உடம்ப இன்னும் கெடுத்துக்காதீங்க எனக்காக ப்பா ப்ளீஸ்..."என்றாள் மன்றாடலாக.எப்பொழுதும் இது போல் செய்தால் தன்னை மிரட்டும் மகள் இன்று மன்றாடவும் தலை நிமிர்ந்து பார்க்க மதுவின் கண்களும் கலங்கியிருந்தது.தன் தந்தையின் பார்வை உணர்ந்தவள்,

"நானும் மனுஷி தான்ப்பா...நான் மறக்கனும்னு நினைக்கற விஷயத்த நீங்க திரும்ப திரும்ப நியாபகப்படுத்திரீங்க...போதும்ப்பா நான் உடைஞ்சிருவேனோனு பயமா இருக்கு...நம்ம இதபத்தி பேசறது இதுவே கடைசியா இருந்தா உங்க பொண்ணுக்கு நல்லது... "என்றவள் அதற்கு மேல் இருந்தால் உடைந்துவிடுவோம் என்று சென்றுவிட்டாள்.

பூமிநானுக்கு மகளின் வார்த்தைகளே ரீங்காரமிட்டது அவளது கலங்கிய முகம் மேலும் அவரது உள்ளத்தை வால் கொண்டு அறுக்க எதுவும் செய்யமுடியாத தன் நிலையை எண்ணி வெதும்பினார்.தன் மகள் சென்றவுடன் கணவனைக் காண வந்த சுந்தரி அவரது கலங்கிய விழிகளைக் கண்டு பயந்து,

"என்னங்க என்ன பண்ணுது...ஏன் இப்படி கலங்குறீங்க சொல்லுங்க..."என்று படபடக்க பூமிநாதனோ எந்தவித பதிலும் தராமல் இருக்கவே மேலும் பயந்தவர்,

"என்னங்க என்னங்க..."என்று அவரது தோள்களை உலுக்கினார்.மனைவியின் தொடுகையில் சுயத்துக்கு வந்தவர் மனைவியின் கலங்கிய முகத்தைக் கண்டு,

"என்னமா ஏன் இப்படி பயப்படுற...எனக்கு ஒண்ணும் ஆகாது...என் பொண்ணுக்கு ஒரு நல்லத செய்யாம போகமாட்டேன் பயப்படாத..."என்றார் அவரது கைகளை தட்டிக்கொடுத்தபடி மகள் ஏதோ கூறியிருக்கிறாள் என்று உணர்ந்த சுந்தரி,

"மது ஏதாவது சொன்னாளா.."

"அவ என்ன சொல்ல போறா...எப்போதும் வார்த்தையால என்ன மிரட்டுரமாதிரி பேசிட்டு போவா...இன்னக்கி கண் கலங்கி நிஜமாவே என்னை மிரட்டிட்டா..."என்றார் கலக்கமாக.கணவரின் பேச்சில் பயந்த சுந்தரி,

"என்னங்க சொல்ரீங்க...என்ன சொன்னா..."என்றார்.பூமிநாதனோ மனைவியைக் கண்டு ஒரு விரக்த்தி புன்னகை புரிந்தவர்,

"நாம செஞ்ச பாவம் நம்ம மகளை படுத்துது சுந்தரி...எப்போதும் சிரிச்சுக்கிட்டே பேசுற என் பொண்ணு இன்னக்கி உடைஞ்சிட்டா...அவ கண்ணீரைக் கூட தொடைக்க முடியாம நான் கிடக்கேன்...நான் எல்லாம் என்ன அப்பன் ச்சை..."என்று தன்னை திட்டிக்கொண்டவர் தன் மனைவியிடம் இருந்து எந்தவித பதிலும் வராமல் போகவே சுந்தரியைக் காண அவரோ பூமிநாதனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு,

"இன்னக்கி நீங்க உடைஞ்ச மாதிரி தான அன்னக்கி அவங்களும் இருந்தாங்க..."என்றார் அன்றைய நாளின் நினைவில்.மனைவியின் பதிலைக் கேட்டவருக்கு மனது கனத்தது.தன் கணவனின் அதிர்ந்த முகத்தைக் கண்டவர் அவரிடம்,

"நம்ம இரண்டு பேரும் தான் அவளுக்கு ஏதாவது நல்லது செய்யனும்...அதுக்கு உங்களுக்கு உடம்பு நல்ல இருக்கனும்...அதனால மனச ஒழட்டாம தூங்குங்க..."என்றார்.மனைவியின் கூற்றில் உள்ள உண்மையை உணர்ந்தவர் தன்னை சமன் செய்து தூங்க முற்பட,

"சித்தி..சித்தப்பா...தூங்கிட்டீங்களா..."என்றபடி வந்தாள் நிவேதா.பூமிநாதனின் அண்ணன் அருணாச்சலத்தின் இளைய மகள்.

"ப்பா...இன்னும் தூங்கல...இந்தாங்க இனிப்பு...எடுத்துக்கோங்க..."என்றாள்

"என்னடி இனிப்பு எல்லாம் கொடுக்குற என்ன விஷயம்..."என்றார் சுந்தரி.சித்தப்பாவிற்கு தன் கையால் இனிப்பை ஊட்டியவள்,

"எனக்கும் வேலை கிடைச்சிடுச்சு சித்தி...நானும் இனி அக்கா போல வேலைக்கு போகப் போறேன்..."என்றாள் உற்சாகமாக.

"என் சின்னக்குட்டி அவ்வளவு பெரியவளாகிட்டாளா..."என்றார் பூமிநாதன்.

"ஆமா சித்தப்பா...நான் பெரிய பொண்ணாகிட்டேன்.." பாருங்க என்று எழுந்து தன் உயரத்தைக் காண்பித்தவள் தன் சித்தியிடம் திரும்பி,

"எங்க என் செல்ல அக்காவ காணும்..."என்றாள்.மகளைப் பற்றிக் கேட்கவும் இவ்வளவு நேரம் இருந்த இயல்பு நிலை மாறி ஒருவித இறுக்கம் சூழ்ந்தது அதைக் கண்ட நிவேதா,

"சித்தி அதான் நானும் இப்ப வேலைக்கு போறேன் இல்ல..எல்லாம் சரியா போகும் நீங்க கவலைய விடுங்க...இப்ப சொல்லுங்க எங்க அக்கா..."நிவேதாவின் பேச்சில் சற்று இயல்புக்கு வந்தனர் பெரியவர்கள்.

"அவ மொட்ட மாடிக்கு போனாடா...நீ போய் பாரு..."என்று சுந்தரி கூற சரி என்று கூறி நகரப் போனவளை தடுத்த சுந்தரி,

"உங்க அம்மாகிட்ட சொன்னியா நிவி..."என்றார் சந்தேகமாக அவருக்கு தெரியும் நிவேதா சொல்லியிருக்க மாட்டாள் என்று அவர் நினைத்ததை போலவே சொல்லவில்லை என்று அவளது பதிலில் உணர்ந்தார்,

"அவங்களுக்கு எதுக்கு சொல்லனும்..."என்றவள் நிக்காமல் சென்றுவிட்டாள்.

மாடியில் வானத்தை வெறித்துக் கொண்டிருந்தாள் மதுமிதா எப்போதும் மலர்ந்து இருக்கும் கண்கள் இப்போது கலங்கி எதையோ இழந்தது போல காட்சியளித்தது.வாழ்கை என்பது என்ன என்று கடந்த நான்கு வருடங்களில் கற்றுக்கொண்டாள் தன் சொந்தபந்தங்களாலேயே.ஒருவகையில் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று மனதில் நினைப்பாள் ஏன் என்றால் வாழ்க்கையின் மறுபக்கத்தை காண்பித்தற்கு இன்பத்திலேயே மிதந்தவளுக்கு துன்பம் எவ்வாறு இருக்கும் என்று படம் போட்டு காட்டிவிட்டனர்.

"உனக்கு காசோட அருமை தெரியல...அதான் இப்படி இருக்க..."என்று திடீர் என்று ஒரு குரல் இன்றும் காற்றில் கலந்து அவளுக்கு கேட்டுக்கொண்டு இருந்தது.அவளது உணர்விலும் மனதிலும் கலந்துபோனவனைக் காற்றில் தேடின அவளது கண்கள்.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சிவராமனின் தங்கை சிவசுந்தரியின் கணவர் பூமிநாதனுக்கு என்னவாச்சு?
ஏன் படுக்கையில் இருக்கிறார்?
உடல்நிலை சரியில்லையா?

பூமிநாதனின் அண்ணன் அருணாச்சலம் தம்பியை மோசம் செய்து விட்டாரோ?

அன்னிக்கு சிவராமனுக்கு இரண்டு கால்களும் போனப்போ பூமி ஒண்ணும் கண்டுகொள்ளாதது தவறுன்னு சுந்தரி சொல்லுறாங்களோ?

ஆனால் மதுமிதா ஏன் இப்படி இருக்கிறாள்?
என்ன காரணம்?

நிர்மல் யாரு?
பரீட்சைக்கு பையன் படிக்கும் பொழுது சத்தத்தை ஜாஸ்தியா வைச்சு டி வி பார்க்கிறானே கூமுட்டை நிர்மல்
 

Saroja

Well-Known Member
அண்ணன் பொண்ணு
அவ அம்மா கிட்ட வேலை
கிடைச்சது சொல்லவில்லை
மது ஏன் இப்படி இருக்கா
நிர்மல் யார்
 

Ambal

Well-Known Member
சிவராமனின் தங்கை சிவசுந்தரியின் கணவர் பூமிநாதனுக்கு என்னவாச்சு?
ஏன் படுக்கையில் இருக்கிறார்?
உடல்நிலை சரியில்லையா?

பூமிநாதனின் அண்ணன் அருணாச்சலம் தம்பியை மோசம் செய்து விட்டாரோ?

அன்னிக்கு சிவராமனுக்கு இரண்டு கால்களும் போனப்போ பூமி ஒண்ணும் கண்டுகொள்ளாதது தவறுன்னு சுந்தரி சொல்லுறாங்களோ?

ஆனால் மதுமிதா ஏன் இப்படி இருக்கிறாள்?
என்ன காரணம்?

நிர்மல் யாரு?
பரீட்சைக்கு பையன் படிக்கும் பொழுது சத்தத்தை ஜாஸ்தியா வைச்சு டி வி பார்க்கிறானே கூமுட்டை நிர்மல்
முற்பகல் செய்த வினையின் பலனை பூமிநாதன் தற்பொழுது அனுபவிக்கிறார்...நிர்மல் நித்யாவின் கணவன்...பதிவு 4 ல் கூறிப்பிட்டுள்ளேன் தோழி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top