மயக்கும் மான்விழியாள் 13

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..

மயக்கும் மான்விழியாள் 13

நிவேதா தன் புத்தகங்களை புரட்டியபடி நாளைய தேர்வுக்குகான குறிப்புகளை எடுத்துக்கொண்டிருக்கும் நேரம் அவளது கைபேசி இசைக்க எடுத்து பார்த்தவள் ஏதோ புதிய எண் என்றவுடன் அழைப்பை ஏற்காமல் விட்டுவிட்டாள்.இருமுறை அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்து பின் நின்றுவிட்டது.யாராக இருக்கும் என்று மனதில் தோன்றினாலும் மீண்டும் அழைத்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று தனக்குள் சொல்லிவிட்டு தன் படிப்பில் கவனம் செலுத்த அடுத்த இரண்டு நிமிடத்தில் அவளது வீட்டு அலைபேசி அழைக்கவும் இதுவேற என்ற கடுப்புடன் இவள் எடுக்க செல்ல அதற்கு முன் நித்யா அதை எடுத்திருந்தாள்.

அலைபேசியின் மறுப்பக்கம் என்ன கூறப்பட்டது என்று தெரியவில்லை நித்யா அப்படி யாரும் எங்க வீட்டுல இல்லை என்று அலைபேசியை வைத்ததோடு இல்லாமல் வொயரையும் கழட்டி விட்டுவிட்டு யாரும் தன்னை பார்க்கிறார்களா என்று பார்த்துவிட்டு செல்ல நிவேதாவிற்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது.

நிவேதா அவளது அறை கதவின் பின் புறம் இருந்ததால் நித்யாவிற்கு நிவேதா தன்னை பார்த்தது தெரியாமல் போனது.நித்யா அந்த இடத்தை விட்டு சென்றவுடன் அலைபேசியின் அருகில் வந்த நிவேதா அதை வொயருடன் இனைத்து சற்று முன் யார் அழைத்தார்கள் என்று நம்பரைக் காண தனக்கு வந்த அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது என்று தெரிந்தவுடன்.முதலில் யாராக இருக்கும் என்று யோசித்தவள் பின் அதே எண்ணிற்கு இவளே அழைப்புவிடுக்க முழுதாக ஒரு ரிங் சென்றபின்பு தான் அழைப்பு ஏற்கப்பட்டது.

"ஹலோ..."என்று நிவேதா அழைக்க.முதலில் அழைப்பை எடுக்கலாமா வேண்டாமா என்று யோசனையில் இருந்த மது பின் தன் வீட்டில் தன்னை தேடுவார்கள் என்று உணர்ந்து அழைப்பை எடுக்க அழைத்தது நிவேதா என்றவுடன் மனதில் சற்று ஆசுவாசத்துடன்,

"நிவி...நான் மது பேசுறேன்..."என்றாள் குரல் கமற.மதுவிற்கு நித்யா பேசியது,சிவரூபன் பேசியது என்று அனைத்தும் அவள் மனதை புண்ணாக்கியிருக்க தன்னை போல் குரலும் கமறியது.அழைத்தது மது தான் என்று தெரிந்தவுடன்,

"அக்கா...என்ன இது புது நம்பரா இருக்கு...உன் போன் என்னாச்சு..."என்று வரிசையாக கேள்விகளை அடுக்க தன் மீது அக்கறையுள்ள தங்கையின் வார்த்தைகள் இவ்வளவு நேரம் புண்ணாகியிருந்த மனதிற்கு மருந்து போல இருந்தது போல குறுநகையுடன்,

"நிவி...நிவி..."என்று நிவேதாவின் பேச்சிற்கு முதலில் தடைவிதித்த மதுமிதா,
"நான் சொல்றத முதல்ல கவனமா கேளு..."என்று கூறி தனக்கு நடந்த விபத்தைப் பற்றிக் கூறியவள் தான் இருக்கும் மருத்துவமனை பெயரைக் கூறி வருமாறு கூறி தன் அன்னையிடம் மட்டும் விபரத்தைக் கூறுமாறு பணிந்துவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

மதுமிதா அழைப்பை துண்டித்தவுடன் வேகமாக தன் சித்தி சுந்தரியை தேடிய நிவேதா அவரிடம் மதுவிற்கு விபத்து என்று கூறி பயப்பிட ஒன்றும்மில்லை தான் செல்வதாக கூறினாள்.சுந்தரிக்கு மகளுக்கு விபத்து என்று கூறியதிலே மனதுபடபடக்க தானும் வருவதாக கூற நிவேதா தான் சித்தப்பாவை யார் பார்ப்பது என்று கூறி மறுத்துவிட்டு ஆனந்தை துணைக்கு அழைத்துக்கொண்டு வெளியில் வர,

"எங்கடி போற..."என்று தடுத்த தாயையும்,தமக்கையும் கூர்மையாக நோக்கியவள் இது சண்டையிடுவதற்கான நேரமில்லை என்று உணர்ந்து,

"உங்க கிட்ட பேச எனக்கு நேரமில்லை...எனக்கு முக்கியமான வேலையிருக்கு...."என்று ஆனந்தை இழுத்துக்கொண்டு செல்ல,

"ஏய்...ஏய்...நில்லுடி..."என்று நித்யாவும்,வசந்தாவும் கத்துவதை பொருட்படுத்தாமல் சென்றாள்.

ஆனந்த் உடன் மதுமிதா சொன்ன மருத்துவமனை வந்தவள் மதுவின் அறையை கேட்டு வர அங்கே மது தலையில் கட்டுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு,

"அக்கா...என்ன ஆச்சு..."என்று பதறி கேட்க ஆனந்தோ மதுவின் நிலையைக் கண்டு பயந்து நின்றுவிட்டான்.அவனுக்கு எங்கே மதுவுக்கும்,தன் தந்தை போல ஆகிவிடுமோ என்ற பயம்.மது நிவேதாவின் கேள்விகளுக்கு பதில் கூறினாலும் ஆனந்தை கவனிக்க தவறவில்லை.அவனது அதிர்ந்த முகத்தை வைத்தே அவனது மனநிலையை கணித்தவள் அவனை அருகில் வருமாறு கண்களால் அழைக்க அவனோ இருந்த இடத்தை விட்டு நகர்வேனா என்றபடி நிற்க அப்போது தான் ஆனந்தையும் கூட்டி வந்ததை உணர்ந்த நிவி திரும்பி பார்த்து,

"டேய் நந்து...வாடா..."என்று அழைக்க,அவனோ கை,கால்கள் நடுங்க அருகில் வர அவனை தன் பக்கம் இழுத்து அமரவைத்த மது,

"எனக்கு ஒண்ணுமில்ல டா...சின்ன காயம் தான் பயப்படாத..."என்று தைரியமளிக்க ஆனந்தோ,

"சின்ன காய்னு சொல்லுர அப்புறம் ஏன் இவ்வளவு பெரிய கட்டு போட்டுறுக்காங்க..."என்று மதுவின் தலையை சுற்றி கட்டியிருந்த துணியை பார்த்துக் கேட்க,

"டேய் ரொம்ப யோசிக்காத...சின்ன காயம் தான்..."என்று அவனை சமாதானம் செய்தவள் பின் நிவியிடம் கைபேசியில் தன் அன்னையிடம் பேசி அவரையும் சமாதானம் செய்ய போதும் போதும் என்று ஆனது.

சிவரூபனிடம் பேசிவிட்டு உள்ளே வந்த கௌதம்,

"மது..."என்று அழைக்க மதுவோ அப்போது தான் கௌதமின் நியாபகம் வந்தவளாக,

"சாரி கௌதம்...."என்றாள்.

"ஏய் எதுக்கு சாரி எல்லாம்...."என்றவன்

"நான் கிளம்பட்டுமா...இல்ல இருக்கட்டுமா..."என்று கேட்க,

"இல்ல கௌதம் நீ கிளம்பு இனி நாங்க பார்த்துக்கிறோம்..."என்றவள் ஒரு நிமிடம் தயங்கி பின்,

"உன்னோட பிரண்ட் கிட்டேயும் தேங்க்ஸ் சொன்னதா சொல்லிடு..."என்று ரூபனைக் குறிப்பிட்டு கூற கௌதம் மௌனமாக தலையாட்டினானே தவிர ஒன்றும் சொல்லவில்லை.பின் ஆனந்த் மற்றும் நிவேதாவிடம் கூறிக்கொண்டு கிளிம்பினான்.

காலை பொழுது சிவரூபனுக்கு சற்று தலைவலியுடன் தான் ஆரம்பம் ஆனது.முதல் நாள் இரவு சரியாக தூக்கம் இல்லாததன் விளைவு கண்கள் இரண்டும் சிவந்து தலை வின்வின் என்று வலிக்க அதனூடே தன் காலை வேலைகளை முடித்தவன் அலுவலகம் செல்ல கிளம்பி வர ஹாலில் செந்தில்நாதன் நாளிதழில் மூழ்கி இருக்க மோகனாவோ தன் மூக்கு கண்ணாடியை சரி பார்த்தப்படி இருக்க,

"ஹாய் மோனூ..."என்றபடி அவரின் அருகில் அமர,

"டேய் ஏன்டா இப்படி கண்ணெல்லாம் சிவந்து கிடக்கு..."என்றார் பேரனின் கண்களை ஆராய்ந்தபடி

"அதெல்லாம் ஒண்ணுமில்ல மோனூ...நைட் கொஞ்சம் சரியா தூங்கல அதான்..."என்று கூற

"யார் கண்ணோ பட்டுச்சு என் பேரன் மேல அதான் புள்ளை இப்படி வதங்கி போய் கிடக்கான்..."என்று மோகனா கூற சிவரூபனோ,

"எல்லாம் அந்த கண்ணழகியாள வந்தது...அவளுக்கு தான் பாட்டி என் மேல எப்போதும் ஒரு கண்ணு...ராட்சசி..."என்று மனதில் நினைக்க மதுவின் நினைவில் ரூபனின் இதழ்களில் மெல்லிய புன்னகை வர அதைக் கண்ட மோகனாவோ,

"டேய்...என்னடா தானா சிரிக்கிற...இதுக்குத்தான் ராத்திரி எல்லாம் வெளில போகாதனு சொன்னா கேக்குரியா நீ...இப்ப எந்த காத்து கருப்பு அடிச்சதுனு தெரியலையே..."என்று மோகனா புலம்ப ஆரம்பிக்க,

"அய்யோ...மோனூ...எனக்கு ஒண்ணுமில்ல..."என்றவன்

"அம்மா...எனக்கு சாப்பாடு வைங்க..."என்று தேவகியிடம் கூறிவிட்டு எழ அதுவரை மகனின் முகத்தில் வந்து போன உணர்வுகளை படித்துக்கொண்டிருந்த தேவகிக்கு ரூபனின் முகத்தில் வந்து போன குறுநகை யாரால் இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தது.அவருக்கு மகன் எங்கே மீண்டும் ஏதாவது சிக்கலில் மாட்டிவிடுவானோ என்று உள்ளுக்குள் பயம்.அதை அவனிடம் நேரிடையாக கேட்கவும் செய்தார்,

"ரூபா...நேத்து அந்த பொண்ணை பார்த்தியா..."என்று கேட்க மகனோ எந்த பெண் என்று கேட்காமல் ஒருவித தயக்கத்துடன் தன் அன்னையை ஏறிட்டு,

"அம்மா...அது...ஆமா விழிய பார்த்தேன்..."என்று கூற அவனது விழி என்ற அழைப்பே கூறியது அவன் இன்றும் மதுவை மறக்கவில்லை என்று.மகனின் மீது சிறு கோபம் கூட அவர்கள் இவ்வளவு செய்தும் இவன் மனது மாறவில்லையே என்று.தன் அன்னை கண்டு கொண்டார் என்று உணர்ந்தவன் சாப்பாடு உள் இறங்க மறுக்க மகனை நன்கு உணர்ந்த தேவகி,

"சாப்பிடும் போது எதையும் யோசிக்காத ரூபா சாப்பிடு..."என்றவர் மேலும்,

"நீ இப்ப சின்ன பையன் கிடையாது ரூபா உனக்கு எது நல்லதுனு நீ தான் முடிவு பண்ணனும்...உன் வாழ்க்கை விஷயம் அதனால நல்ல யோசி..."என்றுவிட்டு சென்றுவிட்டார்.ரூபனுக்கு இப்போது தேவகியின் பேச்சு சற்று குழப்பத்தைக் கொடுத்தது

"இவர் நீ செய்வது சரி என்கிறாரா...இல்ல.."என்று இவன் யோசிக்கும் நேரம் கௌதமிடமிருந்து அழைப்பு வர ரூபனின் நினைவும் அதோடு நின்றது.அழைப்பை ஏற்றவன்,

"ஹலோ கௌதம்...சொல்லு..."என்றான்.

"சார்...சைட்ல கொஞ்சம் வேலை இருக்கு நேரா சைட்டுக்கு வந்துடுங்க சார்..."என்று வேலை விபரங்களை தர ரூபனுக்கோ கௌதம் மதுவை பற்றிக் கூறுவான் என்று நினைத்திருக்க அவனோ நேற்றைய விஷயங்களை பற்றி பேசவே இல்லை.

"சரி சார் வச்சிடுறேன்..."என்று துண்டிக்க போகும் நேரம்,

"கௌதம்...அது மது எப்படியிருக்கா...நீங்க பேசினீங்கலா..."என்று கேட்டான்.

"பேசினேன் சார்...டிஸ்ஜார்ஜ் ஆகிட்டாளாம்...வீட்டுக்கு போறேன்னு சொன்னா சார்..."என்று அதோடு கௌதம் முடித்துக்குள்ள ரூபனும் மேலும் துருவாமல் விட்டுவிட்டான்.

ஆனால் மனதில் அவ்வளவு கோபம் மதுவின் மேல் தலை காயம் ஆழம் என்பதால் ஒரு நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்று மருத்துவர் கூறியிருந்தார் இவள் தான் பிடிவாதமாக கிளம்பியிருப்பாள் என்று அவளை சரியாக ஊகித்தான்.எப்படியோ போடி என்று மனதிற்குள் திட்டிவிட்டு கௌதமுடன் சைட்டிற்கு சென்றான்.சைட்டில் வேலை சரியாக இருந்தது வேலை என்று வந்துவிட்டாள் ரூபனுக்கு மற்றது பின்னுக்கு சென்றுவிடும் அதே போல் மதுவும் பின்னுக்கு சென்றாள்.

மதியம் வரை சைட்டில் வேலைகளை முடித்துவிட்டு தன் அலுவலகம் வந்தான்.கௌதம் தன் நண்பனின் பிளாட்டை ரூபனுக்கு ஏற்ற வாரு அலுவலகமாக மாற்றிக் கொடுத்தான்.அதன்படி தன் அலுவலகம் வந்தவனுக்கு அன்றைய அலுவலக வேலை அனைத்தையும் சரி செய்யவே நேரம் சரியாக இருந்ததது.தன் வேலைகள் அனைத்தும் முடிந்து இவன் கிளம்பும் நேரம் இரவு ஒன்பதை நெருங்கியிருந்தது.கௌதம் தன்னுடைய காரை ரூபனிடம் கொடுத்திருந்தான்.உனக்கு என்ன செய்வாய் என்று கேட்டதற்கு தன்னிடம் இருசக்கர வாகனம் உள்ளது பிரச்சணையில்லை என்று கூற ரூபனுக்கும் கார் என்றால் சற்று வசதி பெரியவர்கள் உள்ளனர் ஏதாவது என்றால் உதவும் என்பதால் ஏற்றுக்கொண்டான்.

தன் பார்க்கிங் ஏரியாவில் தன் காரை எடுக்கும் போது ரூபனின் கண்கள் தன் போல் மது நேற்று வந்த சூப்பர் மார்கேட்டின் பக்கம் செல்ல இன்னைக்கும் ஏதாவது பொருள் வாங்க வந்திருப்பாளா என்று யோசித்தவன் பின் ச்ச அந்த ராட்சசி இவ்வளவு பேசியும் உன் புத்தி ஏன் அவ பின்னாடி போகுது ரூபா என்று அவன் மனசாட்சி அவனை காரி உமிழ.தன் தலையை வேகமாக உலுக்கிவிட்டு தன் காரில் ஏறி தன் வீட்டை நோக்கி பயனித்தான்.

மறுநாள் மதியம் தன் அலுவலகம் வந்தவன் தன் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்த நேரம் மனதில் ஏதோ உந்த சூப்பர் மார்கேட்டைக் காண மது தான் வேக நடையிட்டு வெளியில் வந்து கொண்டிருந்தாள்.அவளின் பின்னோடு வேறு சிலரும் வர ரூபனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை பின் நன்கு ஜன்னல் பக்கம் வந்து பார்க்க வெளியில் வந்தவர்கள் மதுவிடம் ஏதோ வாதம் செய்ய மதுவும் அவர்களிடம் வாதம் செய்வது புரிய ஏதோ சரியில்லை என்று உணர்ந்து அவர்கள் இருக்குமிடம் நோக்கி விரைந்தான்.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

மதுமிதாவுக்கு இப்போ என்னப்பா பிரச்சினை?
அந்த தீபக் பொறுக்கி திரும்ப ஏதாவது வம்பு வளர்த்தானோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top