மயக்கும் மான்விழியாள் 12

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..

மயக்கும் மான்விழியாள் 12

மதுமிதாவிற்கு சிவரூபனைக் கண்டவுடன் தன்னவன் வந்துவிட்டான் என்று அவளது காதல் கொண்ட மனது அவனை நாடத்தான் செய்தது.ரூபனின் பிரிவுக்கு பிறகு மது அனைத்திலும் ஒடுங்கி தான் போனாள்.அவளது அவசர புத்தி அவளை விபரீத முடிவுகளை எடுக்க செய்திருக்க அதன் விளைவு தவறே செய்யாத ரூபனும்,தேவகியும் தன் வீட்டினரால் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டனர் என்று அவளுக்கு தெரியும். அனைத்தையும் தான் ஒரு கையாலாகத தனத்துடன் பார்க்கதான் முடிந்தது.தன்னால் எதுவும் செய்யமுடியாத நிலையை எண்ணி அழத்தானே முடிந்தது என்று தனக்குள் பலமுறை கேட்டுள்ளாள் ஆனால் அனைத்தும் முடிந்த பின் புத்தி வந்து என்ன பயன்.

தன் வீட்டினர் தேவகியை ஏளனமாக பேச எந்தவித கேள்விக்கும் தலை குனியாமல் நிமர்ந்து நின்று பதில் கூறியவரை மதுமிதாவிற்கு பிடிக்க தான் செய்தது.அவர் மதுவின் காதலை எள்ளி நகையாடும் வரை தன் காதலை அவர் வெறும் இளவயது உருவக் கவர்ச்சி என்று பெயர் சூடியது மட்டுமல்லாமல் தன் காதலை வீட்டுல் கூறி அவர்களுடன் நேரிடையாக எதிர்க்க தைரியமில்லாத பெண் என் பையனுக்கு வேண்டாம் என்று கூறியது மதுவின் மனதை சுக்குநூறாக உடைத்தது என்று தான் கூற வேண்டும்.
மதுமிதாவிற்கு தேவகியின் பேச்சு சற்று கோபத்தை தர,

"நீங்களும் காதலிச்சு தான கல்யாணம் பண்ணீங்க..."என்று துடுக்காக கேட்க அவளைப் தீ பார்வை பார்த்தவர்,

"நான் என் வீட்டில் என் காதலை சொல்லி திருமணம் செய்யத் தான் கேட்டேன் அதற்கு அவங்க ஒத்துக்கல...அதோட அவங்க நின்றிருந்தா பரவாயில்லை எனக்கு வேற இடத்துல சம்மந்தம் பேசினாங்க என்னோட விருப்பமே இல்லாம...அதனால தான் நான் வீட்டை விட்டு வெளியேறுனேன்...அதுவும் ஒலிஞ்செல்லாம் இல்ல என்னை பெண் பார்க்க வந்தவர் முன்னே உண்மையை சொல்லி இனி இந்த வீட்டுக்கும் எனக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லைனு எல்லார் முன்னேயும் சொல்லிட்டு தான் வெளியேறுனேன்...அதனால என்னை உன்னோட ஒப்பிடாத புரியுதா..."என்றார் மிரட்டலாக.ஆம் மிரட்டல் தான் மது செய்த தவறுக்கு என் மகனின் எதிர்காலம் பலியாவதா என்ற ஆதங்கம் அந்த தாயிற்கு.மதுவிற்கு தேவகியின் பேச்சு ஒவ்வொன்றும் அவளின் தவறை சுட்டிக் காட்டியது மட்டுமில்லாமல் நீ செய்தது தவறு என்று உச்சந் தலையில் ஆணி அடித்தார் போல் உணர்த்தியது.

மதுமிதா தேவகி இவ்வளவு பேசிய பின்பு யாரையும் பார்க்கும் திராணியற்றவளாக தலைகுனிந்து நின்றுவிட்டாள்.முதல் முறையாக தான் செய்தது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்று விளங்கியது தன்னால் ரூபன் எந்தளவிற்கு கஷ்டபட்டிருப்பான் என்று உணர்ந்தவள் அவனின் முகம் காண அதில் ரௌத்திரம் மட்டுமே எவ்வளவு கூறினேன் அவசரப்படதே என்று இப்போது பார் உன் அவசரத்தால் எவ்வளவு பெரிய தலைகுனிவு என்று அவன் கண்களால் அவளுக்கு கூறியது மதுவை மேலும் குன்ற தான் செய்தது.அதன் பிறகு மது ரூபன் முகத்தை ஏற்றெடுத்தும் பார்க்கவில்லை என்று தான் கூற வேண்டும்.உங்கள் பெண்ணும் வேண்டாம் உறவும் வேண்டாம் என்று தேவகி அதோடு முறித்துக்கொண்டு சென்றுவிட்டார்.

மதுவின் வாழ்வில் ரூபன் என்ற ஒருவன் வந்து சென்ற பிறகு தான் அவள் வாழ்க்கையின் நிதர்சனங்களை உணரத் தொடங்கினாள் என்று கூற வேண்டும்.அதன் பின் மது எது செய்தாலும் அவளை சந்தேகத்துடன் பார்க்கும் பெற்றோர் தங்களால் முடிந்த மட்டும் குத்தி குதறிய உறவுகள் என்று பல அவமானங்களை பட்டு கூனி குறுகி அமர்ந்து பின் தன்னை தானே தேற்றி இதோ இப்போது வரை நடைபிணம் போல் தன் வாழ்க்கையை வாழ்கிறாள்.ஆனால் இத்தனை வருடங்களில் ரூபன் மேல் அவள் கொண்ட காதல் மட்டும் குறையவே இல்லை என்று தான் கூற வேண்டும்.ஆனால் அவனை மறந்துவிட்டது போன்று தன்னை காட்டிக்கொள்ள பழகிக் கொண்டாள்.

தேவகி கூறியது போல் இது வெறும் உருவக் கவர்ச்சியில்லை என்று தனக்குள் பல நாட்கள் வாதம் செய்திருக்கிறாள்.அதன் விளைவோ என்னவோ ரூபன் அவளது மனதில் புதைந்து உயிரில் நிறைந்திருந்தான்.இப்படி மது பலவித உணர்வுகளுடன் போராடிக் கொண்டிருக்க,

"விழி... என்ன யோசனை..."என்று அவளின் ரூபன் அருகில் அமர அவனது அருகாமையில் தடுமாறியவள்,

"எனக்கு தண்ணி வேண்டும்..."என்றாள்.ரூபன் எழுந்து வெளியில் செல்லவும் மதுவின் மூளையில் மீண்டும் போராட்டம் துவங்கியது ஏன் வந்தார்,எதற்காக வந்தார்,என்னை பார்க்கவா...என்று பல கேள்விகள் மனதில் எழ அதற்கு விடை தெரியாமல் இவள் தவிக்க அவளையே பார்த்துக்கொண்டிருந்த கௌதம் என்ன நினைத்தானோ,

"மது இப்ப எதுவும் யோசிக்காத...நீ ரெஸ்ட் எடு..."என்று இவ்வளவு நேரம் தன் தலையில் கைவைத்து யோசத்தவளின் கையை விலக்க ரூபன் தண்ணீர் பாட்டிலுடன் உள்ளே வர சரியாக இருந்தது.ரூபன் உள்ளே வரும் போது கௌதம் மதுவின் கைகளை பற்றி ஏதோ பேசிக்கொணடிருந்தது ஒருவித எரிச்சலை தர,

"மதூ...இந்தா தண்ணி..."என்று அவளின் கைகளில் திணித்துவிட்டு நகரும் போது கௌதமை முறைக்க தவறவில்லை. கௌதமிற்கோ இதுயேதடா வம்பா போச்சு தன் தோழி என்று பார்த்தால் இவர் ஏதோ தப்பா நினைக்கிறார் போல என்று நினைத்தவன் அறையை விட்டு வெளியேற முற்பட,

"கௌதம்...உன் மொபைல் கொடேன்...நான் என் வீட்டுக்கு பேசனும்..."என்று மது அவனை தடுத்து நிறுத்தினாள். அவள் முன் தன் மொபைலை நீட்டிய ரூபன்,

"பேசு..."என்று இறுக்கமாகவே கூறினான்.ரூபனுக்கு மதுவின் மேல் கோபம் இருந்தாலும் இந்த நிலையில் அவளை காணும் போது அவளது காதல் சிவாவாக அவன் நிற்க அவளோ தன்னிடம் ஒரு வார்த்தை பேசாமல் கௌதமிடம் பேசியது ஏற்கனவே கோபத்தை கிளப்பியிருந்தது.இதில் அவள் தன்னிடம் உரிமையாக கேட்காமல் கௌதமிடம் கேட்டது மேலும் எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல இருந்தது.அதனால் அவனது இலகு தன்மை காணாமல் போய் மீண்டும் இறுக்கம் சூழ அவளிடம் தன் கடுமையை காட்ட முயன்று தோற்றுக் கொண்டிருந்தான்.

மது ரூபன் நீட்டிய மொபைலை வாங்காது கௌதமிடம் திரும்பி,

"ப்ளீஸ் கௌதம் தாயேன்..."என்று கேட்க அதுவரை தன் மொபைலை கொடுக்க தயங்கியவன் அவள் இறைஞ்சவும் அவளின் கையில் தன் மொபைலை திணித்துவிட்டு இங்கு இருந்தால் ரூபன் முறைப்பான் என்று உணர்ந்து வெளியேறிவிட்டான்.மது கௌதம் கொடுத்த மொபைலில் தன் தங்கை நிவேதாவிற்கு அழைப்பு விடுக்க முதலில் எடுக்கபடவில்லை.புது எண் என்பதால் அவள் எடுக்கவில்லையோ என்று நினைத்தவள் தன் வீட்டின் லென்ட் லையன் எண்ணிற்கு அழைக்க நித்யா தான் எடுத்தாள்,

"ஹலோ..."என்று நித்யா அழைக்க,

"ஹலோ...நிதி அக்கா...நான் மது பேசுறேன்..."என்று மது மேலும் பேசும் முன் நித்யா,

"அப்படி யாரும் எங்க வீட்டுல இல்ல..."என்று கூறி வைத்துவிட்டாள்.மறுமுனையில் மது,

"ஹலோ...ஹலோ..."என்று இரு முறை அழைத்தவள் பின் மொபைலை கையில் வைத்து வெறிக்க அதுவரை அவளை வெறித்துக் கொண்டிருந்த ரூபன்,

"விழி...என்ன ஆச்சு...ஏன் உன் கண் கலங்குது..."என்று அவளது கலங்கிய விழிகளைக் கண்டு கேட்க மதுவிற்கு மேலும் அழுகை கூடியதே தவிர நின்றபாடில்லை.
ரூபனுக்கு மது தன்னை தவிர்க்கிறாள் என்பது மனதுக்கு வலிக்க செய்திருக்க இப்போது அவள் அழவும் மேலும் பதறியவன் ஓடி வந்து அவளை அணைத்தான்.

அவனது நெஞ்சில் புதைந்தவளுக்கு நித்யாவின் பேச்சு ரத்தம் வழியும் மனதை மேலும் குத்தி புன்னாக்கியிருக்க முயன்றும் அடக்க முடியவில்லை அவளது கேவலை.தேம்பும் அவளது முதுகை தடவிக்கொண்டிருந்த ரூபனுக்கு மதுவின் அழுகைக் எதற்கு என்று புரியவில்லை.போனில் யாரவது ஏதாவது கூறிவிட்டார்களா என்று நினைத்தவன்,
"மது..என்ன ஆச்சு...யார் போன்ல என்ன சொன்னாங்க..."என்று கேட்க மதுவிற்கு நித்யாவின் மேல் இருந்த கோபம் ரூபன் மேல் திரும்பியது அதுவரை அவனது அணைப்பில் இருந்தவள் அவனை உதறி தள்ளி,

"உங்களுக்கு எதுக்கு அது...நீங்க யாரு எனக்கு...உங்களுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்...எனக்கு உதவி செஞ்சதுக்கு ரொம்ப நன்றி போங்க இங்கிருந்து போங்க...எனக்கு யாரும் வேணாம் போங்க..."என்று கத்தியவள் தன் கால்களில் தலை புதைத்து அழத் தொடங்க.

மதுவின் பேச்சில் அதிர்ந்த ரூபன்,

"என்ன கேட்ட....நான் உனக்கு என்ன உறவா...ஆமா நமக்குள்ள என்ன இருக்கு எல்லாம் தான் முடிஞ்சு போச்சுல்ல...ச்ச உங்க வீட்டாளுங்க புத்தி தான உனக்கும் இருக்கும்...உன்னை..."என்று கைகளை ஓங்கிய படி நெங்கியவன் பின் என்ன நினைத்தானோ வேகமாக வெளியில் சென்றுவிட்டான்.ரூபன் வெளியில் சென்றவுடன் அவனது பேச்சில் மேலும் அழுகை வெடிக்க தேம்பியபடி அமர்ந்திருந்தாள் மது.
வெளியில் வந்த ரூபன் வெளியில் அமர்ந்திருந்த கௌதமிடம்,

"உன் கார் சாவியைக் கொடு...உன் பிரண்ட் வீட்டுக்கு தகவல் சொல்லிடு..."என்றவன் கௌதமின் காரை வாங்கிக் கொண்டு பறந்தான் என்று தான் கூறவேண்டும் அவ்வளவு கோபம் மதுவின் மேல்,

"நான் யார???திமிருடி உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா அப்படி கேட்ப...ஆளுதான் டல்லான மாதிரி தெரியுறா ஆனா கொழுப்பு மட்டும் குறையவே இல்லை...ராட்சசி"என்று மனதில் தன்னால் முடிந்தமட்டும் திட்டியபடி வீட்டில் நுழைந்தான்.

தன் கைபேசியின் அலறலில் நிகழ்வுக்கு வந்த ரூபன் கைபேசியைப் பார்க்க கௌதம் தான் அழைத்திருந்தான்.வரும் வழியில் கௌதமிற்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தான் வந்திருந்தான் மதுவின் வீட்டாள்கள் வந்தவுடன் போன் செய் என்று.மது அவ்வளவு பேசிய பின் அங்கிருந்தால் மேலும் அவளை காயப்படுத்திவிடுவோம் என்று தான் ரூபன் கிளம்பியது ஆனால் வீட்டிற்கு வந்த சில நிமிடங்களிலே அவசரப்பட்டு பேசி வந்துவிட்டோமோ எப்படி இருக்கிறாளோ...எதற்காக அப்படி அழுதாள்...யார் போனில் பேசியிருப்பார்கள்...என்று பல கேள்விகள் மனதில் எழ அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை தானே போன் செய்ய வேண்டும் நினைக்கும் சமயம் கௌதமிடம் இருந்து அழைப்பு வந்தது.

"சொல்லு கௌதம்...யாராவது வந்தாங்களா..."என்று ரூபன் விசாரிக்க,

"ஆங்...சார் மதுவோட சிஸ்டரும்,பிரதரும் வந்துட்டாங்க சார்...இப்ப அவங்க கூட தான் மது பேசிக்கிட்டு இருக்கா..நான் வேணா போனை தரவா..."என்று கேட்க,

"வேண்டாம் கௌதம்...நீங்க பாருங்க...அப்புறம் சாரி ஏதோ ஒரு கோபத்துல உங்க காரை எடுத்துட்டு வந்துட்டேன்...இப்ப நீங்க எப்படி போவீங்க..."என்று ரூபன் கேட்க,

"பராவில்லை சார் நான் டாக்ஸி புக் செஞ்சுட்டேன்..."என்று கூற,

"சாரி கௌதம்..."என்று ரூபன் மன்னிப்பை வேண்டினான்.

"நோ...பிராபளம் சார்...ஐ வில் மேனேஜ்...யூ டேக் கேர்..."என்று விட்டு போனை வைத்தான்.
கௌதம் போனை வைத்தவுடன் ரூபன் மனதில் ஓடியது இது தான் இனி அந்த ராட்சசி மூஞ்சிலே முழிக்க கூடாது திமிரு பிடிச்சவ.தப்பெல்லாம் இவ செஞ்சிட்டு என்னை குத்தம் சொல்லுறா...இவளால நான் தான் தினமும் கஷ்டபடுறேன்...இவ என்னனா எவ்வளவு திமிரா பேசுறா...இனி உன் மூஞ்சிலே முழிக்க மாட்டேன்டி ராட்சசி...என்று வசைப்பாடியபடி இருக்க அவனை மேல் இருந்து பார்த்து கொண்டு இருந்த அவனது விதி அவ்வளவு சீக்கிரம் எல்லாம் உன்னை நான் விடமாட்டேன் நண்பா...இனி மேல் தான் உனக்கு சோதனையே இருக்கு ரெடியா இரு...என்று கூறி சிரித்துக் கொண்டிருந்தது.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

மதுமிதா ரொம்பவே ஓவரா பண்ணுறாள்
இவளுக்கெல்லாம் நித்யா வசந்தா தான் லாயக்கு
சிவரூபன்தான் பாவம்
இவளை லவ் பண்ணிட்டு அவஸ்தைப்படுறான்
 
Last edited:

Ambal

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

மதுமிதா ரொம்பவே ஓவரா பண்ணுறாள்
இவளுக்கெல்லாம் நித்யா வசந்தா தான் லாயக்கு
சிவரூபன்தான் பாவம்
இவளை லவ் பண்ணிட்டு அவஸ்தைப்படுறான்
நன்றி தோழி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top